Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 17

Thread: பாடம் - யாருக்கு?

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0

    பாடம் - யாருக்கு?

    வெண்மதியைப் பெண்பார்க்க அளகேசன், அவனது பெற்றோர். இரண்டு இளைஞர் ஆக ஐவர் மட்டுமே வந்தனர்.

    அளகேசனைச் சுட்டிக்காட்டிய அவன் தந்தை , "இவன் என் மகன் அளகேசன்; அவர்கள் இணை பிரியா நண்பர்கள் " என்றார்.

    சம்பிரதாயப் பேச்சுக்குப் பின்பு மங்கையர் இருவர் வந்தமர்ந்தனர். " இதுதான் வெண்மதி, அது நெருங்கிய தோழி தடங்கண்ணி " என அரிமுகப்படுத்தினார் அறிவரசன்.

    அவர்களின்மீது பாய்ச்சிய முதல் பார்வையிலேயே அளகேசன் திடுக்கிட்டான், ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட அவனது நிலையே நண்பர்கள்து நிலையும்.

    இவர்களை நோக்கிய வெண்மதிக்கும் தடங்கண்ணிக்கும் அதிர்ச்சிதான்! தங்கள் வெறுப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டனர்.
    " தனியே எதுவும் பேச விரும்பினால் பேசலாம் " என்றார் அள்கேசனின் தந்தை

    அந்த நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவள் போல் வெண்மதி, "ஆமாம், பேசவேண்டும் " என உடனடியாகக் கூறினாள்.

    இருவரும் பக்கத்து அறையில் அமர்ந்தனர்.

    வெண்மதி தொடங்கினாள்:

    " என்னை இதற்குமுன் பார்த்திருக்கிறீர்களா?"

    "ஊகூம், பார்தததில்லை."

    "பொய் சொல்லாதீர்கள்; போன மாதம் நான் உங்க்கள் ஊருக்கு வந்தபோது கண்டீர்களே!"

    "இருக்கலாம், நினைவில்லை"

    "பாட்டெல்லாம் பாடினீர்கள்!"

    "அதற்கென்ன? பாட்டுப் பாடுவது தவறா?"

    "தவறா அல்லவா என்பது எந்தப் பாட்டை, எப்போது, யாரிடம், எந்த நோக்கத்தோடு பாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

    அவன் பதில் தர இயலாமையால் மௌனியானான்



    வெண்மதி," அன்று நீங்களும் நண்பர்களும் நடந்துகொண்ட விதம் உங்களுடைய அ.நாரிகக் குணத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்திவிட்டது; ஒழுக்கம் கெட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது" என்று அழுத்தந்த் திருத்தமாய்க் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

    விருந்தினர் விடை பெற்றுக்கொண்ட கையோடு அறிவரசனும் வெற்றிச்செல்வியும் மாப்பிள்ளை வீட்டார் பற்றி உயர்வான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர்.

    முட்டுக்கட்டை போட்டாள் வெண்மதி.

    "எனக்குப் பிடிக்கவில்லை, அப்பா!"

    " எது?"

    "இவனை நான் கட்டிக்கொள்ள மாட்டேன்"

    "ஏன்?"

    "இவன் ஒரு காலிப் பயல்."

    "என்னது? யார் சொன்னது?"

    "இவளைக் கேளுங்கள்."

    தடங்கண்ணி விளக்கினாள்:

    " நாங்கள் மாமல்லபுரம் சுற்றுலா போனபோது இவளையும் என்னையும் கேலி கிண்டல் செய்து, மட்ட ரக சினிமா பாட்டுப் பாடி இந்த மூன்று பேரும் தொடர்ந்து தொந்தரவு செய்தார்கள்; தலைவராய்ச் செயல்பட்டவர் மாப்பிள்ளை."

    வெற்றிச்செல்வி விசாரித்தார்:

    " நன்றாய்த் தெரியுமா, கண்ணி? இந்த ப் பிள்ளைகள்தான் அவர்கள் என்று உறுதியாகத் தெரியுமா? அவ்சரப் புத்தியால் ஆள் மாறாட்டமாகி மங்கல காரியம் நின்றுவிடக் கூடாது"

    "அம்மா, இவர்கள்தான் அந்தப் பொறுக்கிகள் என்பதற்கு அய்யமே இல்லை" என ஆத்திரத்தோடு சொன்னாள் வெண்மதி.

    " ஏதோ, வயதுக் கோளாறு; அதிகமாய் சினிமா பார்க்கிறதாலே வருகிற சின்ன புத்தி.திருமண்த்துக்குப் பின்னாலே எல்லாம் சரியாகிவிடும், வெண்மதி. இந்த மாதிரி நல்ல இடம் அமைவது கஷ்டம்."


    "இடத்தைக் காட்டிலும் மனிதர் தானே முக்கியம், அம்மா? அன்றைக்கு எனக்கு ஏற்பட்ட அவமானமும் ஆத்திரமும் கொஞ்ச நஞ்சம் அல்ல.இவனுடைய பேச்சும் நடத்தையும் அவ்வளவு கீழ்த்தரம். இவனாவது, திருந்துவதாவது? வேண்டாம் விஷ்ப் பரீக்ஷை. இவனுடன் வாழ நான் ஒருகாலும் சம்மதிக்க மாடேன்."

    அறிவரசன் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். சிந்தனையில் முற்போக்கும் செயலில் துணிச்சலும் பிறரின் நியாயமான கருத்தை ஏற்கும் மனப் பக்குவமும் உடைய அவருக்கு மகளின் கூற்று சரிதான் என்று பட்டதால், "வேறு வரன் பார்ப்போம்" எனச் சுருக்கமாய்ச் சொல்லி விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.


    அடுத்த மூன்று நாளில் அளகேசன் சரியாய் உண்ணாமல் உறங்காமல் சங்கடப்பட்டான். வெளியே தலை காட்டத் துணிவில்லை. "அவமானப்படுத்திவிட்டாளே!" என எண்ணி எண்ணிக் குமைந்தான். திரௌபதி தன்னை எள்ளி நகையாடியதை நினைத்து நினைத்துத் துரியோதனன் இப்படித் தான் பொருமியிருப்பான் போலும்

    "பழி வாங்கியே தீரவேண்டும், அதுவே என் மனப் புண்ணுக்கு மருந்து" என்று முடிவு செய்தான். நண்பர் இருவரிடமும் தன் உள்ள்க்கிடக்கையை வெளியிட்டான். அவனது நிலையை நன்கு புரிந்துகொண்ட அவர்கள் அலுவலகத்திலிருந்து அந்தச் சிறுக்கி வீடு திரும்புகையில் அடித்து உதைத்துத் தக்க பாடம் புகட்டுவதாய் உறுதி கூறி அவனுக்கு ஆறுதல் தந்தனர்.

    அவன் எச்சரித்தான்: "அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; என்ன இருந்தாலும் பெண், வாழ வேண்டியவள்"

    நடமாட்டம் குறைவாய் உள்ள தெரு வொன்றில் தக்க இடம் தேர்ந்து காத்திருந்தனர்.

    சற்று நேரத்தில், "அதோ வருகிறாள்" எனப் பரபரப்புடன் கூறினான் ஒருவன்.

    ஆம், வெண்மதி வந்துகொண்டிருந்தாள், இரு வீலரில்.

    மடக்கி அடிக்கத் தொடங்கியதும் வண்டியுடன் விழுந்தவள் சுதாரித்துக்கொண்டு அடுத்த நொடியில் எழுந்துவிட்டாள். அவளது கை கால்கள் இயந்திர கதியில் இயங்கி மிக வலுவான எதிர்த்தாக்குதலைத் தொடுத்தன. இதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் திடுக்கிட்டுத் தட்டுத் தடுமாறிச் சிறிது நேரம் சமாளித்துப் பார்த்துவிட்டுத் தலை தெறிக்க ஓட்டமெடுத்தனர்.

    கற்பிக்க வந்தோர் கற்பிக்கப்பட்டனர்.!

    செய்தி கேள்விப்பட்டுத் திரண்டு வந்த அக்கம்பக்கத்தாரிடம் வெற்றிச்செல்வி விளக்கினார்:
    " கராத்தேயில் கறுப்பு வார் வாங்கியிருக்கிறாள்.எட்டாம் வகுப்பு படித்தபோதே கற்க ஆசைப்பட்டாள். பெண்பிள்ளைக்கு இதெல்லாம் ஏன் என்று நாங்கள் கேட்டதற்கு, நாளைக்கு என்னை ஒருவனுக்குக் கட்டிக்கொடுப்பீர்களே. அவன் குடித்துவிட்டு அடிக்க வந்தால் தடுத்துக் கொள்ள வேண்டுமே! அதற்குத்தான் என்று அவள் சொன்னபோது எங்களுக்குச் சிரிப்பு வந்தது. இருந்தாலும் சின்ன வயதில் எவ்வளவு முன் யோசனை என்று வியந்து புகழ்ந்து விருப்பத்தை நிறைவு செய்தோம்.

    அவள் எண்ணப்படியே கராத்தே கை கொடுத்தது!

    "

  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    இன்றையப் பெண்கள் தற்காப்புக் கலையைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியத்தை அழகிய கதை மூலம் உணர்த்திவிட்டீர்கள். சிறப்பான சிந்தனைக்குப் பாராட்டுகள்.

    கதை மாந்தருக்கு தூயத் தமிழ்ப்பெயர்கள் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. கதையின் நாயகனின் பெயர் அளகேசன் என்றிருக்கிறதே... அழகேசன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அளகேசன் என்பதை முதன்முறையாய்க் கேள்விப்படுகிறேன். பொருள் விளக்கினால் மகிழ்வேன்.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    இன்றைய புதுமைப் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும். நல்ல கதை பாராட்டுக்கள் ஐயா!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தமிழில் தமிழ் பெயர்களை கொண்டு தூயதமிழில் முற்போக்கான ஒரு பதிவு ..இன்றைய பெண்களுக்கு இது போன்ற அறிவுரைகள் தேவைபடதேன்றே நினைக்கிறேன் ..ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தெளிவுற அறிவுடன் இருக்கிறார்கள் இதனை இன்றைய நாளிதழ்களில் காணும் போதே அறியமுடிகிறது ...தூய தமிழ் பெயர்கொண்டு தமிழுக்காக கதை புனைந்த ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள் ..தொடரட்டும் எழுத்து பணி..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா....தாமதமானாலும் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டது எவ்வளவு உபயோகமாகியிருக்கிறது...அள(ழ)கேசன்கள்...அழவேண்டியவர்களே....

    பாராட்டுக்கள் ஐயா.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இருமுறைப் பதிவாகிவிட்டது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வரவேற்கப்படவேண்டிய விடையம். இதுவே பரவினால் காவல்துறை எதற்கு??? பிற்போக்கு சிந்தனையுடையவர்கள் படிக்க வேண்டிய கதை.

    வாழ்த்துக்கள் ஐயா..
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by கீதம் View Post
    இன்றையப் பெண்கள் தற்காப்புக் கலையைத் தெரிந்திருக்கவேண்டிய அவசியத்தை அழகிய கதை மூலம் உணர்த்திவிட்டீர்கள். சிறப்பான சிந்தனைக்குப் பாராட்டுகள்.

    கதை மாந்தருக்கு தூயத் தமிழ்ப்பெயர்கள் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. கதையின் நாயகனின் பெயர் அளகேசன் என்றிருக்கிறதே... அழகேசன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அளகேசன் என்பதை முதன்முறையாய்க் கேள்விப்படுகிறேன். பொருள் விளக்கினால் மகிழ்வேன்.
    பாராட்டுக்கு மிக்க நன்றி.அழகேசன் என்பது தவறான சொல். அதை எப்படிப் பிரிப்பது? அழகு+ ஏசன் எனலாம். ஏசன் என்றால் என்ன? அழகு+ஈசன்= அழகீசன். அளகேசன் என்பது குபேரனின் பெயர். அளகா+ஈசன். அளகா என்பது அவனது ஊர். அளகாபுரி என்றும் சொல்லப்படும்.
    அளகா+ஈசன் வடமொழி. மகா+ஈஸ்வரி= மகேஸ்வரி என்பது போலப் புணரும்.

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by M.Jagadeesan View Post
    இன்றைய புதுமைப் பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும். நல்ல கதை பாராட்டுக்கள் ஐயா!
    பாராட்டுக்கு மிக்க நன்றி.

  10. #10
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by சொ.ஞானசம்பந்தன் View Post
    பாராட்டுக்கு மிக்க நன்றி.அழகேசன் என்பது தவறான சொல். அதை எப்படிப் பிரிப்பது? அழகு+ ஏசன் எனலாம். ஏசன் என்றால் என்ன? அழகு+ஈசன்= அழகீசன். அளகேசன் என்பது குபேரனின் பெயர். அளகா+ஈசன். அளகா என்பது அவனது ஊர். அளகாபுரி என்றும் சொல்லப்படும்.
    அளகா+ஈசன் வடமொழி. மகா+ஈஸ்வரி= மகேஸ்வரி என்பது போலப் புணரும்.
    அழகு+ஈசன் என்பதே மருவி அழகேசன் ஆனது என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் சரியான பெயரை அறிந்துகொண்டேன். விளக்கத்துக்கு நன்றி.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by நாஞ்சில் த.க.ஜெய் View Post
    தமிழில் தமிழ் பெயர்களை கொண்டு தூயதமிழில் முற்போக்கான ஒரு பதிவு ..இன்றைய பெண்களுக்கு இது போன்ற அறிவுரைகள் தேவைபடதேன்றே நினைக்கிறேன் ..ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் தெளிவுற அறிவுடன் இருக்கிறார்கள் இதனை இன்றைய நாளிதழ்களில் காணும் போதே அறியமுடிகிறது ...தூய தமிழ் பெயர்கொண்டு தமிழுக்காக கதை புனைந்த ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள் ..தொடரட்டும் எழுத்து பணி..
    உங்களின் பாராட்டுக்கு மிகுந்த அன்றி.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் சொ.ஞானசம்பந்தன்'s Avatar
    Join Date
    04 Sep 2009
    Posts
    1,295
    Post Thanks / Like
    iCash Credits
    31,979
    Downloads
    0
    Uploads
    0
    [QUOTE=சிவா.ஜி;526072]ஆஹா....தாமதமானாலும் தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டது எவ்வளவு உபயோகமாகியிருக்கிறது...அள(ழ)கேசன்கள்...அழவேண்டியவர்களே....

    பாராட்டுக்கள் ஐயா.[/QUOT
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •