நாரதர்
புராணகாலத்து நாரதைப் போன்ற கலகப்பிரியர்.. இளசு அண்ணா ஒருமுறை இவரை மன்றத்து ரிப்போர்டர் என்று பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பெரும்பாலும் நான் வருவதற்கு முன்னமே இருந்தே நாரதர் பதிவுகள் இட்டிருப்பதால் பதிவுகளால் அவரை என்னால் அறியாவிட்டாலும்,
ஒருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு சிக்கியது. இனிமையான பேச்சு, தலை'யைப் போன்ற உருவம், சொக்க வைக்கும் பழக்கம், நகைச்சுவை ததும்பும் துள்ளல் பேச்சு என பழக்கத்தில் சமவயதிற்குச் சுருங்குபவர்.
நிழலுக்கு உயிர் எனும் திரியில் கவிதை எழுதத் தெரியாதவர்களையும் எழுத வைத்து, இன்றுவரையிலும் அத்திரியைக் கட்டிக் காத்து வரும் நடிகர் திலகத்தின் ரசிகரான இவரை மீண்டும் ஒருமுறை சந்திக்க நேரிட்டால் ஆற அமர்ந்து பேசும் பாக்கியவானாவேன்..