தேர்தல்(இலவச) அறிக்கைகள் 2011

நாசமா போச்சு போங்க...:icon_p:

கலைஞரும் அம்மாவும் இலவசமாவே கொடுத்து தமிழனை சோம்பேறியாக்கிடுவாங்க போல இருக்கே....
ஆனால் நான் ஒண்ணு சொல்றேன்...
எதிர்காலத்தில சத்தியமா தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்படுவாங்க!!!
 
நாசமா போச்சு போங்க...:icon_p:

கலைஞரும் அம்மாவும் இலவசமாவே கொடுத்து தமிழனை சோம்பேறியாக்கிடுவாங்க போல இருக்கே....
ஆனால் நான் ஒண்ணு சொல்றேன்...
எதிர்காலத்தில சத்தியமா தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்படுவாங்க!!!

இப்ப சந்தோசமா இருக்காங்களா?:confused:
 
நானும் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கலாம்னு இருக்கேன்

1. குடிக்க தண்ணீர் இலவசம்
2. டூத் பேஸ்ட் பிரஸ் இலவசம்
3. இலவச டீ- காஃபி
4. இலவச செய்தித்தாள்
5. இலவசச் சிற்றுண்டி..
6. இலவச பஸ் / இரயில் பாஸ் மாநிலம் முழுமைக்கும்.
7. இலவச வேஷ்டி, சேலை, உள்ளாடைகள்
8. இலவச மேக்கப் கிட்
9. இலவச மதிய உணவு
10. இலவச கேபிள் கனெக்ஷன்
11. இலவச டி.வி
12. இலவச சோடா.
13. இலவச ஏ.சி..
14. இல்வச வீடு
15. இலவச படுக்கை
16. இலவச இரவு உணவு
இனிமே வர்ரதுதான் ஹைலைட்
17. இலவச சரக்கு
18. இலவச சைட் டிஷ்!
 
நீங்க மேல நகைச்சுவைக்காக சொன்னதெல்லாம்
அடுத்த தேர்தல் அறிக்கையில வரவும் வாய்ப்பு இருக்கு
 
தாமரை said:
நானும் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கலாம்னு இருக்கேன்

1. குடிக்க தண்ணீர் இலவசம்
2. டூத் பேஸ்ட் பிரஸ் இலவசம்
3. இலவச டீ- காஃபி
4. இலவச செய்தித்தாள்
5. இலவசச் சிற்றுண்டி..
6. இலவச பஸ் / இரயில் பாஸ் மாநிலம் முழுமைக்கும்.
7. இலவச வேஷ்டி, சேலை, உள்ளாடைகள்
8. இலவச மேக்கப் கிட்
9. இலவச மதிய உணவு
10. இலவச கேபிள் கனெக்ஷன்
11. இலவச டி.வி
12. இலவச சோடா.
13. இலவச ஏ.சி..
14. இல்வச வீடு
15. இலவச படுக்கை
16. இலவச இரவு உணவு
இனிமே வர்ரதுதான் ஹைலைட்
17. இலவச சரக்கு
18. இலவச சைட் டிஷ்!
__________________
சரி தலைவரே ! இதுக்கெல்லாம் பணம் வேணுமே இருக்கிற பணத்தஎல்லாம் போட்டு கட்சிய ஆரம்பிச்சிட்டோம் ...நாம ஒருவேளை எம் எல் ஏ ஆயிட்டா நம்ம பொழப்ப பாக்குறதுக்கே சரியா இருக்கும் மக்களுக்கு எப்படி (நாமம் போடாம) இதெல்லாம் பண்ண போறோம் ...
 
நவது அவர் தான் குறை சொல்லவில்லை நாம் உணவுக்காக அந்நிய நாடுகளை நோக்கி கையேந்து ஆட்டு மந்தை கூட்டங்களாகி விடுவோம்..பின்னர் சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் நிலைமை எவ்வாறிருந்ததோ அந்நிலை திரும்பும் ..இவ்வாறு அடிமைகளாக வாழவேண்டுமா...இன்றைய தலைமுறை இலவசங்களுக்காக நாளைய தலைமுறை அடிமையாக ...நாம் இன்று எதிபார்ப்பது ஒரு இலவசங்களற்ற நல்லாட்சியை .யார் சொன்னது செய்தார்கள் என்பது இதில் முக்கியமல்ல....[/ண்பர் உதயசூரியன் ,நீங்கள் கூறுவது உண்மைதான் செய்COLOR]




கடந்த ஆண்டில் சொன்னார்கள் செய்தார்கள்.. சொல்லாத பல நன்மைகளும் செய்தார்கள்.. தொழில் துறையில் பல வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வைத்தார்கள்.. வேலை வாய்ப்பு பெருகியது.. மக்களுக்கு பணபுழக்கம் ஏற்பட்டது.. வாங்கும் திறன் அதிகரித்தது.. நாள் சாலைகள்.. ஏழைகளை முன்நீர்ரும் அருமையான திட்டங்கள் மெட்ரோ ரயில் முடிக்க படாத பல பாலங்கள் முடிக்க பட்டன.. சில குறைகள் இருந்தாலும் திமுக அரசு செய்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.. திமுக தேர்தல் அறிக்கையை முழு விவரத்துடன் இணைக்கிறேன் .. பொதுவாக ஏழைகள் நல்ல சாப்பாடு சாப்பிட்டால் அதுக்கு மேல இருப்பவனுக்குரிச்சல் வரும் அது போல தான் நம்மில் சிலர்.. அப்போலோ ஆஸ்பிட்டல் ஆம்புலன்சை விட நூற்றி எட்டு சூப்பர்

திமுக தேர்தல் அறிக்கை- முழு விவரம்:
வீடு தேடி வரும் டாக்டர்:

மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்,

தனியார் நிறுவனஙகளில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு:

குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை, தனியார் நிறுவனங்களில் தலித் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர நடவடிக்கை, இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்த பரிசீலனை, தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு பெற நடவடிக்கை,

30 கிலோ அரிசியும் இலவசம்:

பரம ஏழைகளுக்கு ரேசன் கடைகளில் மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும்,

இலவச டயாலிசிஸ் சிகிச்சை:

சிறுநீரக பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை, அரசுப் பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களில் இருந்து 4 மாதங்களாக அதிகரிக்கப்படும்,

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2 லட்சம் மானியம்:

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் ரூ. 2 லட்சம் மானியமாக வழங்கப்படும்,
மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்

மதுரை-கோவையில் மெட்ரோ ரயில்:

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க நடவடிக்கை, சென்னையிலிருந்து மதுரை, கோவைக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை என்பது உள்பட ஏராளமான திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.


Fwd: திமுக தேர்தல் அறிக்கை- முழு விவரம்:

பொது மக்கள் தவிர எதிர்க் கட்சிகளும் மிக ஆர்வமாக எதிர்பார்த்த திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று மாலை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

அதன் முழு விவரம்:

- ஏழை எளிய மாணவர்களை பாதிக்கும் நுழைவுத் தேர்வுகள் எப்போதும் வேண்டாம் என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

- நதி நீர் இணைப்பை தொடர்ந்து வலியுறுத்துவோம். முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க மத்திய அரசை தொடர்நது வலியுறுத்துவோம்.

- செம்மொழியாம் தமிழை இந்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்

-உயர்நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களில் நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுப்போம்.

- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க பாடுபடுவோம்

- மத்திய தேர்வாணைய தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் எழுத நடவடிக்கை எடுப்போம்.

- ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.

- தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தோறும் வேளாண் உற்பத்திச் சாதனங்கள் நியாயமான வாடகையில் விவசாயிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு.

- இலவச மின்சாரத் திட்டத்தை தென்னை வளர்ப்பு உள்ளிட்ட தோட்டக்கலை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்துவோம்

- நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை மூலம் காய்கறிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

- படித்த இளைஞர்களுக்காக மாவட்டந்தோறும் சிறப்புத் திறன் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும்.

- மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். அதில் 2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.

- வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு உடை, உணவு, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு, வருமானத்திற்கும் வழி காணக் கூடிய பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் அனைத்து சேவைகளையும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒருங்கிணைத்து அவர்களின் பொருளாதார வளர்ச்சி உறுதியாக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவர்களை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தரப்படும்

- டெல்டா மாவட்டங்களில் வைக்கோலைப் பயன்படுத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காளாண் வளர்ப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்துவோம்.

- சொட்டு நீர்ப்பாசனத்துக்காக, விவசாயிகளுக்கு தற்போது அளிக்கப்படும் 65 சதவீத மானியம் சிறு குறு விவசாயிகளுக்கு 90 சதவீதமாக உயர்த்தப்படும்.

- சூரிய மின்சாரத்தை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.

- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.

- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது போல, மீன்பிடியின்போது பாதிப்புக்குள்ளாகும் ஏழை மீனவர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தி மீனவர்நலனைப் பாதுகாப்போம்.

- விசைப் படகுகளுக்கு மாதந்தோறம் வழங்கப்படும் 1500 லிட்டர் டீசல் மானியம் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களுக்கு 300 லிட்டர் மானியம் என்பதை முறையே, 2000 லிட்டர் டீசல், 500 லிட்டர் டீசலாக உயர்த்த நடவடிக்கை எடுப்போம்.

- கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசுடன் பேசி நடவடிக்கை எடுப்போம்.

- சென்னை கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை போல திருச்சியிலும், மதுரையிலும் மன நல மருத்துவமனைகள் அமைப்போம்.

- தாம்பரம் போல மதுரையில் காச நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

- சிறுநீரக பாதிப்புக்குள்ளான ஏழை மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

- பச்சிளம் குழந்தகளைத் தாக்கும் மூளைக் காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றுக்கு மாநில அரசின் சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும்.

- - மாவட்ட மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மையங்களை அமைப்போம்.

- மாவட்டந்தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்போம்.

- வட்டார மருத்துவமனைகளில் எய்ட்ஸ் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.

- வரும் முன் காப்போம் திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு விரிவுபடுத்துவோம்.

- கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்துவதோடு, சாலை விபத்துகளுக்கும் இந்தத் திட்டத்தில் உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்வோம்.

- மூத்த குடிமக்களுக்கு மாதம் ஒருமுறை மருத்துவர்களே வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை சிகிச்சை செய்யும் முறையை சிறப்பாக செயல்படுத்துவோம்.

- அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இனி ஆண்டுதோறும் இலவசமாக 3 சீருடை வழங்கப்படும்.

- பல்கலைக்கழகங்கள் இல்லாத மாவட்டங்களே கிடையாது என்ற நோக்கத்தோடு அனைத்து மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்கள் அமைப்போம்.

- அரசுக் கல்லூரிகளிலும், தொழில்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு, முதலாவது ஆண்டிலேயே இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.

- மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ளும்

- மாவட்டந்தோறும் செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைக்கப்படும்.

- பின் தங்கிய மாவட்டங்களில் சிறு குறு தொழிலகள் தொடங்க ஊக்கத்திட்டம் தொடங்கப்படும்.

- மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மெட்ரோ ரயில் திட்டம் போல, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- மதுரை, கோவைக்கு அதி விரைவு தொடர் வண்டி - புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுப்போம்.

- மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து. 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லாத இலவச பயணம்.

- முதியோர், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு மாதந்தோறும் அளிக்கப்படும் ஓய்வதியம் ரூ. 500 என்பதிலிருந்து ரூ. 750 ஆக அதிகரிக்கப்படும்.

- மினி பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை.

- நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ரூ. 600 ஆக அதிகரிக்கப்படும்.

- 60 வயதைத் தாண்டிய நெசவாளர்களுக்கு ஓய்வூதியம்.

- கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 200 யூனிட்டாக அதிகரிக்கப்படும்.

- சாயக்கழிவுகளால் ஏற்படும் பிரச்சினைக்கு இயற்கை முறையை கையாண்டு தீர்வு காண முயற்சிப்போம்.

- தலித் கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

- சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம்

- சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு .

- இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை.

- தனியார் நிறுவனங்களில் ஆதி திராவிடர் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர நடவடிக்கை.

- மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை மாற்றும் வகையில் நவீன இயந்திரங்களை அறிமுகப்படுத்துவோம்.

- திருநங்கையர்களுக்கு தனியாக சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்

- வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை.

- கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் தற்போது வழங்கப்படும், உதவி மானியம் ரூ. 75 ஆயிரம் என்பதிலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்தப்படும்.

- அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் உடனடியாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்.

- குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

- சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்.

- சென்னை உள்பட பெரிய நகரங்களில் புதிய ஏரிகளை உருவாக்கி குடிநீர் ஆதாரங்களை அதிகரிப்போம்.

- சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், பிற மாநகராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்துவோம்.

- கந்து வட்டிக் கொடுமையை நீக்க வழி வகை காணப்படும்.

- திருக்கோவில் காலி நிலங்களை பாதுகாக்க, வருவாயைப் பெருக்கும் வகையில், நிலவங்கி ஒன்று நிறுவப்படும்.

- அரசு சான்றிதழ்களை ஒரே இடத்தில் பெற பொதுமக்கள் சேவை மையம் தொடங்கப்படும்.

- அரசுப் பணிகளில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதங்களாக உள்ளது என்பதை 4 மாதங்களாக அதிகரிப்போம்.

- பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் கிலோ 1 ரூபாய் வீதம் வழங்கப்படும் 30 கிலோ அரிசி இனி இலவசமாக வழங்கப்படும்.

- ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.

- குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.

- இலவச எரிவாயு அடுப்புத் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

- இலவச டிவி திட்டம் தொடரும்.

- ஏழைப் பெண்களுக்கான திருமண நிதியுதவி ரூ. 25,000 என்பது 30,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.

- கர்ப்பிணிப் பெணக்ளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ. 6000 என்பதிலிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்துவோம்.

- பெண்களுக்கு இலவச கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும். பெண்கள் எதைக் கோருகிறார்களோ அதைப் பொறுத்து கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும்.

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
Last edited:
நானும் ஒரு தேர்தல் அறிக்கை தயாரிக்கலாம்னு இருக்கேன்

1. குடிக்க தண்ணீர் இலவசம்
2. டூத் பேஸ்ட் பிரஸ் இலவசம்
3. இலவச டீ- காஃபி
4. இலவச செய்தித்தாள்
5. இலவசச் சிற்றுண்டி..
6. இலவச பஸ் / இரயில் பாஸ் மாநிலம் முழுமைக்கும்.
7. இலவச வேஷ்டி, சேலை, உள்ளாடைகள்
8. இலவச மேக்கப் கிட்
9. இலவச மதிய உணவு
10. இலவச கேபிள் கனெக்ஷன்
11. இலவச டி.வி
12. இலவச சோடா.
13. இலவச ஏ.சி..
14. இல்வச வீடு
15. இலவச படுக்கை
16. இலவச இரவு உணவு
இனிமே வர்ரதுதான் ஹைலைட்
17. இலவச சரக்கு
18. இலவச சைட் டிஷ்!

நான் இன்னும் கொஞ்சம் மேல போறேன்..

இலவச மனைவி, :eek:
இலவச குழைந்தைகள்.. :D:lachen001:
 
- ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு சமமான நிலையை ஏற்படுத்தி, அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும். ஈழத் தமிழர்கள் அமைதியான சூழலில் வாழ தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுக்க வலியுறுத்துவோம்.

என்ன ஃபேக்ஸ் அனுப்புவீங்களா, இல்லை முரசொலியில் கடிதம் எழுதுவீங்களா...??? :icon_shout::icon_shout::icon_shout::icon_shout:

சும்மா ஜோக்கடிக்காதீங்க சார்..!!
:cool:
 
இத்தனை இலவசங்களை அறிவித்த கட்சிகள் அதற்க்கு நிதி எங்கிருந்து திரட்ட படுகிறது என்று சொல்லவே இல்லை. நிச்சயம் அவர்கள் சொந்த காசிலோ அல்லது கட்சி காசிலோ இருந்து கொடுக்க போவது இல்லை என்று பொதுமக்களுக்கு தெரியும்.

இத்தனை இலவசங்களை மக்களுக்கு அள்ளி வழங்க அரசாங்கத்துக்கு அமெரிக்கா ஐரோப்பாவிலிருந்து காசு சும்மா வருதா? வராது. எல்லாம் வரிபனத்திலிருந்துதானே கொடுக்கிறார்கள். ஒரு அரசியல் வாதி அளித்த பேட்டியில் செல்வந்தர்களிடமிருந்து பனத்தை புடுங்கி ஏழைகளுக்கு கொடுக்கிறோம் என்று சொன்னார். ஆனால் அது பச்சை பொய்

மாநில அரசு வாங்கும் எந்த வரியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருட்களில் விலைபொருளில் வந்து அடங்கி விடும். வருமான வரி மட்டும் தான் வியாபாரிகள் பாக்கெட்டிலிருந்து கொடுக்கிறார்கள் (அதுவும் கூட மத்திய அரசுக்கு வரும் வருமானத்தில் 20 சதவீதம் தான்). மத்திய அரசே 80 சதவீத மற்ற வரிகள் மூலம் இயங்குது. மற்ற வரிகள் எப்பவுமே மக்கள் வாங்கும் விலை பொருளில் வந்து சேர்ந்து விடும்.

இப்ப லிங்க் செஞ்சா விலைவாசி எப்படி ஏறுதுனு தெளிவா தெரியும். கழிவு நீரால் கெட்டு போன குளம் மற்றும் ஆறுகள் சரி செய்ய அரசிடம் நிதி இருக்கா? சுற்று சூழலை சீர்கேட்டை தடுக்க அரசிடம் நிதி இருக்கா? இல்லை இதன் பாதிப்பு இப்பவே தெரியுது. பல நீர் நிலை வீன் ஆகி விவசாயம் பாழ் ஆகி விட்டது. சுகாதாரமற்ற சூழ் நிலையை தடுக்க வழி செய்யாம எல்லாருக்கு நோய் வந்த பிறகு மருந்து மட்டும் சிலருக்கு இலவசமாக கொடுப்பதில் பயன் இல்லை.
 
என்னங்க உதய சூரியன் அவர்களே அம்மையாரின் தேர்தல் உறுதிமொழிகளை படிக்கவில்லை போலும் ...மத்ய அரசில் அங்கம் வகிக்கும் தமிழகரசினால் தமது குடும்பத்திற்கு தேவையான வசதிகளை பெறமுடிகிறது .. மீனவர்கள் நிலையில் ஒன்றும் செய்ய முடியவில்லை ..இது போன்று ஒரு கட்சி சார்பாய் பேசுவதை விடுத்து உண்மை நிலையினை உணரவேண்டும் ...முந்தய பதிவினை தெளிவாக படியுங்கள் ....நண்பரே
 
இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு


திமுகவும், அதிமுகவும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில் இலவசமாக மிக்சி தருகிறோம், கிரைண்டர் தருகிறோம், ஆடு மாடு தருகிறோம், தண்ணீர் தருகிறோம், இலவச பஸ் பாஸ் தருகிறோம் என்று சரமாரியாக இலவச திட்டங்களை அறிவித்துள்ளனர்.

தமிழகத்தின் இந்த அரசியல் இலவச அறிவிப்புகள் நாடு முழுவதும் பரபரப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டை இலவச நாடு என்று வட இந்திய மீடியாக்கள் கிண்டலடிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவது போல அமைந்துள்ளது சில கட்சிகள் அறிவித்துள்ள இலவச அறிவிப்புத் திட்டங்கள். இந்த இலவச அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை தேர்தல் முடிவுகளையும் நிறுத்தி வைக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ராமசாமி கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

வழக்கு தொடர்ந்துள்ள டிராபிக் ராமசாமி தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியை எதிர்த்து போட்டி

இதற்கிடையே, முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட திருவாரூரிலும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் டிராபிக் ராமசாமி.

அங்கு உதவி தேர்தல் அதிகாரி ஜெயராஜிடம் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி.

நன்றி: தட்ஸ் தமிழ்
 
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் இதிலும் உள்ளன. அதேசமயம், திமுக திட்டங்களின் விரிவாக்கமாக இவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

பார்ரா....தாத்தா ஒண்ணுன்னா ஆத்தா மூணுன்குது
 
26-pon-radhakrishnan200.jpg


பாஜக தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, ஏழைக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள், பெண்களுக்கு ரேஷன் மூலம் இலவச நாப்கின், விசாயத்துக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கான தனது வாக்குறுதிகளாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

தமிழக பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. பா.ஜ.க. முன்னாள் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த அறிக்கையை வெளியிட்டார். அதை விவசாயி, மீனவர், தாழ்த்தப்பட்டோர் ஆகிய 3 பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.

மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி கூறியதாவது:

தமிழ்நாட்டில் 44 ஆண்டுகளாக நடந்து வரும் இருண்ட ஆட்சியை அகற்றி விட்டு, உன்னதமான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கை பா.ஜ.க.வுக்கு உள்ளது. அதன்படி இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழர்களின் உண்மையான புத்தாண்டான சித்திரை 1-ந்தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிப்போம்.

* சிறுபான்மை மாணவி களுக்கு வழங்குவது போல இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

* அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கப்படும்.

* மாணவர்களுக்கு வருட தொடக்கத்திலும், தேர்வு நேரத்திலும் பேனா, பென்சில் இலவசமாக கொடுக்கப்படும்.

* அரசு பள்ளிகளில் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும்.

* 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு யோகா, தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படும்.

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஓராண்டு இலவச பால் கொடுக்கப்படும்.

* பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை பெயரில் வங்கியில் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும்.

* ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும்

* சுய உதவிக்குழுக்கள் மூலம் 'நாப்கின்'கள் தயாரித்து ஏழைப் பெண்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக கொடுக்கப்படும்.

* பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்றப்படும்.

* இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்படும்.

* நதிநீர் இணைப்பு கொள்கைப்படி தமிழக நதிகள் இணைக்கப்படும். முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

* விவசாயத்துக்காக தனிபட்ஜெட் போடப்படும்.

* மலிவு விலையில் விவசாயிகளுக்கு விதைகள் கொடுக்கப்படும். மரபு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் விற்பது தடை செய்யப்படும்.

* ஏழைக் குடும்பங்களுக்கு வீட்டுக்கு ஒரு கறவை பசு மாடு இலவசமாக கொடுக்கப்படும்.

* கச்சத்தீவை திரும்ப பெற்று தமிழர்களின் மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

* அரசே சூப்பர் மார்க் கெட் நடத்தும்.

* மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

* பூரண மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதுவரை விவசாயிகள் நலன்கருதி கள் இறக்க அனுமதிக்கப்படும்.

* இந்து கோவில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.

* அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும்.

* வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றும் உரிமை ஆகாது. எனவே அச்சுறுத்தி ஆசைகாட்டி மதம் மாற்றுவது கிரிமினல் குற்றமாகும். எனவே கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்.

பா.ஜ.க. சார்பில் 194 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். எங்கள் வேட்பாளர்களின் நேர்மை, தூய்மை, உழைப்பை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். யார் வெற்றி பெற வேண்டும், யாரால் தூய்மையான ஆட்சியை தரமுடியும் என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள், என்றார்.

நன்றி: தட்ஸ்தமிழ்
 
விவரமாகத்தான் ஆனாலும் விவகாரமாகவும் இருக்கு - பார்ப்போம் மக்களின் முடிவு என்னனு? சின்ன பயம் தான் ஒரு மாச இடைவெளியில்? அதிகார வர்க்கம் எதுவும் செய்யலாம்
 
இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நீதி துறை இதை எல்லாம் கண்டுக்க மாட்டார்கள்
 
அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் திமுகவின் தேர்தல் அறிக்கையும் ஒன்றல்ல!கிரைண்டர் மிக்ஸி பேன் வழங்கும் அதே நேரத்தில் அதற்கான தடையற்ற மின்சாரத்திற்கு சோலார் எனர்ஜி யூனிட் இலவசமாக அமைப்பதும் ,கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை,முதியோருக்கு இலவச பஸ் பாஸ் என்பது மட்டுமன்றி ஊராட்சிக்கு ஒரு ஆதரவற்ற முதியோர்,குழந்தைகள் காப்பகம் மூன்று வேளை இலவச உணவுடன் அமைக்கப்படும் என்பதும்,ரேசன் கார்டு தாரர்கள் அனைவருக்கும் இலவச அரிசி என்பது மட்டுமல்லாமல் `பசித்தவனுக்கு மீனை மட்டும் தராமல் மீன்பிடிக்க கற்று தரும்`ஆடுகள்,ஒரு பசுமாடு ஆகியவை மூலம் உழைப்பும் பிழைப்பும் வழங்கப்படும் என்பதும்,தொலைகாட்சிக்கு பதில் கேபிள் டிவியை அரசுடமையாக்கி மாதா மாதம் அரசுக்கு வருமானமும்,அனைத்து குடும்பங்களுக்கும் வருவாயும் உண்டாக்குவதும்,அதிமுக தேர்தல் அறிக்கையில் மட்டுமே உள்ளது.மொத்ததில் மக்களை கவரும் இலவசங்கள் மட்டுமே கொண்டது தி முக அறிக்கை,இலவசங்கள் மூலம் மக்களை கவர்ந்தாலும் எதிர்கால சமூகம் குறித்த திட்டமிடலும் இணைந்தே வழங்கப்பட்டது அதிமுக அறிக்கை! கொடுமை என்னவென்றால் இதையெல்லாம் விளக்கமாக எடுத்து சொல்ல திறமையான ஆட்கள் அதிமுக வில் இல்லாதது தான்​
 
இலவச திட்டங்களைத் தடை செய்யக் கோரி சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அவரைத் தவிர இந்த நேரத்தில் இப்படி ஒரு வழக்கு போட யாருக்கும் தோன்றாது!!
அவர் ஒரு உண்மையான சமூக சேவகர்!!
 
Back
Top