Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: ஜொ.வா. கைது.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    ஜொ.வா. கைது.

    ஒரு பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக ஜொள்ளு வாத்தியார், நீதி மன்றத்தில், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரை குறுக்கு விசாரணை செய்தார்.

    "உமது பெயர்?"

    "ஜொள்ளு வாத்தியார்"

    " எனது கட்சிக்காரர் கந்தனுடைய மனைவியை நீர் கடத்திக்கொண்டுபோய் வைத்திருப்பதாக புகார் வந்துள்ளது. இது உண்மையா?"

    "அப்பட்டமான பொய். கந்தனுடைய மனைவியை நான் பார்த்தது கூடக் கிடையாது."

    "அப்படியானால் கந்தனுடைய மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்பது உமக்கு எப்படித் தெரியும்?"

    "" ஐயா காலையில் நான் வாக்கிங் போவது வழக்கம்; சம்பவ தினத்தன்று நான் வாக்கிங் போய்க்கொண்டு இருந்தபொழுது, எதிர்த்திசையில் இருந்து கந்தன் வந்து கொண்டிருந்தான். அவன் எதையோ பறிகொடுத்துவிட்டு தேடுவது போல இருந்தது. நான் அவனிடம், "ஐயா! என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்டேன்.

    அதற்கு அவன்," என் மனைவி கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டாள்; அவளைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்" என்று பதில் சொன்னான்.

    உடனே நான் கந்தனிடம்," ஐயா! உமது மனைவிக்கு ஒரு கால் ஊனமா?" என்று கேட்டேன்.

    "ஆம் ஐயா! எப்படி சரியாகச் சொன்னீர்கள்?" என்று கந்தன் கேட்டான்.

    "இரவில் லேசாக மழை பெய்து இருக்கிறது; காலை நேரமாதலால் வேறு காலடித் தடங்கள் உண்டாகவில்லை;இரண்டே இரண்டு காலடித் தடங்கள் மட்டும் இருக்கின்றன; அவற்றில் ஒன்று மண்ணில் சரியாகப் பதியவில்லை; எனவேதான் உன் மனைவிக்கு ஒரு கால் ஊனம் என்ற முடிவுக்கு வந்தேன்" என்று கந்தனிடம் சொன்னேன்.

    உடனே வழக்கறிஞர் ஜொள்ளு வாத்தியாரைப் பார்த்து,"அது சரி; கந்தனின் மனைவி நொறுக்குத் தீனி தின்னும் பழக்கம் உள்ளவர் என்பது உமக்கு எப்படித் தெரியும்?"

    " ஐயா! வழி நெடுகிலும் கடலைக்காய் பொட்டு இறைந்து கிடந்தது; அதை வைத்து கந்தனின் மனைவிக்கு நொறுக்குத் தீனி தின்னும் பழக்கம் உண்டு என்பதைக் கண்டறிந்தேன்"

    " கனம் நீதிபதி அவர்களே! கந்தனின் மனைவி கடைசியாக ஜொள்ளு வாத்தியார் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறார் என்பதை போலீசார் எடுத்த இந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்; கந்தன் மனைவியின் காலடித் தடங்கள் ஜொள்ளு வாத்தியார் வீட்டை நோக்கிச் சென்றிருப்பதைப் படம் தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே கந்தனின் மனைவி ஜொள்ளுவாத்தியார் வீட்டில்தான் இருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை; கனம் நீதிபதி அவர்கள் இந்தப் புகைப்படத்தைப் பார்வையிட வேண்டுகிறேன்" என்று சொல்லி அரசு வழக்கறிஞர் ஒரு புகைப்படத்தை நீதிபதியிடம் கொடுத்தார்.

    சிறிதுநேரம் புகைப்படத்தைப் பார்த்த நீதிபதி, ஜொள்ளுவாத்தியாரைப் பார்த்து,"ஐயா! இதற்குத் தாங்கள் கூறும் விளக்கம் என்ன?"

    உடனே ஜொள்ளுவாத்தியார் நீதிபதியைப் பார்த்து,"ஐயா! கந்தன் மனைவி என் வீட்டிற்கு வந்தது உண்மைதான். கடலைக்காய் சாப்பிட்ட காரணத்தால் அவருக்குத் தாகம் எடுத்திருந்தது. எனவே என் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு நீர் கேட்டார். நானும் கொடுத்தேன். நீர் அருந்திவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் புகைப்படத்தில் இருப்பதைக் கனம் நீதிபதி அவர்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"

    உடனே நீதிபதி, அரசு வழக்கறிஞரைப் பார்த்து," மிஸ்டர் பப்ளிக் பிராஸிகியுட்டர்!ஜொள்ளுவாத்தியார் சொன்னதுபோல இந்தப் புகைப்படத்தில் கந்தனின் மனைவி வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன.ஆகவே ஜொள்ளுவாத்தியார் வீட்டில்தான் கந்தனின் மனைவி இருக்கிறார் என்று தாங்கள் கூறுவதை ஏற்கமுடியாது."

    " கனம் நீதிபதி அவர்களே! வெளியேறும் காலடித் தடங்கள் மிகவும் தெளிவாக இருப்பதால்தான் ஜொள்ளுவாத்தியார் மீது சந்தேகம் ஏற்படுகிறது. கந்தனின் மனைவிக்கு ஒரு கால், அதாவது வலதுகால் ஊனம். ஜொள்ளுவாத்தியாரின் வீட்டுக்கு உள்ளே செல்லும் காலடிகளில் வலதுகால் செருப்பு சரியாகப் பதியவில்லை. ஆனால் வெளியே செல்லும் காலடிகளில் வலதுகால் செருப்பு சரியாகப் பதிந்துள்ளது. எனவே கந்தனின் மனைவியை வீட்டின் உள்ளே உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு, அவருடைய காலணியைக் கொண்டு ஜொள்ளுவாத்தியார் ஏற்படுத்திய செயற்கை காலடித்தடங்கள் அவை என்பதை இந்த நீதி மன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் சிலர் அவசரத்தில் செய்யும் தவறுகளே அவர்களைக் காட்டிக்கொடுத்து விடுகின்றன. இதற்கு ஜொள்ளுவாத்தியாரும் விதிவிலக்கல்ல. ஆகவே ஜொள்ளுவாத்தியாருக்குக் கடுமையான தண்டனை வழங்கும்படி கனம் நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

    தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை அறிந்த ஜொள்ளுவாத்தியார் தன் குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்கத் தயாரானார்.
    Last edited by M.Jagadeesan; 06-06-2011 at 04:45 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    ம்ம்ம் இதில் இருந்து என்ன தெரியுது ............ தப்பே செய்தாலும் தப்பை தப்பில்லாமல் செய்யணும் ..............
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    ஒரு விண்ணப்பம்...தவறாக நினைக்கவில்லை என்றால்......' வாத்தியார் ' என்பதற்குப் பதில் வேறு பெயரை உபயோகிக்கலாமே....புனிதமான தொழில் அது...கற்பனையிலும் புனிதமாகவே இருக்கட்டுமே.....மன்னிக்கவும்.....

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    எப்போதோ படித்த ஒட்டகக் கதை நினைவுக்கு வந்தது. தவறு செய்ததுடன் அதை சாமர்த்தியமாய் மறைக்கவும் முயன்றவருக்கு கடுமையான தண்டனை தேவையே. நல்ல தீர்ப்பு.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    ஒரு பெண்ணைக் கடத்திய குற்றத்திற்காக ............

    "அப்பட்டமான பொய். கந்தனுடைய மனைவியை நான் பார்த்தது கூடக் கிடையாது."

    .........................
    ..........................

    உடனே ஜொள்ளுவாத்தியார் நீதிபதியைப் பார்த்து,"ஐயா! கந்தன் மனைவி என் வீட்டிற்கு வந்தது உண்மைதான். கடலைக்காய் சாப்பிட்ட காரணத்தால் அவருக்குத் தாகம் எடுத்திருந்தது. எனவே என் வீட்டிற்கு வந்து குடிப்பதற்கு நீர் கேட்டார். நானும் கொடுத்தேன். நீர் அருந்திவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதற்கான காலடித் தடங்கள் புகைப்படத்தில் இருப்பதைக் கனம் நீதிபதி அவர்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்"
    ......................
    ......................

    தப்பிக்க வழியேதும் இல்லை என்பதை அறிந்த ஜொள்ளுவாத்தியார் தன் குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்கத் தயாரானார்.
    நல்ல கதை ஐயா.
    அவருடைய வாக்குமூலத்திலேயே தவறு இருந்திருக்கிறதே...!
    நீதியரசர் கவனித்திருக்கலாம்.

    கதையில் “செருப்பு” என்று சொல்லை சரியாக்கும் படி வேண்டுகிறேன் ஐயா.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஐயா, நீங்க ஒரு சீனியர் ரா ரா என்பது இதில் இருந்து நன்றாக வெளிப்படுகின்றது.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    முல்லா கதைகளில் வரும் ஒட்டகக் கதையின் மறுவாசிப்பு....
    சுவாரசியமாகத்தான் இருக்கிறது...

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பின்னூட்டமிட்ட ரவிக்கு நன்றி!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    ஜானகி அவர்களின் அறிவுரையை மனதில் கொள்கிறேன்.

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பின்னூட்டமிட்ட கீதம் அவர்களுக்கு நன்றி!

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    சர்சரன் அவர்களுக்கு,

    ரா.ராக்கள் எங்கே? நீண்ட நாட்களாக அவர்களைக் காணோம்! மன்றம் களையிழந்து காணப்படுகிறது.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    பாரதி அவர்களுக்கு!
    எவ்வளவு கவனமாக இருந்தாலும் சிலசமயங்களில் பிழை ஏற்பட்டுவிடுகிறது. பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! தாங்கள் தமிழாசிரியர் என்று எண்ணுகிறேன்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •