தெரியவில்லை அண்ணா.. ஆனால் மூன்றாம் நாளே கரைக்கும் கொடுமையைத்தான் காண சகிக்கவில்லை எனக்கு. கடந்த இருநாட்களாய் வேலைக்கு வரும் வழியெங்கும் வீற்றிருக்கும் விதவித பிரமாண்ட விநாயகர்களைக் கண்டு ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஐதீகம் எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை... அந்தக் காலத்தில் மஞ்சளிலோ அல்லது ஈரக் களிமண்ணிலோ செய்திருப்பார்கள்.. அதனால் மூன்று நாளைக்குமேல் தாங்காது...அதனைச் செய்வதும் எளிதும்கூட... மேலும் சுற்றுப்புறத்துக்கும் கெடுதியில்லை.. ஆனால் இன்று அப்படியா.. சிலை செய்வதே வியாபாரமாகிவிட்டது.. மேலும் பிளாஸ்ட ஆ·ப் பாரீஸில் செய்து கரைப்பதால் சுற்றுப்புறத்துக்கு கேடும் கூட...
பப்பி மாமி அவர்கள் கொடுத்த இணைப்பிலிப்பதை எனக்குத் தெரிந்த தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளேன். தவறு இருப்பின் மன்னிக்கவும்.
விநாயகரை களிமண்ணில் அல்லது மஞ்சளில் தான் செய்ய வேண்டும். அது பூசை சமயத்தில் கடவுளாக என்னப்படுகிறது. பூசை முடிந்தவுடன் அது மறுபடியும் களிமண்ணாக கருதப்படுகிறது.
எதற்கு களிமண்ணைப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் பூமிதான் நமது உயிர்நாடி. அதுதான் நமக்கு வாழ்வளிக்கிறது.
இதன்மூலம் நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்கிறோம் பூமிதான் நமக்கு உயிர்நாடி என்று. நாம் அனைவரும் பூமியியே நம்பி வாழ்கிறோம். எல்லா உயிர்களும் பூமியில் ஒன்றாக உள்ளன. அதனால்தான் விநாயகரை வழிபடும்பொழுது பூமியையும் நினைத்துப் பார்த்துக் கொள்கிறோம்.
நாம் இந்த களிமண்ணால் ஆன விநாயகரை கடலில் (தண்ணீரில்) கலக்கிறோம். ஏன் இப்படி செய்கிறோம்? தண்ணீரும் பூமியும் ஒன்றாகச் சேரும்பொழுது வாழ்க்கைப் பிரகாசகமாகிறது. உழவர்களுக்கு பூமியில் தண்ணீரும் கடவுள் மாதிரி. நாங்கள் விநாயகர் சதுர்த்தியன்று அதை நினைத்துப் பார்க்கிறோம். அவற்றை மாசுபடுத்தக் கூடாது என்று நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
அட! விநாயகர் சிலையை கரைப்பதில்கூட இப்படி ஒரு
அர்த்தம் இருக்கிறதா? வியப்பாய் இருக்கிறது..
சந்தேகம் களைய வந்த பப்பி மாமிக்கும், ஆரென் அண்ணாச்சிக்கும்
சிறப்பு நன்றிகள்.
விநாயகர் சிலையைக் கரைப்பதைப் போன்றே, வங்காளத்திலும் இன்னும் வங்காளிகள் அதிகம் வாழும் இடங்களில் துர்கா பூஜைக்குப் பிறகு (அதே நாட்களில் நாம் நவராத்திரி கொண்டாடுகிறோம்) துர்கா சிலைகளை -- அநேகமாகக் களிமண்ணினால் ஆனவை -- கடலிலோ அருகிலிருக்கும் நதியிலோ கரைக்கிறார்கள்.
இதற்கான ஐதீகமும் பப்பிஜி/ஆரேன்ஜி ஆகியோர் கொடுத்துள்ள விளக்கமே.