அறிஞர்

Profile posts Latest activity Postings About

  • யா என்னால் மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய முடியவில்லை
    எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது காரணம் தெரியவில்லை உதவும் கரங்களை எதிர்பார்க்கிறேன் .
    அன்புடையீர் ebook பகுதியில் இரண்டு கொடுத்துள்ளேன் approve செய்து உதவுங்கள்
    திருவாளர் நிர்வாகி அவர்களுக்கு ,

    வணக்கம் , ஐயா , icash credits என்றால் என்ன ? .
    மிக்க நன்றி
    தங்கள் அன்புள்ள
    ஆத்மா
    எட்டுத்திக்கும் தமிழ் முழங்க அவதாரம் எடுத்து வந்திருக்கும் அறிஞர். தமிழுக்கான தொண்டாற்றும் சிறந்த தலைமைக்கு என் முதல் மரியாதை.

    நட்புக் கரம் நீட்டியுள்ளேன் தயவு செய்து நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள்
    அறிஞர்..

    எனது முதல் மன்ற நண்பர். அவரின் படபட பேச்சு, வசீகரிக்கும் சொல்லாற்றல், மன்றம் கட்டியாளும் ஆளுமை என பல விசயங்கள் என்னில் அவரைக் கவர்ந்துள்ளன. தலைவன் சிறப்பாக இருந்தால் தலைமையும் அதனைச் சுற்றியிருக்கும் கூட்டமும் சிறப்பாக இருக்கமுடியும். ஒரு மிகச்சிறந்த தலைவனாக அறிஞரை உணர்கிறேன். புதியவர்களை இழுத்து, பழையவர்களை அன்புடன் உபசரித்து, வெகுநாட்கள் கழித்து வந்தால் உறவினர் போல் நடத்தி, இந்த மன்றத்தின் அனைத்து நட்புகளுக்கும் காரணமாக ஒரு உறவின் பாலமாக விளங்குகிறார் அறிஞர்..

    இருமுறை நேரில் கண்டு பேசிய நான் பாக்கியசாலி!! மறுமுறையும் காணநேரிட்டால் அது முதல் முறை கண்டது போலத்தான் இருக்கும்...
    மன்ற சொந்தங்களில் நான் சந்தித்த
    முதல் சொந்தம் , கல்வியிலும் ,அறிவிலும், பன்பிலும்
    உயர்ந்த மனிதர், உயரத்திலும் கூட,
    தம்பி அறிஞர்.

    மனோ.ஜி
    அன்பிற்கினிய நண்பர்.
    மன்றத்தில் ஆரம்பகாலத்திலிருந்து இவரோடு நட்பு தொடர்கிறது.........

    நிர்வாக விடயங்களில் நான் கொஞ்சம் விஷமம் செய்தாலும் கனிவோடு அதை கையாண்டு சுலபமாக பிரச்சனைகளை தீர்க்கும் ஒரு நல்ல தலைவர்

    அன்றும் இன்றும் என்றும் இவர் நட்பு தொடர வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
    ஆறிஞர், நல்ல வழிநடத்துனர்... சிறந்த தலைவர் இவை அனைத்திற்க்கும் மேலாக நல்ல நண்பர்.
    மன்ற குடும்பத்தின் மகத்தான தலைவர். கண்டிப்பும் இத்தனை கண்ணியமாக இருக்குமா என ஐயம் கொள்ளவைக்கும் வகையில் அன்பான கண்டிப்பும், ஆதரவான தோளனைப்பும் இவரின் சிறப்பம்சம். சிறந்த அறிவியலார். மன்றத்தின் மாபெரும் சொத்து. எனக்கும் நன்பர் என்ற பெருமிதத்தை ஏற்படுத்தியவர்.
    பெயருக்கு பொருத்தமானவர். மன்றத்தின் நிர்வாக ஒழுங்கு, அமைதிக்கு காரணமானவர். மன்ற மக்களிடையே பாகுபாடு காட்டாத பரந்த மனதுடையவர். படைப்பாளிச்சிங்கங்கள் எல்லை தாண்டும் பொழுது அதிகார சாட்டை கொண்டு அடக்கும் அருமையான நண்பர்.
    இனியவர். பொறுப்புணர்ச்சி மிக்கவர். நல்ல நடத்துனர். கர்வமில்லா பெருந்தகை!
    என் இனிய நண்பர்.....பொறுமையின் சிகரம்.....பழகுவதற்கு சிறந்தவர்....நல்ல ஒரு பொறுப்பாளர்......இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்....!!!!
    மொழிப்பற்றால் மன்றம் கண்ட மாமனிதர். எங்க ஊர் செல்வ மகன். பொறுப்பான ஆளுமையின் திறம் மன்றத்தை வழிநடத்தும் பாங்கில் அனைவரும் அறிந்தது. மொழிவளர்க்க பாடுபடுவதற்கு தனித் தியாக உள்ளம் வேண்டும். அறிஞர். மெய்யாலுமே அறிஞர்தான். வாழ்க வளர்க
    மிகச் சிறந்த தலைமை நிர்வாகி! அன்பு! அன்பு! அன்பு! இதுவே இவரின் பலம்.. அன்பு சகலத்தையும் தாங்கும்! என்ற பைபிளின் வைர வரிகளை மனதில் எழுதிக்கொண்டவர். எனக்கு பிடித்த மனிதர்.
    மிகவும் திறமை வாய்ந்த அன்பு நிர்வாகி. இல்லை அன்பு அண்ணன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top