இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
வழக்கின் நோக்கம் நல்லதுதான். ஆனால் வலுவில்லாதது. நீதி மன்றத்தில் இது ஜெயிக்காது என்று தெரிகிறது. மக்கள் நலதிட்டம் என்ற பெயரில் தான் செய்கிறார்கள். இதை தடுக்க முடியாது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.
தேர்தல் நடக்கும் போதும் (முடியும் வரையில்) அதற்க்கு குறிக்கீடு செய்யும் வகையில் நீதிமன்றங்கள் செயல்பட கூடாது என்று உச்சநீதிமன்றம் பல காலத்துக்கு முன்பே ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறது.
மொத்ததில் மக்களை கவரும் இலவசங்கள் மட்டுமே கொண்டது தி முக அறிக்கை,இலவசங்கள் மூலம் மக்களை கவர்ந்தாலும் எதிர்கால சமூகம் குறித்த திட்டமிடலும் இணைந்தே வழங்கப்பட்டது அதிமுக அறிக்கை!
சொன்னதை ஏற்று கொள்ளும் வகையில் தான் உள்ளது. ஆனாலும் இத்தனை இலவசங்களை வழங்கினால் நிச்சயம் நல்ல திட்டங்கள் செயல்படுத்த முடியாதே.
கொடுமை என்னவென்றால் இதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்ல திறமையான ஆட்கள் அதிமுக வில் இல்லாதது தான்
உன்மை, ஆனால் மக்களுக்கு எதிர்கால நன்மை திட்டம் எல்லாம் எடுத்து சொன்னால் புரியாது. அதை புரிந்து கொன்டு ஓட்டும் போடும் மக்கள் இல்லை. அதனால் மக்களுக்கு தருவதை மட்டுமே சொல்லி கொன்டு இருப்பாங்க. அதிமுகாவில் ஆட்கள் இல்லை அதுக்கு திறமையான துதிபாடாத மீடியாவும் இல்லாதது பெரிய குறைதான்.
அடுத்தது பாஜ கட்சியின் தேர்தல் அறிக்கை எனக்கு ஓரளவுக்கு பிடித்தது. ஆனால் பாவம் அவர்களும் இலவசங்களை அறித்து நாங்களும் உங்களை முட்டாளாக்குகிறோம் மடையன்களா வேற வழி இல்லை என்று சொன்ன மாதிரி இருக்கு.
தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.
இந்த அறிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. திமுக ஆட்சியை நான் வெறுத்ததுக்கு சித்திரை 1 புத்தான்டு இல்லை என்று சொன்ன காரனமும் ஒன்று.
மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.
அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.
மிகவும் வரவேற்க்க தரும் திட்டம். ஆனால் இது இ ந்தியா அளவில் திவிரமாக செயல்படுத்த வேன்டும். வெவ்வேறு பெயர்களில் மரபு மாற்றம் செய்த விதைகள் வருகிறது.
அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.
நல்ல திட்டமா தான் தெரியுது. ஆனால் இதில் விளக்கமாக இல்லையே.
பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.
இது தேவை இல்லாத அறிக்கை. பூரன மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் மதுபானம் அருந்துவது என்பது ஒருவரின் தனி பட்ட விசயம் அதில் தலையிடுவது நல்லதல்ல. விழிப்புனர்வு பிரச்சாரம் மூலம் மக்களை நல்வழி படுத்தலாம் அதை விட்டு விட்டு தினிப்பது மிரட்டுவது கூடாது.
அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.
இந்த ஒரே காரனத்துகாக பஜாவுக்கு ஒரு ஓ போடக்லாம். விவசாயிகளின் பல நாள் கோரிக்கை இது. மேலும் இது விவசாயி நலன் மட்டுமல்ல. மக்கள் நலனும் இருக்கிறது. கள்ளு மதுபானம் அல்ல அது உடலுக்கு நல்லது செய்யும் ஒரு பொருள் தான் என்று தீவிரமாக நம்பும் இனத்தை சேர்ந்தவன் நான்.
கள்ளு மட்டுமல்ல என்னை கேட்டால் சாராயத்தையும் விற்க அனுமதிக்கலாம் (பீர் பிராந்தி விஸ்கி ரம் இவற்றை விற்க அனுமதிக்கும் போது லோக்கல் பிசினஸை மட்டும் தடை போடுவதில் எந்த நியாமும் இல்லை)
பஜா அறிவிப்பு என்னை கவர்ந்திருக்கிறது. நான் ஒரு பாஜக அபிமானியும் கூட ஆனால் இந்த முறை நானும் பாஜக கட்சிக்கு ஓட்டு போட தயங்குகிறேன். இப்போதைக்கு மக்கள் நலனுக்கு அதிக கேடு என்று நான் நினைக்கும் ஒரு திராவிட கட்சி ஆட்சியை பிடிக்காமல் தடுக்க வேன்டும் என்றால் இன்னொரு திராவிட கட்சிக்கு (அதுவும் எனக்கு பிடிக்காவிட்டாலும்) ஓட்டு போட வேன்டிய சூல்நிலை இருக்கு.