கலக்கப் போவது யாரு (ஜீனியர்)

விஜய் டிவிக்கு ஒரு ஷொட்டு...
எங்கிருந்து பிடிக்கிறார்களோ .. இந்த சின்னச் சின்னத் திறமைகளை...?

இரண்டு எபிஸோட்கள் மட்டுமே பார்த்திருந்தாலும்
இனி வரப்போவது இன்னும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்று தோன்றுகிறது..

பரிசு மட்டும் நாம் நினைக்கும் வாண்டுக்கு இல்லாமல் வேறு யாருக்கோ கொடுத்து விடுகிறார்கள்.

டி ஆர் ஆக வந்த அந்தச் சிறுமி ஒரு கலக்கு கலக்கினாளே பார்க்கலாம்!!:aetsch013:

பாவம் சன் டிவி... பழைய முகங்களையே வைத்து பழைய ஜோக்குகளையே சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.:rolleyes:
 
புதிது புதிதாக விஜய் விடி பிரோக்கிராம்களை கொண்டுவந்தாலும் சன் டிவி அதே மாதிரி உடனே ஆரம்பித்து அனைத்து மக்களையும் அதன் பக்கம் மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள்.

பல விஷயங்களில் இது நடந்திருக்கிறது நடந்துகொண்டும் இருக்கிறது.

விஜய்டிவி புதுசாக ஏதாவது செய்தாலும் அவர்களால் நிறைய நிகழ்ச்சிகளை கொடுக்கமுடிவதில்லை, அரைத்த மாவையே அடிக்கடி அரைக்கிறார்கள். ரிபிட் ரிபிட் தான் எப்பொழுதும் விஜய் டிவியில். பணம் பற்றாக்குறையாகவும் இருக்கலாம்.
 
கலக்கப் போவது டீம்-ஐயே கூண்டோடு 'கடத்திக்' கொண்டு வந்த புகழ் சன் டிவிக்கு உண்டு என்று நினைக்கிறேன்.. மதன் பாப் உட்பட...?

சன் - ஐப் பொறுத்தவரை அவர்க்ளுக்கு ரீச் இருக்கிறது..
ஆனால் க்ரியேட்டிவிட்டி .. படைப்புத் திறன்.. சற்று கேள்விக் குறியே..!

விஜய் .. நிதிப் பற்றாக் குறை நன்றாகத் தெரிகிறது..

ஜீனியர் நிகழ்ச்சியில் அடுத்த வாரம்.. அதாவது வரும் ஞாயிறு 7 மணி இரவு.. ஒரு சிறுவன் சூர்யா மாதிரி கலக்கப் போகிறான் என்பதை ப்ரிவ்யூ காண்பிக்கிறது.. அதே சுவாரசியம் நிக்ழ்ச்சியிலும் இருக்கும் என நம்புவோம்
 
பால்ராஜ்!நல்லாய் டிவி பார்ப்பீகள் போல் தெரிகிறது. நான் அதிகம் இதில் ஈடுபடுவதில்லை, அனால் நீங்கள் சொல்லும் போது பார்க்கவேண்டும்போல் இருக்கிறது. நீங்கள் பார்த்து ரசித்ததை எமக்காக தந்தமைக்கு நன்றி.:icon_b: எம்மையும் டிவி பார்க்க தூண்டுகிறது.:)
முயற்சிக்கின்றேன்:lachen001:
 
சிங்கையில் இருக்கும்போது வேறு வழியில்லாமல் சன் விஜய் இரண்டையும் மாற்றி மாற்றி பார்ப்பது வழக்கம்.. கணிணியில் வேலை இல்லாமல் இருக்கும் நேரம் தவிர்த்து...

சில சீரியல்களைக் கூட .. சாப்பிடும் வேளையில் பார்த்து பழக்கப் பட்டுவிட்டதால்.. ஊருக்குப் போகும்போது (அதற்குள் இரண்டு வாரம் மிஸ் ஆகியிருக்கும்.. நமக்கு இங்கே பழைய எபிசோடுகள் காண்பிப்பதால்...) அங்கு தற் செயலாக சீரியல்களைப் பார்த்தாலும் என் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ள எண்ணி கேட்கும் கேள்விகள்.... அந்த வாடகைத் தாய் ஏன் ஊரை விட்டுப் போக வில்லை.. ?? எம் பி சாந்தலிங்கம் ஜெயிலில் இருந்து வந்து விட்டாரா?? மிஸ்டர் செல்வம் அவர்களுக்கு கடைசியில் சாந்தி முகூர்த்தம் ஆகி விட்டதா என்று...

பதிலுக்கு நல்ல டோஸ் கிடைக்கும்.. ஏன் என்றால் எல்லா சீரியல்களையும் போட்டுக் குழப்பிக் கொள்வேன் பெண்களுக்கு இந்த விஷயத்தில் நல்ல ஞாபக சக்தி..!

ஆனால் கலக்கப் போவது யாரு? சூப்பர் சிங்கர்ஸ்.. போன்ற நிகழ்ச்சிகளை ரசித்துப் பார்ப்பதுண்டு...
 
புதிய நிகழ்ச்சிகள்... கண்ணீர் தொடர்களிலிருந்து...
மக்களை விடுவித்தால் நல்லது தான்...
 
பார்க்க முடியா விட்டாலும் நீங்கள் அனைவரும் எழுதும் விமர்சனம் அந்த நிகழ்ச்சியை பார்த்த திருப்தியை (!!??) தருகிறது .. நன்றி மன்ற உறவுகளே!
 
எதிர் பார்த்தபடியே அந்த யூகேஜி பொடியன் சூர்யா டான்ஸ் ஆடி கலக்கு கலக்கு என்று கலக்கி விட்டான்.

அந்த அர்ச்சனா மேடம்.. புதிய ஜட்ஜ் .. அவரது பேச்சிலும் சிரிப்பிலும் 'தொற்றி'க் கொள்ளூம் உற்சாகம் பீரிடுகிறது.
 
Back
Top