புதுப்படங்களுக்கு 20 பேர் கூட வரவில்லை!

main.php

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் நிச்சயம் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்த கிரிக்கெட் திருவிழா தொடங்கி 4 நாட்களே ஆன நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்துவிட்டன.

ஓரளவு ஹிட் படம் என்று கூறப்படும் பயணம், யுத்தம் செய் போன்றவற்றுக்குக் கூட பகல் காட்சிக்கு 50 பேர் வருவதே அதிசயமாகிவிட்டது, புறநகர்ப் பகுதிகளில். பொதுவாக மாலை நேரக் காட்சிகளுக்கு ஓரளவு கூட்டம் வரும். ஆனால் உலகக் கோப்பை ஆட்டங்கள் துவங்கிய பிறகு சுத்தமாகக் குறைந்துவிட்டது.

வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் பயணம் படத்தின் இரவுக் காட்சிக்கு 20 பேர் கூட வரவில்லை. பெரும்பாலான போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடப்பது திரையரங்கு உரிமையாளர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.

கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் சில திரையரங்குகளில் காட்சி நேரம் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. மீதி நேரங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.

இன்னும் சில அரங்குகள் காட்சி நேரத்தை மட்டும் குறைத்துவிட்டன, கரண்ட் பில்லாவது மிச்சமாகட்டும் என்ற நினைப்பில்.

இந்த நிலையை எதிர்ப்பார்த்தே, 7 முக்கியப் படங்களின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 8-க்குப் பிறகு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைகின்றன. பாலாவின் அவன் இவன் கூட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஏப்ரல் 8-ம் தேதிதான் ரிலீஸ் செய்யப்படுகிறது.
 
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மையே.
ஆனால் ஒருசிறிய கருத்தை சொல்கிறேன்.
திருட்டு வீசீடியினால் திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மக்கள் கவனம் இப்போது உலகக்கோப்பையின் மீது திரும்பியிருக்கிறது. என்ன செய்வது எங்கே அதிக ஈடுபாடு இருக்கிறதோ அங்கேதான் மக்கள் போவார்கள்.

திரைப்படத்தைப் பார்க்க மக்கள் மறுபடியும் வருவார்கள், கவலை வேண்டாம், அது தவிற இப்போது பரிட்சை சமயம் வேறு.
 
Back
Top