கடிகள்,ஜோக்ஸ் வாங்கோ!! வாங்கோ!!!

ஜொக்ஸ் புத்தகத்திலிருந்து.............

பலவகையான சிரிப்புகளை நீங்கள் கண்டு மகிழலாம்..
ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார்.
தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?.
நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார்.
நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான்.
நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.

நான் ரசித்தவை உங்கள் பார்வைக்கு..

தொடரும்


.
 
Last edited:
சர்தார்ஜிகளும் நீதிபதியும்


ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள் என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக் கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.
என்ன வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன் நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். ”3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”, சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார்.
நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து விட்டார்.

கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், ”இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்� என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். � 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”.
சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே, ”இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர்.
மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார்.
”4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் ”இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.



.
 
பழைய நினைவைக் கிளறி விட்டுட்டீங்களே!... 10 காசுக்கு சோன்பப்டி, 5 காசுக்கு வறுத்த நிலக்கடலை, காவியும் சுண்ணாம்பும் கலந்து பூசிய மண்குதிரைப் பொம்மை, ரப்பர் நூலில் கட்டிய அன்றைய "யோ யோ" பந்து..

ஹா ஹா.. பொற்காலங்க அது..அப்போ இதெல்லாம் எங்க தாத்தா எனக்குச் சொன்ன ஜோக்குகள்..
 
தொடருங்கள் அனு அக்கா
நாங்களும் படிக்கிறோம் மகிழ்கிறோம்
 
தாமரை;328352 said:
பழைய நினைவைக் கிளறி விட்டுட்டீங்களே!... 10 காசுக்கு சோன்பப்டி, 5 காசுக்கு வறுத்த நிலக்கடலை, காவியும் சுண்ணாம்பும் கலந்து பூசிய மண்குதிரைப் பொம்மை, ரப்பர் நூலில் கட்டிய அன்றைய "யோ யோ" பந்து..

ஹா ஹா.. பொற்காலங்க அது..அப்போ இதெல்லாம் எங்க தாத்தா எனக்குச் சொன்ன ஜோக்குகள்..

கவலையே விடுங்க...
வாய் விட்டு சிரிங்க...
இந்த பகுதி சிரிப்பு ...ஹா..ஹா.
 
இராணுவத்தில் சர்தார்ஜி



இராணுவத்தில் சேருவோருக்கு இரயிலில் இலவச பயணம் உள்ளிட்ட பல சலுகைகள் இருப்பதை தெரிந்துக் கொண்ட சர்தார்ஜி, ஒரு நாள் இராணுவத்தில் சேர்ந்தான். இராணுவத்தில் பணிபுரிவது எவ்வளவு கடினமான வேலை என்பதை அந்த பனிப் பிரதேசங்களில் இரவுக் காவல் புரியும் போதும், மற்ற கடினமான பயிற்சிகளின் போதுமே தான் உணர்ந்ததாக முகாமில் இருந்த மற்றொரு இராணுவ நண்பரிடம் புலம்பிக் கொண்டிருந்தாரன். அதோடு மட்டுமல்லாமல் தனக்கு பொருத்தமான அளவை விட குறைவான அளவுள்ள ஷூ கொடுக்கப் பட்டிருப்பதால், அதனை காலில் அணிந்து பணிபுரிவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும் சொன்னான்.

உனக்கு பொருத்தமான ஷுவை மேலதிகாரியிடம் சொல்லி வாங்கிக் கொள்ளலாமே என கேட்ட நண்பரிடம், சர்தார்ஜி சொன்னானாம். ?இந்த இராணுவ முகாமில் சேர்ந்த பின்னர், நான் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் என்றால், அது தினமும் இந்த ஷூவை கழட்டி வைக்கும் நேரம் மட்டும்தான். சரியான அளவுள்ள ஷூவைப் பெற்று அந்த மகிழ்ச்சியையும் இழக்கச் சொல்கிறாயா??
 
சர்தார்ஜியும், சாவியும்



சர்தார்ஜி தன் மகனை கூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்க போனார்.
என்ன ஆச்சு என்று டாக்டர் கேட்டாராம். ?இவன் பெட்டி சாவியை முழுங்கி விட்டான்? அதை நீங்க தான் எடுக்கனும் என்றார் சர்தார்.
டாக்டர் பையனை வாயை நன்றாக திறக்க சொன்னார். எப்போது முழுங்கினார் என்று சர்தார்ஜியை கேட்டார்.
மூன்று மாதம் தான் ஆச்சு என்றார் சர்தார். ?என்னது மூணு மாசமா?, இத்தனை நாள் என்ன பண்ணிகிட்டிருந்தீங்க?? என்று டாக்டர் கோபமாகக் கேட்டார்.
இத்தனை நாள் இரண்டாவது சாவியை உபயோகப்படுத்தியதாக சர்தார்ஜி போட்டாரே ஒரு போடு.
 
அப்பா சர்தார்ஜியை போட்ட் இந்த பாடு படுத்தரீங்களே அத்தனை ஜோக்குகளும் உன்மையில் புதுசு தான் அருமை தொடர்ந்து போடுங்கள் அனு
 
ஹிஹி.. சர்தார்ஜி.. சிரிப்புக்களை எத்தனை முறை படித்தாலும் திகட்டாது...

அருமை அனு....
 
அசத்திறிங்க நண்பரே...
தொடரட்டும் உங்கள் ஜோக்குகள்...
சிரிப்பதற்கு இருக்கிறோம் நாங்கள்
 
நண்பர்களே நீங்களும் சிரிப்புகளை இணையுங்களே!!
நான் முடிந்தளவு தர முயல்கிறேன்....
இந்த பகுதி வளரட்டுமே
 
சர்தார்ஜியும் புலியும்

சர்தார்ஜியும் புலியும்​

ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.

ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.

சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

புலிகளிலும் சர்தார்ஜி வகைகள் உண்டு என்பது.
 
நேர்முகத்தேர்வில் சர்தார்ஜி​

சர்தார்ஜி ஒருவர் இரயில் நிலைய அதிகாரி பதவிக்கான இண்டர்வியூவில் கலந்து கொண்டார். இரண்டு இரயில்கள் அதிவேகமாக எதிரெதிரே ஒரே பிளாட்பாரத்தில் வருவதை அறிந்தால் நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் என்று அதிகாரி கேட்க, அதற்கு சர்தார்ஜி இவ்வாறு பதில் சொன்னாராம், ?நான் முதலில் திரு. பாண்டா சிங் அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பேன்?.

யார் அந்த பாண்டா சிங் என்று அதிகாரி கேட்டார். சர்தார்ஜி சொன்னார், ?பாண்டா சிங் என் தம்பி. அவன் இது வரை ஒரு இரயில் விபத்தைக் கூட நேரில் பார்த்ததேயில்லை.?
 
அடடா!

அடடா!​

ரஷிய அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான பத்திரிகையான ?பிராவ்தா?வில் உயிரோடு இருந்த ஒருவரை இறந்து விட்டார் என்று செய்தி வெளியிட்டனர்.

உடனே அந்த ஆசாமி அடித்துப் புரண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு ஓடி வந்தார். ?நான் உயிரோடு இருக்கிறேன் என்று திருத்தம் வெளியிடுங்கள்? என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், அதற்கு ஆசிரியர் ஒப்புக் கொள்ளவில்லை. ?எங்கள் பத்திரிகைகளில் வெளியான செய்தியை நாங்களே மறுத்து இதுவரை செய்தி வெளியிட்டதே கிடையாது? என்று சொல்லி விட்டார்.

?அப்படியானால் என் கதி என்ன ஆவது?? என்று அந்த ஆள் கேட்டார். ஆசிரியர் நிதானமாக சொன்னார்: ?கவலைப் படாமல் வீட்டுக்குப் போங்கள். நாளை பத்திரிகையில் குழந்தைகள் பிறப்பு என்ற பகுதியில் உங்கள் பெயரையும் சேர்த்து வெளியிட்டு விடுகிறோம்!?
 
அருமையான இருக்கிறது

அனு

அடுத்தடுத்த பதிவுகளை படிக்கும் போது

அற்புதமாக மனம் லேசாகிறது...
 
பிரமிடுகளில் சர்தார்ஜி

பிரமிடுகளில் சர்தார்ஜி

இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள்.
பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், ?இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும்?. மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் ?நீங்கள் சொல்வது உண்மைதான்.
அவனுக்கு அருகில் பாருங்கள் B.C.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள்? என்று.
 
பிஸா கடையில் சர்தார்ஜி


சர்தார்ஜி ஒரு பிஸா கடைக்குப் போய் பிஸா ஆர்டர் செய்தார்.

கடைக்காரர்: 6 துண்டுகளாக வெட்டித் தரவா அல்லது 12 துண்டுகளாக வெட்டித் தரவா?

சர்தார்ஜி: 6 துண்டுகளாகவே வெட்டுங்க. என்னால 12 துண்டுகள் எல்லாம் சாப்பிட முடியாது.
 
சில அறிந்தவையானாலும் பல எனக்குப் புதிதானவை.
சிரித்து மனம் மகிழ்ந்தேன்.
தொடரட்டும் உங்கள் சர்தார்ஜி ஜோக்குகள்...
நன்றிகள் அனு அவர்களுக்கு...
 
Last edited:
சில கடிகள் உங்கள் பார்வைக்கு...

கடி 1

சர்தார் : டாக்டர் என்னை நாய் கடிச்சிருச்சி..
டாக்டர்: எந்த இடத்துல..
சர்தார் : பெருமாள் கோவில் சந்துல...


கடி 2

பேருந்து நிலையத்தில் இரண்டு பேர் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தனர்.

ஒருவர் : அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை
மற்றவர்: அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருக்கும். நமக்கு எதுக்கு
ஒருவர் : ஆயிரம் பிரச்சனை இருந்தா ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியது தானே. அதுக்கு எதுக்கு சண்டை பேடனும்.


நன்றாக இருக்கா ?!
 
Back
Top