கவிதா அக்கா காரணப்பெயராக விளங்குகிறவர். கவிதையில் மிகச்சிறந்த இடத்தை பெற்றிருக்கிறார்.
கவிதா அவர்களை சந்தித்தபோது எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. அவ்வளவாக அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை.. அது மெல்ல நட்பாக படர்ந்து சகோதரத்துவமாய் கனிந்து கற்பித்தலாய் கலந்தது. ஆரோக்கியமான தர்க்கம், தன்னடக்கம் மிகுந்த பேச்சுக்கள், சுயமரியாதை இழக்காத விவாதங்கள், தமிழ் அமுது ஊற்றெடுக்கும் பதிவுகள் என, அவரைச் சுற்றி ஒரு அளக்கமுடியாத ஆரமுள்ள வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆழப்புதைந்திருக்கும் அர்த்தமும் கனமும் நிறைந்த கவிதைகள் சிலவற்றைக் கண்டு மேலும் படிக்கத் தூண்டுகிறார். கவிதைகளை அலசி ஆராய்ந்து ஒரு கவிஞனுக்கான அடுத்த படியென்ன என்று வழிகாட்டுகிறார்.
நட்பு இவருக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். அவரது கையெழுத்து பேசுகிறது. மறுமுறை காண நேரிட்டால் இன்னும் பேசவேண்டும் என்கிறது மனம்.