ஒலிம்பிக்ஸ் - வெள்ளி வென்றார் சுஷில்குமார்!

லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

2012-07-30T191606Z_1161762945_LM2E87U1HILIA_RTRMADP_3_OLY-EQUE-EQXI3D-EQX003301.JPG


க்ராஸ் கண்ட்ரி ஈக்வஸ்ட்ரியன் - ஜெர்மனியின் மைக்கேல் ஜங் தன் குதிரை சாம் உடன்..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

2012-07-30T192556Z_209730384_LR1E87U1HYX4I_RTRMADP_3_OLY-WEIG-WLM62K-DAY3.JPG


ஆடவர் பளு தூக்குதல், 62 கிலோ பிரிவு. வடகொரிய வீரர் உன் குக் கிம், உலக சாதனையைத் ’தூக்கிய’ உற்சாகத்தில்..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

2012-07-30T180514Z_223574871_LM2E87U1E8H6R_RTRMADP_3_OLY-EQUE-EQXI3D-EQX003301.JPG


க்ராஸ் கண்ட்ரி ஈக்வஸ்ட்ரியன் - ஆஸி. வீராங்கனை க்ளேட்டன் ஃப்ரெடரிக்ஸை வீழ்த்திய சோகத்தில் அவரது குதிரை ’பெண்டிகோ’..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

2012-07-30T163506Z_729312745_LM2E87U1A28QY_RTRMADP_3_OLY-JUDO-JUM73K-JUM073101.JPG


ஆடவர் ஜூடோ - 73 கி. பிரிவு - ஜப்பான் வீரர் ரிக்கி நகாயாவை வீழ்த்திய களிப்பில் ரஷ்ய வீரர் மன்சூர் இசயேவ்..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

2012-07-30T164203Z_2136138276_LM2E87U1ADUSV_RTRMADP_3_OLY-HOCK-HOMHKY-ROUNDS-DAY3.JPG


ஆடவர் ஹாக்கி / இந்திய வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நெதர்லாந்து அணித்தலைவர் சாண்டர் டி விய்ன்..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

149523210-8-jpg_135803.jpg


மகளிர் கைப்பந்து ; சீன அணிக்கெதிராக போராடிப்பெற்ற ஒரு புள்ளிக்காக உற்சாகக் கூச்சல் எழுப்புகிறார் துருக்கி வீராங்கனை கய்டன் கயலர்..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

149521842-8-jpg_135755.jpg


மகளிர் கரப்பந்து ; க்ரோஷிய வீராங்கனை க்றிஸ்டினா முன்னேற்றத்தைத் தடுக்கும் அங்கோலா பெண்மணி..
 
லண்டன் ஒலிம்பிக்ஸ் - நாள் 3 - சில காட்சிகள்..

149523223-8-jpg_135803.jpg


ஆடவர் டேபிள் டென்னிஸ் ; ஆட்ட இடைவெளியில் அணி வீரருக்கு வியூகங்களைக் கற்பிக்கும் சீனப் பயிற்சியாளர்..
 
குத்துச்சண்டை: தேவந்திரோ சிங் வெற்றி

லண்டன், ஜூலை 31: ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் முதல் சுற்றில் வெற்றி கண்டு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் தேவேந்திரோ சிங்.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 49 கிலோ லைட் ஃபிளைவெயிட் பிரிவில் பங்கேற்ற தேவேந்திரோ சிங் முதல் சுற்றில் மங்கோலியாவின் பெய்ரான் மொலினாவை சாய்த்து வெற்றி கண்டார்.

ஆரம்பம் முதலே தேவேந்திரோ சிங் அதிரடியாக குத்துகளை விட்டார். அவரின் ஆக்ரோஷ தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெய்ரான் கீழே சாய்ந்தார். இதன்பிறகு அவரால் எழ முடியவில்லை. இதையடுத்து போட்டியை நிறுத்திய நடுவர், தேவேந்திரோ சிங் வெற்றிபெற்றதாக அறிவித்தார். அப்போது தேவேந்திரோ சிங் 24-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். இதனால் முதல் சுற்று 2 நிமிடம் 24 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. வழக்கமாக போட்டி 3 சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் 3 நிமிடங்கள் நடைபெறும். ஆனால் தேவேந்திரோ சிங் முதல் சுற்றிலேயே போட்டியை முடித்துவிட்டார்.

தேவேந்திரோ சிங், அடுத்த சுற்றில் மங்கோலியாவின் செர்டாம்பாவை சந்திக்கிறார். இந்த ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. குத்துச்சண்டை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியர் தேவேந்திரோ சிங். முன்னதாக விஜேந்தர் சிங், ஜெய் பகவான் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
பதக்கப் பட்டியல்
நாடு தங் வெ வெண் மொ


1 சீனா 10 6 3 19
2 அமெரிக்கா 6 7 5 18
3 பிரான்ஸ் 4 1 4 9
4 தென் கொரியா 3 2 2 7
5 வட கொரியா 3 0 1 4
6 கஜகஸ்தான் 3 0 0 3
7 இத்தாலி 2 4 2 8
8 ஜெர்மனி 2 3 1 6
9 ரஷியா 2 1 4 7
10 ஜப்பான் 1 4 7 12


32 இந்தியா 0 0 1 1
 
இந்திய வீரர்கள் இன்று...

வில்வித்தை - மகளிர் தனிநபர்

வெளியேற்றும் சுற்று

தீபிகா குமாரி எதிர் ஆமி ஆலிவர் (பிரிட்டன்)

நேரம்: பிற்பகல் 3.27

ஹாக்கி

இந்தியா எதிர் நியூஸிலாந்து

நேரம்: மாலை 6.15

துப்பாக்கி சுடுதல்

மகளிர் 25 மீ. பிஸ்டல் - தகுதிச்சுற்று

ராஹி சர்னோபட், அன்னுராஜ் சிங்

நேரம்: மதியம் 1.30
 
பளு தூக்குதல்: ரவிகுமார் ஏமாற்றம்

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.ன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிரிவில் 136 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 167 கிலோ என மொத்தம் 303 கிலோ எடையைத் தூக்கினார். ஆனால் அவருக்கு 6-வது இடமே கிடைத்தது.

ஏற்கெனவே 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சோனியா சானு, இரண்டு தினங்களுக்கு முன்பு தோற்ற நிலையில், இப்போது ரவிகுமார் தோல்வி கண்டுள்ளார். இதன்மூலம் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர்களின் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
 
2-வது சுற்றில் பூபதி-போபண்ணா

ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடிகள் முன்னேறியுள்ளன. பூபதி-போபண்ணா ஜோடி தங்களின் முதல் சுற்றில் கடுமையான போராட்டத்துக்கு பிறகு 7-6 (4), 6-7 (4), 8-6 என்ற செட் கணக்கில் பெலாரஸின் மேக்ஸ் மிர்ன்யி-அலெக்சாண்டர் ஜோடியை வீழ்த்தியது.
 
பயஸ் ஜோடி வெற்றி:

மற்றொரு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் லியாண்டர் பயஸ்-விஷ்ணுவர்தன் ஜோடி 7-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-ஜூலியன் ரோஜர் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
 
ஜூடோ: கரிமா வெளியேற்றம்

1spt6.jpg


ஒலிம்பிக் ஜூடோ போட்டியின் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் இந்தியாவின் கரிமா செüத்ரி. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் ஜப்பானின் யோஷி இனோ 100-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவின் கரிமா செüத்ரியை வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் 81 விநாடிகளிலேயே முடிவுக்கு வந்தது. இனோவின் ஆக்ரோஷமான தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் கரிமா நிலைகுலைந்தார். இதையடுத்து இனோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் 100 புள்ளிகளையும் பெற்றார். இனோ, சர்வதேச அளவில் முன்னணி வீராங்கனை ஆவார். 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
வில்வித்தை: தொடர்கிறது இந்தியாவின் தோல்வி

1spt7.jpg


ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ஆடவர் தனிநபர் ரிகர்வ் முதல் சுற்றில் ராகுல் பானர்ஜி 6-2 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஜான்ஸ்டனை வீழ்த்தினார். ஆனால் அதைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 3-7 என்ற கணக்கில் போலந்தின் ரஃபாலிடம் வீழ்ந்தார் பானர்ஜி.
 
ஜெயந்தா, செக்ரோவ்லு தோல்வி:

ஆடவர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவின் ஜெயந்தா தலுக்தார் 0-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜேக்கப் ஊகீயிடம் தோல்வி கண்டார்.
மகளிர் தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் செக்ரோவ்லு ஸ்வுரு 5-6 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஜெனிபர் நிகோல்ஸிடம் தோல்வி கண்டார்.

காய்ச்சலால் பாதிப்பு: தோல்விக்கு பின்னர் ஜெயந்தா தலுக்தார் கூறுகையில், "காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாலேயே எங்களால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் போனது. நான் (ஜெயந்தா தலுக்தார்), தருண்தீப் ராய், ராகுல் பானர்ஜி ஆகியோர் போட்டி தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்னதாக காய்ச்சால் பாதிக்கப்பட்டதால், மிகவும் பலவீனமாகிவிட்டோம். தரவரிசை சுற்றில் மோசமாக விளையாடியதற்கு காய்ச்சல்தான் காரணம். தனி நபர் பிரிவில் நான் தோற்றதற்கு சவால் நிறைந்த "டிரா'வும் ஒரு காரணம். ஜேக்கபுடனான முதல் சுற்று ஆட்டத்தில் முதல் செட்டில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் 3-வது செட்டில் சிறப்பாக செயல்பட்டேன். ஜேக்கப் என்னைவிட சிறப்பாக செயல்பட்டார். ஜெயிக்க வேண்டும் என்று விரும்பினால் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்' என்றார்.
 
ஜுவாலா-அஸ்வினி ஜோடி ஏமாற்றம்!

1spt12.jpg


ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இருந்து வெளியேறியது இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி ஜோடி.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் கடைசி லீக் ஆட்டத்தில் 21-16, 21-15 என்ற நேர் செட்களில் சிங்கப்பூரின் ஷிந்தா முலியா-லெய் யோ ஜோடியை வீழ்த்தியபோதும், காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்திய ஜோடி. "பி' பிரிவில் இந்திய ஜோடியுடன் இடம்பெற்றிருந்த சீனதைபே, ஜப்பான் ஜோடிகளும், இந்திய ஜோடிகளைப் போலவே இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் ரேட்டிங் அடிப்படையில் இந்திய ஜோடியை விட சீனதைபே, ஜப்பான் ஜோடிகள் முன்னிலை பெற்றிருந்தன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரு ஜோடிகள் மட்டுமே காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய ஜோடி வெளியேற நேர்ந்தது.
 
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சாய்னா

1spt1.jpg


ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நெவால்.

திங்கள்கிழமை நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சாய்னா நெவால் 21-4, 21-14 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் லியன்னே டானை வீழ்த்தினார். ஆட்டத்தின் முதல் செட்டில் அபாரமாக ஆடிய சாய்னா 21-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். இந்த செட்டை வெல்வதற்கு சாய்னா 9 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் சாய்னா அபாரமாகவே விளையாடினார். இதில் லியன்னே சற்று போராடினாலும், அது பலனளிக்கவில்லை. இறுதியில் அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் சாய்னா வென்றார்.
 
பேட்மிண்டன் கலப்பிரட்டையர் : இந்திய இணை தோல்வி

bad_mixed_s.jpg


லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் கலப்பிரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் திஜூ - ஜுவாலா கட்டா இணை தோல்வி அடைந்தது. தென்கொரியாவின் யாங் டே லி - ஜங் இன் ஹா இணையுடன் மோதிய இந்திய இணை 21-15, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
 
Back
Top