aren
Reaction score
0

Profile posts Latest activity Postings About

  • எப்படி மதிப்பிட முடியும் இவரை?

    ஒரு கவிஞராகவா?, நல்ல அனுபவசாலியாகவா, முதிர்ந்த எண்ணமுடைய இல்லத்துறவியாகவா? ரசனை மிகுந்த நகைச்சுவையாளராகவா? தொழில்துறைகளில் இண்டு இடுக்கிலும் அறிவை வளர்த்தவராகவா? எப்படி மதிப்பிட முடியும்?

    ஒருசிலரால் மட்டுமே குழந்தையாகவும் பெரியவராகவும் மாறி மாறி இருக்கமுடியும்.. அது இவருக்கு இருக்கிறது.. இருப்பது சிங்கையில் என்றாலும் தமிழுக்கு இவரது முன்னோர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. பண்பு, பணிவு, அமைதி, உதவி, முன்னேற்றம், நட்பு, மரியாதை என்று பல தட்டுக்களில் நின்று தன்னை உயர்த்திக் கொண்டவர்... இவையெல்லாவற்றையும் விட, அவரது எளிமை!!!!!

    எப்படி இவர் உடனடி கவிஞராக மாறினார் என்பது எனக்கு இன்றும் விளங்காத புதிர்.. ஒரு சில கவிதைகளில் அவர் தெளித்திருக்கும் வாழ்வியல் அனுபவங்கள்... உலகம் எத்தனை நாட்கள் சுற்றினாலும் மாறாதவை.... ஆரென் அண்ணா!!!! க்ரேட் அண்ணா!!!
    அமைதியின் வடிவம்.. எதையும் ஆழ்ந்து யோசித்து பேசுபவர்.நான் பெரிதும் மதிக்கக்கூடிய உறவுகளில் இவரும் ஒருவர்..
    எளிமை இவரின் எழுத்தில் மட்டுமல்ல, வாழ்விலும் உண்டு. மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் பண்பு என்னை வியக்க வைக்கிறது.! பணிவிற்கும், பண்பிற்கும் சிறந்த எடுத்துக்காட்டு "ஆரென்"றால் நான் இவரைச்சொல்வேன்.!
    அமைதியின் உறைவிடம்...

    நான் மன்றத்தில் அறிமுகமாகி முதலில் சந்தித்த மன்ற உறவு..!!
    என் வாழ்வின் முக்கிய நேரத்தில் என்னோடு இணைந்திருந்த அன்பு உறவு..!!

    என்றென்றும் என் மரியாதைக்குரிய அன்பு அண்ணா, ஆரென் அண்ணா..!!
    சிறியோரையும் மதிக்கும் நற்பண்பு கொண்டவர். சிக்கலான விடயங்களை எளிமையாகத் தீர்க்கும் வித்தை அறிந்தவர்; அறிவிப்பவர். யதார்த்தங்களை ஜனரஞ்சகப் படைப்புகளாக படைக்கத் தெரிந்தவர். எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்பதில் அதிக நாட்டம் மிக்கவர்.
    இடையிடை கதை கவிதைகளால் அசத்துபவர். நேரில் பார்க்க கிடைத்த உறவுகளில் ஒருவர்.... உயிரோட்டமான நகைச்சுவை பதிவுகளில் மட்டுமல்ல.. நேரிலும்....
    பண்பிலும் அன்பிலும் சிறந்த சகோதரர்.
    இனிமையான நல்லவர். நகைச்சுவை ததும்பும் நற்கவிஞர். எளிமையும் இனிமையும் இவருக்கே உரித்தான சிறப்பு..!! என் அன்புச் சகோதராக என்றும் இருப்பவர். தங்கள் அன்பு எங்களுக்கு எப்போதும் வேண்டும் அரென் அண்ணா. :)
    என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர். யாவரையும் மதிக்கும், எல்லாருக்கும் நல்லது விழையும் மாணிக்க மனிதர். யதார்த்த கவிஞர். நினைவுப் பதிவுகளால் அனைவரையும் கவர்ந்தவர். உள்ளாடும் நகைச்சுவை உணர்வு இவரின் கூடுதல் சிறப்பு.
    மன்றத்தின் மூத்த சொந்தங்களில் ஒருவர். எக்காலமும் மன்றத்தில் அசத்தும் மாமனிதர்... சிறந்த படைப்பாளி, ஆலோசகர்...
    மன்றத்தின் சொத்து. விளம்பரமில்லா மனிதர். எளிமையும் உதவும் குணமும் நிறைந்தவர். சிறந்த படைப்பாளியை தன்னுள்ளே ஒளித்து வைத்திருக்கும் ராஜன்!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top