Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 30

Thread: செந்தமிழில் எண் கணிதம் - சொல்லாடல்கள்..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Post செந்தமிழில் எண் கணிதம் - சொல்லாடல்கள்..!!

    பண்டைய தமிழர் காலத்தில் இருந்து வந்த எண்களை எப்படி தமிழில் அழைத்தார்களென ஒரு திருமண வாழ்த்து மடலில் கண்டேன்..

    அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.


    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
    இலக்கம் - சொல்

    1 - ஒன்று
    3/4 - முக்கால்
    1/2 - அரை கால்
    1/4 - கால்
    1/5 - நாலுமா
    3/16 - மூன்று வீசம்
    3/20 - மூன்றுமா
    1/8 - அரைக்கால்
    1/10 - இருமா
    1/16 - மாகாணி(வீசம்)
    1/20 - ஒருமா
    3/64 - முக்கால்வீசம்
    3/80 - முக்காணி
    1/32 - அரைவீசம்
    1/40 - அரைமா
    1/64 - கால் வீசம்
    1/80 - காணி
    3/320 - அரைக்காணி முந்திரி
    1/160 - அரைக்காணி
    1/320 - முந்திரி
    1/102400 - கீழ்முந்திரி
    1/2150400 - இம்மி
    1/23654400 - மும்மி
    1/165580800 - அணு
    1/1490227200 - குணம்
    1/7451136000 - பந்தம்
    1/44706816000 - பாகம்
    1/312947712000 - விந்தம்
    1/5320111104000 - நாகவிந்தம்
    1/74481555456000 - சிந்தை
    1/489631109120000 - கதிர்முனை
    1/9585244364800000 - குரல்வளைப்படி
    1/575114661888000000 - வெள்ளம்
    1/57511466188800000000 - நுண்மணல்
    1/2323824530227200000000 - தேர்த்துகள்


    &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

    அளவைகள்

    @ நீட்டலளவு

    10 கோன் - 1 நுண்ணணு
    10 நுண்ணணு - 1 அணு
    8 அணு - 1 கதிர்த்துகள்
    8 கதிர்த்துகள் - 1 துசும்பு
    8 துசும்பு - 1 மயிர்நுணி
    8 மயிர்நுணி - 1 நுண்மணல்
    8 நுண்மணல் - 1 சிறுகடுகு
    8 சிறுகடுகு - 1 எள்
    8 எள் - 1 நெல்
    8 நெல் - 1 விரல்
    12 விரல் - 1 சாண்
    2 சாண் - 1 முழம்
    4 முழம் - 1 பாகம்
    6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
    4 காதம் - 1 யோசனை

    @ பொன்நிறுத்தல்

    4 நெல் எடை - 1 குன்றிமணி
    2 குன்றிமணி - 1 மஞ்சாடி
    2 மஞ்சாடி - 1 பணவெடை
    5 பணவெடை - 1 கழஞ்சு
    8 பணவெடை - 1 வராகனெடை
    4 கழஞ்சு - 1 கஃசு
    4 கஃசு - 1 பலம்


    @ பண்டங்கள் நிறுத்தல்

    32 குன்றிமணி - 1 வராகனெடை
    10 வராகனெடை - 1 பலம்
    40 பலம் - 1 வீசை
    6 வீசை - 1 தூலாம்
    8 வீசை - 1 மணங்கு
    20 மணங்கு - 1 பாரம்


    @ முகத்தல் அளவு

    5 செவிடு - 1 ஆழாக்கு
    2 ஆழாக்கு - 1 உழக்கு
    2 உழக்கு - 1 உரி
    2 உரி - 1 படி
    8 படி - 1 மரக்கால்
    2 குறுணி - 1 பதக்கு
    2 பதக்கு - 1 தூணி


    @ பெய்தல் அளவு

    300 நெல் - 1 செவிடு
    5 செவிடு - 1 ஆழாக்கு
    2 ஆழாக்கு - 1 உழக்கு
    2 உழக்கு - 1 உரி
    2 உரி - 1 படி
    8 படி - 1 மரக்கால்
    2 குறுணி - 1 பதக்கு
    2 பதக்கு - 1 தூணி
    5 மரக்கால் - 1 பறை
    80 பறை - 1 கரிசை
    48 96 படி - 1 கலம்
    120 படி - 1 பொதி
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. Likes neithal liked this post
  3. #2
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    14 Jun 2008
    Location
    தமிழ்நாடு, இந்தியா
    Posts
    164
    Post Thanks / Like
    iCash Credits
    14,054
    Downloads
    40
    Uploads
    0
    ஆச்சரியம் அதிசயம்
    தமிழன் பயன்படுத்தாதும் உண்டோ
    தொடர்ந்து வழங்குங்கள்
    நன்றி பூமகள்

  4. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இவ்வளவும் இருக்கா...????
    பதித்தமைக்கு நன்றி..பூமகள்!

  5. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நன்றிகள் ராஜேந்திரன் அவர்களே..
    எனக்கு கிடைப்பவற்றை நிச்சயம் பகிர்கிறேன்..!!
    முதல் பின்னூட்டமிட்டு ஊக்குவித்தமைக்கு நன்றிகள்..!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நன்றி மதி...

    இன்னும் கூட இருக்கலாம்.. மன்ற தமிழ் சான்றோர் வந்து சொல்வார்களென நினைக்கிறேன்..

    நமக்கு தெரிஞ்சதை எல்லாம் கொடுத்தாச்சுங்க...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  7. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    நன்றி தங்கையே....

    இதை எனது கோப்பில் இடப்போகிறேன்...

    அனுமதி தர முடியுமா..?
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  8. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    மன்றத்தின் பதிவுகள் அனைவருக்கும் சொந்தமே...!! எதற்காக அனுமதி எல்லாம்??
    தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் ஷிப்லி அண்ணா...!

    தவறுகள் இருப்பின் சுட்டியும் காட்டுங்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    மிக நல்ல பதிவு பூ!

    எத்தனை அளவு முறைகளை நடைமுறையில் இழந்திருக்கிறோம்..??
    இதில் உள்ளவற்றில் நான் கேட்டவை மிகச்சிலவே...

    முகத்தல் அளவிற்கும் பெய்தல் அளவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என கூற முடியுமா...?

    கஃசு என்பதுதான் காசு ஆனதா..?

    அறிந்ததை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி பூ.

  10. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    வீட்டில் அரிசி அல்லது அவல் அளக்கும் போது உளக்கு அல்லது படியில் அளப்பார்கள்...
    நெல் அளக்கும் போது அது மரக்கால் (மரைக்கால் என்று சொல்லுவாங்க) வைத்து அளப்பார்கள்...
    அதுவே நெல்லை கட்டு வைக்க வேண்டி "பறை அளவுக்கு நார் பெட்டி செய்து கட்டுவார்கள்....
    நிலத்தின் அளவை கூட ஏக்கருக்கு பதிலாக இன்றும் "மரைக்கால் விதைபாடு" என்ற அளவில் சொல்லுவார்கள்....

    குன்றுமணி அளவுக்கு.... என்றும்
    பாம்படங்களை "கழஞ்சு" அளவால் சொல்லுவதும் இன்னும் நியாபகம் இருக்கு...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  11. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இவ்வளவு நுணுக்கமாக பண்டைய தமிழனின் கணித அறிவு இருந்துள்ளமை வியப்புக்குரியதே...
    கணனி, கணினி என்பவற்றின் வரவுகள், மனித மூளையை எவ்வளவிற்கு மழுங்கடிக்க வைக்கின்றன என்பதற்கு இந்த அளவைகளே சாட்சி.
    அனைத்தையும் அறிந்த, பயன்படுத்திய தமிழன், இன்று இரவல் வாங்கி வாழ்வது வேதனைக்குரிய விடயமானாலும், தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பகிர்தலுக்கு நன்றி பூமகள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  12. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி பூ..!

    தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும், இவ்வளவு அளவைக்கூறுகள் இருக்குமா என்பது ஐயமே..

    அவ்வளவு நுண்மைத்திறம் படைத்த தமிழன் இப்போது எங்கே..?

  13. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post

    முகத்தல் அளவிற்கும் பெய்தல் அளவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என கூற முடியுமா...?

    முகத்தல்:- பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தலளவை ஆகும்.

    பெய்தல்:- நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தலளவை ஆகும்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •