பரஞ்சோதி

Profile posts Latest activity Postings About

  • பரம்ஸ் என்கின்ற பரஞ்சோதி அண்ணன்.
    நான் மதிக்கும் பலரின் மதிப்புக்கு உரியவர். அந்த வகையிலும் குழந்தை இலக்கியம் தந்த வகையிலும் அறிமுகமாகிப் பரிச்சயமானவர். தொலைபேசிமூலம் குரலாடிய சொந்தங்களில் ஒருவர். தூய்மையான மனது தெளிவான சிந்தனை இனிமையான பழக்கம் போன்ற குணபதி. இவருடனான பழக்கமும் இவருடைய எழுத்துகளுடனான நெருக்கமும் என்றும் இன்பம் பொங்க வைப்பன. மன்றசோலையில் சந்தனப்பூங்காற்றாக நுழைந்து பதிவு பகரந்தங்கள் தூவி எத்தனையோ வசந்த மரங்களை நட்டு வளர்த்து மன்றத்தை மேலும் செழிக்கவைத்தவர் எனதன்பு பரம்சோதி அண்ணா.
    ////மிக்க நன்றி தம்பி.
    எனக்கு தெரியும், நேற்று முதலே நீங்க நான் எப்போ 10,000பதிவுகள் போட போகிறேன் என்று காத்திருந்ததை,
    ஒரு சிறப்பு பதிவு போடவே ஒரு நாள் தள்ளிப் போட்டேன்.
    உங்களை பார்க்கும் போது, என்னுடைய ஆரம்பக்கால தமிழ்மன்ற நடவடிக்கை, உற்சாகம், நட்பைத் தேடி பெறுவது, அடுத்தவர்களை சந்தோசப்படுத்துவது எல்லாம் நினைவுக்கு வருது.
    நீங்களும் தமிழ்மன்றத்தில் மிகச்சிறப்பான பெயரையும், புகழையும் அடைய வாழ்த்துகிறேன்.////

    இந்த மன்றத்தில் மிகச்சிறப்பான இடத்தை அடைவாயென முதலில் வாழ்த்திய அன்பு அண்ணா, மீளவும் மன்றத்தில் கண்டதில் கொள்ளை சந்தோசம்....

    மீளவும் அந்த வசந்த காலப் பருவம் என்னைத் தீண்டும் சந்தோசம் எனக்கு...
    "முதலாக இரு இல்லாவிட்டால் முதலாவதாக இருப்போருடன் இரு"
    என்ன ஒரு வார்த்தை, இந்த தம்பியின் இந்த ப்ரின்ஸ்ப்பல் என்னை மிகவும்
    கவர்ந்தது.

    இவரை தம்பியாகவும் நண்பராகவும் கிடைத்தது என் பாக்கியம்
    பரம்ஸ் நம்ம மன்றத்தின் சொத்து. அவர் தல, பிரதீப், ராகவன், மன்மதன், அறிஞர், கவிதா மற்றும் சிலருடன் ஆகியோருடன் சேர்ந்து அடித்த கூத்து இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது.

    பரம்ஸ் கலாய்ப்பதில் மட்டும் கெட்டிக்காரர் இல்லை, கிரிக்கெட் ஆடுவதிலும்தான்.

    ஒரு சிறந்த மனிதர். அவர் மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

    ஆரென்
    வாங்க பரம்ஸ் அண்ணா
    உங்களை மன்றத்தில் காண்பது மகிழ்ச்சி, நாம் மன்ற விழாவில் மன்றத்தை சிறப்பிப்பது பற்றி பேசினோமே, அதன் முதல் படியாக நீங்கள் திரும்பி வந்ததை நினைக்கிறேன், மகிழ்கிறேன். நம் மன்றத்தை பழைய நிலைக்கு கொண்டு போவோம், வாருங்கள்......
    அன்பு பரம்ஸை மீண்டும் இன்று மன்றத்தில் காண்பது மகிழ்ச்சி..
    எங்கும் அவர் புகழ் சிறக்க வாழ்த்துக்கள்.
    பரம்ஸ், பரஞ்சோதி,

    மிக முக்கிய தூண்களில் ஒருவராக இருந்தவர், இன்று தனிப்பட்ட வேலைப்பளு காரணமாக வருவதில்லை என்றாலும் பரம்ஸ் என்றுமே பரம்ஸ்தான்.. நன்கு லூட்டியடிப்பதிலும் சரி, கீழே சரிந்த குழந்தையை வாரியணைக்கும் அன்னையைப் போல நண்பர்கள் சோர்ந்திருக்கும்போது ஊக்கப்பதிவு தருவதிலும் சரி, பரம்ஸ் என்றுமே பரம்ஸ்தான்.

    வாழ்வில் பல பிரச்சனைகளைத் தாண்டி வெற்றியுடன் வாழ்ந்துவரும் எனக்குத் தெரிந்த சிலருள் இவரும் ஒருவர். சிலரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதே நாமும் நன்கு உழைத்து நல்ல இடத்திற்கு வரமாட்டோமா என்று எண்ணுவோம்... அப்படியொரு வர்லாறு உடையவர்.

    சிறுவர் கதைகள், அனுபவங்கள் என இவரது பல திரிகள் படித்திருக்கிறேன். ஐவரணியில் இவர் அடித்த லூட்டிகள் இன்றும் மறக்க இயலாத ஒன்று...

    பரம்ஸ் அண்ணா!! எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. நீங்கள் எழுதப் போகும் அந்த நாளுக்காக.
    மன்றத்தின் மூத்த சொந்தங்களில் ஒருவர். நல்ல நண்பர். சிறுவர்களுக்கென தமிழ் இணையத்தில் தனி இடம் அமைத்துக் கொண்டிருப்பவர். மன்றத்தில் அவர் பதியும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top