நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

நடிகர் திலகத்தின் சுயசரிதை(102): செவாலியர் விருது புகை படங்கள்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(102): செவாலியர் விருது புகை படங்கள்

பிரான்சு நாட்டு தூதரிடமிருந்து விருதை பெற்றுக் கொள்கிறார்​

ரஜனி காந்த், கமல ஹாஸன் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கின்றனர்​


விழாவில் பங்கேற்ற திரையுலக கலைஞர்களுடன்


மேடையில் முதலமைச்சர் ஜெயலலிதா, இயக்குனர் சிகரம் பாலசந்தர், மனைவி இவர்களுடன்​

தொடரும்
 
இதுவரை கண்டிராத பல அரிய புகைப்படங்களை அனைவரும் பார்த்து மகிழப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
 
சிறந்த கலைஞனின் படைப்புகளை ரசிக்கும் ஒரு ரசிகன் பரிந்துரை கொடுக்க விருது வழங்கபடவேண்டும் இன்று வழங்கபடும் விருதுகள் விருதின் மகிமையை குறைப்பது போல் உள்ளன..கண்டிறாத புகைபடங்கள்..பகிதலுக்கு நன்றி மதுரைவேந்தன் அவர்களே...
 
நடிகர் திலகம் அவர்களுக்கு கிடைத்த பிரான்ஸ் நாட்டின் விருதான செவாலியர் விருதை பற்றி இங்கு மதுரை மைந்தன் பதிவு செய்த வரலாறும்,

அரிய புகைப்படங்களும் அருமை. இந்த பதிவு

சிவாஜி கணேசனுக்கு பெருமை சேர்க்கிறது, மேலும், அந்த சிறந்த கலைஞனை பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது.
 
காணக் கிடைக்காத நிழற்படங்கள். பகிவிற்கு நன்றி மைந்தரே...!!!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(103): தாதா சாகேப் பால்கே விருது படங்கள்


குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவிடமிருந்து விருதை பெற்றுக் கொள்கிறார்​


மத்திய அமைச்சருடனும் குடியரசு தலைவருடனும் மேடையில்​


விழாவில் சக கலைஞர்களுடன்​

தொடரும்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(104): நடிகர் திலகத்தின் குடும்பம்




நடிகர் திலகம் மனைவி, மகள்கள், மகன்கள், மருமகன்கள், மருமகள்கள் பேரக்குழந்தைகள் இவர்களுடன்​

தொடரும்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(105): நான் ஏற்று நடிக்க விரும்பும் கதா பாத்திரம்

டி.எஸ்.என்: ஒரு நடிகராக நீங்கள் ஏற்று நடிக்காத கதா பாத்திரங்களே இல்லை என சொல்லலாம். எந்த கதா பாத்திரம் உங்களை மிகவும் பாதித்தது? வருங்காலத்தில் நீங்கள் ஏற்று நடிக்க விரும்பும் கதா பாத்திரம் இருக்கிறதா?

சிவாஜி: நான் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என நீங்கள் கூற முடியாது. இன்னும் ப்ல பாத்திரங்கள் இருக்கலாம். நீங்கள் பார்த்தது ஒரு பரந்த கடற்கரையின் சில மணல் துளிகளே. என்னை பாதித்த பாத்திரங்களை பற்றி கேட்டீர்கள். நான் ஏற்று நடித்த பாத்திரங்கள் என்னை ஒருபோதும் பாதித்ததில்லை. மாறாக எனது நடிப்பால் அந்த பாத்திரங்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்றன.

நடிப்பு என் மூச்சு. நடிப்பு எனது வாழ்க்கை. நடிப்பு தொழில் ஒன்று மட்டுமே எனக்கு தெரியும். ஆகவே என் நடிப்பின் மூலமந்த பாத்திரங்கள் மக்களை கவர்ந்தன. நான் பல பாத்திரங்களில் நடித்திருந்தாலும் தந்தை பெரியாராக நடிக்க வேண்டும் என்பது எனது நீங்காத ஆசை. அவர் தான் எனக்கு சிவாஜி என்ற பட்டத்தை அளித்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே அவரது நினைவாக அவ்ருடைய வாழ்க்கையை சித்தரிக்க ஆசைப்படுகிறேன். அது என்று எப்படி நிறைவேறும் என்று எனக்கு தெரியாது.





தொடரும்
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(106): என் குடும்பம்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(106): என் குடும்பம்

டி.எஸ்.என்: உங்கள் வாழ்க்கையின் பலதரப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். மீண்டும் ஒரு கேள்வி... உங்கள் குழந்தைகள் எப்படி? எத்தகைய பொறுப்புகளை அவர்கள் ஏற்றிருக்கிறார்கள்? உங்களுடைய பேரக்குழந்தைகள் எப்படி?

சிவாஜி: நான் இன்று எனது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க கடவுள் அருளியிருக்கிறார். 1952 ல் நான் கமலாவை மணம் புரிந்தேன். அவள் எனது உறவினரின் மகள். நான் முன்பே சொன்னது போல ஒரு பெரிய குடும்பத்தின் தலைவன் நான். எனக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.

எனது மூத்த மகள் சாந்தி ஐ.ஐ.டி புரொபசர் டாக்டர் கே. நாராயணசாமியை மணந்தாள். அவர்களுக்கு இரண்டு புதல்விகள் இருக்கிறார்கள். விஜயலஷ்மி, சாந்தலஷ்மி என்ற அந்த இருவருக்கும் திருமணங்கள் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள். எனது மூத்த மகன் ராம்குமார் எனது சகோதரி பத்மாவதியின் மகள் கண்ணம்மாவை மனைவியாக ஏற்றிருக்கிறார். அவர்களுக்கு துஷ்யந்த், தர்ஷன், ரிஷயன் என்று மூன்று மகன்கள் இருக்கிறார்கள். தர்ஷனும், ரிஷயனும் சிறுவர்களானலும் தைரியமாக என் முன்னால் ஒருவித தயக்கமும் இல்லாமல் கட்டபொம்மன் நாடகத்தை நடித்து காட்டுகிறார்கள். அவர்கள் என் முன்னால் வந்தே மாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுகிறார்கள். எனக்கு அது மிகவும் பிடித்திருக்கிறது. எனது சகோதரர் ஷண்முகத்திற்கு பின் ராம்குமார் தான் சிவாஜி பிலிம்ஸ் கம்பெனியை நிர்வாகிக்கிறார்.

எனது அடுத்த மகன் பிரபு ஒரு நடிகன். அவனுக்கும் அவன் மனைவி புனிதவதிக்கும் ஐஸ்வர்யா என்று ஒரு மகளும் விக்ரம் என்று ஒரு மகனும் இருக்கிறார்கள்.

எனது நாலாவது குழந்தை தேன்மொழி. அவள் டாக்டர் கோவிந்தராஜன் என்ற குழந்தை நல மருத்துவரை மணந்துள்ளாள். டாக்டர் கோவிந்தராஜன் எனது மூத்த மாப்பிள்ளை நாராயணசாமியின் சகோதரர். தேன்மொழியின் மகள் பிரியதர்ஷிணி திருமணமாகி அமெரிக்கவில் குடியேறியிருக்கிறார்கள். அவர்களுடைய மகன் குனால் ஒரு பொறியிலாளர். அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகியிருக்கிறார்கள்.

எனது சகோதரர் ஷண்முகம் காலமாகி விட்டார். அவருடைய மனைவி அலமேலு கமலாவின் சகோதரி. அவர்களுடைய இரண்டாவது பையன் கிரி சிவாஜி பிலிம்ஸில் வேலை பார்க்கிறான். கிரியின் மனைவி அனுராதா. அவர்களுக்கு ஸ்ரீமத், சிவாஜி என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சிவாஜி என்ற பையனுக்கு என் பெயரை சுருக்கி வைத்திருக்கிறார்கள். அனைவரும் எங்கள் வீட்டிலேயே வசிக்கிறார்கள். எனது சகோதரர் ஷண்முகத்தின் மூத்த மகன் முரளி அமெரிக்காவில் வசிக்கிறான். எனது மூத்த சகோதரர் தங்கவேலு இப்போது உயிருடன் இல்லை. எனது சகோதரி பத்மாவதியின் கணவர் வேணுகோபால் சாந்தி தியேட்டரை நிர்வாகிக்கிறார்.

அவர்களுக்கு மகள்களும் பேரக்குழந்தைகளும் உண்டு. எனக்கு நிறைய பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் எனக்கு உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள். நான் ஒரு மரியாதைக்கிரிய குடும்ப தலைவன். முன்னர் நான் கலையுலக நண்பர்களுடனும் மக்களுடனும் எனது பெரும்பாலான நேரத்தை செலவ்ழித்தேன். இன்று எனது ஓய்வு நாட்களில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு சில உபாதைகள் உண்டு. கமலாவும் எங்களுடைய குடும்ப மருத்துவர் ராதாகிருஷ்ணும் என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களை போன்ற நண்பர்களுடன் எனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறேன். நான் நிறைய படிக்கிறேன். சில நேரங்களில் தொலைக்காட்சியையும் பார்ப்பேன். சில சம்யங்களில் ஒரு சிலர் என்னை நடிக்க அழைப்பதுண்டு. மரியாதை குறித்து நான் ஓரிரண்டு படங்களில் நடிக்கவும் செய்கிறேன்.


டி.எஸ்.என்.: வருங்காலத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன?

சிவாஜி: சிறு வயது முதல் எனக்கு வாழ்க்கையில் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்ததில்லை. எனக்கு நடிகனாக வேன்டும் என்ற ஒரே ஆசை இருந்தது. கடவுள் அருளால் நான் இன்று ஒரு நடிகனாக இருக்கிறேன்.

அடுத்த பகுதி இறுதி பகுதி
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

டி.எஸ்.என்.: நீங்களும் உங்களுடைய பெரிய குடும்பமும், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் நீண்ட ஆய்ளுடன் வளமாக வாழ என் வாழ்த்துக்கள். நடிப்பு துறைக்கு நீங்கள் இன்னும் நிறைய செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். நீங்கள் விருதுகள் பல வெல்ல வேண்டும். கடவுள் அருளால் இவைகளை நீங்கள் நிறைவேற்றுவீர்களென் பிரார்த்திக்கிறேன்.

சிவாஜி: உங்களுக்கு மிக்க நன்றி நாராயணசுவாமி. எனது சுயசரிதையை வெளிக்கொணர்வதில் உங்களுடைய ஈடுபாடு, கடின உழைப்பு ஆகியவற்றை நான் பெரிதும் பாராட்டுகிறேன். எனது வாழ்க்கையை பற்றி என்னையே நீங்கள் பேச வைத்தீர்கள். உங்கள் கேள்விகளுக்கு நான் சுலபமாக பதிலளிக்க முடிந்தது ஏனென்றால் நீங்கள் தரமான கேள்விகளை கேட்டீர்கள். நான் சொன்னவற்றையெல்லாம் நீங்கள் தொகுத்து வழங்கினால் அது எனது சுயசரிதை கேள்வி பதில் வடிவில் இருக்கும்.

நான் இங்கு பேசிய வார்த்தைகள் எனது கடைசி உயில் மாதிரி. எல்லா வார்த்தைகளும் முற்றிலும் உண்மை. நான் யாரையும் எனது வார்த்தைகளால் காயப்படுத்தவில்லை. உண்மையை சொல்வதற்கும் நான் தயங்கவில்லை.

எனது வாழ்க்கை கடல் போன்றது. அதில் நான் பல திரையுலக, அரசியல் பிரமுகர்களை சந்தித்திருக்கிறேன்.

எனது சுயசரிதையில் அவர்களுடைய பட்டியலை தருவது கடினமான காரியம். என்னை பாதித்த அல்லது என் மனதை தொட்ட சில நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திருக்கிறேன். பல ஆச்சரியமான கலைஞர்களையும் பெரியவர்களையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு சிலரை இந்த புத்தகத்தில் நினைவு கூர்வது விட்டுப்போயிருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தில் தனி இடம் உண்டு.

குழந்தை நட்சத்திரமாக பல நாடகங்களில் நடித்து மக்களை மகிழ்வித்திருக்கிறேன். திரையுலகில் நுழந்த பிறகு சினிமாக்களின் மூலம் நல்ல தகவல்களை மக்களுக்கு அளித்திருக்கிறேன்.

நாடக மேடைகளிலும் திரையுலகிலும் எனக்கு பல விருதுகள் கிடைதிருக்கின்றன. அவற்றின் மூலம் எனது தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறேன். " நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும்?" என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். நான் நாடு எனக்கு நிறைய செய்ய வேண்டும் என்று எண்ணியதில்லை. நான் நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்திய மக்களிடம் நான் மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். அந்த வாக்கியத்தை நினைவில் கொண்டு நாட்டிற்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப்பாருங்கள். காலம் இன்னும் இருக்கிறது. காலத்தை பயன்படுத்தி உங்கள் வீட்டிற்காகவும் நாட்டிற்காகவும் நாலது செய்ய முயலுங்கள். நல்ல ஆக்க பூர்வமான குடிமகன்களாக முயற்சி செய்யுங்கள்.

இந்த சுயசரிதை உங்கள் உள்ளங்களிலும் வருங்கால சந்ததிகளின் உள்ளங்களிலும் எனக்கு ஒரு இடம் தரும் என்று நம்புகிறேன்.

நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்!




இது தொடக்கம் முடிவல்ல என்றார் சிவாஜி​


முற்றும்
 
மூன்று வருடங்களுக்கு முன்பாக* 250க்கும் மேற்பட்ட பக்கங்களையும் எண்ணற்ற அரிய புகைப்படங்களையும் கொண்ட இந்த ஆங்கில புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து மன்றத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் ஆரம்பித்தேன். இடையில் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தாலும் இறுதியில் புத்தகம் முழுவதையும் பதிவிட்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த எனது முயற்சியில் எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த சில நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இத்தொடரை தொடர்ந்து பதிவு செய்ய அனுமதித்த/அனுமதிக்கும் மன்றத்து கனம் பொருந்திய நிர்வாகிகளுக்கும் என் நன்றிகள்.

விடைபெறுகிறேன். வணக்கம். வாழ்க தமிழ்!
 
நல்லதோர் பதிவின் மூலம் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் சுயசரிதையின் மூலம் அவரது வாழ்க்கையினை கண் முன் கொண்டு வந்த மதுரை மைந்தன் அவர்களுக்கு என் நன்றிகள்...
 
நடிப்புலக மாமேதை சிவாஜி அவர்களின் வரலாறு இரண்டாவது முறை இங்கே படிக்க வாய்ப்பு மிக்க நன்றி.........
 
வாழ்த்துக்கள் மதுரை மைந்தரே,
எடுத்த காரியத்தை முழுமையாக எங்களுக்கு
படைத்துள்ளீர்கள், நன்றிகள் பல,
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு மூலம் அறிய விஷயங்களை இந்த தொடர்மூலம் எங்களுக்கு படைத்தமைக்கு.

மனோ.ஜி
 
மிகவும் நன்றி மதுரை மைந்தரே.

நல்லதோர் நடிகரின் சரித்திரத்தை மன்றத்தில் பதிக்க நீங்கள் எடுத்துக்கொண்ட ஈடுபாடும் உழைப்பும் வியக்க வைக்கிறது.

ஒரு தொடரை எழுத நினைக்கும் ஒவ்வொருவருவருக்கும் இந்த திரி வழிகாட்டியாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மனமார்ந்த வாழ்த்துக்களும். பாராட்டுக்களும்
 
ஒரு தலைசிறந்த நடிகரின் வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்தமைக்கு கோடி நன்றிகள் :)
 
எத்தனையோ வேலைப்பளுவுக்கும் சிரமங்களுக்கும் இடையே எடுத்த பணியை கடின உழைப்புடன் மேற்கொண்டு அதை திறம்பட செய்து முடித்ததற்கு உங்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா....

எல்லோரும் சிவாஜி என்ற மாமனிதரைப்பற்றி அவர் வார்த்தைகளிலேயே அறிய வைத்தமைக்கு நீங்கள் செய்த அற்புதமான விஷயம் மொழிப்பெயர்த்து எங்களுக்கு பகிர்ந்தது.... ஹாட்ஸ் ஆஃப் ஐயா....

தொடர்ந்து அதிகமான படைப்புகள் தந்திடவும் வேண்டுகிறேன்...
 
Back
Top