பூமகள்

Profile posts Latest activity Postings About

  • பூமகள்... வணக்கம். நான் லெனின். நீங்கள் நலமா? நமது பழைய நண்பர்கள் எங்கே? இளசு, அறிஙர், ஓவியா, ஷீ நிஷி, அக்னி எல்லோரும் தமிழ் மன்றம் வருவது இல்லையா?
    இவரின் பாசகூடத்தில் என்னை தாமதமாக சேர்த்துகொண்டாலும், இனி உங்கள் சகோதரர்களில் நானும் ஒருவன் என்ற மகிழ்சியில்...
    வார்த்தைகள் இல்லை என் உடன்பிறவாத தங்கை பற்றி சொல்ல.எல்லா வளங்களும் பெற்று என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகளும் என்றும் பிராத்தனைகளுடன்
    இவரின் பாசகூடத்தில் என்னை தாமதமாக சேர்த்துகொண்டாலும், இனி உங்கள் சகோதரர்களில் நானும் ஒருவன் என்ற மகிழ்சியில்...
    எனக்கும் ஒரு சகோதரி உண்டென என்னை உணர வைத்தவர்...!!
    என் உடன்பிறவா தங்கை. பாசப் பொன்சித்திரம். இயல்பாய் இந்த இளம் வயதில் இல்லாமலிருக்கும் எல்லாமும் இருப்பவர். சமூக அக்கறை, உயிர்களிடத்திலான பரிவு, மென்மையான உள்ளம் அனைத்தும் ஒருங்கே பெற்ற தங்க மங்கை. நினைத்தவுடன் அற்புத கவி புனையும் ஆற்றல் கொண்ட கவிமகள் இந்த பூமகள்.
    மன்றத்தின் வேகப்புயல்..! மன்றத்தில் அதிக மனங்களை
    தன் புதுமை படைப்புகளால் கொள்ளை கொண்டவர்..!
    பின்னூட்டம்கொடுப்பதிலும் மன்றத்தில்
    அனைத்து பகுதிகளிலும் புகுந்து விளையாடுவதிலும்
    குறும்பு செய்வதிலும்...! நகைச்சுவையிலும் கெட்டிக்காரர்
    என்றும் எனது நல்ல நண்பி..! தங்கை... அக்கா..
    (எதுவோ..?)
    மன்றத்தில் எனக்கு கிடைத்த இனிய தங்கை.! பெயருக்கேற்றார் போல் குணத்தால் மென்மை, பணிவு, பாசம்..!! ஆழ்ந்து பேசினால் அறிவை கொண்டு ஆளை சாய்த்துவிடும் புத்திசாலி. பகுத்தறிவு பேசும் பாரதி கண்ட புதுமை பெண்.!!
    மன்றில் நான் வியக்கும் மற்றுமொரு படைப்பாளி. கதையாயினும் கவிதையாயினும் நகைச்சுவையாயினும் தனக்கென தனிப்பாணி வகுத்து வாழ்பவர். படங்களை வைத்துக் கொண்டு இவர் உருவாக்கும் நகைச்சுவைகளுக்கு இரசிகன் நான்.
    மென்மையான மனது. இருமுகம் கொண்ட எழுத்துக்கள் இவருக்குச் சொந்தமானவை. உணர்வுகளை வார்த்தைகளாக்கும் எழுதுகோல் கொண்டவர்.
    எதையும் பிரிச்சு மேயும் எழுத்தாளர். ஆமா இவ்ளோ நாளா எப்படி பூக்களுக்கு நடுவில உக்காந்துகிட்டு இருக்குறது கஷ்டமா தோணல.
    மன்றம் வந்த நாளி்லிருந்து என் உள்ளம் கொள்ளை கொண்ட என் அன்பு மகள்.

    பூ உச்சரிக்கும் போதே மென்மை தொற்றிக் கொள்கிறதே. பூவால் இந்த நாறும் மணம் கொண்டது. எழுத்தின், கவிதையின் தீவிரம் பாரதியின் புதுமைப் பெண் இவரைக் கொண்டுதான் புனையப்பட்டதோ என்று சிந்திக்க வைக்கும். அதீத இங்கிதமும், நாகரீகமும் இவ் அன்புக் குழந்தையின் அசையாச் சொத்து. வாழ்க பல்லாண்டு.
    நல்ல படைப்பாளி.. மனிதாபிமானி.. பாசக்காரி.. தீயவைகளுக்கு மோசக்காரி.
    அன்பும் பண்பும், அறிவும் அழகும், குழந்தைதனம் மாறாத மனமும், குற்றங்களை சமரசமின்றி சாடும் குணமும் தன்னகத்தே கொண்ட மன்றத்தில் செல்லமகள்..எங்கள் பூமகள்..!!
    பூ மகள், நீ பா மகள். பல நேரம் தட்டியும், சில நேரம் குட்டியும் வாழ்த்தும் உன் நேர்மை எனக்கு பிடித்தது.

    வாழ்த்துக்கள் தங்காய்.
    பூமகள்! உடன் பிறக்காத தங்கை! பாசத்திலும் பா திறனிலும் தங்கைக்கு நிகர் தங்கையே தான். சிறுவயதிலேயே தெளிந்த சிந்தனையும் மனித நேயமும், பாதகங்களைக் கண்டால் பயங்கொள்ளாமல் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் பெற்ற பாசமிகு பாமகள்!
    என்றுமே என் செல்லத்தங்கை!
    தமிழும் பாசமும் சரிபாதி கலந்த தங்கத் தங்கை!
    எல்லா வளமும் முழுமையாய் பெற அண்ணனின் ஆசிகள்! வாழ்த்துகள்!!
    அன்பான தோழி.. மன்றத்தில் பலருக்கு செல்ல சகோதரி... கவிதைகளில் இன்னும் புதுமை படைக்க வாழ்த்துக்கள்
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top