1)இங்கு ஒருவர் ஒரு பயனாளர் கணக்கு மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப் படுகிறார். அதற்கு மேல் தேவைப்படுபவர்கள் நிர்வாகிகளிடன் அனுமதி பெற்ற பின்னரே மற்றொரு பெயரை உருவாக்கிக் கொள்ளலாம். நிர்வாக அனுமதி இன்றி ஒன்றுக்கு அதிகமாக பயனாளர் பெயர்களை வைத்துக் கொள்பவர்களின் அனைத்து கணக்குகளும் முடக்கப் படும். சரியான விளக்கதிற்கு பின்னரே அவை திறந்து விடப் படும்
2)உறுப்பினர்கள் பெயர் தேர்வு செய்யும் போது, ஆபாசப் பெயர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.மதம்,இனம்,சாதி தொடர்பான பெயர்களை தெரிவுசெய்யக்கூடாது.
3)உறுப்பினர் அறிமுகப்பகுதியில் கண்டிப்பாக உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும். அறிமுகபடுத்தாதோருக்கு பண்பட்டவர் அனுமதி வழங்கப்படமாட்டாது.
4)சக உறுப்பினர்களுடன் பண்பாகவும், அன்பாகவும் பழகவும். நேரடியான, மறைமுகமான தனிமனித தாக்குதல்களைத் தவிருங்கள். சக உறுப்பினர்களைச் சீண்டிப்பார்க்கும் நோக்கத்தை அறவே விட்டுவிடுங்கள்.
5)பெண் உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பம் இல்லாமல் 'தனி மடல்' (Private Message) அனுப்புதல் கூடாது. அவர்கள் பதிவுகளுக்கு பதிலிடும்போது கண்ணியம் காத்திடுங்கள்.
6)முதலில் உள்ள முல்லை மன்றத்தை தவிர மற்ற பகுதிகளில், ஆங்கிலமோ, தங்கிலீஷ் (தமிழை ஆங்கில வார்த்தைகளில் எழுதுவது ) கூடாது. அவை நீக்கப்படும்.
7)நடத்துனர்களுக்கென உள்ள reserved category அவதார்களை உபயோகித்தல் கூடாது. நடத்துனர்களுடன் வீணான விவாதங்களை தவிருங்கள்.
8)மொழியால் மட்டுமே இணைந்திருக்கிறோம் என்பதற்காக அடுத்தவர் நாட்டையோ, இனத்தையோ இழிவு படுத்தக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட சாராரை ஆதரிப்பது/எதிர்ப்பது போன்ற பதிப்புக்களை, விவாதங்களை தவிர்ப்பது நல்லது..
9)வியாபார மற்றும் விளம்பர நோக்கில் தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது.விளம்பரம் செய்ய விரும்புபவர்கள், நிர்வாகிகளில் ஒருவரின் அனுமதியுடன் மட்டுமே பதிக்கலாம்.
10)ஆபாச வார்த்தைகள் உபயோகிக்கக் கூடாது. ஆபாச தளங்களின் முகவரியை பதிக்கவோ, அல்லது அவர்கள் profile-ல் வைக்கவோ கூடாது. .
11)மன்றப்பிரிவிற்களுக்கேற்ற கருத்துக்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும். உ.தா கவிதை பகுதிகளில் கவிதை சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்.
12)அனைத்து இடங்களிலும் அரட்டை அடிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். அரட்டை அடிப்பதற்கென இருக்கும் பகுதிகளில் மட்டும் கண்ணியமான அரட்டையை வைத்துக்கொள்ளுங்கள்..
13)சிரிப்பு பகுதிகளில், கிண்டல்கள் மற்றவர்களை புண்படுத்தும் படி இருக்கக்கூடாது. சிரிப்பு பகுதிகளில் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் பண்ண கூடாது.
14)அரசியல், ஆன்மீகம் பற்றி அலசும் போது கூடுதல் கவனம் தேவை. அலசல் பகுதிகளில் கிண்டல் இருக்கக்கூடாது. ஆன்மீகம் பற்றி பேசும் போது மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது.
15)சாதி, மதங்களை இழிவு படுத்துதல் கூடாது. மதங்களில் உள்ள நல்ல விடயங்கள் பற்றி மட்டும் பேசுங்கள். ஒரு மதத்துடன் இன்னொரு மதத்தை ஒப்பிட்டுபார்க்கும் பதிவுகளைத் தவிருங்கள்.
16)பதியும்போதும் பின்னூட்டமிடும்போதும் மதத்துடன் சாதியுடன் நாடுகளுடன் சம்பந்தபடுத்துவதை தவிருங்கள்.
17)பொதுவிவாதங்கள் அலசல்கள் பகுதியில் உள்ள திரிகளில் மட்டும் செய்திகளை அலசுங்கள். விவாதக்கருத்துக்களை முன்வையுங்கள். வேறு இடங்களில் பதியப்படும் செய்திகளை பற்றிய அலசல்கள், விவாதங்களை தவிருங்கள்
18)அருவருக்கத்தக்க வகையில் சினிமா கிசுகிசுக்கள் இருத்தல் கூடாது.
19)கணினித்திரிகளில் தவறான நோக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தகவல்களை, இணையச்சுட்டிகள் போன்றவற்றை தவிருங்கள்.
20)மற்ற இடங்களிலிருந்து காப்பி & பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். அதே நேரம், முக்கியமான தகவலாக இருப்பின், தகவலின் சாரத்தைக் கொடுத்து அந்த தளத்தின் சுட்டியை கொடுத்தல் வேண்டும், குறைந்தபட்சம் தளத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி சொல்ல வேண்டும். அப்படி செய்யாத பதிவுகளை முன் அறிவிப்பின்றி நீக்குவதற்கு மன்ற பொறுப்பாளர்களுக்கு முழு அனுமதி உள்ளது.
21)மற்ற தளங்களில் உள்ள மற்றவர்களுடைய பதிவுகளை தம்முடைய பதிவாக இங்கு வெளியிடுவது தவறு. அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.
22)பதிவுகளில் அளவுக்கதிகமாக மேற்கோள் காட்டுவதை தவிருங்கள்.
23)ஒவ்வொருவரும் தங்கள் கையெழுத்தை சுருக்கமாக வைத்துக்கொள்ளவேண்டும் (அதிக பட்சம் 3வரிகள்). எழுத்தின் அளவு சாதரண அளவில் இருக்கவேண்டும். பெரிய படங்களை இணைப்பதை தவிருங்கள். மற்றவரை தாக்கும் வண்ணம் கையெழுத்து இருக்க கூடாது.
சுருங்கக்கூறின்
- மதங்கள் சம்பந்தமான பதிவுகளை ஆன்மீகப்பகுதியில் மட்டும் பதியுங்கள்.
- அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக எந்த ஒரு பதிப்பும், விமர்சனமும் இருத்தல் கூடாது.
- காப்புரிமை பிரச்சினைகளை ஏற்படுத்தும் பதிவுகள் இருக்கக்கூடாது.
- சட்டவிரோதமான செயல்களைத் தூண்டும் பதிவுகள் இருக்கக்கூடாது.
- திரியை திசைதிருப்பும் பதிவுகள் இருத்தல் கூடாது..
ஒரே குடும்பம் போல பழகி வரும் மன்ற உறவுகளில் சில தேவையில்லாத பதிவுகள் காரணமாக விரிசல் விழ மன்றம் எப்பவும் அனுமதிக்காது. அத்தைகைய பதிவுகளில் தீவிரமானவை கண்டதும் திருத்தப்படும்/அகற்றப்படும். செறிவைப் பொறுத்து எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்படும்.
எந்த மதம், சாதியையும் மறைமுகமாகக்கூட சாடிப் பதியும் அத்தனையும் அகற்றப்படும்.. பதித்தவர் எச்சரிக்கப்படுவார்.
எச்சரிக்கை புள்ளி வழங்கல் முறை:
- ஒரு எச்சரிக்கைக்கு 5 புள்ளிகள்
- 15 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை
- 20 புள்ளிகள் பெற்றால் 10 நாட்கள் மென் தடை.
- 25 புள்ளிகள் பெற்றால் 2 வாரங்கள் மென் தடை.
- 50 புள்ளிகள் பெற்றால் 1 மாதம் மென் தடை.
மென் தடை என்பது சில காலம் பங்கேற்க மட்டும் அனுமதிக்காமல் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு திட்டம். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையும், ''ரேட்டிங்'' உரிமையும் உண்டு. பண்பட்டவர் அனுமதி கிடையாது
தலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத பதிவுகளின் ஓட்டத்தைப் பொறுத்து திரிகள் பூட்டப்படும். எவர் ஒருவரால் திரி ஐந்து தடவைக்கு மேல் பூட்டப்படுகிறதோ, இல்லை குப்பைக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் தமிழ்மன்றத்திற்கு எதிரானவர் அல்லது தமிழ்மன்றத்தின் விதிமுறைகளை பின்பற்ற இயலாதவர் என்று அவரின் கணக்கு ஒரேயடியாக எந்த முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும்.
இவ்விதிகளை அனைவரும் கடைப்பிடிப்பதுடன், எங்கே, எந்த மன்றப்பிரிவுகளிலும் தவறு நடந்தாலும், கண்டனத்திற்குரிய பதிப்புகளோ விமர்சனங்களோ மன்றவிதிகளை மீறிய பதிவுகளையோ கண்டாலும் பதிவுகளின் வலப்பக்க மூலையில் உள்ள
பட்டனை தட்டி நிர்வாகத்தினர் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.
பின்னர் சேர்க்கப்பட்ட விதிகள்.
1. மன்றத்தில் இலவச மென்பொருட்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளலாம். கிரக் எனப்படும் சட்டத்துக்கு முரணான மென்பொருள், ஏனைய பரிமாற்றங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
புரிதலுடன் கூடிய அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.
.