மதுரை மைந்தன்
New member
நடிகர் திலகத்தின் சுயசரிதை(86): முதல் மரியாதை
டி.எஸ்.என்.: சமீபத்தில் உங்களுடைய சிறந்த படங்களில் ஒன்றான பாரதி ராஜாவின் முதல் மரியாதை படம் வெளியானது. அந்த படத்தில் உங்களுடைய அனுபவங்கள் என்ன?
சிவாஜி: எனக்கு பாரதி ராஜாவை அவரின் சிறு வௌஅது முதல் தெரியும். அவர் எனக்கு நெருக்கமானவர். அவருடைய படம் ஒன்றில் நடிக்க அவர் என்னை வேண்டினார். எனக்கு உடல் நிலை அப்போது சரியில்லை. இருந்தும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படம் தான் முதல் மரியாதை.
எங்களை படப்பிடிப்பிற்காக மைசூர் அழைத்துச் சென்றார் அவர். அங்கு காவிரி நதிக்கரையில் சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சிக்கருகில் ஒரு மரத்தடியில் அமரச்சொன்னார்கள். பாரதி ராஜா எனக்கு ஒரே ஒரு செட் ஆடையை மட்டும் தந்தார். காலில் அணிய செருப்பு கிடையாது. அப்படி அங்கு ஒரு மாதம் வரை அமரச்செய்தார்கள். கிராமத்து சூழ்னிலையில் படமாக்கப்பட்ட அந்த படம் வசூலில் சாதனை படைத்தது.
சில வருடங்கள் கழித்து அவர் என்னை வைத்து பசும் பொன் என்ற படத்தை பண்ணினார். ராதிகா அதில் என்னுடன் நடித்தார். நாங்கள் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கும் மைசூர் சென்றோம். படத்தை முடிக்க இரவு பகலாக உழைத்தோம். படப்பிடிப்பு முடிந்தவுடன் நான் திடீர் என்று நோய் வாய் பட்டேன். எனது நாடித்துடிப்பு குறந்தி என்னை மருத்துவ மனைக்கு எடுத்து சென்றார்கள். அங்கு அறுவை சிகிச்சை மூலம் எனக்கு மார்பில் பேஸ் மேக்கர் கருவியை பொருத்தினார்கள். அதற்கு உறுதுணையாக இருந்தவர் பாரதி ராஜா. அந்த பேஸ் மேக்கர் இருக்கும்வரை பாரதி ராஜா எனது உள்ளத்தில் வாழ்வார்.
டி.எஸ்.என்.: முதல் மரியாதை படத்தின் ஒரு சிறப்பு அதில் இடம் பெற்ற அழகான நாட்டுப் புற பாடல்கள். உங்களுடைய எண்ணங்கள்?
சிவாஜி: ஒரு படத்தின் பாடல்கள் மக்கள் மனதில் பதிந்துவிட்டால் அந்த பெருமை இசை அமைப்பாளருக்கும், பாடலாசிரியருக்கும், பாடகர்களுக்கும் மட்டுமே சேரும். பல கவிஞர்கள் படங்களுக்கு பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். அந்த காலத்தில் பாப நாசம் சிவன். அதற்கப்புறம் கே.எம்.ஷெரீப், மருதகாசி, உடுமலை நாராயண சுவாமி, பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் என்று பலர். கவிஞர் கண்ணதாசன் மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
கவிஞர் வாலி பல நல்ல பாடல்களை எழுதினார். அவருக்கு பிறகு கவிஞர் வைரமுத்து. அது போல பல நல்ல பாடலாசிரியர்கள் திரையுலகிற்கு வந்தனர். தற்போது தமிழ் திரை பாடல்களில் அர்த்தம் புரியாத ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவதை பார்க்கிறோம். இதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் போல இருக்கு.
எனது நண்பர் கண்னதாசன் எனது பல படங்களுக்கு பாடல்கள் இயற்றியிருக்கிறார். நான் அவரை புகழாத நாள் இல்லை. " ஓ கவியே! அன்பு கண்ணதாசா! நீ புகழ் பெற்ற கம்பர், காளிதாசர் இவர்களை மிஞ்சி விட்டாய்!". அதே மாதிரி நான் கவிஞர் வைரமுத்துவை கண்னதாசனை மிஞ்சி விட்டதாக மனதார பாராட்டியிருக்கிறேன். நான் இதை எதற்காக கூறுகிறேன் என்றால் அவரும் கண்ணதாசனை போல் புகழ் பெற வேண்டும் என்பதால் தான்.
எனது சிறு வயதிலிருந்தே எனக்கு கவிதைகளில் ஈடுபாடு உண்டு. அதனால் தான் நான் கலம் கண்ட கவிஞன் என்ற நாடகத்தை அர்ங்கேற்றினேன். முதல் மரியாதை படத்தின் நாட்டு புற பாடல்களைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். அந்த படத்தின் இசை அமைப்பாளர் இசை ஞானி இளையராஜா. பாடல்களை எழுதியவர் வைரமுத்து. இவர்களின் பாடல்கள் மக்களை பெரிதும் கவர்ந்தது.
அந்த காலத்து இசை அமைப்பாளர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால் அது ராஜகோபால ஐயர், எஸ்.வி. வெங்கட்ராமன், சுப்பையா நாயுடு, ஜி. ராமனாதன் ஆகியோர். அவர்கள் இசையுலகில் ஜாம்பவான்கள். அதைப்போல விஸ்வனாதன் ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் பல ஆயிரக்கணக்கான சுவையான பாடல்களை தந்திருக்கிறார்கள். சங்கர் கணேஷ் ஜோடியும் இவர்களில் சேர்ந்தவர்கள்.
இவர்களில் இளையராஜா நாட்டு புற பாடல்களை பிரபல படுத்திய பெருமையை சேர்ந்தவர். தஞ்சாவூர் ஜில்லாவை சேர்ந்த சூரக்கோட்டை கிராமத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கிறது. ஒரு தடவை நான் அங்கு தங்கியிருந்த போது காலையில் பாட்டு சத்தம் கேட்டது. நான் அங்கு சென்று பார்த்த போது நாட்டு நட்டுக் கொண்டிருந்த சுமார் 50 பெண்கள் இளையராஜாவின் பாட்டை பாடிக்கொண்டே நாட்டு நாட்ட்தை பார்த்தேன். அவருடைய இசை பலரை கவர்ந்தது குறுத்து மகிழ்ச்சி அடைகிறேன். தற்காலத்தில் ஏ.ஆர். ரெஹமான், தேவா போன்ற இசை அமைப்பாளர்களின் ஆயிரக் கணக்கான பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
இசையை பற்றி பேசும் போது பிண்ணனி பாடகர்களை நினைவு கூர்கிறேன். அந்த காலத்தில் சி.எஸ்.ஜெயராமன், டி.எம்.சவுந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, எஸ்.ஜானகி என்று பலர். அடுத்த கால கட்டத்தில் எஸ்.பி.பாலசுப்ரமண்யம், கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா என்று பலர். எல்லோரும் தங்களுடைய இனிமையான குரலால் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றவர்கள். தற்போது பல இசைக்குழுக்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். தொலைக்காட்சிகளிலும் பல திறமையான கலைஞர்கள் அறிமுகமாகிறார்கள். இது இசை உலகின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
தொடரும்...