சென்னை சூப்பர் கிங்க்ஸ்
1. மிஸ்டர் கிரிக்கெட் எனப்படும் மைக்கேல் ஹஸ்ஸி, பென் ஹில்ஃபின்ஹாஸ் மற்றும் டிவைன் பிராவோ இருவரும் ஏப்ரல் இறுதி வரை பிஸியோ பிஸி. அவர்கள் வரும் வரை அணியின் அமைப்பு என்ன?
2. இந்த வருடப் புது வரவு ரவீந்த்ர ஜெடெஜா வின் தாக்கம் என்ன?
துவக்கம்
1. முரளி விஜய் : 2010 ஒரு நல்ல ஆண்டாக இருந்தது. 2011 ல் இவரது ஆட்டம் மந்தமானது. இப்பொழுது அபினவ் முகுந்த் வேறு காயப்பட்டிருக்கிறார். ஹஸ்ஸியும் ஏப்ரல் இறுதியில் தான் வருவார் என்பதால் சிறந்த துவக்கம் தரவேண்டிய கட்டாயம் இவருக்கு இருக்கிறது. இந்த வருட ரஞ்சிக் கோப்பைகளில் கூட ஆட்டம் ஓ.கேதான்.
2. அனிருத் ஸ்ரீகாந்த்; இந்த வருட இரஞ்சிக் கோப்பை மற்று இதர உள்நாட்டுப் போட்டிகளில் ஆட்டம் சற்று மெருகேறி இருக்கிறது. ஹஸ்ஸி வருவதற்குள் இவர் இரண்டு 50 களை அடித்து இடத்தைத் தக்க வைத்துக் கொண்டால், ஹஸ்ஸி வந்தவுடனே வேறு பெயர்கள் பரிசீலிக்கப்படலாம்.
3. சுரேஷ் ரெய்னா சென்னையைப் பொறுத்தவரை 3 ஆவது ஆட்டக்காரராக சுரேஷ் ரெய்னா நன்கு ஆடுகிறார். எனவே இவர் ஆரோக்யமாக உள்ளவரை இதே இடம்தான்.
4. தோனி : தலை. அதனால் இங்கதான் இருப்பார்
5. பத்ரிநாத் கடினமான விக்கெட்டுகளில் மிக அத்தியாவசியமாக தேவைப்படும் ஒரு வீரர். மற்ற போட்டிகளில் இவருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைப்பது கடினம். இருந்தாலும் ஹஸ்ஸி இல்லாத நிலையில் அணியில் அவசியமான ஒருவர். ஹஸ்ஸி வரும்பொழுது இவர் - அனிருத் இருவரில் ஒருவருக்கு கண்டம் வரலாம்.
6. இரவீந்த்ர ஜெடெஜா: இவ்ளே காசு குடுத்து வாங்கிட்டு ஆட வைக்காம இருக்க முடியுமா?
7. இரவிச்சந்திரன் அஸ்வின் தோனியின் அஸ்திரம். எனவே நிலையான இடம் உண்டு.
8. அல்பி மோர்கல்: இவருக்கும் கண்டிப்பாக இடம் உண்டு
9. டு-பிளாஸிஸ்: மைக்கேல் ஹஸ்ஸி வரும் வரை இவர் அணியில் இடம் பெறலாம். ஜார்ஜ் பெய்லியை விட இவருக்கே வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
10. ட்வைன் ப்ராவோ : அதிரடி, நல்ல பந்து வீச்சு என இரு எதிர்பார்ப்புகள். பென் ஹில்ஃபென்ஹாஸ் வரும் வரை இவருடைய பந்து வீச்சு மிக முக்கியம்
11 பொல்லிஞ்ஜர் : அணியின் தூண்களில் ஒருவர்.
ஆக யார் யார் விளையாடுவார்கள் என்பது ஏறத்தாழ தெளிவாகவே இருக்கிறது.
வேகப்பந்து வீச்சுக்கு ; யோ மஹேஷ், சுதீப் தியாகி, குலசேகரா
சுழல்பந்து வீச்சு : சூரஜ் ரண்தீவ், ஜகாதி
மட்டையடிக்கு: ஜார்ஜ் பெய்லி, சஹா
மற்றபடி : விக்னேஷ், ஜோகீந்தர்ஷர்மா
ஆகியோர்கள் இருக்கிறார்கள்.
தற்பொழுது வேகப்பந்து வீச்சு முழுமைக்கும் அணி வெளிநாட்டு வீரர்களையே சார்ந்திருக்கிறது. சுழற்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் இவற்றில் உள்நாட்டு வீரர்களின் கை ஓங்கி இருக்கும்.
1. பொல்லிஞ்ஜர் தவிர மற்ற அனைவருமே துடுப்பாட்டத்தில் கைகொடுப்பார்கள் என்பதும்
2. பத்ரிநாத் - அஸ்வின் - தோணி கடினமான விக்கெட்டுகளில் அணியின் சரிவைக் கட்டுப்படுத்துவார்கள் என்பதும்
3. விஜய் - அனிருத் - சுரேஷ் ரெய்னா - தோனி - ஜெடெஜா - மோர்கல் - டு-பிளாசிஸ் - பிராவோ ஆகியோர் அடித்து ஆடக்கூடியவர்கள் என்பதும்
4. ஒரு இடக்கை சுழல் பந்து வீச்சாளர், ஒரு ஆஃப் ஸ்பின்னர், ஒரு லெக் ஸ்பின்னர் மற்றும் சுரேஷ் ரெய்னா என சுழற்பந்து வீச்சு பலமாக இருக்கிறது என்பதும்
நல்ல விஷயங்கள்.
பொல்லிஞ்ஜர் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வப்பொழுது சோபிக்கத் தவறலாம். எனவே ஆண்டி (ஹா ஹா ஹா) பிக்கலின் (பிச்சையெடுத்தல், பிக்கல் பிடுங்கல் செய்தாவது) வழிகாட்டுதல் மிக முக்கியம்.
ஒரு மாதிரி மிகத் தெரிந்த அணியாகத் திகழ்கிறது சென்னை அணி.
குறை : மிகச்சிறந்த வெளிநாட்டு மட்டை வீச்சாளர்கள் குறைவு. எனவே உள்நாட்டு பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு குறைகிறது. மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இன்னுமொருவர் தேவை.
ஹஸ்ஸியும் ஹில்ஃபென்ஹாஸும் வருவதற்குள் 8 மேட்சுகள் முடிந்து விடும் என்பதால் ஆரம்பித்தில் இருந்தே சுறுசுறுப்பாக ஆடவேண்டும்.
முதல் ஆட்டம் மும்பையோடு.
மும்பையின் அணியைப் பார்ப்போமா?
1. சச்சின் டெண்டுல்கர்
100 - 100 களை அடித்தாகி விட்டது, எனவே இவரது ஆட்டம் சற்று மேல்நோக்கிப் போகும். இவரை நிற்க விட்டால் ஆபத்து.
இன்னும் சச்சினுக்கு சில சமயங்களில் இன்ஸ்விங் முறையில் வரும் பந்துகளுக்கு எல்.பி.டபிள்யூ ஆவதும், லேட் ஸ்விங்க் ஆகும் பந்துகளுக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுப்பதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதை சரியாக உபயோகப்படுத்த வேண்டும்.
2. ரிச்சர்டு லெவி
திடீரென புகழ்பெற்றவர் - இவரைப் பற்றி இன்னும் கணிக்க இயலவில்லை. இந்தியாவில் எப்படி ஆடுவார் என்பது புரியவில்லை. அதிவேக சதத்திற்குச் சொந்தக்காரர்.
3. அம்பட்டி ராயுடு
கப்பல் அலையில் தள்ளாடினால் அதை காக்க வேண்டிய பொறுப்பு இவருடையது. மும்பையின் பத்ரி.
4. ரோஹித் சர்மா
உள்நாட்டு போட்டிகளில் கலக்கினாலும் பன்னாட்டுப் போட்டிகளில் இன்னும் சற்று மெருகேற வேண்டும். நன்கு ஆடுவார்.
5. கைரோன் பொலார்ட்
இவர் அடிக்கும் அடியில் பந்துக்கும் பேட்டுக்கும் எவ்வளவு வலிக்கும் தெரியுமா? இருந்தாலும் ஸ்பின்னர்களை வைத்து இவரை சமாளிக்கலாம். நம்மகிட்டதான் 4 பேர் இருக்காங்களே. இவர் மேற்கிந்திய டெஸ்ட் அணிகளில் இடம் பெற வாய்ப்பு குறைவு என்பதால் விளையாட வரலாம் என்பது கணிப்பு.
6. ஜேம்ஸ் ஃபிராங்க்ளின்
இவரும் நல்ல பேட்ஸ்மென். ஆனால் 150 க்கு மேல் இவரது ஸ்ட்ரைக் ரேட் இருக்காது என்பது கணிப்பு.
7. தினேஷ் கார்த்திக்
இவர் 6 அல்லது 7 வது இடத்தில் இறங்கினால் நன்கு ஆடுவர். இவர் நல்ல காப்பாளரும் கூட.
8. ஹர்பஜன் சிங்
பந்தையும் சுழற்றுவார்.. மட்டையையும்...
9. ஆர்.பி. சிங்
10. முனஃப் படேல்
11. மலிங்கா
மலிங்கா சமீபா காலங்களாக சற்று தடுமாறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதனால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பந்து வீச்சு சற்று பலவீனமாகியே இருக்கிறது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் முதல் 6 ஓவர்களில் துவக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றுவது மிக முக்கியம்.
கைரோன் பொலார்ட், தினேஷ் கார்த்திக் இருவரும் ஒரே சமயத்தில் கிரீஸில் அதிக நேரம் ஜோடி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவர் ஸ்பின் நன்கு ஆடுவார். ஒருவர் வேகப்பந்தை நன்கு ஆடுவார்.
ஓஜா / சுமன் / கிப்ஸ் (தெண்டுல்கருக்கு பதிலாக மட்டுமே இறங்கலாம்) / சூர்யகுமார் யாதவ் / திஸாரா பெரைரா / கிளிண்ட் மெக்கே / டேவி ஜேக்கப்ஸ் என பலர் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் கிறிஸ் கெய்ல் போன்று ஆட்டத்தை முழுதும் தன் கையில் எடுத்துக் கொள்வாரா லெவி என்பதிலேயே மும்பையின் எதிர்காலம் இருக்கிறது.