Profile posts Latest activity Postings About

  • பாரதி..
    முண்டாசு பாரதிக்கு ரெளத்திரம்
    மன்றத்து பாரதிக்கு இலக்கியத்தரம்

    கவியரசு வைரமுத்துவின் முகச்சாயல்... அவரது எழுத்துக்களைப் போன்றே மண்வாசனை தெறிக்கும் அனுபவக் கதைகள்.. அந்த மண்ணுக்குள் நம்மை நுழைத்து கணிணி வழி வாசம் தெளிக்கும் அவரது கதைகள்.

    பின்னூட்டங்களைக் கூட அவ்வளவாக வீண்படுத்தமாட்டார், சேதப்படுத்த மாட்டார். ஒருவரது புற அடையாளங்கள் எளிமையாக இருப்பதைக் காட்டிலும் அகம் புறம் இரண்டுமே எளிமையாக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டவர் யார் என்று கேட்டால் பாரதியண்ணாவை மட்டுமே சொல்லுவேன். இவரோடு பேசும்பொழுது ஒவ்வொரு வார்த்தைகளையும் கவனித்து ஆராய்ந்து பேசாவிடில் அந்த வார்த்தைகளை அப்படியே மடித்து நம்மிடம் கலாய்ப்பார்...

    அவர் இதழாசிரியராக இருந்த போது, வடிவமைப்பாளராக இருந்த எனக்குப் பலவகையிலும் சுதந்திரம் அளித்தார்... அவரது தலைமை மிகச்சிறப்பாக இருந்தது. தாமரை அண்ணா இங்கே குறிப்பிட்டிருப்பது போல, வேலை வாங்கும் உத்தியை நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்.

    ஒரு விசயத்தைப் பற்றி ஆராய்ந்தால் முழுமையாக தெரியும் வரைக்கும் ஓயமாட்டார்.. அதை நான் கவனித்துள்ளேன். இந்தமுறை இந்தியா வந்தபோது பலமுறை என்னைத் தொடர்பு கொண்டார். பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துகொண்டோம்...

    பாரதி - முண்டாசு கவிஞனைப் போன்றே இவரையும் மதிக்கிறேன்.
    தமிழ் மன்றத்தின் மூலம்
    கிடைத்த உறவுகளில் இவரும் ஒருவர்
    தமிழகம் செல்லும் பொழுது
    சந்திக்க வேண்டிய ஒருவர்

    மனோ.ஜி
    இனிய நண்பர்..
    நிதானம் நேர்த்தி மறுபெயர் பாரதி!
    வேலை வாங்கும் உத்திகளை பாரதியிடம் கற்கலாம். அவ்வளவு நாசூக்காய் எடுத்துக் கொண்ட பொறுப்பினை குழுக்கள் மூலம் நிறைவேற்றும் வித்தைகள் அறிந்தவர். எழுத்துக்களில் கம்பீரம் உண்டு. கம்பு இல்லா ஈரமும் வீரமும் கூட உண்டு.
    என்னுடைய உடன் பிறவா தம்பி....என் நலத்தில் என்னைவிட....??? அக்கரை செலுத்துபவர்.....சிறந்த குணங்கள் பல கொண்டவர்.....
    இவர் முகத்தில் கோபத்திற்கு மட்டும் இடமில்லை. கனிவான மனிதர். பணிவான குணம்! எவரோடும் இயல்பாய் சிநேகம் கொள்ளும் குணம்! எனக்கு பாரதியை மிகவும் பிடிக்கும்!
    நான் சந்தித்த மூத்தவர்களில் ஒருவர். பழகுவதற்கு மிக மிக இலகுவானவரும் இனிமையானவரும் எளியவரும்... அண்ணா என்று மன்றத்தில் கிடைத்த சில சொந்தங்களில் ஒருவர்.. வேறு சொல்ல தெரியல....
    முகம் காணாது குரல் கேட்காது வெறும் எழுத்துக்கள் வழியாக ஒருவரின் இதயத்தில் இடம் பெற முடியுமா? முடியும் என்பதற்கு சான்று தான் இவரது எழுத்துக்கள்.

    கடல் போன்ற இதயம் இவருக்கு. அதில் களித்துத் திரியும் சிறு மீனாகும் வரம் கிடைத்தது எனக்கு.

    செய்யும் குறும்புகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு பெரும் திமிங்கலங்கள் இருந்தாலும் நேரம் ஒதுக்கி இந்தச் சிறுமீனோடும் விளையாடும் அலைக் கரங்களைக் கொண்டக் கடல் இது.

    கனிவு, கருணை இனிமை இதற்கு மன்ற அகராதியில் பாரதி என்று பெயர்.

    பாசத்தோடு நான் அண்ணா என்றழைக்கும் உரிமையைக் கொடுத்தவர்.
    பலருக்கு இதயம் பேருக்கு மட்டும்.
    இவருக்கு மட்டும் இருக்கு பேரிதயம்.
    மன்ற இதயங்களில் இவரும் ஒருவர்.
    எந்தன் இதயத்தில் பாசமிகு அண்ணன்.
    பல இதயங்களை கொள்ளை கொண்ட அன்பு நண்பர் பாரதி..

    மன்ற வளர்ச்சிக்கு பாரதியின் பங்கு அளவிட முடியாதவை..

    தொலைபேசியில் நான் அதிக நேரம் பேசிய நபர் இவராகத்தான் இருக்க முடியும்..

    என் இனிய நண்பர்.. அனைவரின் அன்பர்..
    மன்றத்தில் நான் வேர்விட நல்ல நிலமாக இருந்தவர் பாரதி அண்ணா என்பது சாலத்தகும். மென்மையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர். மற்றொருவர் தவறான கருத்து சொல்கிறார் என அறிந்தும் அமைதியுடன் அதை ஏற்றுக்கொள்ளும் பொறுமைக்கு இவரை விஞ்ச ஆள் இல்லை. இதயத்தோடு ஒட்டி உறவாடத்தெரிந்த எழுத்தாளர். பண்பான எங்கள் பாரதி அண்ணாவின் நட்பு என் வரம்.
    இந்தத் தம்பி இருக்கும்வரை
    எனக்கு இல்லை ஒரு குறை!

    வயதில் மட்டுமே நான் அண்ணன்.
    இவனிடம் நான் கற்பதால் இவனும் ஓர் அண்ணன்..

    அந்த பாரதிக்கு எங்கிருந்தோ வந்தான் கண்ணன்
    இந்த பாரதிக்கு மன்றம் ஈந்தது இந்த அண்ணன்!

    அண்ணா இதயம் இரவல் கேட்டார் கலைஞர்..
    இவனின் பேரிதயம் போல் எனக்கும் கேட்டேன் இறையை..


    நெஞ்சு நிறைக்கும் என் அன்புத்தம்பிக்கு
    பொங்கி வரும் என் அன்பே பேசுமொழி!
    பாரதி அண்ணா.. மன்றத்தில் மூத்தவர். பழகுவதற்கு இனிமையானவர்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top