நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சுயசரிதை (இறுதி பகுதி)

விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படித்து முடித்தேன்..

நடிகர் திலகம் என்ற மாமனிதரை எண்ணி மனம் பெருமையுறுகிறது..

இப்பெருந்திரிக்கான தங்கள் உழைப்புக்குத் தலைவணங்குகிறோம் அண்ணா..!

இந்த திரியை பாராட்டி முதல் பின்னூட்டம் இட்டு தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி ராஜா அய்யா!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(78): உண்மையான நண்பர்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(78): உண்மையான நண்பர்

டி.எஸ்.என்.: நீங்கள் இந்திரா காந்தியின் கட்சியில் இருந்தபோது நடைபெற்ற நிகழ்வுகள், அனுபவங்கள் இவற்றைப்பற்றி கூற முடியுமா?

சிவாஜி: நிறைய பேருக்கு இந்த நிகழ்வு தெரியாது. இந்திரா காந்தி பிரதம மந்திரி பதவியை விட்டதும் மதுரைக்கு வருகை தந்தார். நான் வெறும் நடிகனாக அரசியல் பொறுப்புகளை ஏற்காத நேரம் அது. இந்திரா காந்தியை கொல்ல ஒரு சதி திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அவரைக் கொலை செய்ய மேற்கொண்ட பல சதி திட்டங்களைப் பற்றி இங்கு நான் கூற விரும்பவில்லை. இந்திரா காந்தி மதுரையிலிருந்து சென்னை வந்தார். சிலர் அவர் காரின் மீது கல்லை விட்டெறிந்தார்கள். நான் அவரை வரவேற்க எக்மோர் ஸ்டேஷனில் காத்திருந்தேன். இந்திரா காந்தி காரிலிருந்து வேறு யாரும் கூட இல்லாமல் இறங்கினார். இன்று முக்கியமாக விளங்கும் அரசியல் வாதிகள் அங்கும் இங்குமாக* நின்று கொண்டிருந்தார்கள். வன்முறையாளர்கள் பாதுகாப்பில்லாத அம்மையார் மீது கல்லெறிய தொடங்கியதும் இவர்கள் தங்கள் உயிரை காக்க காற்றாய் பறந்து விட்டனர்.

அந்த வன்முறை கும்பலிலிருந்து அம்மையாரை காக்கும் பொறுப்பு எனக்கிருந்தது. தூக்கு தூக்கி படத்தில் " உயிர் காப்பான் தோழன்" என்ற வசனம் வரும். இந்த தருணத்தில் நான் ஒரு உண்மையான ஆதரவாளன் என்று அவரை காக்க உறுதி பூண்டேன். நான் எனது ரிவால்வரை தூக்கி பிடித்தேன். நான் செய்வது சரியா என்று எனக்கு தெரியாது. அந்த நிமிடத்தில் எனது கடமையை செய்வது தான் முக்கியமாக இருந்தது. நான் எனது உயிரை பற்றி கவலைப் படவில்லை.

நான் அவரிடம் சென்று அவர் கைகளை பற்றிக் கொன்டேன். எனது ரிவால்வரை வன்முறையாளர்களிடம் காட்டி அவர்கள் நெருங்கினால் சுட்டு விடுவேன் என்றேன். இன்னோரு நம்பகமான தலைவருடன் நாங்கள் அவரை எனது காருக்கு அழைத்து சென்றோம். நான் காரின் முன் சீட்டில் அமர்ந்து காரை எடுக்க சொன்னேன். வழி நெடுக இந்திரா காந்தி மீது கல்லெறிய கும்பல் காத்திருந்தது. அடையாறில் மல்லிகை என்று ஒரு வீடு இருந்தது. அங்கு இந்திரா காந்தியை தங்க செய்தோம்.

ஒரு பெரிய பொறுப்பை நிறைவேற்றியதில் நான் மகிழ்ந்தேன். உடனே நான் பத்திரிகையாளர்களை அழைத்தேன். இந்திரா காந்திக்கு அடி பட்டிருந்ததால் அவர் பத்திரிகையாளைகளிடம் தனது ரத்தம் படிந்த சேலையை காட்டி நடந்தவற்றை கூறினார். மறு நாள் பத்திரிகைகளில் அதைப் பற்றி செய்தி வந்தது. நேரு குடும்பத்திற்கு நான் விசுவாசமானவன். இந்திரா காந்தி காமராஜரின் நல்ல வேலைகளை தொடரப்போவதாக சொன்னார் இல்லையா?. நான் அவரின் உருவில் காமராஜரை கண்டேன். நான் தனி ஆளாக இருந்து அவருக்கு பாதுகாப்பு கொடுத்து பத்திரமாக அவரை டில்லிக்கு வழி அனுப்பி வைத்தேன். தமிழகத்தில் எதுவும் நடக்கலாம். ஏன் நடந்தது எப்போது நடந்தது என்று யாரும் கூற முடியாது. அதனால் தான் நாமக்கல் கவிஞர் சொன்னார் " தமிழன் என்றொரு இனம் உண்டு அதற்கு தனி ஒரு குணம் உண்டு".


இந்திரா காந்தியுடன் சிவாஜி​


தொடரும்...
 
கேள்வியுறாத நிகழ்வு..

மதுரையில், நெடுமாறனும், சித்தனும் அம்மையாரைக் காப்பாற்றியது அறிவேன்.. நடிகர் திலகத்தின் தீரம் குறித்து, இன்று தங்களால் அறிந்தேன்..

தொடர்க அண்ணா..!
 
பல புதிய தகவல்கள். அன்றைய அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் பங்கு பற்றியும் நிறைய அறிந்துகொள்ள முடிகிறது.

தளராமல் தொடர்வதற்காக தங்களுக்கு நன்றியும் பாராட்டும் மதுரை மைந்தன் அண்ணா.
 
பல புதிய தகவல்கள். அன்றைய அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அதில் நடிகர் திலகத்தின் பங்கு பற்றியும் நிறைய அறிந்துகொள்ள முடிகிறது.

தளராமல் தொடர்வதற்காக தங்களுக்கு நன்றியும் பாராட்டும் மதுரை மைந்தன் அண்ணா.

உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(79): ஒரு புதிய கட்சியின் அடையாளம்

டி.எஸ்.என்.: இந்திரா காந்திக்கு பிறகு ராஜீவ் காந்தி தலமை ஏற்றார். நீங்கள் காங்கிரஸ் கட்சியில் அவருடன் சில காலம் பணியாற்றி கட்சியிலிருந்து விலகி விட்டீர்கள், ஏன்?


சிவாஜி ராஜீவ் காந்தியுடன்​

சிவாஜி: ராஜீவ் காந்தி ஒரு தலைவராக உருவாவதிலும் பிரதம மந்திரியாக வருவதிலும் எனக்கு ஒரு பங்கு உண்டு. அதை மறக்க கூடாது? இல்லையா? தேர்தலுக்கு முன்னால் நான் ராஜீவ் காந்தியை கவர்னரது இல்லத்தில் சந்தித்தேன். நான் நேரிடையாகவே அவரிடம் கட்சியில் பல மூட்டை பூச்சிகள் இருக்கின்றன. அவற்ரை அவர் ஒழித்து கட்ட வேண்டும் இல்லாவிடில் அவர் பிரதம மந்திரியாக வர முடியாது என்று கூறினேன். அத்தகைய நாசூக்கான விஷயத்தை வெளிக் கொண்டுவந்ததை கேட்டு அவர் முகம் சிகப்பாகியது. நமது மானிலத்தை சேர்ந்த சிலர் அது தான் தருணம் என்னை ஒழித்துக் கட்ட என்று நினைத்தார்கள். ராஜீவ் காந்தியிடம் என்னைப் பற்றி அவதூறான செய்தியை கூறினார்கள். என்னை ஒரு பலி ஆடாக ஆக்கினார்கள். இந்த கட்சி எனக்கு தேவையில்லை என்று எனக்குள்ளே நான் எண்ணினேன். மேலும் நான் அந்த கட்சியில் நீடித்தால் அவர்கள் என்னை அவமானப் படுத்துவார்கள். நான் கட்சியை விட்டு விலகினேன். சில காலம் கழித்து தில்லியிலிருந்து தொலை பேசி மூலம் என்னை மீண்டும் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்கள். நான் எனது முடிவை மாற்றவில்லை.

அந்த சமயத்தில் தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர்கள் காங்கிரஸ் T , காங்கிரஸ் M, காங்கிரஸ் V என்று பல கட்சிகளை துவக்கினர். நான் அந்த கும்பலுடன் சேர விரும்பவில்லை. கொள்கை வேறுபாடுகளால் நான் காங்கிரஸிலிருந்து விலகினேன். அதே பெயரைக் கொண்ட இன்னொரு கட்சியில் நான் எப்படி சேர முடியும்?. என்னால் அதை ஒப்புக்கொள்ள முடியாது. என்னுடன் இருந்தவர்கள் தேர்ந்த அரசியல் வாதிகள். பிழைப்பிற்காக அவர்கள் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டி இருந்தது. எனக்கு தேவை இல்லாதிருந்தும் அவர்களுக்கு வேண்டி நான் ஒரு கட்சியை ஆரம்பித்தேன். நான் எனது அமைதியை தேடியும் மற்றவர்களுடன் உரசாமல் இருக்கவும் நான் கட்சியை விட்டு விலகினேன். " நீங்க பெரிய ஆளு நீங்கள் ஒரு கட்சியை ஆரம்பித்தால் அது வெற்றி அடையும். நாங்க உங்களைத் தான் நம்பி இருக்கிறோம்" என்று அவர்கள் என்னை தூண்டினார்கள். அவர்களின் பேச்சை நம்பி நான் தமிழக முன்னேற்ற முண்ணனி என்ற கட்சியை துவக்கினேன்.


தமிழக முன்னேற்ற முண்ணனியின் துவக்க விழாவில்​

டி. எஸ்.என்.: ஆக உங்க கெளரவம், சுய மரியாதை, மற்றவர்களின் தூண்டுதல்கள் இவை தான் நீங்கள் கட்சியை துவக்க செய்ததா?

சிவாஜி: சுய மரியாதை அனைவரிடமும் இருக்கிறது. எனக்கு அது பெரிய அளவில் இருக்கும் என் நினைக்கிறேன். எனக்குரிய மரியாதை கிடைக்காத போது எனது கொள்கைகள் அலட்சியபடுத்தப்பட்டதால் நான் கட்சியை விட்டு வெளியேறினேன். என்னுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் தான் வெளியேறினார்கள். ஆனால், எனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அவர்களும் கட்சி உறுப்பினர்களே என்னுடன் இருந்தனர். அவர்கள் எனக்கு ஒரு பெரிய சக்தி. அவர்களுக்காக நான் கட்சியை ஆரம்பித்தேன்.

வங்கிகளிலிருந்தும் வேறு சில இடங்களிலிருந்தும் கடன் வாங்கி கட்சியை ஆரம்பித்தேன். அந்த சம்யத்தில் தான் எம்.ஜி.ஆர் மறைந்து அவடுடைய மனைவி ஜானகி அம்மா முதலமைச்சராக 20 நாட்கள் இருந்தார்கள். சட்டசபை தேர்தல் நடந்தது. ஜானகி அம்மாவுடன் சேர்ந்தால் நாங்கள் ஜெயிப்போம் என்று பலர் சொன்னார்கள். நாங்கள் அந்த யோசனையை ஏற்று எங்கள் கட்சிகள் ஒன்றாக வேலை செய்தன. நான் தேர்தலில் நிற்க தயங்கினேன். கட்சி துவக்க நிலையில் இருந்ததாலும் கட்சி முழுமையாக வளர நேரம் இல்லாததாலும் தயங்கினேன்.

பத்திரிகையாளர்களும் என்னை சுற்றி இருந்தவர்களும் என்னிடம் " நம்ம கட்சியை பற்றி மக்களிடம் கேட்டோம். கட்சியின் அடித்தளம் எல்லா இடங்களிலும் வலுவடைந்துள்ளது. கிராமங்களில் காங்கிரஸ் கொடியை மாற்றி நமது கட்சிக் கொடியை பறக்க விட்டுருக்கிறார்கள்" என்று தேனொழுக பேசி என்னை ஒரு மாய வலையில் சிக்க வைத்து விட்டார்கள். நான் இவர்களை நம்பி செயல் பட்டேன்.

அனைவருக்கும் மேலாக கடவுள் இருக்கிறார். நமது செயல்களுக்கு அவரே நீதிபதி. அவரின் நியதிக்கு எதிராக செயல் பட்டால் அது பெரும் தோல்வியில் தான் முடியும். எனக்கும் அது தான் நடந்தது.

நான் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்ததும் எனக்கு 50 சீட்கள் தரப்பட்டன. நான் எனது சொந்த பணத்தையும் வங்கிகளில் இருந்து வாங்கிய கடன்களையும் கட்சியின் நிதிக்கு அளித்தேன். எதிர் கட்சியி இருந்த சில நல்லவர்கள் என்னுடைய மகன்களிடம் நான் கட்சியை ஆரம்பிக்க வேன்டாம் என்றும் எனது சொந்த பணத்தை அனாவசியமாக செலவழிக்க வேன்டாம் என்றும் என்னிடம் கூறுமாறு அறிவுரை தந்தார்கள். ஆனால் எனது மகன்கள் நல்லவர்கள். " எங்களுடைய தந்தை இதுவரை தனக்கென்று எதையும் கேட்டதில்லை. அவர் கட்சியை ஆரம்பிக்க விரும்பினால் என்ன வந்தாலும் நாங்கள் தடுக்க மாட்டோம். சில சொத்துக்களை விற்றால் கூட நாங்கள் அதைப் பற்றி கவலைப் பட மாட்டோம். அவர் விரும்பியதை அவர் செய்யட்டும்" என்று பதிலளித்தார்கள். நான் தேர்தலில் போட்டியிட்டு தோற்றேன்.

தேர்தலுக்கு பின் எனது ரசிக மன்றங்கள் எனக்கு உறு துணையாக இருந்தன. தேர்தலுக்கு முன் என்னை சுற்றி இருந்த அரசியல் வாதிகள் இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் தேர்ந்த அரசியல்வாதிகளின் கையில் களிமண்ணாக இருந்தேன். என்னால் அரசியல் செய்ய முடியவில்லை என்று மட்டும் நான் சொல்வேன். தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் அது அரசியலில் நுழைந்து எனது சொந்த கட்சியை ஆரம்பித்ததுதான்.


டி.எஸ்.என்.: கட்சியை ஆரம்பித்தது தவறு என்று சொன்னீர்கள். உங்களை நன்கறிந்த உங்கள் சொந்த ஊரான திருவையாறில் போட்டியிட்டு தோற்றதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிவாஜி: நான் ஏற்கனவே கூறிய மாதிரி காமராஜருடைய பிறந்த மண்ணான விருது நகர் அவருக்கு தோல்வியை தந்தது. எனக்கு நான் வளர்ந்த மண்னான திருவையாறு தோல்வியை தந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் 10000 முதல் 15000 மக்கள் எனது கொள்கைகளை வரவேற்றார்கள் என் நினைக்கிறேன். அதனால் தான் நான் காங்கிரஸை விட்டு விலகினேன். அவர்கள் என் பின்னால் நின்று வேறொரு கட்சியை ஜெயிக்க விட மாட்டார்கள் என்று சொன்னர்கள். எனக்கு கிடைத்த வாக்குகள் மற்ற கட்சியிலிருந்து வந்தன. நான் தோற்றது உண்மை. அது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை தந்தது. நாம் தவறான தீர்மானங்களை செய்தால் ஏமாற்றங்களை எதிர் நோக் வேண்டியிருக்கும்.

தொடரும்...
 
எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் வாய்ப்பதில்லை. நல்ல தேர்ந்த நடிகராக இருந்தாலும், நடிகர் திலகமாகவே இருந்தாலும், அரசியல் நாடகம் அவருக்கு கைவரவில்லை. தன்னுடைய அறியாமையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்ட குணமும், அவருடைய பிள்ளைகளின் பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது. பகிர்வுக்கு நன்றி அண்ணா.
 
வலுவான அடித்தளம் அமைத்துக்கொண்ட பின்னர்தான் M.G.R. புதிய கட்சியைத் தொடங்கினார்; அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. அது இல்லாததால்தான் சிவாஜியால் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை.
 
எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் வாய்ப்பதில்லை. நல்ல தேர்ந்த நடிகராக இருந்தாலும், நடிகர் திலகமாகவே இருந்தாலும், அரசியல் நாடகம் அவருக்கு கைவரவில்லை. தன்னுடைய அறியாமையை வெளிப்படையாய் ஒப்புக்கொண்ட குணமும், அவருடைய பிள்ளைகளின் பெருந்தன்மையும் பாராட்டத்தக்கது. பகிர்வுக்கு நன்றி அண்ணா.

நன்றி சகோதரி!
 
வலுவான அடித்தளம் அமைத்துக்கொண்ட பின்னர்தான் M.G.R. புதிய கட்சியைத் தொடங்கினார்; அதனால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. அது இல்லாததால்தான் சிவாஜியால் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை.

எம்.ஜி.ஆர் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக்கழகம் அடித்தளமாக இருந்தது. அதனுடன் திரையில் தன்னை மிக நல்லவராக பாடல்கள் மூலமாகவும் நிஜ வாழ்க்கையில் தன் நன்கொடைகளினாலும் அவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார். சிவாஜி அவர்களுக்கும் திராவிட முன்னேற்ற*க் கழகம் அடித்தளமாக இருந்தது. அறிஞர் அண்னாவின் வலது கையாக கூட அவர் செயல் பட்டார். ஆனால் கட்சியில் அவரின் வளர்ச்சியை காண சகிக்காதவர்கள் அவர் ஒரு முறை திருப்பதிக்கு சென்று வந்ததை பெரிசு படுத்தி அவரை கட்சியிலிருந்து நீக்கினார்கள். சிவாஜி அவர்கள் செய்த நன்கொடைகளுக்கு அதிக விளம்பரங்கள் கிடையாது. இதனால் நடிப்பில் அவர் மக்கள் மனம் கவர்ந்தாலும் அரசியல்லில் அவரால் வெல்ல முடியவில்லை.

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(80): அரசியலை விட்டு விலகினேன்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(80): அரசியலை விட்டு விலகினேன்

டி.எஸ்.என்.: உங்கள் கட்சியின் பானரில் தோற்ற பின் ஜனதா தளத்தில் ஏன் சேர்ந்தீர்கள்?

சிவாஜி: அரசியலை விட்டு நான் விலக விரும்பினாலும் விதி எனக்கு வேறு திட்டங்களை வகுத்தது. என்னுடைய நெருங்கிய நண்பரான திரு. வி.பி. சிங் என்னை தொடர்பு கொண்டு அவருடைய கட்சியில் இணைய வேண்டினார். ஜார்ஜ் பெர்னாண்டஸும் ஒரு நல்ல நண்பர். அவர்கள் என்னை அவர்களுடைய கட்சியுடன் இணைய வேண்டும் என்று கட்டாய படுத்தினார்கள். அவர்கள் என் பெயரை பயன் படுத்த விரும்பினார்கள். அந்த சமயத்தில் ஜனதா தளம் தமிழ் நாட்டில் பெயரளவுக்கு தான் இருந்தது. நான் என்னுடைய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை ஜனதா தளத்தில் சேர வைத்தேன். என்னுடன் முன்பு நாடகங்களில் பணியாற்றியவர்களுக்கு உதவும் வகையில் ஒரு நாடக கம்பெனியை நான் ஆரம்பித்தது இது போலத் தான்.


வி.பி. சிங் உடன் சிவாஜி​

நான் சில கால்ம் ஜனதா தலத்தில் இருந்து பின் வெளியேறினேன். அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அரசியலில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை திரையுலக மக்களுக்கு எடுத்து சொல்ல விரும்புகிறேன்.

" உங்களைப் போல கலைஞர்கள் அரசியல் சூழ் நிலைகளுக்கு அனுதாப படலாம் ஆனால் அரசியலில் நுழையாதீர்கள். அர்சியல்வாதிக்கு நண்பராக இருங்கள் ஆனால் அரசியல்வாதி ஆகிவிடாதீர்கள். அரசியல் கட்சியில் சேர்ந்து மாய வலையில் வீழ்ந்து விடாதீர்கள். ஒரு அரசியல் வாதி உங்கள் நண்பரென்றால் அவருக்கு உதவி செய்யுங்கள். அவருடைய கட்சியின் கொள்கைகளுக்கு ஆதரவு தாருங்கள். அது சரி. ஆனால் கட்சியின் உறுப்பினர் ஆகி விடாதீர்கள். பாடகராக இருங்கள் பாட்டாகி விடாதீர்கள். இது தான் எனது அறிவுரை".

டி.எஸ்.என்.: உங்களுடைய அரசியல் ஏமாற்றங்களுக்கு காரணம் மக்கள் உங்களை ஒரு நடிகராகவே பார்க்க விரும்பினார்கள் . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிவாஜி: இருக்கலாம். அது கடவுளின் சித்தமாகவோ அல்லது மக்களின் விருப்பமாகவோ இருக்கலாம். நான் கடினமாக உழைத்தும் என்னை தூக்கி எறிந்து விட்டார்கள். " நீ முதலில் ஒரு நடிகன். உனது வாழ்க்கையை நடிகனாக துவக்கினாய். நீ நடிகனாகவே இருந்து இறுதியில் நடிகனாகவே இறப்பாய். உனக்கு வேறு வேலை தேவையில்லை. கலையுலகில் நீ ஒரு கலைஞனாவே இருப்பாய்" என்பதே மக்களின் குரலாக இருக்கும்.

அதனால் தான் அரசியலிலிருந்து முற்றிலும் விலகி ஒரு நடிகனாகவே இருக்கிறேன். அரசியல் என்றால் என்ன என்று எனக்கு நல்ல படிப்பினை அனுபவம் தந்தது. நான் எப்படி அரசியல்வாதியாக இருந்தேன்? நான் எப்படி ஒரு நடிகனாக இருக்க வேண்டும்? தோல்விகள் எனக்கு கற்று தந்த பாடம் இது. இதை புரிந்து கொள்ள எனக்கு 60 வருடங்கள் எடுத்தது.


டி.எஸ்.என்.: நீங்கள் அரசியலை விட்டு விலக நிச்சயமாக முடிவெடுத்து விட்டீர்களா அல்லது வாய்ப்பு வரும்போது மீண்டும் அரசியலில் சேருவீர்களா?

சிவாஜி: ஒருபோதும் இல்லை. நான் அரசியாலில் இழந்ததை ஒரு தோல்வியாக கருதவில்லை. அதை ஒரு ஏமாற்றமாகவே உணருகிறேன். ஒரு முறை இல்லை பல முறை எமாற்றப்பட்டேன். ஒருமுறை என்னை ஏமாற்றியவர்கள் மீண்டும் வந்து ஏமாற்றினார்கள். அரசியலில் நான் தோற்கவில்லை நம்பி மோசம் போனேன். இத்தகைய துரோலத்தை தான்கிக் கொள்ளும் சக்தி என்னிடம் இல்லை.

எனது வாழ்க்கையின் மீதி நாட்களில் ஒரு நடிகனாகவும் நல்ல மனிதனாகவும் இருக்க விரும்புகிறேன்.


தொடரும்....
 
நடிகர் திலகத்தின் சுயசரி***தை(81): எனது வாரிசுகள்

நடிகர் திலகத்தின் சுயசரிதை(81): எனது வாரிசுகள்​


பிரபுவும் சிவாஜியும் சங்கிலி படத்தில்​

டி.எஸ்.என்.: நீங்கள் உங்களுடைய திரை வாழ்க்கையை 1952ம் ஆண்டு துவக்கினீர்கள். 1979ம் ஆண்டு வரை 27 வருடங்களில் நீங்கள் 200 படங்களில் நடித்திருக்கிறீர்கள். திரிசூலம் உங்களுடைய 200 வது படம். 1980 க்கு பிறகு அரசியலில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு நடுவில் நீங்கள் ரிஷிமூலம், சங்கிலி, சந்திப்பு, மிருத*ங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜ, வாழ்க்கை, முதல் மரியாதை போன்ற பல நல்ல படங்களை அளித்தீர்கள். சங்கிலி படம் உங்களுடைய இரண்டாவது மகன் பிரபுவை திரையுலகில் அரங்கேற்றும் படமாக அமைந்தது. அது பற்றி,,?

சிவாஜி: பிரபு எனது மகன். ஆகவே அவனைப் பற்றி பேசுவது சரியாகாது. இருந்தாலும் நீங்கள் கேட்டுக் கொண்ட படியால் நான் சொல்கிறேன். அவன் ஒரு சிறந்த விளையாட்டு வீரர். ஜாவலின் எறிவதில் சாம்பியன். சிறந்த ஓட்டக்காராரும் கூட. நான் அவனை நன்கு படித்து ஒரு உயர்ந்த போலீஸ்காரராக வர விரும்பினேன். ஆனால் அவன் என் கனவை சிதத்து விட்டான். எனது சகோதரர் ஷ்ண்முகமும் இயக்குனர் சி.வி. ராஜேந்திரனும் என் முதுகுக்கு பின்னால் திட்டம் போட்டார்கள். ஒரு நாள் காலை அவர்கள் என்னிடம் தமிழ் படத்திற்கு ஒரு புது முகம் வந்திருப்பதை பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டு பிரபுவை என் முன்னால் நிறுத்தினார்கள். அதை விட மோசமானது என்னவென்றால் சங்கிலி படத்தில் அவன் எனக்கு வில்லன். அதற்கு பிறகு அவன் என்னுடன் சந்திப்பு, மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளை ரோஜா ஆகிய படங்களில் நடித்தான்.

டி.எஸ்.என்.: பிரபுவின் நடிப்புத் திறமையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிவாஜி: சாதாரணமாக நான் மற்றவர்களின் நடிப்பாற்றலை எடை போடுவதில்லை. அவன் திறமையான நடிகன். சரியான பாதையில் சென்றால் அவன் இன்னும் சிறந்த நடிகனாக வருவான். குழாயிலிருந்து வெளிவரும் தண்ணீரை மடைகள் மூலம் வயல்களுக்கு செல்ல வேன்டும். அதைப்போல அவனுடைய திறமையை சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். திறமையான இயக்குனர்கள் அவனுடைய நடிப்பாற்றலை முன்னிலைக்கு கொண்டு வர முடியும். பிரபுவுக்கு சொந்தமாக நடிக்கும் ஸ்டைல் இருக்கிறது. அவன் என்னைபோல நடிக்க மாட்டான். அவன் என்னைப் போலவே நடப்பதாகவும் நடிப்பதாகவும் அறிந்தோ அறியாமலோ சிலர் கூறுவார்கள். அவன் எனது மகன் என்பதால் அவர்களுடைய எண்ணங்களில் பிழை ஏற்படுகிறது. அவ்வளவுதான்.

தொடரும்...
 
பிரபுவை, (நடிக்கவரும் முன்பே ) விளையாட்டுக்களத்தில் அறிவேன்.. அவரைச்சுற்றி ஒரு பட்டாளம் இருக்கும்.. கன்னம் குழிய சிரித்தவாறே, வாங்க பாஸ் என்று அன்புடன் அழைப்பார்..

நடிகர் திலகத்தின் நிறைவான வாழ்க்கைக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரம்.. அரசியல்..
 
பிரபுவை, (நடிக்கவரும் முன்பே ) விளையாட்டுக்களத்தில் அறிவேன்.. அவரைச்சுற்றி ஒரு பட்டாளம் இருக்கும்.. கன்னம் குழிய சிரித்தவாறே, வாங்க பாஸ் என்று அன்புடன் அழைப்பார்..

நடிகர் திலகத்தின் நிறைவான வாழ்க்கைக்கு ஒரு திருஷ்டிப் பரிகாரம்.. அரசியல்..

பால்ய வயதில் உங்களுக்கு நண்பராக இருந்தவர்கள் இன்று பெரிய பிரமுகர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒரு நண்பர் இன்றைய பெரிய அரசியல் வாதி, மற்றவர் இளைய திலகம். இன்னும் நிறைய பேர்கள் இருப்பார்கள் என் நினைக்கிறேன். அவர்களைப் பற்றி ஒரு சுவையான திரியை தொடங்கலாமே!
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(82): (1980-1990) படங்களின் சில காட்சிகள் 1

நடிகர் திலகத்தின் சுயசரிதை(82): (1980 1990) படங்களின் சில காட்சிகள் 1



ஸ்ரீப்ரியா,மனோரமா, தேங்காய் ஸ்ரீனிவாசன், ஜெயசித்ரா, ஜெய்கணேஷ் ஆகியோருடன் ரத்த பாசம் (1980) படத்தில்​


சுஜாதா, ஒய்.ஜி.மகேந்திரனுடன் பரீட்ஷைக்கு நேரமாச்சு (1982) படத்தில்​
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(83): (1980 1990) படங்களின் சில காட்சிகள் 2



ஸ்ரீதேவி, பிரபு, ராதா இவர்களுடன் சந்திப்பு (1983) படத்தில்​


மகன் பிரபுவுடன்​
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(84):(1980 - 1990) படங்களின் காட்சிகள் 3


பிரபுவுடன் வெள்ளை ரோஜா படத்தில்​


லஷ்மியுடன் ஆனந்த கண்ணீர் ( 1986) படத்தில்​
 
நடிகர் திலகத்தின் சுயசரிதை(85):(1980 - 1990) படங்களின் காட்சிகள் 4



ராதா வுடன் முதல் மரியாதை படத்தில்​


பாக்யராஜ் உடன் தாவணி கனவுகள் படத்தில்​

தொடரும்...
 
அழகான அரிய பல படங்களைப் பதிந்து நடிகர் திலகத்தின் திரை ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கும் பூரிப்பை உருவாக்கிவிட்டீர்கள். நன்றியும் பாராட்டும் அண்ணா.
 
அழகான அரிய பல படங்களைப் பதிந்து நடிகர் திலகத்தின் திரை ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கும் பூரிப்பை உருவாக்கிவிட்டீர்கள். நன்றியும் பாராட்டும் அண்ணா.

நன்றி சகோதரி!
 
Back
Top