ஓவியன்

Profile posts Latest activity Postings About

  • எங்கள் ஓவியன் ..உண்மையில் மன்றத்தின் ஓவியர் தான்..என்னை பட்டை தீட்டியர் தானே..நன்றி.. __________________
    நண்பரே,

    icash -பரிசளித்த செய்தி கண்டேன். மிக்க நன்றி.

    எதைப் பாராட்டி அளித்தீர்கள் என்று அறிய ஆவல்.

    உங்கள் அன்பிற்கு மீண்டும் நன்றி.
    உங்கள் icash பரிசுக்கு மிக்க நன்றி நண்பரே...

    அனால் இதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை.. icash credits பற்றி கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்...
    ஓவியன் தமிழ்மன்ற உறவுகளில் ஆழப்பதிந்த ஒரு கலையன்
    ஓவியன் பதிவு இல்லாத பக்கமே இல்லை
    வளர்க ஓவியனின் படைப்புகள்
    நண்பர்களே உங்களன்புக்கு மிக்க நன்றி, இளசு அண்ணா அடிக்கடிக் கூறுவார் சொந்த வாழ்க்கைக்கு முதலிடம் அப்புறம்தான் தமிழ் மன்றமென...
    அந்த வாக்கிலே அசையாத நம்பிக்கை கொண்டவன் நான், அதனால்தான் கொஞ்சம் இடை வெளி, இந்த இடைவெளிகள் வெறும் காற்புள்ளிகள்தான் முற்றுப் புள்ளியல்ல...

    மீண்டும் என் பதிவுகள் வழமைக்கு வரும் நாட்களை நானும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன், நிச்சயமாக அந்தக் காலம் மீள வரும்...
    மளமளவென்று மதகை உடைத்து முன்னேறிய வெள்ளம், வெளிச்சம் பாய்ந்து காலம் தாழ்ந்து கரை காட்டி வடிவது போல வேகமாக எழுதிய ஓவியன், அப்படியே நின்றுவிட்டார். முன்பெல்லாம் எங்கும் ஓவியன் பதிவுகள் விரவிக் கிடக்கும் இப்பொழுதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கிறது...... நட்பே !! நான் ஓவியனும் அல்ல காவியனும் அல்ல நல்ல பார்வையாளன், ரசிகன் எண்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த வகையில் ஆதவனை நான் ஆமோதிக்கிறேன். மனசொத்த, நட்புக்கலந்த மனக்குறையை......... நட்பே வாருங்கள்....... !!! வருவீர்களா ????
    மழையோய்ந்த பின்பொழுதில் கூவும் குயில் போன்றது அவரது ஒவ்வொரு பதிவுகளும்... சமீபத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகி பதிவுகளைக் குறைத்து வருகிறார்... அந்நிலை மாறவேண்டும். ஆதவனின் வார்த்தைகளை ஆமோதிக்கிறேன் வாருங்கள் நபரே வாஞ்சையாய் வார்த்தைகள் சேர்க்கிறேன்.
    ஓவியன்..

    மன்ற ஆரம்பகாலம் முதல் எனக்கு மிகச்சிறந்த நண்பன். மளமளவென்று மதகை உடைத்து முன்னேறிய வெள்ளம், வெளிச்சம் பாய்ந்து காலம் தாழ்ந்து கரை காட்டி வடிவது போல வேகமாக எழுதிய ஓவியன், அப்படியே நின்றுவிட்டார். முன்பெல்லாம் எங்கும் ஓவியன் பதிவுகள் விரவிக் கிடக்கும் இப்பொழுதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் கிடக்கிறது..

    நல்ல ஓவியர்.. கார்ட்டூன்கள் சில மன்றத்தில் பார்த்திருக்கிறேன். அருமையான கற்பனை வளம். நல்ல கவிஞர். கலகலப்பானவர், எல்லாவற்றையும் விட, சிறந்த நண்பர்.

    மழையோய்ந்த பின்பொழுதில் கூவும் குயில் போன்றது அவரது ஒவ்வொரு பதிவுகளும்... சமீபத்தில் திருமணம் செய்து செட்டில் ஆகி பதிவுகளைக் குறைத்து வருகிறார்... அந்நிலை மாறவேண்டும்.
    ஓவியன்....
    உன்னைப்பற்றி புகழ்ந்தால் நான் வேற்று மனிதனாகி விடுவேண்டா.
    எப்போதுமே நன்பணாக இருந்திடவே ஆசைப்படுகிறேன்.
    வேணுமென்றால் சொல்லு, திருந்த ஏதாவது இருந்தால் தனிமடலில் அனுப்பி வைக்கிறேன் :) .
    ---------------------------------

    அன்பு டேய்.
    திட்டுறது என்றால் இப்படியாடா???
    பழசையெல்லாம் மறந்திவிட்டாய் போல....
    பாச ஊற்று...
    மகிழ்ச்சிக் கடல்..

    சகோதரர்களில் முதலாய் அறிமுகமானவர்..
    முதல் வரிசையில் இன்றும் என்றும் இருப்பவர்..

    அழகிய பதிவுகளால் மன்றத்தில் பல் வண்ண ஓவியம் தீட்டுபவர்..

    சிறந்த குணாளர்..
    பக்குவமான பண்பாளர்..

    தங்கை என்னை சீராட்டும் அன்புச் சகோதரர்..

    நல் சிந்தனாவாதி இவர்..
    இனிய இல்லறத்திலும்..
    இணைய மன்றத்திலும்..
    என்றும் மகிழ்வோடிருக்க இறைவனை வேண்டுகிறேன்..!! :)
    ஓவியம் வரைதல் இவர் தனித்திறமை. ஓவியம் போன்ற நட்பை வளர்த்தல் இவர் தொழிலோ என எண்ண வைப்பவர். வலித்துவிடுமோ என்ற யோசனையில் அன்பு வார்த்தைகளால் அடுத்தவர்க்கு ஆறுதல் தருபவர். நட்புறவில் நான் பெருமையாய் நினைப்பவர்களில் ஒருவர். இனியவர். எளிமையானவர். என்றும் என் பாசத்துக்குரியவர்.
    + எதையும் தன்னால் முடிக்க இயலும் என்ற தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்... மிகச் சிறந்த 'ஓவியன்' நன்றாக வரையக்கூடியவர்..

    - கோபம் நிறைய வரும் என்று நினைக்கிறேன் :)
    ஓவியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.
    நல்ல பொறுமைசாலியானவர் ஓவியன் அண்ணா.
    மன்றம் வந்த நாளிலிருந்து இன்றுவரை மாறாத அன்புடன் பாசமழை பொழியும் அன்பு அண்ணன் ஓவியன்..!! மன்றத்தில் தனது பதிவுகளின் மூலம் தனக்கென தனியிடத்தை மற்றவர் மனதில் பிடித்து வைத்து குடியிருப்பவர்...!!

    கண்கள் காணவிரும்பும் நல்லுள்ளங்களில் ஒன்று என் அண்ணன் ஓவியன் அவர்கள்..!!
    யோவ்... உம்மை வாழ்த்தி எல்லாம் எழுத முடியாது. வேண்டும் என்றால் திட்டி எழுதுகிறேன்...

    வாடா............

    போடா.............
    :D :D :D
    முதல் மின்னிதழை மின்னலாய் மின்னச் செய்தவன். நல்ல படைப்பாளர் பண்பாளர் எல்லாவற்றிற்கும் மேலாக நண்பர்.
    சிலசமயம் கோட்டு சித்திரம்.
    சிலசமயம் சிதறல் சித்திரம்.
    சிலசமயம் கிறுக்கல் சித்திரம்.

    சித்திரங்கள் எல்லாமே அழகுதானே.
    சித்தரிப்பான் இவன் என் உளந்தானே.
    ஆஹா..!!

    என்ன நடக்குது இங்கே, அநியாயத்திற்குப் புகழுறீங்களே..!! :)

    _______________________________________________________________________________________


    ஹீ, ஹீ...!!

    இருந்தாலும் வாசிக்க, வாசிக்க ரொம்ப சந்தோசமாக இருக்கு...!! :D

    மிக்க நன்றி இளசு, பாரதி , அறிஞர் அண்ணல் மாரே..!! :)
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top