ஓவியா

Profile posts Latest activity Postings About

  • நண்பரே! நலமா?என் முதல் பதிவும் இதே!முதல் நண்பரும் நீங்களே!வழிகாட்டவும்!நன்றி
    கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஓவியா!!!
    ஓவியா அக்கா பற்றி தனிக் கட்டுரையே எழுதினாலும் பற்றாது.

    ஆரம்பம் முதல் இன்றுவரை, அக்காவும் தம்பியுமாக, லூட்டி அடித்து, கடித்து, குதறி, பிதற்றி, அரற்றி, இன்னும் என்னென்ன உணர்வுகள் இருக்கிறதோ அத்தனையும் பகிர்ந்து.... மன்றத்தில் நான் அதிகம் பேசிய நபர் என்றால் அது ஓவியா தான். மன்றத்தில் நான் அதிகம் சண்டையிட்டது யாரிடம் என்றால் அதுவும் ஓவியாதான்.

    மிகச்சிறந்த கவிஞர், கதாசிரியர், பாடகி, நாட்டியக்கலையரசி, ரசனையாளர், நகைச்சுவையாளர், அன்பானவர், பழகுவதற்கு இனிமையானவர், தன்னைச் சுற்றியுள்ள சமூகம், மரியாதையுடனும் கண்டிப்புடனும் அமைதியுடனும் விளங்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர். எந்த ஒரு விடயத்திலும் ஆழ்ந்து இறங்கி படித்து அதன்படி நடப்பவர். ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் விதிமுறைகள் அமைத்து வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு வாழும் மிகச்சிலருள் ஓவியாவும் ஒருவர்.

    திறந்த மனது, புதுமைப் பெண்களுக்கே உண்டான மிடுக்கு, பெண்மைக்குள் ஆண்மையை இருத்திப் பார்க்கும் அழகு, சமூக அக்கறை, சில நேரம் குழந்தையாக இருக்கும் வரம், என்று பல்வேறு நிலைகளுக்குள் சஞ்சரிக்கும் இவர், எண்ணத்தாலும், செயல்களாலும் கண்ணீராலும், பாசத்தாலும் அழகு வாய்ந்தவர்... ஒரு சராசரி பெண்ணுக்குள் அடங்காமல் திமிருபவர்...

    பல்வேறு திறமைகள் ஒருங்கே அமையப்பெற்ற இந்த நாட்டியச்சிலை தற்போது மவுனத்தைக் கட்டியாளுவது அவரது திறமைக்கும் நம் மன்றத்திற்கும் விளைந்திருக்கும் கேடு.... சில சமயங்களில் மவுனம் கூட நமக்கு விரக்தியை ஏற்படுத்தும்..

    ஓவியாவுக்கும் எனக்கும் ஒரு சிறு வித்தியாசம்தான்... எங்கள் இருவருக்கும் தாய் வேறு.. ஆனால் பாசம் ஒன்று. உயிர் வேறு, ஆனால் எண்ணம் ஒன்று.

    ஒரு மனிதனால் தனது அன்னையை என்றென்றும் மறக்க இயலாது.... அதைப் போல ஓவியா எனக்கு....
    பிறந்ததோ ஒரே மண்ணில்,
    அறிமுகமோ தமிழ் மன்றத்தில்,
    குரல் கேட்டதோ அலைபேசியில்,
    இரத்த உறவுகளிடம் கிடைக்கா அன்பில்,
    எங்களை மூழ்கடித்தாயே பாசக்கடலில்,
    வருடம் ஒரு முறை தபாலில்,
    ரக்க்ஷபந்தன் என்ற கயிற்றில்,

    தங்கையே:080402gudl_prv:
    பாசத்துடன் லூட்டியடிக்கும், வளர்ந்த குழந்தை. கதையிலும், கவிதையிலும் கலக்கும் தாதா. அன்பான சகோதரி.
    சகோதர பாசத்தின் இன்றைய உண்மை அடையாளம். வருடம் ஒன்று போக மறந்தாலும் கட்டாயம் ராக்கி வந்து சேரும் அவரின் பாசப்பிணைப்பின் அடையாளமாய்.!! மழலையின் குறும்பாய் அவரின் எழுத்துப்பிழைகளும், அவருக்கே உரிய சபாபதே, அய்க்கோ போன்ற வார்த்தைகள் சிறப்பு.! மறக்க முடியா இனிய சகோதரி.!!
    எனது கையில் இருந்த ரக்*ஷா கயிற்றினை என் மகன் எனக்கு வேண்டுமென அழுது அடம் பிடித்து அவன் கையில் கட்டிக் கொண்டான். எனது நண்பர் ஒருவர் அவன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இது என்ன என்று கேட்டார். அதற்கு அவன் என் ஓவியா அத்தை லண்டனில் இருக்காங்க. அவங்க அப்பாவுக்கு ராக்கி அனுப்பி இருந்தார்கள். அதுதான் இது என்று சொன்னான்.
    மிக நல்ல படைப்பாளி. பலமுறை கவிதைப்போட்டிகளை வென்றவர். அருமையான கதை சொல்லி. இசை/நடனத்தில் தேர்ந்தவர். வளமான ரசனை கொண்டவர். மன்றம் தொய்ந்திருந்த நேரத்தில் இவர் வரவும் பங்களிப்பும் ஆற்றிய நன்மை சிறப்பானது - மறக்க இயலாதது. ஓவியா எல்லா நன்மைகளும் நிறைவும் அடைந்து நீடு வாழ மனதார வாழ்த்துகிறேன்.
    அன்பான அறிவான... முக்கியமா ஓவியம் போல அழகான கையெழுத்தும் குரல்வளமும் உள்ள அக்கா.. எங்க ஓவியா அக்கா..!!குமரியான பிறகும் குழந்தைதனம் மாறாத பிடிவாதம் இவரது அடையாளம்..!! இன்றைய மகளிருக்கு எடுத்துக்காட்டாய் இருக்கும் எங்க அக்கா என்றைக்கும் சீரும் சிறப்புடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்...!!
  • Loading…
  • Loading…
  • Loading…
Back
Top