தாமரை..
மன்றத்தில் புதுமைச் செயலி. ஒரு மனிதரால் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும்? ஒருமனிதரால் எப்படி அத்தனை விசயங்களை ஞாபகப்படுத்த இயலும்? ஒருவரால் எப்படி பல்வேறு அம்சங்களை ஒன்றாகக் கலக்கி வெளிப்படுத்த முடியும்?
தாமரையால் முடியும்..
அதிசயவைக்கும் மொழி ஆளுமை, மொழி ஆராய்வு, பல்வேறு தளங்களை எட்டும் கவிதைகள், ரசிக்கவைக்கும் அனுபவகக்கட்டுரைகள், பதிலடிகள், பதில்கவிதைகள், எதிர்கவிதைகள், என இவரது திறமைகள் எதனை விடுக்க, எதனை தொடுக்க மின்னிதழ்களை திறம்பட நடத்தும் சிறந்த ஆசிரியர், திட்டமிடலும், கணக்கியலும் ஒருங்கே வாய்த்தவர், அறிவுவும், அறிவுரையும் மிகுந்தவர்..
பேச்சில் ஆளுமை மிகுந்தாலும் பழக்கத்தில் எளிமையானவர், நம்மால் தெளிவாக ஒரு முடிவு எடுக்க முடியாவிடில் தாமரைக்கு அழைத்து அதன் தீர்வைப் பெறலாம்.
தாமரை பதில்கள் என்ற திரி வார இதழ்களில் வெளிவரும் கேள்வி-பதில்களின் தரத்தை விட பன்மடங்கு உயர்ந்தது.. உண்மை,, வெறும் புகழ்ச்சியில்லை.
மன்றத்தின் தூண்கள் பலர் இருந்தாலும் மன்றத்தின் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் மிகச்சிலருள் இவர் தலையானவர்..