தமிழ் சினிமாவின் சில சூட்சுமங்கள்

lavanya

New member
தமிழ் சினிமாவின் சில சூட்சுமங்கள்

கீழ்க்கண்டவை எல்லாம் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இருக்கும்


1. என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வீடு பளபளவென்று விசாலமாக சுத்தமாக இருக்கும்
2. இரட்டையரில் ஒருவர் எப்போதும் கெட்டவர்.(பொதுவாக)
3. பாம் ஒயரை தடுக்க வேண்டுமெனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம்.பரவாயில்லை
4. ராத்திரி படுக்கும்போது பெட்ரூம் விளக்கை அணைத்தாலும் அறையில் எல்லாம் நன்றாக தெரியும்
என்ன கொஞ்சம் நீலமாக தெரியும் அவ்வளவுதான்
5. அழகான 19 வயது கதாநாயகி அணு ஆயுத நியூக்ளியர் ரகசியங்களில் எக்ஸ்பர்ட்டாக இருக்க முடியும்
6. விசுவாசமுள்ள கடுமையாக உழைக்கும் போலீஸ் அதிகாரி ரிட்டயர்ட் ஆகும் பத்து நாள் முன்னதாக சுட்டு
கொல்லப்படுவார்
7. வில்லன் கதாநாயகனை நேராக சுட்டு கொல்வதற்கு பதில் சிக்கலான இயந்திரங்கள்,?பியூஸ்கள்,
விஷவாயுக்கள் சக்கரங்கள்,லேசர் அல்லது சுறா மீனிடம் விட்டு விட்டு சுற்றி வளைப்பான். கதாநாயகன்
தப்பிக்க அரை மணி நேரமாவது கிடைக்கும்
8. போலீஸ் விசாரணையின் போது கட்டாயமாக நைட் கிளப்பில் போய் விசாரித்தாக வேண்டும்.பின்னால்
மழுப்பலாக ஒரு ஸ்ட்ரிப் டீஸ் தெரிய வேண்டும்.
9. எல்லாப் படுக்கைகளுக்கும் ஸ்பெஷல் போர்வைகள் உண்டு. பெண்களுக்கு மார்பு வரை மறைக்கவும்
ஆண்களுக்கு இடுப்பு வரை மறைக்கவும் ( ஆண்கள் அப்போது சிகரெட் குடித்தே ஆக வேண்டும்)
10. யாராயிருந்தாலும் ஒரு விமானத்தை தரையிறக்க முடியும்.
11. தண்ணீருக்கு அடியில் போனாலும் லிப்ஸ்டிக் அழியாது
12. எந்த யுத்தமாக இருந்தாலும் காதலியின் போட்டோவை காட்டாதவரை கதாநாயகன் பிழைக்கலாம்
காட்டிவிட்டால் அடுத்த காட்சியில் அவன் குளோஸ்
13. பாரீஸ் நகரத்தின் எந்த ஜன்னலிலிருந்து படம் எடுக்கப்பட்டாலும் ஈ?பில் டவர் தெரியும்
14. கதாநாயகன் வில்லனிடம் செம்மையாக அடி வாங்கும் போது வலிக்கவே வலிக்காது.ஆனால் பின்னர்
கதாநாயகி பஞ்சு ஒத்தடம் கொடுக்கும்போது மட்டும் ஸ்..ஆ.. என்பான்
15. பாழடைந்த பங்களாவில் தங்கும் பெண்கள் ஏதாவது விநோதமான சத்தம் கேட்டால் என்னவென்று
பார்க்க சிக்கனமான சின்ன உடையில்தான் நடந்து போவார்கள்.

(தொடரும்)
 
Last edited by a moderator:
தோழி லாவண்யா அவர்களே....

சூட்சும ரகசியங்கள் ரசமானவை... நிஜமானவை..
ஆனால்... தமிழுக்கு மட்டும் ஏன் தனிச்சிறப்பு..!!!!???
:D
நீங்கள் சொல்லும் சூட்சுமங்கள்
உலகப் படங்கள் அனைத்துக்குமே பொதுவானவை... :wink:
 
Last edited by a moderator:
கூர்ந்து கவனித்துள்ளீர்... நன்றி.. பாராட்டுக்களுடன்.. (ஆமாம் இப்படி படம் படம்னு காலம் ஓட்டினா எப்படி?!!)
 
Last edited by a moderator:
கூர்ந்து கவனித்துள்ளீர்... நன்றி.. பாராட்டுக்களுடன்.. (ஆமாம் இப்படி படம் படம்னு காலம் ஓட்டினா எப்படி?!!)

வேற என்னா செய்யணும்ங்கறீங்க தம்பி...?
 
Last edited by a moderator:
நன்றாக உள்ளது லாவண்யா அவர்களே. தொடருங்கள்.
 
Last edited by a moderator:
இவ்வளவு தூரம் தமிழ் சினிமாவின் மானத்தை வாங்கிவிட்டு இனியும் தொடரும் போட்டு ,
தமிழ் சினிமாகாரன் பார்த்தால் நாண்டுக்கிட்டு சாவணும்.

தமிழ் சினிமாவை விவரித்த விதம் அருமை. - ஆனால் இது எல்லாவற்றுக்கும் பொருந்தாது. சில நல்லபடங்கள் வரத்தான் செய்கின்றன அத்தி பூத்தது போல.
 
Last edited by a moderator:
படத்தில் விவேக் இருந்தே ஆக வேண்டும் என்பது இப்பொதைய நிலைமை..
 
Last edited by a moderator:
நன்றாக இருக்கிறது தங்கை. பாராட்டுக்கள். நானும் கொஞ்சம் தங்கைக்கு
உதவிடவா?

17.போலீஸ் படையே இருந்தாலும், கதா நாயகன் கோஷ்டியினர்தான் எல்லா
எதிரிகளையும் வீழ்த்திப் பிடிப்பர்.

18.கதா நாயகனைச் சுற்றி ஆயிரம் குண்டுகள் பட்டு சிதறினாலும் ஒரு குண்டு
கூட மேலே படாமல் ஓடிக் கொண்டே இருப்பார்.

19.எல்லா முடிந்ததும் போலீஸ் கைது செய்ய பாறை மறைவிலிருந்து காட்சி
தருவார்கள்.

20.கதா நாயகி வெளியில் சிக்கிக் கொண்டு பிரசவ வலியில் துடித்தால்
மழை வேறு பெய்ய ஆரம்பித்து விடும்.

அடடா ...இது என்ன ... எனக்கு நாயகனையும், நாயகியைச் சுற்றியே
ஓடுகிறது....வேறு யாராவது லாவண்யா தங்கை போல் அருமையாக
கொடுங்களேன்.

-அன்புடன் இக்பால்.
 
Last edited by a moderator:
பாராட்டுகள் இளவல் இக்பால்.
இன்னும் கொடுங்கள்.
 
Last edited by a moderator:
21. ஆறு புல்லட் போடும் துப்பாக்கியைதான் கதாநாயகனும் , வில்லனும் உபயோகிப்பார்கள்.. ஆனாலும் பலதடவை சுடுவார்கள். பின்னால் எதிர் எதிரே வரும்போது உன் 6 தொட்டாகளுமே காலி என்று கொக்கரிப்பார்கள்.
 
Last edited by a moderator:
சத்யராஜ் படங்கள் நிறைய பார்ப்பீர்களா மதன்?!!
 
Last edited by a moderator:
இதையும் சேருங்கள்:

பாச சென்டிமென்ட் மற்றும் க்ளைமாக்சில் வில்லனிடம் அகப்பட்டுக்கொள்ள நாயகனுக்கு ஒரு சகோதரி..
நாடோடி
 
Last edited by a moderator:
இதையும் சேருங்கள்:

பாச சென்டிமென்ட் மற்றும் க்ளைமாக்சில் வில்லனிடம் அகப்பட்டுக்கொள்ள நாயகனுக்கு ஒரு சகோதரி..
நாடோடி

வாருங்கள் நாடோடி அவர்களே. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
 
Last edited by a moderator:
நாடோடிக்கு நல்வரவு......

இளசு சொன்னது போல், இது தமிழ் மட்டுமல்லாது, ஆங்கில, ஹிந்திப் படங்களுக்கும் பொருந்துவதாயிருக்கிறது. குறிப்பாக, ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு......

அப்புறம் -

நேற்றைய காதலி இன்று அம்மாவாக, அக்காவாக இருக்க வேண்டும்.

ஒரு டப்பாங்க்குத்து பாட்டு கண்டிப்பாக இருக்க வேண்டும்....

பாடல்களில் ஒன்றிலாவது - அடுப்பங்கரையைப் பற்றிப் பேச வேண்டும்.

ஹீரோவின் நண்பர்கள் கண்டிப்பாக ஹீரோவை விட வயது கூடியவர்களாக இருக்க வேண்டும்........ கறுப்பாகத் தான் இருக்க வேண்டும்.......
 
Last edited by a moderator:
22. மொத்தமாக சொல்லப்போனால் பல காட்சிகளில் லாஜிக்கே இருக்காது.
 
Last edited by a moderator:
என்ன நீஙக் இப்படி சொல்றீங்க.......படமே லாஜிக் இல்லாம இருக்குது....
 
Last edited by a moderator:
இப்பவெல்லாம் இடைவேளையின் போது ஒரு டிவிஸ்ட் இருக்கவேண்டுமென்பது அத்தியாவசியம் . இல்லையென்றால் இடைவேளையோடு அப்படியே வீட்டிற்கு கிளம்பி போய்விடுகிறார்களாம்...
 
Last edited by a moderator:
Back
Top