சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய்யின் அபத்த அவஸ்தையும் !

சிங்கார வேலனே தேவா!! பாட்டை அல்கா பாடும் போது எல்லோரும் எழுந்துவிட்டனர். இறுதியாய் பாடிய சங்கதிகள்.. அத்தனை அற்புதம்..!!
 
அந்தப் பாடலினை அல்கா பாடிய விதத்தினை வைத்தே நான் அந்தக் கருத்தினைக் கூறினேன் மதி..!!
 
அப்பா வித்துவான்களா.. நிகழ்ச்சியைச் சுட்டுப் போடுவீங்கல்ல..
 
பாருங்க அமரன்..

[media]http://www.youtube.com/watch?v=mSN2mO98QUk[/media]
[media]http://www.youtube.com/watch?v=NgNebvQnn1k[/media]
 
சொன்ன மாதிரியே அல்கா..!!! தான் சூப்பர் சிங்கர் ஜூனியர்..!

வாழ்த்துகள் அல்காவிற்கு!!
 
ஏற்கனவே சொல்லிட்டமிலே....

வெற்றி பெற்ற அல்கா அஜித்து வாழ்த்துகள்..!!
 
நன்றி மதி..

சும்மா சொல்லக் கூடாது. பொண்ணு பின்னிட்டாள்.

பாடல் தேர்வு முதல் படி..

தேர்ந்த சாதகம் இரண்டாம் படி..

இசைகளுடன் இசைந்து பாடியது மூன்றாம் படி..

சஞ்சாரங்கள், சங்கதிகள் சரி இடத்தில் இருந்தது நான்காம்படி..

அப்பப்போ தாளக் கட்டிழந்தது திருஷ்டி..

பழச விடுங்க.. வெற்றிக்கனி சரியான இடத்தில்..

ஆனாலும் ஓவரா மக்களிடத்தில் பொண்ணைச் சேர்த்திருக்க வேண்டாம் சபையினர்..

ஸ்ரீனிவாசே எழுந்து நின்னு கைதட்டுறார்... மாணிக்க விநாயகம் வைகை சங்கமத்தில் சங்கமிச்ச மாதிரி தலையாட்டுறார்.. பிறகென்ன என் ஓட்டு பொண்ணுக்குத்தான் என நினைச்சு ஓட்டுப் போட்டுட்டாங்கன்னும் கறை பூசப்படலாம்..
 
அப்படின்னு சொல்றதுக்கு இல்ல.. ஆரம்பத்திலிருந்தே அமோக ஆதரவு இருந்தது அல்காவிற்கு..!!
 
அப்படின்னு சொல்றதுக்கு இல்ல.. ஆரம்பத்திலிருந்தே அமோக ஆதரவு இருந்தது அல்காவிற்கு..!!

அப்படின்னு சொல்லல மதி.. சொல்ல ஆளுங்க இருக்காங்கங்கிறேன்..
 
அல்கா அஜித் பாடியதை நானும் பார்த்தேன். நாதஸ்வரட்துடன் அவள் பாடியதை பார்க்கையில் மிகவும் நன்றாகவே இருந்தது. ஸ்வரஸ்தானங்களாகட்டும், ஆலாபனைகளாகட்டும் அனைத்தும் அதற்குரிய ஸ்தானங்களில் துல்லியமாக பாடியிருக்கிறாள். அல்கா அஜித் நீடூழிகாலம் வாழ்ந்து இசைத்துறைக்கு அரும்பெரும் தேடல்களையும் ஆக்கங்களையும் அளிக்க வேண்டும்.
 
அல்கா ஒரு தேர்ந்த பாடகி. அல்கா ஆரம்பத்திலிருந்தே அருமையாக பாடினார்கள்.

அனால் ஸ்ரவன் முதலில் வந்தபோது வெறும் கர்நாடிக் இசை சார்ந்த பாடல்களை மட்டுமே பாடமுடிந்தது. ஆனால் அவருடைய வளர்ச்சி மிகவும் அதிகம்.

என்னுடைய ஓட்டு ஸ்ரவனுக்கே.
 
அல்கா ஒரு தேர்ந்த பாடகி. அல்கா ஆரம்பத்திலிருந்தே அருமையாக பாடினார்கள்.

அனால் ஸ்ரவன் முதலில் வந்தபோது வெறும் கர்நாடிக் இசை சார்ந்த பாடல்களை மட்டுமே பாடமுடிந்தது. ஆனால் அவருடைய வளர்ச்சி மிகவும் அதிகம்.

என்னுடைய ஓட்டு ஸ்ரவனுக்கே.
எனது ஓட்டும் ஸ்வரனுக்கே அண்ணா.. காரணம்,

பல்வேறு இசையையும் பாடும்படியாக தேர்ந்த வளர்ச்சி..
அல்கா இறுதிச் சுற்றில் தேர்ந்த பாடல் அருமை.. அதுக்கு வழி விடும்படியான ஸ்ரவனின் பாடல் தேர்வு எனக்கு பெருத்த ஏமாற்றம்.
 
நான் ஏற்கனவே அச்சப்பட்டபடி நடக்காததில் மகிழ்ச்சி.. ஓரளவு நடு நிலைமை இருந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்..

ஸ்ரவன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.. சிறுவர்களுக்கு உள்ள போட்டியில் சிறுவர்கள் பங்கெடுக்க வேண்டும்.. ஸ்ரவன் ஏறக்குறைய பெரியவர்கள் பங்கெடுக்கும் வயதில் இருப்பவன்..

அதற்காக ஸ்ரீகாந்த் போன்ற பிஞ்சுகளை அளவுக்கு அதிகமாகப் ப்ரமோட் செய்வதும் சரியான செயல் இல்லை...

அல்கா சரியான தீர்வு..
 
Back
Top