மயூ எனும் மயூரேசன்,,,
கலகலப்பானவன்,, தமிழ் மேம்படுவதை கிட்ட நின்று ரசித்து மகிழ்வடையும் தமிழ் வெறியன்.
மயூரேசன் மிகச்சிறந்த கதாசிரியர். நல்ல கவிதைகள் தந்திருக்கிறார்... எனது ஒத்த ரசனை மிக்கவராக இருப்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும் இவரை. கணிணி, இணையத்துறையில் தமிழுக்கான இடம் குறித்த இவரது கட்டுரைகள் இன்னமும் நெஞ்சில் நீக்கமற நிலைத்திருப்பன.
ஆரம்பக் காலங்களில் எனக்கு எதிர் கோஷ்டியாக உருவெடுத்து கலாய்த்த காலங்களை இன்று நினைத்தால் கூட ஓரமாக சிரிப்பு வரும். எனது கூட்டாளியான ஓவியனை கலாய்ப்பதில் மிக முக்கிய மனிதனாக விளங்குவார். பிரதிப் அண்ணா இருந்தவரையிலும் இந்த கலாய்ப்புகள் வெகு நாட்களாக தொடர்ந்து வந்துகொண்டிருந்தன..
இன்று அந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.
கல்லூரி முடிந்து இல்லறம் நுழைந்து நல்லதொரு வாழ்க்கை மயூரேசனுக்குக் காத்திருக்கிறது... அதை இந் நண்பன் நிச்சயம் கவனிப்பான்....