Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 14

Thread: மரணம் !!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12

    மரணம் !!!

    மனிதன்
    ஒரு விசித்திரப் பிறவி..
    பிணத்தைச் சுமந்தாலும்..
    பிற்காலச் சிந்தனையின்றி
    நாடுகிறான் இன்பத்தை...

    ஆனால்...
    இறுதிக் காலத்திலே
    இரவு நேரமெல்லாம்...
    அவனுக்கு
    இறப்பு ஞாபகம்தான்...

    மணக்க மணக்க
    அலங்கரித்த உடல்..
    மண்ணால் தின்னப் படுமோ...?

    நிமிடத்திற்கு நிமிடம்
    ஊதிய சிகரெட் போல்
    ஊர்ச் சுடுகாட்டிலே
    சாம்பலாய் போய்விடுமோ...?

    எங்கே போகுமோ
    என் எண்ணங்கள்...?
    என்னும்
    எண்ணங்களின் அலைகளிப்புகள் தான்..

    எலும்புக் கூட்டை
    பார்க்கும் போதெல்லாம்..
    எழாத எண்ணங்கள்
    எழ முடியாத போது தானே
    எழுகின்றன..


    சார்ந்தவர்களுக்கு...
    நிமிடத்தில் வரும் மரணம்
    துக்கத்தைத் தரும்..

    தள்ளிப் போடப்பட்ட மரணம்
    நரகம்..
    சாகின்றவனுக்கும்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    அருமை...
    மரணபயம்...
    தள்ளிப் போடப்பட்ட மரணம்
    நரகம்..
    சாகின்றவனுக்கும்
    கலக்கல் வரிகள்....
    நல்லவனோ, கெட்டவனோ... மரணம் யாரையும் விடுவதில்லை
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பதில் தெரியாத கேள்விகளுக்கு உங்கள் கோணத்தில் கவிதையா..? நன்றாக இருக்கிறது நண்பரே.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    விளக்கை அணைத்து விட்டுப்போ எனச் சொல்லி
    சட்டென உறக்கத்தில் மறைய ஒரு யோகம் வேண்டும்.

    என் பேராசை அப்படிப்பட்ட மரணம்.

    தள்ளிப்போடப்பட்ட மரணம்
    நரகம்..

    அவனுக்கும்,
    அவனைச் சார்ந்தவர்களுக்கும்..


    எழாத எண்ணங்கள் எழும் என்ற வரிகள் அருமை..


    வாழ்த்துகள் செல்வன்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    அருமை செல்வன். அதுவும் கடைசி வரிகள் நிச்சயம் நரகம்தான். எனக்கு அந்த வேதனை கூடாது என்று சுயநலம் இருக்கிறது.அது நடக்குமா?

    எனக்கு நொடிப்பொழுதில் மரணம் வரவேண்டும் என்பதே என் விருப்பம். அது நடந்தால் அனைவருக்கும் நன்மை. மற்றவர்களை கஷ்டப்படுத்திவிட்டு இறப்பது ஒரு நரக வேதனையே. அது எனக்கு வரக்கூடாது என்று நினைப்பது சுயநலமாக இருந்தாலும், எனக்கு அதில் விருப்பமே.

    தொடருங்கள் செல்வன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    பாரதி சொல்வது கேள்விகளால் பிறந்த கவிதை அருமை.

    இளசு, ஆரெனின் விருப்பமே அனைவரின் விருப்பமும்... தங்களில் கடைசி வரி போல்.. தள்ளிப்போடாமல்..... எவருக்கு தொல்லையில்லாமல் செல்வதே என் விருப்பமும்.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    மரணத்தின் பயத்தை போக்கவே மதங்கள் உன்டாகின. மனிதன் மரணத்தை வென்றுவிட்டால்.. மதங்கள் தோற்றுவிடும்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    இந்த கவிதை ஏதாவது சம்பந்தப் படுகிறதா? பாருங்களேன்..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    13 Apr 2007
    Location
    ஆஸ்திரேலியா
    Posts
    4,327
    Post Thanks / Like
    iCash Credits
    9,073
    Downloads
    3
    Uploads
    0
    நிமிடத்திற்கு நிமிடம்
    ஊதிய சிகரெட் போல்
    ஊர்ச் சுடுகாட்டிலே
    சாம்பலாய் போய்விடுமோ...?
    போய்விடுவம் இதை இளமையில் யாருமே சிந்திப்பதில்லை, ஊழிக்கால்த்தில்தான் சிந்திப்பார்கள்
    அருமையான கரு
    அழகான கவிதை
    பாராட்டுக்கள்
    விழ விழ எழுவோம், விடுதலை பெறுவோம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    எலும்புக் கூட்டை
    பார்க்கும் போதெல்லாம்..
    எழாத எண்ணங்கள்
    எழ முடியாத போது தானே
    எழுகின்றன..
    ரசிப்பார்கள் என்று தெரிந்தேதான் சிவப்பு வர்ணமிட்டீர்களா செல்வன்... மிகவும் கவர்ந்தது என்னை இந்த வரிகள்.... மனம் ஒருநிலையில் இருந்தால்தான் இப்படியான வரிகள் உதிக்கும்.. அருமை நண்பரே!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    தள்ளிப் போடப்பட்ட மரணம்
    நரகம்..
    சாகின்றவனுக்கும்.
    உண்மைதான் எப்போது சாவது என்று மட்டும் தெரிந்து விட்டால் வாழ்வே நரகமாகி விடுமே!

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •