பிரதோஷம்

shivasevagan

New member
331. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்?

இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, வணங்கல் வேண்டும்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின்
சைவ வினா விடை
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8201
 
Last edited:
post-3961-0-23260300-1314361180_thumb.jpg
 
Last edited:
ஐயா தங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் ஆன்மிகத்தைபற்றி பல தகவல்கள் கொடுத்து இந்து மதத்தின் அருமை பெருமைகள் அனைவரும் அரிய செய்வீர்
 
332. பிரதோஷ காலத்திலே விதிப்படி மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்யிற் பயன் என்னை?

கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருத்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும்; முத்தி சித்திக்
 
389. பிரதோஷ விரதமாவது யாது?

சுக்கிலபக்ஷங் கிருஷ்ணபக்ஷம் என்னும் இரண்டுபக்ஷத்தும் வருகின்ற திரியோதசி திதியிலே, சூரியாஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் பின் மூன்றே முக்கால் நாழிகையுமாய் உள்ள காலமாகிய பிரதோஷ காலத்திலே, சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இவ்விரதம் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, வைகாசி என்னும் நான்கு மாசங்களுள் ஒன்றிலே, சனிப் பிரதோஷம் முதலாகத் தொடங்கி, அநுட்டித்தல் வேண்டும். பகலிலே போசனஞ் செய்யாது, சூரியன் அஸ்தமிக்க நான்கு நாழிகை உண்டு என்னும் அளவிலே ஸ்தானஞ் செய்து, சிவபூசை பண்ணித் திருக்கோயிலிற் சென்று சிவதரிசனஞ் செய்து கொண்டு, பிரதோஷ காலங் கழிந்தபின் சிவனடியாரோடு போசனம் பண்ணல் வேண்டும். பிரதோஷ காலத்திலே போசனம், சயனம், ஸ்நானம், விஷ்ணு தரிசனம், எண்ணெய் தேய்த்தல், வாகன மேறல், மந்திர செபம், நூல் படித்தல் என்னும் இவ்வெட்டுஞ் செய்யலாகாது. பிரதோஷ காலத்திலே நியமமாக மெய்யன்போடு சிவதரிசனஞ் செய்து கொண்டுவரின், கடன், வறுமை, நோய், பயம், கிலேசம், அவமிருந்து, மரணவேதனை, பாவம் என்னும் இவைகளெல்லாம் நீங்கும். அஸ்தமனத்துக்கு முன் மூன்றே முக்கால் நாழிகையே சிவதரிசனத்துக்கு உத்தம காலம். (அவமிருந்து = அகாலமரணம்)

tn%20top.jpg
 
பிரதோஷத்தின் மகிமை

நித்ய பிரதோஷம், மாத பிரதோஷம், மகா பிரதோஷம் என்று பிரதோஷத்தில் பல வகைகள் உண்டு. சிவ பெருமானை பூஜிப்பதற்க்கு உகந்த காலமாக பிரதோஷம் ஒல்லப்படுகிறது. இந்த காலத்தில் சிவனை வணங்குபவன் உயர்ந்த பதவியை அடைகிறான். விபூதி தரித்து. ருத்திராட்சம் அணிந்து வருபவன் சிவ சொரூபம் ஆகிறான். மற்றவர்களால் வணங்கத்தக்கவனாக மாறுகிறன். மேலும் பிரதோஷ வேளையில் சோமசூத்த வலம் வருவதும், வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்து வணங்குவதும் சிறப்புகள் பல தரும்.

மரண பயத்தை போகுதல், இழந்த செல்வங்களை மீண்டும் அடைதல், உயர்ந்த பதவியைத் தருவதும் இந்த பிரதோஷ தினமே. சிவ என்பதற்க்கு செல்வம் என்று அர்த்தம். இதனால் சிவ ஆலங்களில் விபூதியை பிரசாதமாக பெறும் போது, சிவ்ன் அருளையும், வையகத்தில் வாழ தேவையான் செல்வத்தையும் ஒருங்கே பெற முடிவதாக ஐதீகம்.

பொதுவாக அனைத்து சிவ ஆலய்ங்களிலும் பிரதோஷ தினத்தில் வழிபாடு மேற்கொள்ளலாம். ஆனால் சுருட்டப்பள்ளி தலம் பிரதோஷ வழிபாட்டுக்கு சிறந்த தலமாக கருதப்படுகிறது. சிவபக்தர்கள் விபுதி அணிதல், ருத்திராட்சம் அணிதல், சிவ நாமத்தை தினமும் உச்சரித்தல் வில்வத்தால் சிவபெருமானை வழிபடுதல், எப்பொதும் சிவ்த்யானம் போன்ற ஐந்து விதமான செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
 
பிரதோஷ காலத்தில் இறைவனை வணங்க வேண்டிய விதி முறைகளையும் விரத மகிமைகளையும் தந்த இருவருக்கும் நன்றி. வாழ்க, வளர்க* உங்கள் பணி.
 
இன்று 10-12-2008 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
 
இன்று 17-1-2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
 
இன்று 31.3.2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்

Shiva-Ganeshji.jpg
 
இன்று 28.7.2011 பிரதோஷ தினமாகும். அனைவரும் சிவாலயம் சென்று தரிசனம் செய்து பயன் பெறுங்கள்
 
Back
Top