Results 1 to 5 of 5

Thread: காலமே உனது கணக்கை நிறுத்து

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    12 Apr 2011
    Location
    விருப்பமில்லாத கொழும்பு
    Age
    36
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    15,794
    Downloads
    0
    Uploads
    0

    காலமே உனது கணக்கை நிறுத்து

    காலமே உனது கணக்கை நிறுத்து

    காலமே நீ எங்களுக்கு யார் ?
    காலம் காலமாய் காலம் ஒதுக்காமல் கேட்கிறேன்
    காலமே நீ எங்களுக்கு யார் ?

    நியாயம் இன்றி நீதி வழங்குகிறாய்
    நயவஞ்சகனா நீ ?
    உன்னை கடந்து சிந்தித்தால் தண்டனை பரிசு
    உன் கணக்கிலிருந்து
    கயவனா நீ ?

    எதிலும் நிறைந்திருக்கிறாய்
    எங்கும் பரந்திருக்கிறாய்
    காற்றிலும் நேற்றிலும் செறிந்திருக்கிறது உன் கணக்கு

    எல்லைகள் மீறப்படும் போதும்
    தொல்லைகள் விஞ்சப்படும் போதும்
    தர்மத்தை அழித்து கோரப்பட்களுடன்
    சிரிக்கும் தூய மகராசர்கள்
    அதர்மத்தை சிரத்தில் சுமக்கும் போதும்
    தன்னம்பிக்கை அற்ற என் பரிதாப மனிதர்கள்
    அவர்கணக்கை உன் கணக்கில் கண்ணீருடன் நிலையான வைப்பிளிடுகின்றனர்
    அப்படியானால் நீ கடவுளா ?
    அல்லது அவன் கணக்கே நீதானா?......
    காலமே கடவுளா நீ ?
    அல்லது அவன் போடும் கணக்கே நீதானா ?

    புரியவில்லை எனக்கு உன் பெயர்
    தெரியவில்லை எனக்கு உன் கணக்கு

    வந்து போன தடங்களை அழித்து
    வெந்த மனிதர் கதைகளை ஒழித்து
    கனவுடன் திரிந்தால் முகம் சுழித்து
    நெருப்பில் கிடந்தாலும் உனக்கு நெஞ்சம் உருகா
    கொடூரனா நீ ...?
    நெஞ்சம் உருகா கொடூரனா நீ ?...

    பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகளையும்
    மன வீடு புக நேற்றுதான் தயாரான இழனங்கைகளையும் சித்திரைமாதம் எப்படியும் முகத்திரை காட்டிவிடலாம்
    என்று 6 மாதம் குடத்தில் உயிர்காத்த குறை உயிர் சிசுவையும்
    விட்டுவைக்காமல்

    காலால் மித்தித்து, மார்புகளை வெட்டியும் , வயிற்ரை கிழித்தும் உயிர் பிடுங்கியவனை பார்த்து பொறுமையாக இருக்க சொல்கிறாய்
    நீ என்ன பேடி பயலா ...?

    காலமே நீ யார் எங்களுக்கு ?

    தெரியாமல் கேட்கிறேன்
    என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
    எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?

    நீயாக கூடி வரும்வரி காத்திருந்த என்
    பரம்பரையும்
    நாளாக நாளாக நோய் கொண்டு மாண்டனர்

    உன்னை மீறி உன் கணக்கை உலுக்கி
    உனக்காய் காத்திருந்தவரை உயிரோடு மண்ணில் கருக்கி
    சிரித்து நிற்பவர்கள் உன் தயவிலேயே மீண்டுக்கொண்டிருக்கின்றனர்

    தெரியாமல் கேட்கிறேன்
    என்ன செய்திருக்கிறாய் நீ எங்களுக்கு?
    எங்களின் எதை நிரப்புவதட்காய் உனக்கொரு கணக்கு ?


    ஆயிரம் ஆயிரம் மாந்தர்களும்

    இன்று விதவை கோலம் கொண்ட தெய்வங்களும்


    உயிர் பெறுமதி வேண்டாம் என்ற தங்கங்களும்

    வாழ்த்தென்ன வீழ்ந்தென்ன வெறுமைதானே
    பரிசாய் தந்தாய்
    30 ஆண்டு கடத்தி வெறுமையை தானே
    பரிசாய் தந்தாய்

    ஏன் என் இனம் உனக்கு ஈனமா?
    என் இனப்பிரவிகள் உனக்கு ஊனமா ?

    நூறாண்டு என்பது உன் கணக்கு படி
    சொற்பமாய் இருக்கலாம்
    முப்பதாண்டு என்பது உன் கணக்குப்படி
    அற்பமாய் இருக்கலாம்

    மாடுகளை அடைக்கும் கொட்டில் போன்றதொரு மடம்
    எங்கள் வாழ்விடம்
    அகலமாய் கை விரித்து சோம்பல் முறிக்க முடியாது
    எங்கள் உறைவிடம்
    உடுத்தி உடுத்து கிழிந்துபோன துணியும்
    இரும்புப்பெட்டிக்குள் பழைய மனிதர்களின் உருவப்படங்களும்
    மாதமானால் சம்பளம் வாங்கும் பட்டியலின் பொலுத்தீன் உரையையும் தவிர
    நூறாண்டுகளில் நீ தந்த பொங்கலும் இல்லை
    உன் கணக்கு தந்த இனிப்பும் இல்லை

    ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து
    கொளுந்துபரிக்கும் என் குல மங்கைகள் உன் குரல்வளை நெரிக்க விரைந்துவருகின்றனர்
    ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து

    நீ ஈனம் என்றெண்ணிய என் இன மாந்தர்கள் வெறியோடு உன்னை எதிர்த்து தீ மிதிப்பார்
    நீ ஊனம் என்றெண்ணிய என் இன இனப்பிறவிகள்
    ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து

    நூறாண்டுகளுக்கு முன்னாள் உன்னை காலால் எட்டி மிதித்த என் மீசைக்கார முப்பாட்டன்
    பாரதி மீது ஆணை ஏய் காலக்கொடூரனே உன் கணக்கை உடன் நிறுத்து www.natchathiraveedhiyil.blogspot.com

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    அவரவர் வினைப் பயனே காலமெனும் போர்வையில் வருகிறது.....இதனை உணர்ந்து, நாணல் போலப் பணிந்து, ஒதுங்கி நின்றால், காலத்தையும் வெல்லலாம்.....மீசைக்காரன் போல....

    எனினும், கொட்டியபின் குமுறல் சற்று குறந்ததா....இதுவும், காலத்தின் கோலமே....!

    காலத்தை நண்பனாக்கிக்கொள்....பாடம் கற்றுக்கொள்......ஆறுதல் கிடைக்கலாம்....

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    நீண்ட காலத்தைச் சுருட்டிக் கையில் வைத்திருப்பது எப்படி என்று சிறப்பாகச் சொல்கின்றன, கவிதையும் கவிதை பெற்ற விமர்சனமும்.

    பாராட்டுகள்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    காலத்தை கண்டித்தாலும் சரி
    தண்டித்தலும் சரி
    நடப்பது நடந்தே தீரும்

    மீண்டுவரும் நாள் தொலைவில் இல்லை
    என்ற நம்ப்பிக்கையோடு காத்திருப்போம்

    இதே காலத்தை மீண்டும் வாழ்த்திப் பாட


    ஏக்கமும் துக்கமும் தொனிக்கும் வரிகள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #5
    இனியவர் பண்பட்டவர் உமாமீனா's Avatar
    Join Date
    06 Oct 2010
    Posts
    989
    Post Thanks / Like
    iCash Credits
    8,989
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by Nivas.T View Post
    காலத்தை கண்டித்தாலும் சரி
    தண்டித்தலும் சரி
    நடப்பது நடந்தே தீரும்
    சரியாகா சொன்னிர்கள் தோழரே
    நன்றி...

    தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •