ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்!

சாய்னாவின் அரையிறுதி ஆட்டத்தைப் பார்த்தேன்.. கடும் சவாலான ஆட்டம்தான்.. இதுவரை வேங்கை (wang) ஜெயித்ததில்லையாம் நம் இந்திய மங்கை.. அப்படித்தான் ஆகிவிட்டது..
இரண்டாவது செட்டில் 13 புள்ளீகள் வரை ஈடுகொடுத்த சாய்னா பிறகு அப்படியே விட்டுவிட்டார்....

தங்கம் கிடைக்கும் என்று நான் நினைத்த ஒரே ஆட்டம்/வீரர்,வீராங்கனை சாய்னா நெய்வால் தான்,,, அது இப்பொழுது இல்லையென்றாகிவிட்ட நிலையில். வெண்கலம் உறுதியாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
 
சாய்னாவுக்கு வெண்கலம்.
சாய்னாவின் திறமைக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் கைகொடுத்து பெற்றுத்தந்த பதக்கம்... சாய்னா ஒரு மிகத்திறமையான வீராங்கனை என்பதில் சந்தேகமில்லை, அதேசமயம் உணர்வை மதித்து ஆடும் வீராங்கனைகளுல் அவரும் ஒருவர். சீனாக்காரி ரிடய்ட்ர்ட் ஆனபிறகு வெண்கலம் கிடைத்துவிட்டதே என்று குதிக்காமல் நலம் விசாரித்தது நமக்கு பெருமையாகவும் எனக்கு கர்வமாகவும் இருந்தது!

வாழ்த்துக்கள் சாய்னா நெய்வால்!!

பொன் வைக்கும் இடத்தில் வெண்கலம்!
 
லண்டன் ஒலிம்பிக்: தங்கப் பதக்க வாய்ப்பு கைநழுவியது! வெள்ளி வென்றார் இந்தியாவின் சுஷில்குமார்!

12-sushil-kumar-wrestler.jpg


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்று. கடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுத் தந்தவர் சுஷில்குமார். இவர்தான் நடப்பு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பெருமைக்குரியவர்.

மல்யுத்தப் போட்டிகள் பொதுவாக எதிர்பார்ப்புகளை பொய்த்துபோக வைத்துவிட்ட நிலையில் சுஷில்குமாரின் மீது அனைவரது கவனமும் திரும்பியது. டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெற்றுத் தந்த சுஷில்குமார் இப்போதும் சாதிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தனது லட்சியம் என்று ஏற்கெனவே சுஷில் குமார் கூறியும் இருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டியில் சுஷில்குமார் நுழைந்தார்.அதன் பின்னர் அரை இறுதியில் கஜகஸ்தான் வீரர் டன டரோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டார் சுஷில்குமார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் போட்டியில் முதல் முறையாக இந்திய வீரர் ஒருவர் இறுதிப் போட்டியில் நுழைந்திருப்பதன் மூலம் சரித்திரம் படைத்தும் இருந்தார்..

மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் சுக்ரோவை சுஷில்குமார் எதிர்கொண்டார். ஆனால் ஜப்பான் வீரர் 1-0,3-1 என்ற புள்ளி கணக்கில் சுஷில்குமாரை வீழ்த்தி அவர் தங்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் சுஷில்குமாருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.
 
தனி நபர் பிரிவில் இந்திய வீரர் ஒருவர் இரண்டு பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறை. வாழ்த்துக்கள் சுஷில் குமார். :)
 
ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் அதிக (ஆறு) பதக்கங்களை பெறுவது இதுவே இந்தியாவுக்கு முதல் முறை. பதக்கங்கள் வென்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
 
லண்டன் ஒலிம்பிக்: ஊக்க மருந்து பயன்படுத்திய வீராங்கனையிடம் தங்கப்பதக்கம் பறிப்பு

14-nadzeya-ostapchuk.jpg


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெலாரசின் வீராங்கனையிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 'மெட்டநோலோன்' என்ற ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக வெள்ளிப்பதக்கம் வென்ற நியூசிலாந்து வீராங்கனைக்கு தங்கமும், வெண்கலப்பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும் 4வது இடம் பிடித்த சீன வீராங்கனைக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - சில `அத்தியாவசிய` புள்ளி விவரங்கள்..!

கவர்ச்சி ஈட்டி'.

13-leryn-franco.jpg


இணையதள ரசிகர்களிடையே பராகுவே நாட்டைச் சேர்ந்த ஜவாலின் துரோ எனப்படும் ஈட்டி எறியும் வீராங்கனை லெரின் பிரான்கோதான் செம ஹாட்டாக இருந்திருக்கிறார். இவர் வெறும் வீராங்கனை மட்டுமல்ல, அழகுப் பெண்ணும் கூட, அழகிப் போட்டியில் அமர்க்களப்படுத்தியவரும் கூட. மிஸ் யுனி்வர்சோ பராகுவே அழகிப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தவர் இந்த 'கவர்ச்சி ஈட்டி'.

அதேபோல அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரியான் லோசெட்டும் தனது கவர்ச்சிக் கட்டழகால் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் கூட நீச்சலடித்தபடி இருக்கிறாராம். இந்த வரிசையில் 3வது இடம் இங்கிலாந்தின் ஜெஸ்ஸிகா என்னிஸ்-க்கு கிடைத்துள்ளது.
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - சில `அத்தியாவசிய` புள்ளி விவரங்கள்..!

சீனாக்காரன், சிங்கம்லே..!

முதல் பத்து நாட்கள் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற இங்கிலாந்து வீரர், வீராங்கனைகளில் 37 சதவீதம் பேர் கதறி அழுதனராம், அதாவது ஆனந்தக் கண்ணீர் விட்டாங்களாம். அதேபோல அமெரிக்க தரப்பில் 17 சதவீதம் பேர்தான் அழுதார்களாம். சீனாக்காரர்களின் கண்ணீர்ப் பங்கு இதில் 7 சதவீதமாகும். பரவாயில்லை, சீனாக்காரன் பெருஞ்சுவர் போல திடமாத்தான் இருந்திருக்கான்...!

பதக்கம் வாங்கி அழுது குமுறியவர்களில் பாதிப் பேர் பெண்கள்தானாம்... அதாவது ஆண்களை விட 25 சதவீதம் கூடுதலாக பெண்கள் அழுதார்களாம். அதேசமயம், எட்டு சதவீத ஆண்கள் மட்டுமே ஆனந்தக் கண்ணீர் வடித்தார்களாம். அதேபோல பதக்கம் வாங்கியோரில் 16 சதவீதம் பேர் பதக்கத்தை கடித்தும், முத்தமிட்டும் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - சில `அத்தியாவசிய` புள்ளி விவரங்கள்..!

இன்னும் சில அரிய தகவல்கள்..

பதக்கம் வாங்க போடியத்தில் நின்றவர்களில் 44 சதவீதம் பேர் மட்டுமே தங்களது நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கூடச் சேர்ந்து பாடினார்களாம்... மத்தவங்கள்ளாம் பராக்கு பார்த்துக்கிட்டிருந்தாங்க போல...!

இன்னொரு சுவாரஸ்யத்தைக் கேளுங்க.. பதக்கம் வாங்கிய இங்கிலாந்து வீரர், வீராங்கனைகளில் 66 பேர் அரசாங்கப் பள்ளிகளில் படித்தவர்களாம். 44 பேர் தனியார் பள்ளிகளில் படித்தவர்களாம்... இதிலிருந்து என்ன தெரியுது...??

வீரர், வீராங்கனைகளிலேயே ரொம்பப் பெரிய... நீளமான... கற்பனை ஸ்டாப் பெயர் கொண்டவர் என்ற பெரு்மை ஈரானைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சயீத் தான். இவரது முழுப் பெயர் சயீத் முகம்மதுபோர்க்கர்கரா.. அதாவது இவரது துணைப் பெயரில் மொத்தம் 26 எழுத்துக்கள் இருக்கிறதாம்..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - சில `அத்தியாவசிய` புள்ளி விவரங்கள்..!

திருமணங்கள், ஒலிம்பிக்கிலும் நிச்சயிக்கப்படுகின்றன..

இந்த ஒலிம்பிக் போட்டியைப் பார்கக வந்த இடத்தில் காதலாகி, கல்யாணம் பேசி முடித்தவர்களும் கணிசமாக உள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 2 பேர் காதலைச் சொல்லி கல்யாணம் பேசி முடித்துள்ளனராம். மொத்தமாக 25 ஜோடிகள் இப்படி கல்யாண வைபோகமே என்று பாட்டுப் பாடியுள்ளனர்....

ஒலிம்பிக் பார்க் இருக்கு தெரியுமா... அதைக் கட்டுவதற்காக வானம் தோண்டியபோது நான்கு மண்டை ஓடுகள் கிடைத்ததாம். யாரு, என்ன என்ற விவரம் இதுவரை தெரியவில்லை...

ஆகஸ்ட் 7ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று லண்டன் மெட்ரோ ரயில்களுக்கு டிரவுசர் கிழிந்து போய் விட்டதாம். காரணம், அன்று மட்டும் 40 லட்சம் பேருக்கு மேல் ரயில்களில் பயணித்தனராம்.
 
Back
Top