மன்றத்தில் மிகச்சிறந்த கவிதை எழுதச் செய்தவர்கள் பலருண்டு, சிறந்த கதைகள் எழுதவைத்த ஆசான்கள், பதில் பதிவுகள், விமர்சனங்கள், என அத்தனை அம்சங்களையும் கற்றுக் கொடுத்தவர்கள் எத்தனையோ பேருண்டு..
ஆனால்
மன்ற நண்பர்களின் மனதைப் படிக்க வழி செய்த ஒரே மனிதர்,
சுடர் ஓட்டங்கள், ஆ பத்து, ஜமாபந்தி, என்று உள்ளங்களைப் படிக்கும் திரிகளை எழுப்பி, தன்னிடம் இத்தனை இருக்கிறதா என்று அனைவரும் அவரவரை வியக்க வைத்தவர்..
கலக்கல் பக்கங்கள், ரவுசு பக்கங்கள், கிறுக்கு / நறுக்கு கேள்விபதில்கள் என்று மறுபக்கம் சிரிப்புகளை அள்ளித் தெளித்து வலி தாங்கும் நண்பர்களுக்குத் துயர் தீர்க்கும் மருந்தாக விளங்கியவர்..
ஒருமுறை பேசியிருக்கிறேன்.. நேரில் கண்டுவிட ஆசையும் படுகிறேன்.
தெள்ளத்தெளிவான மனமும், குழந்தை போன்ற சிரிப்பும் சிந்தனையும் மிகுந்த உள்ளமும் கொண்ட ராஜா அண்ணா என்றுமே என் பார்வையில் நம்பர் ஒன் தான்..