Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 32

Thread: இரக்கத்தின் விலை நூறு ரூபாய்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Thumbs down இரக்கத்தின் விலை நூறு ரூபாய்

    இரக்கத்தின் விலை நூறு ரூபாய்





    அய்யா, அம்மா இரக்கம் உள்ள பெரியவங்களே ... இந்த ஈனப்பிறவிக்கு நேர்ந்த கொடுமைய கேட்டு உங்க நெஞ்சில ஏதோ ஒரு மூலையில் இரக்கம் கசிஞ்சா இந்த கொழந்த பொழைக்க நாலு காசு கொடுத்து உதவுங்க சாமி .... இரக்கம் இல்லாம இந்த சாமி என்ன நடுத்தெருவில விட்டு போயிட்டானே ... இந்த பச்சை கொளந்தையை வச்சிக்கிட்டு பாலுக்கு வழி இல்லாம திரியுரேனே .... உங்க குழந்த குட்டி எல்லாம் நல்லா இருக்கும் தரும பிரபுவே காசு கொடுத்து உதவுங்க சாமி .... நொடிக்கொருதரம் மாராப்பில் முகம் புதைத்து இருந்த குழந்தையை ஒரு கையால் அள்ளிக்கொண்டபடி நெஞ்சோடு வைத்து ஆட்டிய படியே பிச்சை கேட்டு வந்தாள்.

    அந்த பெண்ணின் குரல் ... காலையில் பணிக்கு கிளம்பி பேருந்தில் இருந்த அனைவரின் உள்ளதையும் உருக்கியது.

    முன் வரிசையில் இருந்த தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் தங்கள் தாராள மனசை காட்டினார்கள்.

    எந்த படுபாவி இப்படி ஏமாத்திட்டு போனானோ ... பாவம் இந்த புள்ள இப்படி பாடாபடுது ...

    முன் சீட்டில் இருந்த வயசான ஆசிரியை பின்னால் இருந்த இளவட்டத்திடம் பேச்சு கொடுக்க ....

    ஆமாம் ... ஊரெல்லாம் சாராயக்கடை சும்மா நாம ரோட்டில போனாலே நம்ம மேல விழுந்திட்டு போறானுங்க ... இந்த மாதிரி கொமரி புள்ளைங்க கிடச்சா விட்டா வப்பானுங்க .... இவனுங்க எல்லாத்தையும் நிக்க வச்சி .....

    அவள் பேசி முடிக்க கொஞ்சம் உரசினால் போல இருந்த வாலிபன் விலகிகொண்டான். இதை பார்த்த அடுத்த இருக்கையில் இருந்த இரண்டு பெண்கள் வாய் விட்டு சிரிக்க அவன் பேருந்தை விட்டு இறங்கி வேடிக்கை பார்ப்பது போல வேறு பேருந்தில் ஏறிக்கொண்டான்.

    இன்னும் சிலர் தங்கள் பையில் கிடைத்த சில்லறையில் ஒரு ரூபாயாக பார்த்து பொறுக்கி போட்டார்கள்.
    பாவம் ஐம்பது காசு சில்லறை கிடைக்கவில்லை அவர்களுக்கு.

    புத்தகத்துக்குள் தலையை புதைத்து வைத்து இருந்த ஒரு டிப்டாப் மனிதர் நிமிந்து பார்த்தார்.

    கை கால் நல்லாத்தானே இருக்கு ... எதுக்கு பிச்சை எடுத்து பொழைக்கணும் .... இந்த நாடு உருப்படாமல் போறதுக்கு இவங்க எல்லாம் காரணம் இல்ல .... காசு போடுறீங்களே உங்கள சொல்லணும் .... பூமிக்கு பாரமா எதுக்குத்தான் பொறந்தாங்க்களோ ....

    இதை கேட்டவுடன் ஞானோதயம் கிடைத்த இரண்டு பேர் அப்படியே சில்லறையை பைக்குள்ளேயே போட்டு விட்டு ... போ .. போ என்று ஜன்னலுக்கு வெளியே ரோட்டில் போய் கொண்டு இருந்த நாயை பார்த்தனர்.

    சாமி கொடுத்ததை பூசாரி புடுங்கி தின்னமாதிரி என் பொளப்புல மண் அள்ளி போட எரும மாடுங்க வந்து எறிகுதுங்க .... டிப்டாப் காதில விழும்படியே அவள் பேசி விட்டு போனாள். இதை காதில் வாங்கியும் வாங்காதவராய் டிப்டாப் மீண்டும் புத்தகத்துக்குள் ஆழமாய் தலையை புதைத்து கொண்டார்.

    இருக்கைகள் நிறைந்திருக்க நின்றவர்களில் சிலர் அவளை பார்த்து விலகி கொண்டார்கள், சிலர் அவளை வெறித்து பார்த்தனர். சிலர் அவள் தாண்டி செல்லும்போது உரசி பார்த்தனர். ஆனால் அவளோ காசை பெறுவதில் மட்டுமே குறியாய் இருந்தாள்.... அந்த குழந்தையின் கை மட்டும் அவள் மாராப்புக்கு வெளியே காற்றில் கை வீசி கொண்டு இருந்தது.

    கடைசி வரிசையில் இரண்டு பிணை கைதிகளுடன் அமர்ந்து இருந்த காவலர்களும் தங்கள் பாட்டை புலம்பி கொண்டு இருந்தனர்.

    எந்த ஆட்சி மாறினா என்னையா ? நம்ப பொழப்பு நாய் பொழப்புதான் ... ஒரு நல்ல நாள் .. பொல்லா நாள் கிடையாது ... லீவு கெடையாது ... சந்தோசம் கிடையாது ..... சல்யூட் அடிச்சே காலம் போகுது ... இந்த பன்னாடைங்க எல்லாம் பொறக்கலைன்னு யார் அழுதா ... அரிப்பெடுத்து விதைச்சு வுட்டுடுறாங்க ... சனியனுங்க வளர்ந்து வந்து நம்ப தாலிய அறுக்குதுங்க ... நாடியை சொரிந்து கொண்டு இருந்த கைதி தலையில் ஓங்கி ஒன்று போட்டார்.

    யோவ் ... 205 அங்க பாரு ... ஒருவர் சொல்ல ...

    மற்றவர் எத சொல்லுற ....என்று கேட்க

    301 அந்த பிச்சைகாரியை காண்பித்தார் .

    நன்றாக இருந்தால் அவளுக்கு ஒரு இருபது வயதுக்குள்தான் இருக்கும். மாநிறம் ... கொஞ்சம் லட்சணமான முகவெட்டு. கொஞ்சம் வர்ணம் மங்கி போனதாக இருந்த பாலிஸ்டர் சேலை ... ஏதோ வடக்கத்தி பெண்ணின் ஜாக்கேட்டாக இருக்கவேண்டும் ... கண்ணாடி ஜிமிக்கிகள் வைத்து கழுத்தும், முதுகும் மிக இறக்கமாக இருந்தது. கை நிறைய கண்ணாடி வளையல்கள்.......

    யோவ் 301 காலம் போன காலத்துல இதெல்லாம் எதுக்குயா உனக்கு ....

    யோவ் 205 அவ இடுப்ப பாருய்யா ....

    இடுப்பை பார்த்தால் பிள்ளை பெற்றவளாகவே தெரியவில்லை. அவ்வளவு இளமை . 205 குழப்பத்துடன் 301 ன் முகத்தை பார்த்தார்.

    யோவ் அந்த கொளந்தை கையை பாருயா ....

    காற்றில் அந்த கை … ஈ மொய்க்க இங்கும் அங்குமாக வீசிக்கொண்டு இருந்தது.

    ஏ புள்ள இங்க வா ... 301 ஓங்கி அதட்டு போட ... அவள் மிரண்டு பார்த்தாள்.

    ஏனுங்க சாமி ... நான் யாரையும் தொந்தரவு பண்ணலைங்க ... அப்படியே எறங்கி போயடுறேங்க ... அவள் பின்னால் நடந்தாள்.

    ஏ ...மருவாதியா இங்க வாறியா ... இல்ல பெல்ட்டால விலாசவா ....

    அதற்குள் அவள் படிகளில் இறங்கி ஓடத் துவங்கினாள்.

    யோவ் 205 இந்த களவாணி பயலுகளை பார்த்துக்கோ ... நான் அந்த சிறுக்கி மவளை புடுச்சிட்டு வாறன் .

    பின் வாசல் வழியாக 301 விரட்டி கொண்டு ஓடினார் .

    அவள் கூட்டத்தில் சிமெண்ட்டு தடுப்புகளை தாண்டி பிள்ளையுடன் ஓடிக்கொண்டு இருதாள்.

    301 துரத்துவதை பார்த்து கூட்டத்தில் பலர் வேடிக்கை பார்த்தனர் ... சிலர் மிரண்டு போய் விலகி கொண்டார்கள்.

    ஏலே ... தீவட்டிகளா அவள புடிங்களே ... 301 நடைபாதை வியாபாரிகளை பார்த்து கூவ ...

    அவள் குழந்தையை கூட்டத்தின் மீது வீசி விட்டு ... மிதிவண்டி நிறுத்தும் இடத்தினுள் புகுந்து ஓடினாள்.

    இரண்டு பக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகள் சரிய அவளின் வேகம் தடைபட்டது.

    பின்னால் ஓடி வந்தவனின் கையில் அவள் முந்தானை சிக்கியதும் .... புடவை சரிய .... அப்படியே குத்துக்காலிட்டு அமர்ந்தாள் .

    வந்த வேகத்தில் 301 பூட்சுக்கால்களுடன் அவள் முகத்தில் மிதிக்க அவளின் வாயில் இருந்து ரத்தம் கொட்டத்துவங்கியது .

    "அய்யா சாமி ... என்ன மன்னிச்சுடுங்க .... மன்னிச்சுடுங்க ..." அவரின் காலை பற்றிக்கொண்டு கதறினாள்.

    கொத்தாக அவளின் முடியை பற்றிய 301 ...

    “ ஏலே எருமைங்களா இப்ப என்னத்துக்கு கூட்டம் போடுறீங்க ... சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்காதீங்க ... வேடிக்கபாக்குறதுக்கு மட்டும் வந்துருங்க ...."

    கூட்டத்தை விளக்கியபடி " எங்கடா அந்த கொளந்தை " என்று அதட்ட ...

    அந்தா அந்த சுவத்துக்கு பக்கத்தில கிடக்கு சார் ... என்று சில பேர் கூற .... அவளை அப்படியே கொத்தாக அள்ளி போனார் 301 .


    யாருதுடி இந்த கொளந்தை ... திருட்டு சிறுக்கி ... இப்படி ஒரு பொழப்பு பொழைக்குறதுக்கு நாண்டு கிட்டு சாவலாமே ... யாருதுடி கொளந்தை ... மீண்டும் பூட்ஸ்கால்கள் அவளை துவைக்க தொடங்கின.

    அய்யா சாமி ... இது அநாதை சாமி .... அநாதை .... அரசாங்க ஆஸ்பத்திரியில எவளோ ஒருத்தி பெத்து போட்டு போய்டா ... அத நான் பிணக்கிடங்குல இருந்து காவக்காரனுக்கு நூறு ரூபாய் கொடுத்து
    வாங்கிட்டு வந்தேன் சாமி .... சும்மா பிச்சை கேட்டா கொடுக்காத சனம் கைப்புள்ளயோட கேட்டா இரக்கப்பட்டு கை நிறைய கொடுக்குது சாமி ... காசு ஆசையில இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டேன் மன்னிச்சுடுங்க சாமி ....

    301 தன் அலைபேசியில் இருந்து கட்டுப்பாட்டு அறையை அழைத்து கொண்டு இருந்தார்.

    டேய் ... தம்பி இனிமே இங்க நின்னா சாட்சிக்கு நம்மளையும் கூப்புடுவானுங்க ... வா நடைய கட்டுவோம் என்று கூட்டத்தில் ஒருவர் கூற ... ஒருவர் பின் ஒருவராக கூட்டம் கலைந்தது.

    அங்கே குழந்தை நீலம் பூத்து சுவர் ஓரத்தில் கிடந்தது. அதன் வறண்டு போய் கூம்பிய உதடுகள் , வற்றிப்போய் இருந்த கன்னத் திட்டுகள் .... சற்றே அரை கண் திறந்திருந்த விழிகள் கேட்டது கூட்டத்தை பார்த்து

    " இன்னமும் இந்த உலகில் மனிதம் இருக்கிறதா" .
    Last edited by Ravee; 31-05-2011 at 05:26 PM.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    நெஞ்சை நெகிழவைத்த கதை.பாராட்டுக்கள் ரவி.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    உங்கள் பராட்டுகளுகளுக்கு நன்றி அய்யா ... இந்த கதை என்னை பாதித்த உண்மைகளின் அடிப்படையில் எழுதியது.



    கடலூர், டிச.11 – . செய்தி: தினத்தந்தி. (சுட்டி)
    கடலூரில் பெற்ற தாய்மாரே, பச்சிளம் குழந்தைகளை வீசி எறியும் அவல நிலை தொடருகிறது. இச்சம்பவங்களுக்கு பின்னணியில் கள்ளக்காதல் காரணமாக இருக்கலாம்? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    தெருவில் வீசியெறியப்படும் குழந்தைகள்
    நாய்க்குட்டிகளை தூக்கி தெருவில் வீசி எறிவது போல, பச்சிளம் பெண்குழந்தைகளை தெருவில் வீசியெறியும் சம்பவங்கள் கடலூரில் சர்வசாதாரணமாக நடக்கின்றன. இந்த சம்பவங்களை பார்க்கும் போது இனிவரும் காலங்களில் பெண்குழந்தைகளின் உயிருக்கு மதிப்பில்லையோ? என்று எண்ணத்தோன்றுகிறது.

    கடந்த 15 நாட்களில் மட்டும் 3 பெண்குழந்தைகள் கடலூர் நகரின் தெருக்களிலும், முட்புதர்களிலும் வீசியெறியப்பட்டு உள்ளன. இதில் முதலாவதாக கடந்த மாதம் 25-ந்தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள முட்புதருக்குள் பச்சிளம் பெண் குழந்தை வீசி எறியப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் நடந்த அதேநாளில் குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை ஆஸ்பத்திரியிலேயே பெற்றோர்கள் விட்டுச்சென்ற அவலம் நேர்ந்தது. 3-வதாக கடந்த 7-ந்தேதி இரவில் கொட்டும் பனியில் நனைந்த படி ஒரு பெண் குழந்தை கடலூர் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் அனாதையாக கிடந்தது.

    இந்த சம்பவங்களின் நினைவுகளெல்லாம் கண்முன் இருந்து அகலுவதற்கு முன்பாக நேற்று ஒரு பச்சிளம் பெண் குழந்தை கடலூர் கெடிலம் ஆற்றில் வீசியெறியப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கெடிலம் ஆற்றுக்குள் பிணம்
    கடலூரில் ஓடும் கெடிலம் ஆற்றின் குறுக்கே அண்ணா பாலத்தின் கீழே ஆற்று மணல் பரப்பில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தையை பெற்றெடுத்த உடனே ரத்தம் சொட்ட, சொட்ட தூக்கிக்கொண்டு வந்து ஆற்றுக்குள் வீசியிருக்கின்றனர். இதில் குழந்தை பரிதாபமாக செத்தது.

    ஆற்றுக்குள் இறங்கி குழந்தை பிணத்தை தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு வந்தார். இதன்பிறகு அந்த குழந்தையை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கடலூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Last edited by Ravee; 31-05-2011 at 11:52 PM.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    காற்றுக்குதிரையாய் உங்கள் நண்பன் திரியில் பென்ஸ் அவர்கள் சொன்னது;
    "சில படைப்புக்களுக்குப் பின்னூட்டமோ அல்லது விமர்சனமோ எழுத இயலாது"

    அதையே மீண்டும் இங்கு மேற்கோளிடுகின்றேன்...

    ஒரு அவசரமான பொழுதில், நடுத்தரவர்க்க மக்களின் விரைவில், வறுமையின் கொடுமை,
    கனதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

    இக்கதையில் நீதி தேடியோ, நியாயம் சொல்லியோ பதிவிட என்னால் முடியவில்லை.

    ஐந்து நட்சத்திரங்கள் அளித்துப் பாராட்டுகின்றேன்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb

    Quote Originally Posted by அக்னி View Post
    காற்றுக்குதிரையாய் உங்கள் நண்பன் திரியில் பென்ஸ் அவர்கள் சொன்னது;
    "சில படைப்புக்களுக்குப் பின்னூட்டமோ அல்லது விமர்சனமோ எழுத இயலாது"

    அதையே மீண்டும் இங்கு மேற்கோளிடுகின்றேன்...

    ஒரு அவசரமான பொழுதில், நடுத்தரவர்க்க மக்களின் விரைவில், வறுமையின் கொடுமை, கனதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

    இக்கதையில் நீதி தேடியோ, நியாயம் சொல்லியோ பதிவிட என்னால் முடியவில்லை.

    ஐந்து நட்சத்திரங்கள் அளித்துப் பாராட்டுகின்றேன்...

    நாம் நாகரீகமான உலகத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்தும் நிகழ்வுகள் இவையெல்லாம். இயந்திரமாய் போன உலகத்தில் எதாவது செய்து புண்ணியம் கட்டிக்கொள்வோம் என்ற நிலையிலேயே பிச்சை இடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே பிச்சைகாரர்கள் நடிகர்கள் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இது போல மரித்து போன பிள்ளைகளை ( என்னால் பிள்ளைகளை அதுவாக்கி எழுத முடியவில்லை ) வாங்கி கொண்டு பிச்சை எடுப்பது அவலத்திலும் அவலம். தினமும் பேருந்து பயணத்தில் இருக்கும் நான் சந்திக்கும் அவலத்தில் இதுவும் ஒன்று.

    என்னை பாதிக்கும் உணர்வுகளை என்னால் எழுத்தில் கொண்டு வர முடிகிறது என்றால் தமிழ்மன்றம் என்னை சரியாக வழி நடத்துகிறது என்றே அர்த்தம். அதற்கு சான்றே நீங்கள் இந்த கதைக்கு அளித்த நட்சத்திரங்கள். மிக்க நன்றி அக்னி.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இந்த நிகழ்வுகள் நிஜமானவை என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.

    இரப்போரற்ற, கைவிடப்பட்ட இயலாதோரற்ற, எந்நேரமும் ஆணும் பெண்ணும் பாதுகாப்பாய் வலம் வரத்தக்க...
    ஒரு தேசம்...
    கனவிலல்ல, உருவாகிக்கொண்டிருந்தது...
    இன்று கனவிற் கூட உரு ஆகுதில்லை...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இவற்றை கதையாக படிக்கும் போதே மனசு பாரமாக இருக்கு. உண்மை என்கிறபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனவன் பிள்ளை இல்லை என்கிறான்.....

    பாத்திரங்களை சரியாக செதுக்கியிருக்கிறீர்கள். மனத்திரையில் படமாக ஓடுமளவுக்கு உங்களின் கதையோட்டம் உருக்கமாக இருந்தது. வாழ்த்துக்கள் ரவி அண்ணா..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கதையைப் படித்தேன் ரவி. படித்தபின் உணர்ந்தேன், இது கதையல்ல, சில வயிற்றுப்பாடுகள் என்பதை!

    மனம் கனத்துத் திரும்பிப் போனேன். முடியாமல் மீண்டும் வந்தேன். கரம் கட்டிவிட்டிருந்த உணர்வுகளினின்று மீண்டு வந்தேன்.

    பெற்றக் குழந்தையை வீசியெறியும் தாய்மையை என்னல் தூற்றவோ சந்தேகிக்கவோ இயலவில்லை, நானும் ஒரு தாயாக இருப்பதால்! அந்தத் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பின்னணி பற்றியே யோசித்து மனம் குமுறுகிறது.

    மரித்த சிசுவை வைத்து பிச்சை எடுப்பவளையும் மனந்தூற்றவில்லை. மாறாய்... சடலத்தை வைத்து எத்தானை நாள் இவள் தன் சரீரம் காக்க இயலும் என்ற பச்சாதாபம் எழுகிறது.

    அவர்கள் நிலையில் ஒருநாளேனும் நாம் வாழ்ந்து பார்த்தால் ஓரளவேனும் பிடிபடலாம் ஒப்பனை உலகின் நிதர்சனம்.

    மனதில் அறைந்த நிகழ்வை யதார்த்தம் பிசகாமல் எழுத்தால் அறைந்தது அருமை. ஐந்து நட்சத்திரங்களே அதன் சாட்சி.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    உண்மை பொட்டில் அறைகிறது......மலைத்து நிற்காமல், பரிகாரம் செய்யும் வழி தேடுவோம். இரக்கத்தின் உண்மையான அர்த்தம் அதுதான் !

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இவற்றை கதையாக படிக்கும் போதே மனசு பாரமாக இருக்கு. உண்மை என்கிறபோது என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவனவன் பிள்ளை இல்லை என்கிறான்.....

    பாத்திரங்களை சரியாக செதுக்கியிருக்கிறீர்கள். மனத்திரையில் படமாக ஓடுமளவுக்கு உங்களின் கதையோட்டம் உருக்கமாக இருந்தது. வாழ்த்துக்கள் ரவி அண்ணா..
    செல்வத்தில் எல்லாம் பெரிய செல்வம் மக்கட் செல்வம் என்று சொல்லுவார்கள் அன்பு ... ஆனால் பெண் குழந்தைகள் பிறந்தால் சீர் செய்து முடியாது என்று பிறந்த பெண் குழந்தைகளை கள்ளிப்பால் , நெல்மணி கொடுப்பது என்று பிள்ளைகள் உயிரை குடிக்கும் கம்சனுக்கும் பூதகிகளுக்கும் குறைவில்லாத ஊருக்கு பக்கத்தில்தான் இருக்கிறேன் அன்பு.

    இந்த மண்ணின் மைந்தர்களை மாற்ற அரசு எடுத்து வரும் முயற்சிகள் ( தொட்டில் குழந்தைகள் திட்டம் , ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்றவர்களுக்கு உதவி , பெண்களுக்கு திருமண உதவி ) ஓரளவு பயன் கொடுக்கிறது என்பது ஆறுதலான விஷயம். ஆனால் மக்களின் ஆசைகளுக்கு அணை போடுவது மட்டுமே நிரந்தர தீர்வு.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Lightbulb

    Quote Originally Posted by கீதம் View Post
    கதையைப் படித்தேன் ரவி. படித்தபின் உணர்ந்தேன், இது கதையல்ல, சில வயிற்றுப்பாடுகள் என்பதை!

    மனம் கனத்துத் திரும்பிப் போனேன். முடியாமல் மீண்டும் வந்தேன். கரம் கட்டிவிட்டிருந்த உணர்வுகளினின்று மீண்டு வந்தேன்.

    பெற்றக் குழந்தையை வீசியெறியும் தாய்மையை என்னல் தூற்றவோ சந்தேகிக்கவோ இயலவில்லை, நானும் ஒரு தாயாக இருப்பதால்! அந்தத் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பின்னணி பற்றியே யோசித்து மனம் குமுறுகிறது.

    மரித்த சிசுவை வைத்து பிச்சை எடுப்பவளையும் மனந்தூற்றவில்லை. மாறாய்... சடலத்தை வைத்து எத்தானை நாள் இவள் தன் சரீரம் காக்க இயலும் என்ற பச்சாதாபம் எழுகிறது.

    அவர்கள் நிலையில் ஒருநாளேனும் நாம் வாழ்ந்து பார்த்தால் ஓரளவேனும் பிடிபடலாம் ஒப்பனை உலகின் நிதர்சனம்.

    மனதில் அறைந்த நிகழ்வை யதார்த்தம் பிசகாமல் எழுத்தால் அறைந்தது அருமை. ஐந்து நட்சத்திரங்களே அதன் சாட்சி.

    என் எழுத்தின் வெற்றிக்கு பின்னே நீங்களும் சிவாஜி அண்ணாவும் ஆரேன் அண்ணாவும்தான் இருக்கிறீர்கள் .... சொல்லப்போனால் கதையின் கருவை தேர்வு செய்து கருத்து சிதையாமல் கொடுக்கும் வித்தையை உங்களிடம் இருந்து கற்றேன் ... ஒரு கருத்தை தரும் விதத்தில் சூழ்நிலையை அரவணைத்து அலுப்பு தட்டாமல் கொண்டு போகும் நேர்த்தியை சிவாஜி அண்ணாவிடம் இருந்தும் ஆரேன் அண்ணாவிடம் இருந்தும் கற்றேன். எனவே இந்த பெருமைகள் அனைத்தும் உங்கள் அனைவரையும்தான் சேரும்.

    காலையிலேயே பார்த்தேன் ... படித்து விட்டு போய் இருந்தீர்கள் ... பின்னூட்டம் ஏதும் போடாமல் .... அதனால் கதையை மீண்டும் ஒரு முறைக்கு இரு முறை படித்தேன் . என் மனதிற்கு திருப்தியாகவே இருந்தது. சரி ... அக்கா திரும்ப வருவீர்கள் என்று போனேன் . நான் நினைத்தது போலவே இப்போது நிறைவாக இருக்கிறது . சந்தோசம் அக்கா ....
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by ஜானகி View Post
    உண்மை பொட்டில் அறைகிறது......மலைத்து நிற்காமல், பரிகாரம் செய்யும் வழி தேடுவோம். இரக்கத்தின் உண்மையான அர்த்தம் அதுதான் !
    நன்றி அம்மா , மதுரை மண்ணுக்கு சில சிறப்புகள் உண்டு ... அண்ணல் காந்தி மக்களின் ஏழ்மையை கருத்தில் கொண்டு மேலாடையை துறந்தது இங்கேதான். அதே போல இப்போதும் சில மகான்கள் இங்கே வாழ்ந்து வருகிறார்கள் ... அவர்களை பற்றிய தகவலுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •