நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

அட்டா இந்த திரியை இன்றுதான் கண்டேன்
வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் அவர்களே,

தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், கர்ம வீரர் காமராஜ், அறிஞர் அண்ணா,
கலைஞர் , இவர்களை போல பல தமிழ் பெரியோர்களின் சுயசரிதைகளை படிக்க
வேண்டும் அவர்களை பற்றி தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும் ஆவலை உங்களின் இந்த திரி நடிகர் திலகத்தை பற்றி அறிய உதவியது,
இதை தொடர்ந்து எழுதி முடியுங்கள்

வாழ்த்துக்கள்


மனோ.ஜி
 
அட்டா இந்த திரியை இன்றுதான் கண்டேன்
வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் அவர்களே,

தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், கர்ம வீரர் காமராஜ், அறிஞர் அண்ணா,
கலைஞர் , இவர்களை போல பல தமிழ் பெரியோர்களின் சுயசரிதைகளை படிக்க
வேண்டும் அவர்களை பற்றி தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும் ஆவலை உங்களின் இந்த திரி நடிகர் திலகத்தை பற்றி அறிய உதவியது,
இதை தொடர்ந்து எழுதி முடியுங்கள்

வாழ்த்துக்கள்


மனோ.ஜி

பல நாட்களுக்கு பின் இத்தொடரை தொடர்கிறேன். இடைக் காலத்தல் ஏற்பட்ட மன வருத்தங்களால் இதை தொடர முடியால் போனதற்கு வருந்துகிறென்.

இத்தொடரை பாராட்டி பின்னூட்டம் போட்ட நண்பர் மனோ.ஜி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
பாகம்-7

ஒரு நண்பனை இழந்தேன்

டி.எஸ்.என்.: பழனியிலிருந்து வந்த பிறகு பால கான சபாவின் வருவாய் அதிகரித்ததா? நாடக கம்பெனி வளர்ச்சியுற்றதா?

சிவாஜி: அப்படி ஒன்றும் உடனடியாக நிகழ்ந்து விடவில்லை. பழனியில் இரண்டாடுகள் இருந்த பிறகு நாங்கள் மதுரைக்கு சென்றோம். அங்கு தான் எங்களுக்கு ஒரு நாளில் மூன்று வேளை சாப்பாடு கிடைத்தது. மதுரையில் நாங்கள் கிருஷ்ண லீலா நாடகத்தை போட்டோம். அதில் வழக்கம்போல எனக்கு பெண் வேடம் தேவகியாக கிடைத்தது.

அந்த நாடகத்தின் ஒரு காட்சியில் கம்சன் வசுதேவரையும் தேவகியையும் ரதத்தில் ஏற்றி சென்று கொண்டிருக்கும்போது ஒரு அசரீரி குரல் ' தேவகியின் எட்டாவது குழந்தையால் நீ கொல்லப்படுவாய் கம்சா' என்று சொல்லும். நாடக கலையின் நுணுக்கமான உத்திகளை அந்த சீனில் கையாண்டனர். ஒரு நட்சத்திரம் விண்ணிலிருந்து கீழிறங்க வேண்டும் அதே நேரத்தில் ஒரு குரல் ஒலிக்க வேண்டும். நட்சத்திரம் தோன்றியது. அனால் குரல் ஒலித்த பின்னரும் அது கீழிறங்க வில்லை. எங்கள் குழுவிலிருந்த எலக்ட்ரீஷியன் சுப்பையா என்பவர் கம்பத்தில் ஏறி அதை சரி பார்க்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி இறக்க அவரது சடலம் ஒரு வவ்வாலைப் போல கூறையிலிருந்து தொங்கியது.

உங்களால் நம்ப முடிகிறதா? நாங்கள் வசனங்களை பேசிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நல்ல நண்பனை இந்த மாதிரி கோர முறையில் இழந்தது என்னை வெகு வாக பாதித்து. என்னை விட எங்கள் குழுவில் இருந்த மலையாளிப் பையன் கிருஷ்ணன் இந்த பாதிப்பால் மூன்று நாட்கள் வரை ஒன்றும் சாப்பிடவில்லை. நண்பனை இழந்த ஏக்கத்தில் கிருஷணனும் இறந்தான். நண்பனுக்காக உயிரையும் கொடுப்பாரகள் என்று கேள்விப் பட்டிருந்தேன். இங்கு அது உண்மையில் நிகழ்ந்தது.

அந்த நாட்களில் நாடக குழவிலிருந்த பையன்களிடம் சாதி மத பேதமில்லாமல் இருந்தோம். எங்கள் குழுவில் முஸ்லிம் மதத்தவர், இந்துக்கள், கிருத்துவர்கள் அனைவரும் எவ்வித பேத மின்றி ஒன்றாக இருந்தோம். பிற் காலத்தில் நான் நடித்த பாரத விலாஸ் படத்தின் கரு இங்கிருந்து தான் வந்தது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட நடிகர்களுக்கிடையெ பேதங்கள் வந்தது சுதந்திரம் கிடைத்த பின்பு தான். தேசத்தை மொழி வாரி மாநிலங்களாக பிரித்தது ஒரு பெரிய தவறு என்று சொல்வேன். நான் பையனாக இருந்த போது இந்த பேதங்கள் இருந்ததில்லை. இது தான் குருகுலத்தின் மகிமை. நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒரு தாய் மக்களாக வளர்ந்தோம்.


டி.எஸ்.என்.: மதுரையில் வேறு என்ன நாடகங்கள் போட்டீர்கள்? அங்கிருந்து எங்கு சென்றீர்கள்?

சிவாஜி: மதுரையில் நாங்கள் தசாவதாரம் நாடகத்தை தயாரித்து அரங்கேற்றினோம். அதில் பல கண் கட்டு வித்தைகள் புதிய நாடக உத்திகளைக் கொண்டு மக்கள் மனம் கவர்ந்தோம். மதுரையிலிருந்து நாங்கள் மேலூர் சென்றோம். மேலூரில் தான் தலைவர் கக்கன் வாழ்ந்து வந்தார். ஆனால் மேலூர் எங்களுக்கு மிக மோசமான இடமாக அமைந்தது.

ஒரு பொட்டல் வெளியை துப்புறவு பண்ணி கூடாரம் போட்டோம். ஆனால் மேலூரைப் போல பாம்பு தேள் நிறைந்த ஒரு இடத்தை காண முடியாது. நாங்கள் விக் அணியலாம் என்று அதை எடுத்தால் அதனுள் தேள் இருக்கும். எங்களது ஆடையை எடுத்தால் அதனுள் பல்லிகள் இருக்கும். சில சமயங்களில் விக் உள்ளுக்குள் சிவப்பு எறும்புகள் இருக்கும். ஆனால் அவை கண்ணுக்கு உடனே தென்படாது. நாங்கள் விக் அணிந்து வசனங்களை பேசிக் கொண்டிருக்கும் போது இந்த சிவப்பு எறும்புகள் எங்களை கடித்து துன்புறுத்தும். இருந்தும் இவைகளை வெளிக்காட்டாமல் நாங்கள் நாடகத்தை தொடர்ந்தோம்.

தொடரும்..
 
ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பல விஷியங்கள் மறுக்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.. இல்லைஎன்றால் கத்துக்குட்டி நடிகர்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கும்பொழுது இவருக்கு கேட்காமல் போனதில் என்ன நியாயம்..
 
ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பல விஷியங்கள் மறுக்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.. இல்லைஎன்றால் கத்துக்குட்டி நடிகர்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கும்பொழுது இவருக்கு கேட்காமல் போனதில் என்ன நியாயம்..

சரியாக சொன்னீர்கள்,
கத்துக்குட்டி நடிகர்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கும்பொழுது இவருக்கு கோடுக்காமல் போனது நியாயம் இல்லைத்தான்.
 
ஒரு தமிழன் என்பதால் அவருக்கு பல விஷியங்கள் மறுக்கப்பட்டது என்பது உலகறிந்த உண்மை.. இல்லைஎன்றால் கத்துக்குட்டி நடிகர்களுக்கு எல்லாம் பட்டம் கொடுக்கும்பொழுது இவருக்கு கேட்காமல் போனதில் என்ன நியாயம்..

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. மற்றுமோர் விஷயம் அவருக்கு அரசியல் பண்ணத் தெரியவில்லை என்பேன் நான். கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் தன் சொத்துக்களை முதலீடு செய்து அவரால் வெற்றி பெற முடியவில்லை. சுருக்கமாக சொன்னால் வாய் பேசத் தெரிந்தவர் ஆனால் வாள் வீசத் தெரியாதவர்.
 
பாகம்-8

நடிகர் திலகமும் நடிக வேளும்

டி.எஸ்.என.: மேலூரிலிருந்து எங்கு சென்றீர்கள்?

சிவாஜி: நாங்கள் பரமக்குடிக்கு சென்றோம். பரமக்குடியில் மறக்க முடியாதது எங்களை விட்டு பிரிந்து சென்ற எம்.ஆர். ராதா எங்களுடன் மீண்டும் இணைந்தது. ராதா அவர்கள் எங்களுக்கு தந்தையைப் போன்றவர். அவர் எங்களிடம் அளவு கடந்த பாசமும் நேசமும் வைத்திருந்ததால் நாங்கள் அவருக்கு எல்லா பணி விடைகளும் செய்தோம். அவரும் எங்களை பேணி பாதுகாத்தார். நாங்கள் உறங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்வார். எங்களுடய குழியலறையை கூட சுத்தம் செய்வார். எங்களுக்கு தலை வாரி விடுவார்.அவர் இதயத்தில் அனைவருக்கும் அன்பு இருந்தது.

பின்னாட்களில் எனக்கு வசதி இருந்த போது அவரிடம் எனக்கிருந்த நன்றியின் பிரதிபலிப்பாக திருச்சியில் சங்கிலியாண்டபுரத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அவர் குடியிருக்க வசதி செய்து கொடுத்தேன்.

டி.எஸ்.என்.: அவருடன் நாடகங்களில் நடித்த உங்கள் அனுபவங்களைக் கூற முடியுமா?

சிவாஜி: நாங்கள் இணைந்து நடித்த நாடகங்களில் நான் பெண் வேடம் ஏற்று நடித்தேன். பதி பக்தி என்ற நாடகத்தில் எனக்கு பெண் வேடம் அவருக்கு வில்லன் பாத்திரம். அந்த நாட்களில் நாடகத்திற்கு ஏற்றவாறு முழமையாக நடிக்க வல்ல ஒரே நடிகர் ராதா அண்ணன் தான். ஒரு சீனில் நான் அவரது முடியைப் பிடித்து இழுத்து அடிப்பதாக இருந்தது. எனக்கு அவர் தந்தை மாதிரி ஆனதால் நான் தயங்கினேன். அவர் ஸ்டேஜில் கீழே விழுந்து புரண்டு வலியால் துடிப்பது போல் நடித்து தன்னை உண்மையில் அடிக்க சொல்லி எனக்கு கண் காட்டியதால் நான் துணிந்து அவரை அடித்தேன். நான் அவ்வாறு செய்யாதிருந்தால் நாடகம் முடிந்தவுடன் என்னை கடிந்து கொண்டிருப்பார் அவர்.

ராதா அண்ணன் ஒரு அறிவாளியும் பல்வித்தை மன்னரும் நாடக கலையில் அனைத்தும் அறிந்தவருமாவார். அவருக்கு எலக்ட்ரிகல் வேலைகள் அனைத்தும் தெரியும். அவர் ஒரு காமெடியனாக வில்லனாக ஹீரோவாக இப்படி எல்லா வித பாத்திரங்களிலும் நடிக்கும் தேர்ச்சி பெற்றவர். வேறு எந்த சிரிப்பு கலைஞரும் ராதா அண்ணனை மிஞ்ச முடியாது. அதே மாதிரி பாலையா அண்ணனும் வி.கே. ராமசாமி அண்ணனும் நல்ல தேர்ந்த சிரிப்பு கலைஞர்கள். இவர்களுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.




பாவ மன்னிப்பு படத்தில் நடிகர் திலகமும் நடிக வேளும்

தொடரும்......
 
நெஞ்சில் நிலைத்து விட்ட பெயர் சிவாஜி. சாதனைகளின் சிகரம்.பலரின் நன்மதிப்பைப் பெற்றவர். அவருடைய பாதிப்பு இல்லாமல் எந்த தலை முறையும் இல்லை. அவரைப் பற்றிய ஆவணத் தொகுப்புத் தொடரட்டும் மதுரைவீரன் அவர்களே.
 
பாகம்-9

என் தலைவரை சந்தித்தேன்

டி.எஸ்.என.: பரமக்குடியில் வேறு ஏதாவது விசேடமாக நடந்ததா?[

சிவாஜி: பரமக்குடியில் நாங்கள் தங்கியிருந்த போது 'கதரின் வெற்றி' என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். அதில் நான் மேடையில் தோன்றி கதர் கொடியை கையில் பிடித்துக் கொண்டு 'கதர் கப்பல் கொடி தோன்றியதே மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியின் கதர் கப்பல்" என்று பாடினேன். இந்த பாட்டிற்கு பலத்த கரகொஷம் எழுந்தது. இந்த சமயத்தில் எங்கள் அனைவரது மனதிலும் சுதந்திர வேட்கை இருந்தது. தேசப் பற்று கொழுந்து விட்டு எரிந்தது.

ஒரு தடவை இந்த நாடகம் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர்களின் இரண்டாவது வரிசையிலிருந்த ஒரு மனிதர் விடாமல் கை தட்டியதை கவனித்தேன். அவரைப் பார்த்து அவரை சுற்றியிருந்த அனைவரும் எழுந்து நின்று இடை விடாது கை தடடினர். இதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரசிகர்களை வணங்கி விட்டு மேடையின் பின் புறம் சென்றேன். காமராஜ் என்ற மாபெரும் மனிதர் அன்று பார்வையாளர்கள் நடவில் இருந்தார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். நான் அவரை பார்த்த போது அவர் ஒல்லியாகஉயரமாக கறுப்பு மனிதராக தோளில் ஒற்றைத் துண்டுடன் இருந்தார். அவர் தான் காமராஜ். அன்று அவரை காணும் பேரு எனக்கு கிட்டியது. எனக்கு அப்போது 11 வயது தான். எனது பிற் கால வாழ்க்கையில் அவரை எனது ஒப்பற்ற தலைவராக ஏற்றுக் கொண்டேன்.


டி.எஸ்.என.:பரமக்குடி காம்பில் தலைவர் காமராஜை சந்தித்தது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக உங்களுக்கு அமைந்தது. பரமக்குடியிலிருந்து வேறு எங்கு சென்றீர்கள்?

சிவாஜிபரமக்குடியிலிருந்து நாங்கள் சேலம் சென்றோம். அங்கு ஒரிஜினல் தியெட்டர்ஸ் என்ற கம்பெனியுடன் வேலை பார்த்தோம். வேலாயுதம் பிள்ளை எனபவர் அந்த கம்பெனியின் சொந்தக்காரர். இங்கு நாங்கள் 'இழந்த காதல்' என்ற நாடகத்தை அரங்கேற்றினோம். இந்த நாடகத்திற்கு கிடைத்த வெற்றியை இன்றைய சினிமாக்கள் எட்ட முடியாது. வர்த்தக ரீதியில் இந்த நாடகம் பெரும் வெற்றி பெற்றது. ஓராண்டுகளுக்கும் மேலாக இது அரங்கேற்றப் பட்டது. எம.ஆர்.ராதா அண்ணன் மற்றும் பலர் இந்த நாடகத்தில் நடித்தனர் என்னையும் சேர்த்து

எங்கள் நாடக கம்பெனியில் 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருந்தனர். கம்பெனியின் நிர்வாகம் யதார்த்ம் பொன்னுசாமி மற்றும் சிலர் கம்பெனியை இரண்டு குழுக்களாக பிரித்து மாநிலத்தின் பிற பகுதிகளில் நாடகங்களை அரங்கெற்ற முடிவு செய்தனர். இவ்வாறு செய்தால் அனைவருக்கும் வேலை கிடைத்து வாழ முடியும் என்று தீர்மானித்தனர். வேலை செய்யாமல் இருப்பது எங்களுக்கு கடினமாக இருந்தது. என்னை இரண்டாவது குழவில் சேர்த்தனர். அந்த குழவை ராமசுப்பு அய்யர் என்பவரின் மகன் ஜகன்னாத அய்யர் வசம் ஒப்படைத்தனர். அவர் அந்த காலத்தில மிகப் பெரிய நாடக கம்பெனியை நடத்தி வந்தார். அவரின் தலைமையில் நாங்கள் நாமக்கல் சென்றோம். அங்கு மகாபாரதா ராமயணா கிருஷ்ணலீலா போன்ற பக்தி நாடகங்களை அரங்கேற்றினோம்.



நடிகர் திலகமும் பெருந்தலைவர் காமராசரும்

தொடரும்......
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தொடரும் இத்தொடரும் வெற்றிகரமாக நிறைவடையும் என்று நம்புகிறேன். எங்களுக்காக தட்டச்சி வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி.
 
நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய தெரியாத வியசயங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம்.

அவ்வானந்ததைத் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி மதுரண்ணா.
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தொடரும் இத்தொடரும் வெற்றிகரமாக நிறைவடையும் என்று நம்புகிறேன். எங்களுக்காக தட்டச்சி வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி.


இந்த திரியை நான் துவங்கியபோது மன்றத்தில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. 250 பக்கங்களுக்கு மேலான இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்ப்பது என்பது எத்தனை கடினமானது என்பதை போக போக தெரிந்து கொண்டேன். மொழி பெயர்ப்புடன் படங்களை ஸ்கான் செய்து (இதற்காக நான் ஒரு ஸ்கானர் வாங்கினேன்) பதிவு செய்வது மேலும் கடினமாக இருந்தது. மன்றத்து நண்பர்களின் பின்னஊட்டங்கள் என்னை உற்சாகப் படுத்தி தொடர செய்தது. ஆனால் இடையில் ஒருவரும் பின்னஊட்டங்கள் இடாத போது தளர்ச்சி அடைந்தேன். ஒரு நண்பர் எனது முயற்சிகளை குறைத்து எழுதியது எனது மனதை புண் படுத்தி விட்டது. அவற்றிலிருந்து மீண்டு இந்த திரியை தொடருகிறேன். உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி
 
நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றிய தெரியாத வியசயங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம்.

அவ்வானந்ததைத் தரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி மதுரண்ணா.



உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே
 
பாகம்-10

நவராத்திரியின் ஒன்பது வேடங்கள்

டி.எஸ்.என.: நாமக்கல் காம்பில் நடந்த மறக்க முடியாத சமபவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சிவாஜி: ஒரு முக்கியமான சமபவம் நிகழ்ந்தது அப்போது. எங்களுக்கு நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில் எங்களை அந்த ஊரில் நடக்கும் வேறு நாடகங்களுக்கு அழைத்து செல்வார்கள். அப்படி ஒரு சமயம் நாங்கள் பார்த்த நாடகம் டம்பாச்சாரி. அதில் சாமி அய்யர் என்ற தேர்ந்த நடிகர் ஒன்பது வேடங்களில் நடித்தார். நான் அவருடய நடிப்பை உன்னிப்பாக கவனித்தேன். அந்த நாடகம் என் மனதில் நீங்கா இடம் பிடித்தது. என்று எனக்கு ஒரு நாடகத்தில் அதே மாதிரி ஒன்பது வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டும் என்று வியந்தேன். வாய்ப்பு கிடைத்தால் ஒன்பது கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நுணுக்கமாக என் நடிப்புத் திறமையைக் கொண்டு வெளிக் கொணருவேன் என்று தீர்மானித்தேன். இதை நான் செய்ய முடியும் என்றால் சாமி அய்யரைப் போல சானும் ஒரு தேர்ந்த நடிகனாக ஏன் ஆக முடியாது என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

எனது நாடக கலையின் பால் இருந்த ஈடுபாட்டாலும் மன உறுதியாலும் ஒன்பது வேறு பட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்கு அடியெடுத்து வைத்தேன். திரு. ஏ.பி. நாகராஜன் அவர்களின் இயக்கத்தில் வெளி வந்த நவராத்திரி திரைப் படம் எனது இந்த கனவை நனவாக்கியது.

ஒவ்வொரு நடிகனும் தேர்ந்த நடிகர்களின் நடிப்பை பார்த்து வளர்ச்சி அடைகிறான். சிலர் உன்னிப்பாக பார்க்கிறார்கள் பலர் அவ்வாறு செய்வதில்லை. நடிப்பை காப்பி அடிக்க கூடாது. ஆனால் நடிப்பின் திறமையை உள் வாங்கி தனது சொந்த பாணியில் நடிக்க வேண்டும். சாமி அய்யரின் நடிப்பை பார்த்து என்னுள் எழுந்த உந்ததலின் விளைவு தான் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களை திறம்பட செய்ய வைத்தது. இதற்கு நான் சாமி அய்யருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

டி.எஸ்.என.: நாடகங்களுக்கு கூட்டி சென்றது போல் அன்றைய திரைப் படங்களுக்கும் உங்களை கூட்டி சென்றனரா?

சிவாஜி: சில சமயங்களில் கூட்டி சென்றனர். ரத்னாபாய் சுந்தரிபாய் இவர்கள் நடித்த படங்களை நான் பார்த்திருக்கிறேன். படம் பார்த்து திரும்பியவுடன் அந்த படங்களில் வந்த சில காட்சிகளை ராமசுப்பையரக்கு நடித்து காட்டுவேன். " படத்தில் வந்த நடிகர்களை மாதிரியே நடிக்கிறாயெ நியும் ஒரு காலத்தில் நல்ல திரைப் பட நடிகனாக வருவாய்" என்பார் அவர். அவரின் ஆசிகள் தான் நான் பிற் காலத்தில் திரைப் படங்களில் நடிகனாக வர காரணமாயிருந்தது.



தொடரும்..
 
நடிகர் திலகமும் வியக்கும் அளவுக்கு திறமையான நடிகர்கள் இருந்தார்கள் என்பதை அறியும் போது அவர்களை குறித்து நாம் அறியாமல் போய்விட்டோமே என்ற எண்ணம் தோன்றுகிறது.

மொழியாக்கம் செய்வது கடினமான பணி என்பதை நானறிவேன்.

எதையும் மனதில் கொள்ள வேண்டாம். எல்லோரும் நண்பர்கள்தான். உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துகிறேன்.
 
கமலஹாசன் தசாவதாரம் பேட்டியின் பொழுது இப்படி சொன்னார்: ஐயா a.p. நாகராஜன் நவராத்திரி படம் எடுக்கும் பொழுது சொன்னார், இந்த படத்தை நான் முழுக்க முழுக்க சிவாஜி அவர்களை மட்டும் நம்பியே எடுக்கிறேன் (அந்த படம் முப்பது நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டேன்)
 
உங்கள் முயற்சியை வெகுவாகப் பாராட்டுகிறேன், மதுரை மைந்தன் அவர்களே. மனம் தளராமல் தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது மன்ற நண்பர்கள் படித்துப் பின்னூட்டமிடுவர். நான் இன்றுதான் படிக்கத் துவங்கினேன். படித்துமுடித்தபின் பின்னூட்டமிடுவேன். பகிர்வுக்கு நன்றி.
 
முயற்சிக்கும் கடின உழைப்பிற்கும்
உதாரணம் கணேச மூர்த்தி என்ற சிவாஜி கணேசன்.

மதுரை மைந்தரே தொடருங்கள்
உங்களோடு நாங்களும் வருகிரோம்
அறிய தகவல்களை அறிந்துகொள்ள
 
பாரதிண்ணா போன்றே எனக்கும் லேசான வருத்தம்.

செவாலியேயின் ஆதர்சங்கள் நானறியத் தவறியதில்.

தவறவிட்டதை அறியத் தந்த உங்களுக்கு நன்றி மதுரண்ணா.
 
பாகம்-11

நடிகர் திலகத்தின் மறு பிறவி

டி.எஸ்.என.: நாமக்கலை அடுத்து அந்த ஏரியாவில் வேறு ஏதாவது நாடகங்களை அரங்கேற்றினீர்களா? நீங்கள் மற்ற மாவட்டங்களுக்கும் சென்றீர்களா?

சிவாஜி: எனக்கு கோயம்புத்தூர் சேலம் மாவட்டங்களுடன் நல்ல தொடர்பு உண்டு. நாமக்கலை அடுத்து நாங்கள் பவானி ஆற்றின் கரையில் இருக்கும் குமாரபாளையம் நென்றோம். அங்கு எங்களுக்கு திடுக்கிட வைக்கும் அனுபவம் கிடைத்தது.ஒவ்வொரு நாள் காலை யில் 8 மணியளவில் நாடக கம்பெனியை சேர்ந்த சிறுவர்களை பவானி ஆற்றிற்கு குளிப்பதற்கு கூட்டி சென்றனர். நாங்கள் குளித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று தண்ணீரின் மட்டம் உயரத் தொடங்கியது. அந்த ஊர் அதிகார்கள் அணையைத் திறந்து விடப் போவதாக அறிவித்திருந்தார்களாம். ஆனால் அது எங்களுக்கு தெரியாமல் போய் விட்டது. நீந்தி கரை சேரமுடியாமல் நாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்டோம். அதிர்ஷ்ட வசமாக ஊர் மக்கள் நேரம் கடத்தாமல் நதியழல் குதித்து எங்களை கரை சேர்த்னர். அவர்கள் எங்களை தங்களது தோள்களில் தூக்கி சென்று கரை சேர்த்தனர். அவர்களின் அந்த உதவியால் மற்ற கலைஞர்களோடு நானும் இன்று உயிர் வாழ்கிறேன். இது எங்கள் அனைவருக்கும் ஒரு மறு பிறவி.

குமார பாளையத்திலிருந்து நாங்கள் கோயம்புத்தூர் சென்றோம். சிங்கநல்லூர் என்ற கோயம்புத்தூருக்கு அருகிலிருந்த டவுனில் ஒரு சினிமா ஸ்டூடியோ இருந்தது. அந்த காலங்களில் நடிகர்கள் ஸ்டூடியோக்களிலியோ அல்லது கம்பெனி ஏற்பாடு செய்திருந்த விருந்தினர் மாளிகையிலோ தான் தங்கினர். எல்லா காலங்களுக்கும் மிக பெரிய நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் (கலைவாணர் என்று அவரை அழைத்தார்கள்) அந்த ஸ்டூடியோவில் தங்கியிருந்தார். அவர் ஒரு திரைப் படம் தயாரித்துக் கொண்டிருந்தார். படத்தின் பெயர் எனக்கு மறந்து விட்டது. அந்த படத்தில் சிரிப்பு நடிகரான லோகிதாசன் என்ற பாத்திரத்தில் நடிக்க ஒரு நடிகர் தேவைப் பட்டார். என்.எஸ். கிருஷணனின் விரப்பத்தினால் எங்களது நாடக குழு விலிருந்து அந்த சிரிப்பு கதா பாத்திரத்தில் நடிக்க இரண்டு பேர் ஸ்டூடியோவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் காக்கா ராதாகிருஷ்ணனும் நானும். அந்த பாத்திரத்திற்கு ஒரு காமெடியன் தேவைப்பட்டதால் காகா ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப் பட்டார். அவர் ஒரு முழு காமெடியனாக இருந்ததால் அவரின் தேர்வு எனக்கு சரியாகப் பட்டது. நான் நாடக குழவிற்கு திரும்பினேன்.

கதாநாயகியாக நடிக்க நான் தேவைப் படுகிறேன் என்று சொன்னார்கள். நான் நாடக குழுவின் செல்லமாக இருந்தேன். அதனால் நான் திரைப் படத்தை விட நாடக மேடையை விரும்பினேன்.


தொடரும்..
 
Back
Top