மன்மதன்

Profile posts Latest activity Postings About

  • நண்பனே!

    உனதுயிர் நண்பனே! நல்லா இருக்கியா?

    நீண்ட நாள் உறவிது
    ஒரே ஒருமுறை நான் பார்த்திருக்கிறேன். ஜாலி மனிதர். கதாநாயகனைப் போன்றதொரு தோற்றம். பலமுறை போனில் பேசியிருக்கிறோம். ரசிக்கவைக்கும்படியாக இருக்கும் அவரது பேச்சுக்கள். தல'யின் உற்ற நண்பர்,

    ஆற்றங்கரை கவிதை மூலமாக நான் அவருக்குள் ஒளிந்திருக்கும் அழகிய கவிஞனைக் கண்டுகொண்டேன். ஒரு மெல்லிய கோட்டினில் பயணிக்கும் எறும்பைப் போல தடம் என்ற வலி ஏற்படுத்தாது அழகாக எழுதத் தெரியும் இவருக்கு... இன்னும் பல கவிதைகள் வரைந்திருக்கலாம்.. மன்மி!!!

    சிரிப்புகள் பகுதியில் அதிகம் பதித்தவர். ரசனை மிகுந்த கதைகள், ரசிக்க வைக்கும் பின்னூட்டங்கள், என, வாழ்க்கையை ரசனைக் காட்டாக்கி, அதனுள் உறங்குகிறார். மன்றத்தின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

    மன்மி என்றாலே நினைவுக்கு வருவது ரசனை மிகுந்த சிரிப்பு மட்டுமே!
    நம்ம மன்மதன்.. உண்மையிலேயே மன்மதன்.... எப்படா மறுபடியும் பார்க்கிறதுன்னு ஏங்கவைக்கிற நண்பன்..
    கவிதாவின் கேள்விக்கு (இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தும் எப்படி இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருக்கீங்க..?) என் பதில்.......

    இருவருக்கும் நிறைய பொருத்தங்கள் உண்டு....!!!! இருவருமே ஜாலியாக பழகுபவர்கள். இருவருக்கும் ஒரே மாதிரி கண் சிகிட்சை நடந்துள்ளது...!!!! நான் ஒரு மன்மதன்....அதேபோல் அவரும் ஒரு மணி....யா....யா....யா....!!!!! நான் அதிகமாக சந்தித்த ஒரே நபர்....!!!!
    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாலி மாம்ஸ் நம்ம மன்மதன். நல்லா ஹீரோ மாதிரி இருப்பாருங்க! மன்மதனோடு நேரம் செல்வழிப்பதை நான் எப்பொழுதுமே விரும்புவேன்.
    மன்றத்தை சிறப்புற நிர்வகிக்க உதவி நட்சத்திரமாய் மின்னியவர்; மின்னுபவர். நகைச்சுவை வித்தகர். வருடும் கவிதைகள், கதைகளால் நெஞ்சோடு நெருங்கியவர். சொற்களின் எழுத்துகளை வைத்தே பதிலாடும் என் மனங்கவர் நண்பன்.
    என் அன்புத் தம்பி. கலகலப்புக்கு மறுபெயர். இனிமை, குறும்பு, நல்லுணர்வு ததும்பும் உற்சாகப் பதிவுகளின் ஊற்று.
    பல்கலை கலைஞர். இந்தியா செல்லும்பொழுதெல்லாம் சந்திக்கும் நபர். தன் பதிவுகளால் பலரை கட்டிப்போடுபவர். வாழ்க்கையில் பல சாதனைகளை படைக்க இருக்கிறவர்..
    மன்றத்தில் நான் கண்ட முதல் உறவு! பல்கலை வல்லுநர்; மன்ற ஆலோசகர். சிகரத்தை நோக்கிய உங்கள் எண்ணங்கள் விரைவில் ஈடேறட்டும் நண்பரே.
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top