நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

எங்கள் வீட்டில் பெரியவர்கள் எல்லோருமே சிவாஜி ரசிகர்கள்.
நடிகர் திலகத்தின் இந்த புகைப்படங்கள் இதுவரை பார்க்காதது.
வீட்டில் பெரியவர்களும் பார்த்து ரசித்தார்கள்.
நன்றி.
 
அரிய தொடர். அரும்பணி..

மிக்க நன்றி மதுரைவீரன் அவர்களே!

சிறுவயதில் பட்ட சிரமங்கள்தான் பின்னாளில் வெற்றிகளாய்ப் பரிமளித்தன
என நடிகர்திலகம் சொன்னது எத்தனை உண்மையான பட்டறிவுரை!

தொடருங்கள். என் உற்சாக ஊக்கம் உங்களுக்கு!
 
கதாநாயகனாக நடிக்கும் ஆசையில்

டி.எஸ்.என்.: தீவிர பயிற்சி நள்ளிரவில் நடித்தது போதிய உணவின்மை வீட்டிற்கு செல்ல அனுமதி மறுப்பு இவைகளுக்கு இடையே தொடர்ந்து நாடகங்களில் நடிக்க உங்களால் எப்படி முடிந்தது?

சிவாஜி: தலை சிறந்த நாடக நடிகனாக வேண்டும் என்ற எனது இலட்சிய வெறியில் நான் நாடக கம்பெனியில் சேர்ந்தேன். பொதுவாக ஒரு நடிகனின் வள்ர்ச்சி மெதுவாக சிறிய வேடங்களில் துவங்கி பெரிய கதா பாத்திரங்களுக்கு முன்னேறும். ஆனால் எனக்கு துவக்கத்திலேயே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிப்பின் சிகரங்களை எட்ட வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. ராஜபார்ட் வேடங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக எனது ஆசிரியிரிடம் அரசர்கள் வேடங்களில் நடிக்க வேண்டிய எனது திறமையை உணர்த்தினேன். இப்படித்தான் நான் ஒரு ராஜபார்ட் நடிகனாக உயர்ந்தேன். ராஜபார்ட் ரங்கதுரை என்ற திரைப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

டி.எஸ்.என்.: ராஜபார்ட் ரங்கதுரை படம் உங்கள் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று நினைக்கிறேன். சரியா?

சிவாஜி: ஆம. அந்தப் படம் ஒரு நாடக நடிகனின் நாடக வாழ்வில் வரும் கஷ்ட நஷ்டங்களை பிரதிபலிக்கிறது. ரசிகர்கள் ஒரு நடிகனின் சொந்த வாழ்க்கையைப் பார்த்து தங்கள் கருத்துக்களை கூறுகிறார்கள். " இவனுக்கு தமிழ் மட்டுமே பேசத் தெரியும் வேறு மொழிகள் தெரியாது" " இவன் கூலிக்கார நந்தனார் வேடத்தில் நடிக்க மட்டுமே லாயக்கு" " இவனுக்கு அர்சுனர் வேடத்தில் மட்டும் தான் நடிக்கத் தெரியும்" " இவனுக்கு அழத்தான் தெரியும்" என்றெல்லாம் கூறினர்.

ஒரு நடிகன் ஹாம்லெட்டாக மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். முதலில் ரசிகர்கள் அழுகிய முட்டைகளையும் காய் கறிகளையும் அவன் மேல் விட்டெறிந்தால் அவனது மன நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு நான் " இருப்பதா அல்லது இறப்பதா? வாழ்வதா அல்லது உயிர் துறப்பதா?" என்ற என் உண்மை நிலையயை பிரதிபலிக்கும் வசனத்தைப் பேசியவுடன் ரசிகர்களிடமிருந்து பலத்த கை தட்டல் எழுந்தது. இந்த வசனம் ராஜபார்ட் ரங்கதுரை படத்திலும் நான் பேசியிருக்கிறேன். எந்த நடிகனுக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது?. நானும் அதை விரும்பினேன். கடவுள் அருளால் அதை அடைந்தேன்.
 
அழகிய படைப்புக்கள் மதுரை வீரரே....
பார்ராட்டுக்கள், நான் செய்ய நினைத்தை
நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.......

நன்றி
 
நன்றி மதுரை..! ஒரு நெஞ்சினிக்கும் நினைவை உங்கள் பதிவு மீள்பார்வை செய்துவைத்திருக்கிறது..

ராஜபார்ட் படத்தில் ஹாம்லெட் நாடகக்காட்சி..

டு பி.. ஆர் நாட் டு பி.. என்று (ஆங்கில உச்சரிப்பு ஜாவர் சீதாராமனோ?) ஆரம்பித்து, கையிலிருக்கும் வாளை நெஞ்சருகே தலைகீழாக உயர்த்திப் பிடித்தபடி, மேடைக்குக் குறுக்காக ஒரு கம்பீர நடை நடப்பார் பாருங்கள்.. அதை இரசிக்காதோர் இருக்கவே இயலாது..

பிறவிக்கலைஞனய்யா அவர்..!
 
நன்றி மதுரை..! ஒரு நெஞ்சினிக்கும் நினைவை உங்கள் பதிவு மீள்பார்வை செய்துவைத்திருக்கிறது..

ராஜபார்ட் படத்தில் ஹாம்லெட் நாடகக்காட்சி..

டு பி.. ஆர் நாட் டு பி.. என்று (ஆங்கில உச்சரிப்பு ஜாவர் சீதாராமனோ?) ஆரம்பித்து, கையிலிருக்கும் வாளை நெஞ்சருகே தலைகீழாக உயர்த்திப் பிடித்தபடி, மேடைக்குக் குறுக்காக ஒரு கம்பீர நடை நடப்பார் பாருங்கள்.. அதை இரசிக்காதோர் இருக்கவே இயலாது..

பிறவிக்கலைஞனய்யா அவர்..!

நன்றி ராஜா அவர்களே. நீங்கள் சிவாஜியின் ஒரு தலை சிறந்த ரசிகர் என்று உங்களது பின்னூட்டங்களிலிருந்து புலனாகிறது.
 
அழகிய படைப்புக்கள் மதுரை வீரரே....
பார்ராட்டுக்கள், நான் செய்ய நினைத்தை
நீங்கள் செய்து கொண்டிருக்கின்றீர்கள்.......

நன்றி

மிக்க நன்றி நண்பர் நாரதர் அவர்களே.

நான் இந்த திரியை ஆரம்பிக்கும்போது எங்கே இதை உங்களது சிவாஜி எனும் நடிப்புலக அகராதி என்ற திரிக்குப் போட்டித் திரியாக பாவிப்பீர்களோ என்று பயந்தேன். ஆரம்பிக்கவும் தயங்கினேன். பிறகு தான இந்த திரிக்கும் உங்களது திரிக்கும் உள்ள ஒரு வேறுபாட்டை அறிந்தேன். உங்களது திரி சிவாஜியைப் பற்றி மற்றவர்கள் கூறுவதாக உள்ளது. இந்ததிரி சிவாஜியின் வாய் மூலமாக அவரைப் பற்றி அறிவது.

உங்களிடமும் இந்தப் புத்தகம் இருக்கலாம். நீங்கள் விரும்பினால் நான் இத்திரியை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் தொடருங்கள். எனது வாழ்த்துக்கள்.
 
மேலும் சில புகைப் படங்கள்(புத்தகத்திலிருந்து மட்டுமே எடுத்தவை)
________________________________________________________________________

ராஜ பார்ட் ரங்கதுரையாக

உஷா நந்தினியுடன் ராஜபார்ட் ரங்கதுரையில்


புதையல் படத்தில் பத்மினியுடன்

கௌரவம் படத்தில்
 
Last edited:
மிக மிக அழகிய படங்கள்!
இன்னுமின்னும் பதிக்க ஆவண செய்கின்றேன்....

மிக்க நன்றி நண்பர் நாரதர் அவர்களே.

நான் இந்த திரியை ஆரம்பிக்கும்போது எங்கே இதை உங்களது சிவாஜி எனும் நடிப்புலக அகராதி என்ற திரிக்குப் போட்டித் திரியாக பாவிப்பீர்களோ என்று பயந்தேன். ஆரம்பிக்கவும் தயங்கினேன். பிறகு தான இந்த திரிக்கும் உங்களது திரிக்கும் உள்ள ஒரு வேறுபாட்டை அறிந்தேன். உங்களது திரி சிவாஜியைப் பற்றி மற்றவர்கள் கூறுவதாக உள்ளது. இந்ததிரி சிவாஜியின் வாய் மூலமாக அவரைப் பற்றி அறிவது.

உங்களிடமும் இந்தப் புத்தகம் இருக்கலாம். நீங்கள் விரும்பினால் நான் இத்திரியை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் தொடருங்கள். எனது வாழ்த்துக்கள்.

நீங்களே திரிகளுக்கிடையிலிருக்கும் வித்தியாசத்தை கூறிவிட்டீர்கள்.......

எனது திரியில் சொன்னாலும், உங்கள் திரியில் சொன்னாலும்
சொல்லப்படுபவை சிவாஜி பற்றிய அரிய பொக்கிஷங்கள்......
எனவே தயவு செய்து இதை நிறுத்த வேண்டாம்! நீங்களும்
உங்கள் பாட்டுக்கு தகவல்களை பரிமாறுங்கள்.....

இது சார்பாக நிர்வாகிகள் ஏதும் கருதும் பட்சத்தில் அதற்குப்பிறகு
அவர்களது வார்த்தைக்கு கட்டுப்படுவோம்..........

நன்றி உங்கள் புரிதலுக்கு :)
 
மிக அரிய பணி..

பாராட்டுகள் மதுரைவீரன்.. தொடருங்கள்..

ராஜா அவர்களின் ரசனையான வரிகள் - அவருக்கு என்னை ரசிகன் ஆக்குகின்றன..
 
அயர்ன ஸ்திரீ பார்ட்/அயர்ன் ராஜ பார்ட சிவாஜி

டி.எஸ்.என.: மேடையில் நன்றாக நடித்து அபளாஸ் வாங்கினீரகள். நாடகம் முடிந்தவுடன் அந்த அப்ளாஸ் தந்தவர்களை பாரக்கவும தலைமை தாங்கிய பிரபலஸதர்களின் பாராட்டக்களை கேட்கவும் முயன்றீரகளா?

சிவாஜி: எங்களுக்கு அந்த மாதிரி அனுபவங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாது.எங்களை வீட்டிற்குள் திரை போடடு வைத்திருந்தார்கள். நாங்கள் வசித்த வீட்டை கம்பெனி வீடு என்று சொல்வார்கள். அது நாடகம் நடக்கும் இடத்திற்கு அருகிலேயே இருக்கும். இரண்டு லைனாக அணி வகுத்து நின்று எங்களை தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். இன்று ஒரு நடிகர் சினிமா ஹாலுக்குள் சென்றால் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்வார்கள். அன்றும் அப்படித் தான் இருந்தது. நாங்கள் குழந்தைகள். அழகான குழந்தைகள். நாங்கள் வீதியில் சென்றால் எல்லோரும் எய்களைப் பார்த்து மகிழ்வார்கள். ஆனால் நாங்கள் வீட்டில் அடை பட்டு கிடந்தோம் குரு வின் முகத்தைப் பார்த்தவாறு. வெளியுலக மக்களைப் பார்ப்பது எங்களுக்க ஒரு டானிக் சாப்பிடுவது மாதிரி இருக்கும்.

டி.எஸ்.என.: எப்போதாவது நகரத்து பிரபலஸ்தர்கள் கம்பெனி முதலாளியையும் நடிகர்களுடய ட்ரூப்பையும் அழைத்து கௌரவித்திருக்கிறார்களா?

சிவாஜி: இது எப்போதாவது நடந்தது. நகரத்து முக்கியஸதர்கள் ட்ரூப்பில் இருந்த குழந்தைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து தங்க வைப்பார்கள். அது எங்களுக்கு ஒரு விருந்து மாதிரி. சாதரணமாக வெறும் ரசம் சாதத்தையே சாப்பிட்டு வந்த எங்களுக்கு அங்கு வடை பாயசத்துடன் சாப்பாடு கிடைக்கும். அந்த நாட்களில் நாங்கள் காதி ஆடையே அணிந்தோம். எங்களுக்கு அவர்கள் காதி சட்டை காதி வேஷ்டி பரிசளிப்பார்கள். எங்களது சீனயர்களையும் மானேஜர்களையும் கௌரவிப்பார்கள். அது எங்களுக்கு எப்படி இருந்தது என்று விவரிக்க முடியாது.

டி.எஸ்என்: திண்டுக்கல் காம்பிற்கு பிறகு வேறு எங்கு சென்றீர்கள்?

சிவாஜி: நாங்கள் பழனிக்குச் சென்றோம். அங்கு நாங்கள் எங்களது முதல் நாடகமான கிருஷ்ண லீலாவை நடத்தினோம். அதில் நான் அரக்கி பூதணை பாத்திரத்தில் நடித்தேன். கோரமான அரக்கியாக இல்லை ஒரு நல்ல அழகான கிருஷணரை பராமரிக்கும் பெண்ணாக நடித்தேன். நான் பெரும்பாலும் பெண்கள் வேடத்திலேயே நடித்தேன். அந்த நாடகளில் புராண நாடகங்கள் மட்டுமில்லாமல் சமூக நாடகங்களான பதி பக்தி கதரின் வெற்றி பாம்பே மெயில் போன்றவற்றிலும் நான் பெண் வேடங்களில் நடித்தேன். சில நாடகங்களில் அண் பெண் இரண்ட வேடங்களிலும் நடித்திருக்கிறேன்.

டி.எஸ்.என்: அந்த நாடகளின் நாடக வழக்கில் அயர்ன் ஸ்திரீ பார்ட் அயர்ன் ரரி பார்ட் எனபார்களே அப்படி என்றால் என்ன என்று விளக்குவீர்களா?

சிவாஜி: அயர்ன் ஸ்திரீ பார்ட் என்றால் மிக முக்கியமான பெண் வேடம் என்றும் அயர்ன் ராஜ பார்ட் என்றால் மிக முக்கியமான அண் வேடம் என்றும் குறிக்கும். அயர்ன் ஸ்திரீ பார்ட்டில் நடிக்கும் நடிகர்களுக்கு விசேடமான மரியாதை உண்டு. எனக்கும் அந்த மரியாதை கிடைத்தது
 
மேலும் சில புகைப் படங்கள்(புத்தகத்திலிருந்து மட்டுமே எடுத்தவை)


வேங்கையின் மைந்தன் (மேடை நாடகம்)


அரிச்சந்திரா (1968)



திருவருட் செல்வர் (1967)

ஜஹாங்கீர் (மேடை நாடகம்)
 
அடடா, சிவாஜி இவ்வளோ கம்பீரமாக இருக்கிறாறே என்று வாயைப்பிளந்தேன்....

இவை அனைத்தும் இதுவரை நான் கண்டறியா படங்கள். சூப்பரோ சூப்பர்.

நன்றி மதுரை அண்ணா
 
அபூர்வப் படங்கள்..!

அன்பு மதுரையின் உழைப்புக்கு பிரமிப்பு கலந்த நன்றிகள்..!
 
அரிய முயற்சிக்கு, பணிக்கு நன்றிகள் மதுரை மைந்தரே.

கெளரவம் படத்தில் நடிகர் திலகத்தின் கம்பீரத்தை பாருங்களேன்.. என்ன அழகு...!

இந்த படத்தில் கடைசி காட்சியில் மனைவியிடம் தன் தொழில் திறமையைப் பற்றி பேசுவார். அருமையான காட்சி....

பெரும்பாலான நம் கீழை நாட்டு மக்கள் உழைப்பினால் மட்டுமே உயர்ந்தவர்கள்.
அவர்களுக்கு குடும்பம் பாசம் எல்லாமே தங்களின் தொழிலுக்கு பிறகு தான்.
அத்தகைய தொழில் பக்தி நிறைந்த மனிதர்களை அவர் பிரதிபலித்தார்.

தங்களை போன்ற சாதாரண மனிதர்களின் பிம்பத்தை பார்த்ததாலோ என்னவோ.....
இன்றளவும் ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறோம்
 
அபூர்வப் படங்கள்........நன்றி மதுரை வீரன் தொடருங்கள்...........
 
ஒவ்வொரு புகைப்படத்திலும், நடிகர் திலகம் அவர்கள் வெவ்வேறு உருமொழி கொண்டிருப்பது வியப்புக்குரியது.

பகிர்வுக்கு நன்றி மதுரையண்ணா!.
 
Back
Top