கோலிவுட்.கிசுகிசு-1-1-2013

tnkesaven

New member
1; சர்மி நடிகையும், அங்காடி நடிகையையும் தற்போது நிறைய படங்களில் ஒத்தப்பாடலுக்கு ஆட கூப்பிடறாங்களாம். நடிகர் யார்? இயக்குனர் யார்? தயாரிப்பாளர் யாருன்னு விவரங்களை கேட்கும் நடிகைகள் அப்படியே தாங்கள் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கான சம்பளத்தையும் பெரிய எண்ணிக்கையில் கேட்கிறார்களாம்.

அவர்கள் கேட்கும் சம்பளம் முழு படத்துக்கும் கேட்பதுபோல் இருக்கிறது என தயாரிப்பாளர்கள் கதற, முழு படத்துக்கு எங்க சம்பளமே வேற, இந்த சம்பளம் ஒரு பாட்டுக்குத்தான் என நடிகைகள் கூற, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஒட்டுமொத்தமாக வெளியே ஓட்டமெடுக்கிறார்களாம்.

---------------------------------------------------------------------------------------
2; பொன்வசந்த நாயகி மேடையிலேயே தான் காதலிப்பதாகவும், தனக்கு காதலர் ஒருவர் இருப்பதாகவும் மனம் விட்டு சொல்லிவிட்டார். இருப்பினும் பலருக்கும் அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால், இவருக்கு உண்மையிலேயே காதலர் ஒருவர் இருக்கிறாராம். அவர் சினிமாவுக்கு சம்பந்தமில்லாதவராம். இவர் சினிமாவுக்குள் வந்தபிறகுதான் அவரை சந்தித்தாராம். இப்பொழுதும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்கின்றனராம். ஆனால், சினிமா வட்டாரங்களுக்குள் தன் காதலரை அனுமதிப்பதில்லையாம்.

இந்த காதல் விவகாரம் நாயகியின் பெற்றோருக்கும் தெரியுமாம். அவர்களும் தங்களது மகளின் காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகின்றனராம்.

-----------------------------------------------------------------------------------------------
3; சொந்த செலவில் தயாரித்து, படத்தை வெளியிட தியேட்டர் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கும் அலிகான் வில்லன் நடிகருக்கு தற்போது ஒரு ஐடியா கிடைத்துள்ளதாம். டி.டி.எச். என்ற ஒரு புதிய முறையை தமிழ் சினிமாவில் புகுத்தியிருக்கும் உலக நாயகன் பாணியை கடைப்பிடிக்க உள்ளாராம். இந்த தாதா திரைப்படத்தை டி.டி.எச்.சில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளாராம். தனக்கு தியேட்டர்கள் கொடுக்காத திரையரங்கு உரிமையாளர்களை பழிவாங்கவே இதை செய்ய முடிவெடுத்துள்ளாராம். இருப்பினும், தியேட்டர் உரிமையாளர்கள் இவரது பேச்சை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

--------------------------------------------------------------------------------------------

4; இரண்டெழுத்து தாமிரபரணி நடிகை கோலிவுட்டுக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் தற்போது நடித்துள்ள மூணு பேரு முணு லவ்வு படத்தில் இவருடைய கதாபாத்திரம் குடும்பப் பாங்காக இருந்தாலும், இனிவரும் படங்களில் இதுபோல் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம். ஏற்கெனவே நடித்த படங்களில் அப்படி நடித்ததால்தான் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. எனவே, தனது இரண்டாவது என்ட்ரியில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாராம். ரசிகர்களுக்கு விரைவில் ஒரு கவர்ச்சி விருந்து ரெடியாக இருக்கிறது எனக் கூறலாம்

---------------------------------------------------------------------------------------
5; முன்னணி மாஸ் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் இயக்குனர்கள் அணுகும் இரண்டாம் தட்டு நடிகர்களின் பட்டியலில் முகமூடி நடிகரும் ஒருவர். இவருடைய நடிப்பில் கேமராமேன் இயக்குனர் எடுத்த படம் வெற்றியடைந்ததையடுத்து இவரது கால்ஷீட்டை புக் செய்ய இயக்குனர்கள் ஆளாய் பறந்தனர்.

எனவே, சுதாரித்துக்கொண்ட நடிகர் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தினாராம். ஆனால், அவருடைய அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்துள்ளதால் இயக்குனர்கள் இவரை தேடி வர தயங்குகிறார்களாம். எனவே, இவர் அடுத்தடுத்து நடிக்கும் படத்தில் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

------------------------------------------------------------------------------------
6யாரிடமும் ‘சரண்’ அடையாமல், ஒதுங்கியே இருந்து வந்த அந்த ‘குதிரை’ பட நாயகியின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றம். கதாநாயகர்கள் மற்றும் டைரக்டர்களை தேடிப்போய் பேசுகிறார். வாயை திறந்து, ‘சான்ஸ்’ கேட்கிறார்.

இந்த மாற்றத்தினால் அவருக்கு கைமேல் பலன் கிடைத்து இருக்கிறது. இரண்டு தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்து இருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------
7; தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்ன நடிகை கடைசியாக ‘3’ நடிகருடன் ஆட்டம் போட்டதோடு சரி, தமிழில் அறவே வாய்ப்பில்லாமல் போய்விட்டார். தெலுங்கு பக்கம் ஓடி அங்கேயாவது தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என எண்ணிய நடிகைக்கு, அதுவும் கைகொடுக்காமல் போகவே, என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து வந்தார்.

இந்நிலையில், யோகம் அடித்ததுபோல தல நடிகரின் அடுத்த படத்தில் நடிப்பதற்காக நடிகையை ஒப்பந்தம் செய்தனர். வாய்ப்புக் கிடைக்கும்போதே கல்லா கட்டிவிடவேண்டும் என்று எண்ணிய நடிகை, அப்படத்தில் நடிப்பதற்காக ஒண்ணரை கோடி ரூபாய் சம்பளமாய் கேட்டாராம். இந்த சம்பளத்தை இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Back
Top