சுகந்தப்ரீதன்

Profile posts Latest activity Postings About

  • ரொம்ப பாசக்கார பயபுள்ளடா இவன்... என்று வியக்கவைக்கும் அளவுக்கு பாசத்தைக் கொட்டுபவர். வாயக்குடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ளக்கூடாது என்று என்னை பலமுறை யோசிக்க வைத்தவர், வல்லவர், நல்லவர், இனியவர்.. இப்படி தமிழில் இருக்கும் பல நல்ல வாக்கியங்களை தனது குணத்தில் கொண்டவர்..
    நன்றி அண்ணா ! நெஞ்சம் நெகிழ்கிறேன்...
    அன்பு தம்பி சுபீ.
    எழுத்துக்களில், கருத்துகளில் தனி ஆளுமை...
    மன்றத்திலும், தமிழ் எழுத்து உலகிலும் இவருக்கு தனி இடம் உண்டு.
    சுபீ என்று செல்லமாக அழைக்கப்படும் சுகந்தப்ரீதன்.

    மிகச்சிறந்த பதிவாளர்களுல் ஒருவர். நல்ல கவிதாரசனை மிக்க எழுத்தாளர். தேர்ந்த எழுத்தாளர்களைப் போன்ற ஒவ்வொரு பதிவுகளும் தேனமுது.

    மெல்ல மெல்ல தூறும் சாரலைப் போன்ற பதிவுகள் இவருடையது. பெரும் காட்டாற்று வெள்ளமாகக் கொட்டி தீர்த்துவிடவோ, வரண்டு பிளந்து போய் சக்கைகளாக பதிவிடுவதோ இவருக்கு கைவருவதில்லை. ஆதி சொல்வதைப் போல, பெயரைப் போன்றே செயல்களும்.

    மெல்ல ஒவ்வொருவர் மனதிலும் ஊடுறுவி அனைவரின் நண்பராக நிலைத்து நின்றிருக்கிறார்.. சிறந்த எதிர்காலம் இவருக்கு உண்டு என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகமுண்டு.

    வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்.
    தென்றலை போன்ற இனிமையை தன்னில் கொண்டவன்...
    மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது என்ற வாக்கீற்க்கு ஏற்ப..மன்றத்தில் தன் சீரிய அழகிய பதிவுகளால் அனைவரின் புருவங்களை
    உயர்த்த வைக்கும் என்றும் என் அன்பின் நண்பன்...!
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..
    உன் மனத்தின் அழகு ஊடகத்தின் வாயிலாக எனக்கு தெரிகிறதடா..!
    மன்றத்தில் மலர்ந்து சுகந்தம் பரப்பும் சுகமானவன் சுகந்தன்...!
    குறும்பு செய்தும் கும்மாளம் போடும் அருமை தம்பி. வயதுக்கும், வார்த்தைக்கும் தொடர்பில்லா அத்தனை முதிர்ச்சி எழுத்தில்.! அதற்கு பின் இருக்கும் அவரின் முயற்சியும் தெளிவாய் தெரிகிறது. மன்றத்தவரை பாசம் கா(க)ட்டி இழுக்கும் நேச சகோதரர்..!!
    பெயர் மட்டுமல்ல இவன் எழுத்துக்களும் சுகந்தம் பரப்பி ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை.. விளையாட்டனவன் என்றாலும் வீரியமிக்க சிந்தனைகளையும் உள்ளடக்கி வைத்திருப்பவன்..
    வழிந்தோடும் குறும்பு. அளவிலா அன்பு. அருவிபோன்ற தமிழ் நடை. மன்றத்துக் கண்மணிகளில் என் மனம் கவர்ந்த அன்புச் செல்வன் சுகந்தன். என் ப்ரீதன்.
    '+' எல்லோரிடமும் மிக இயல்பாய் பழகும் தன்மை கொண்டவர்
    '-' அப்படி ஒன்று எனக்கு தெரியவில்லை!
    என்றும் கோபப்படாமல் அனைவரையும் மகிழ வைக்கும் அன்பு அண்ணன் சுபி..
    அறிவுக்கூர்மை. மொழிச்செம்மை. சிந்தனைவளமை. எதிலும் அப்போதும் கற்கத்துடிப்பவன். அண்ணன் என்பான் என்னை. சிலவற்றில் அண்ணன் என்பேன் இவனை.
    என்றும் என் அன்புத்தம்பி...!!!

    ஒரே சீரான, ஒரே வகையான எண்ணங்களின் அலைவரிசை கொண்டு என்னை வியக்க வைப்பவன்...

    என் இயற் பெயரின் சில வரிகளை தன் புனை பெயராகக் கொண்ட என் சகோதரன்...
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top