பூவுக்கும் எனக்கும் உண்டான உறவு கொடியறுந்திடா துளிருக்கும் செடிக்கும் உண்டான உறவு.
உணர்வுகளைக் கவிதையில் காட்டமுடியும் என்பதை உணர்த்தியவர்.. எனக்கு ஒருவகையில் இவர் துரோணர் ஆவார்.. ஏகலைவனாக நான்.
ஓவியாவுக்கு அடுத்து யாரிடம் அதிகம் பேசியிருப்பேன் என்றால் அது பூ அண்ணாவோடுதான். அவர் பதிவுகளால் மீண்டெழுந்த சமயத்தில் புதியவனாக நானிருக்க, பகிர்ந்துகொண்டோம் எண்ணங்களை..
ஃபீனிக்ஸ் பறவை பற்றி கேள்விப்பட்டதோடு சரி.. அதன் குரல் கேட்டது பூ வழியாகத்தான்.. புதுச்சேரியில் பாரதி இருந்ததால்தான் என்னவோ அவனது மிச்சத்தைத் தொடர்ந்தெழுதுகிறாரோ பூ என்று எண்ணவைக்கும் கவிதைகள் இவருடையது....
மிகச்சிறந்த உணர்வாழ்ந்த கவிதைகள் சொரியும் கவிஞர். கனமிகுந்த கதை படைக்கும் கதாசிரியர். நகைச்சுவை தெறிக்கும் நகைச்சுவைகளும் இந்தக் கவிஞர் எழுதுவார் என்பது ஆச்சரியப்படும் விசயம்..
எல்லா வகையிலும் மேன்மை பெற்றிருக்கும் பூவின் தரிசனம் என்றேனும் ஒருமுறை வாய்க்க, எனக்கு ஆசைதான்...