Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 18

Thread: இருளும் ஒளியும்..!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    இருளும் ஒளியும்..!!



    உன் வானம் தூரல் போட்டு கொண்டாடும் பூவானம்..!
    என் வானம் துக்கத்தை மட்டுமே தூரலாக்கிச் சென்ற செவ்வானம்..!


    உன் கனவில் நீ இளவரசர்களின் இதயமெட்டு..!
    என் கனவில் நான் இம்சையரசரின் அடிமையிளஞ்சிட்டு..!


    உன் காதுகளில் சந்தோசங்கள் சஹானா ராகம் பாடும்..!

    என் செவிகளில் சங்கடங்களே சஹாரா முகாரி பாடும்..!



    உன் கைப்பையின் சொச்சமாய் இருக்கும் நாணயங்கள்..!!
    என் கிழிந்த சேலைநுனியின் மிச்சச் சொத்தாக நாணயங்கள்..!

    சிதறும் உன் சிரிப்பில் மிளிரும் உன் செழுமை..!!
    பதறும் என் பதபதைப்பில் மிரளும் என் வறுமை..!



    உன் கூந்தல் சிங்காரமாய் செலவாக்கி சிவப்பாகியிருக்கும்..!

    என் கூந்தல் செல்புசிக்கா எண்ணெயால் சிவப்பாகியிருக்கும்..!


    உன் வாயில் கொரித்துச் சிதறும் துண்டுகள்..!

    என் ஒரு வேளை ஆகாரத்துக்கு போதுமான துண்டுகள்..!!


    உன் செல்ல நாய்க்குட்டியின் சோப்புச் செலவு..!

    என் குடும்பத்தினரின் மொத்த உணவுச் செலவு..!

    உன் கிழிக்கப்பட்ட ஆடையால் புலப்படும் அங்கம் நாகரிகச் சின்னம்..!
    என் கிழிந்த உடையில் தெரியும் அங்கம் அவமானச் சின்னம்..!

    உன் செருப்பின் ஒரு ஜோடி விலை..!

    என் சேலையின் ஒன்பது ஜோடி விலை..!


    செயற்கை வெளிச்சத்தில் உன் வீட்டு மேல்சுவற்றில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்..!!

    இயற்கை வெளிச்சத்தில் என் வீட்டு மேல் கூரையின் சிரித்திடும் நட்சத்திரங்கள்..!!


    உன் பார்வை வெயில் படாத கருப்பு கண்ணாடியின் பின்..!

    என் பார்வை வெயில் பட்டும் கருத்த இருட்டின் முன்..!!


    இருட்டான என் உலகில்
    உன் வெளிச்சம் பதிக்க வரும்

    ஒளியாண்டு எப்போது??

    ஒளிந்திராமல் வருவாயோ??


    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    வாவ்! சூப்பர்ப்.....

    உன் கிழிக்கப்பட்ட ஆடையால் புலப்படும் அங்கம் நாகரிகச் சின்னம்..!
    என் கிழிந்த உடையில் தெரியும் அங்கம் அவமானச் சின்னம்..!

    செயற்கை வெளிச்சத்தில் உன் வீட்டு மேல்சுவற்றில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்..!!
    இயற்கை வெளிச்சத்தில் என் வீட்டு மேல் கூரையின் சிரித்திடும் நட்சத்திரங்கள்..!!

    என்ன அழகிய பொருத்தங்கள்! வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    வாவ்! சூப்பர்ப்.....
    என்ன அழகிய பொருத்தங்கள்! வாழ்த்துக்கள்!
    மிகுந்த நன்றிகள் ஷீ..!
    செயற்கை வெளிச்சத்தில் உன் வீட்டு மேல்சுவற்றில் பளிச்சிடும் நட்சத்திரங்கள்..!!
    இயற்கை வெளிச்சத்தில் என் வீட்டு மேல் கூரையின் சிரித்திடும் நட்சத்திரங்கள்..!!
    இங்கே நான் சொல்ல வருவது,

    ஒளிரும் நட்சத்திரங்கள் இரவில் ஒளிரச் செய்யும் பொருட்டு வீட்டின் மேல் கூரையில் வரைந்து அவற்றை நிஜ நட்சத்திரங்களாய் நினைத்து தூங்கும் மேல் தட்டு மக்களின் வாழ்வையும் ஏழையின் ஓட்டைக் கூரையில் தெரியும் வானத்து நிஜ நட்சத்திரங்களைக் கண்டு உறங்கும் கீழ் தட்டு மக்களின் வித்தியாசங்களையுமே..!!


    புரிந்து கொண்டு அழகாய் பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்..!

    மன்றத்தின் முத்தான கவிஞர் கையால் பாராட்டு கண்டு அளவில்லா மகிழ்ச்சி..!!
    Last edited by பூமகள்; 07-11-2007 at 09:31 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நான் நேராகச் சொல்லுகீறேனே... கவிதையில் வார்த்தைகள் பிடித்த அளவுக்கு கரு எனக்குப் பிடிக்கவில்லை. (என் கருத்து மட்டுமே சகோதரி)

    ஒவ்வொரு வார்த்தைகளும் பார்த்து பார்த்து கொடுத்த மாதிரி... குஞ்சுகளின் உணவுக்கு வாய்திறக்கும் காகம் போல,...

    பூவானம் - செவ்வானம்..

    பூக்கள் நிறைந்து கிடக்கும் பூவானம் நீயாக, என் வானம் பாலையின் நிறமான செவ்வானமாக...

    என் கூந்தல் செல்புசிக்கா எண்ணெயால் சிவப்பாகியிருக்கும்
    செல்புசிக்கா என்ற பதம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஷீ-நிசி சொன்னது போல சில வரிகள் அழகாக அமைந்திருக்கிறது..

    வார்த்தைகள் தேர்ந்தெடுத்த அளவுக்கு கரு தேர்வை சரியாக எடுத்திருக்கலாம். நூறு வருடங்களுக்கு முன்னமே இருந்தே ஏழை-பணக்காரன் வித்தியாசத்தைச் சொல்லிவருகிறார்கள்... அதில் புதிதாக சொல்ல வேறு என்ன இருக்கிறது? காதலைப் போல (நீங்கள் பணக்காரர்களின் பார்வையில் கவிதை எழுதியிருக்கலாம்.)

    உன் வெளிச்சம் பதிக்க வரும்
    ஒளியாண்டு எப்போது??
    ஒளியாண்டு என்பது நீண்ட நாட்கள் கொண்ட ஆண்டு... அதை ஒப்பிட்டது மிக அருமையாக இருக்கிறது..

    தலைப்பு : இருளும் ஒளியும்.... இரண்டுமே தேவை என்பதால்தான் இறைவன் இருளை ஒளியாக்காமல் வைத்திருக்கிறானோ?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    எழை பணக்காரன் வித்தியாசம் இருப்பதை காலம் காலமாக கவிஞர்கள் சொன்னாலும், அதை சொல்வதில் தான் வித்தியாசம் படுகிறார்கள்.அந்த வகையில் பூமகளுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாவ் சிந்திக்க தூண்டும்... வித்தியாசங்கள்......

    அருமையான வரிகள் பூ...

    கடைசியில் நச்சென முடிவு.. தொடரட்டும்.... உம் படைப்புக்கள்

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    வெளிச்சம்..
    குறைந்த இருட்டு
    இருட்டு..
    குறைந்த ஒளிர்வு.


    உன்னுடன்
    யாரையும் ஒப்பிடாதே..
    உன்னையே நீ
    குறைந்து மதிப்பிடாதே...
    ஒஷொ சொன்னது..

    வார்த்தைகள் ஆறாக வசீகரிக்க...
    அர்த்தம் ஆறிய கஞ்சியாக....

    உன் கனவில் நீ இளவரசர்களின் இதயமெட்டு..!
    என் கனவில் நான் இம்சையரசரின் அடிமையிளஞ்சிட்டு..!

    இவ்வரிகளை புரிய வைக்க
    வேண்டுகோள் வைத்து
    வாழ்த்தி விடைபெறுகிறேன்...!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வார்த்தைகள் வளம் சிறப்பு.

    ஒப்பீட்டிலேயே கவிதை.. அதிலும் செவ்வானத்தை சோகமாக்கி புதியதாக ஒரு ஒப்பீடு!!

    "என் கூந்தல் செல்புசிக்கா எண்ணெயால் சிவப்பாகியிருக்கும்..!" − இந்த வரி தவறாக புரிந்து கொள்ளப்படவும் வாய்ப்பிருக்கிறது.

    கடைசி வரிகள் தோழியை நோக்கி வீசப்பட்டவையா..? அல்லது ...!

    உங்கள் கவிப்பயணம் சீராக முன்னேறி வருகிறது. வாழ்த்துக்கள்.

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    உன் கனவில் நீ இளவரசர்களின் இதயமெட்டு..!
    என் கனவில் நான் இம்சையரசரின் அடிமையிளஞ்சிட்டு..!


    இவ்வரிகளை புரிய வைக்க
    வேண்டுகோள் வைத்து
    வாழ்த்தி விடைபெறுகிறேன்...!

    நீ இளவரசனின் இதயம்
    நான் இம்சை அரசனின் அடிமை....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by ஆதவா View Post
    நீ இளவரசனின் இதயம்
    நான் இம்சை அரசனின் அடிமை....
    இம்சை என்னும் அரசரா?
    இம்சை செய்யும் அரசரா?
    இம்சை செய்யும் அரசராயின் யாரந்த அரசர்???
    Last edited by அமரன்; 07-11-2007 at 05:35 PM.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இருவேறு துருவங்கள்... வளமை Vs வறுமை!
    இருவருக்கும் ஒற்றுமை .. இளமை & பெண்மை!

    வித்தியாசங்கள் முகத்திலறைய
    முத்திரையாய் வரிகள்..

    குறிப்பாய் எண்ணெய், நட்சத்திரம், செவ்வானம்..

    பாராட்டுகள் பூமகள்... (மன்றத்தின் பாமகள்..)

    இத்தனை மேடுபள்ளம் ஏன்?
    மேடுகள் இடிபட வேண்டாம்
    பள்ளங்கள் தூர்ந்து வாராதா????
    நெடுங்கால நல்லிதயங்களின் ஏக்கம்...
    இன்னும் நீடிக்கிறது... அதனால்
    இவ்வகைப் படைப்புகளும் ..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    நான் நேராகச் சொல்லுகீறேனே... கவிதையில் வார்த்தைகள் பிடித்த அளவுக்கு கரு எனக்குப் பிடிக்கவில்லை. (என் கருத்து மட்டுமே சகோதரி)

    வார்த்தைகள் தேர்ந்தெடுத்த அளவுக்கு கரு தேர்வை சரியாக எடுத்திருக்கலாம். நூறு வருடங்களுக்கு முன்னமே இருந்தே ஏழை-பணக்காரன் வித்தியாசத்தைச் சொல்லிவருகிறார்கள்... அதில் புதிதாக சொல்ல வேறு என்ன இருக்கிறது? காதலைப் போல (நீங்கள் பணக்காரர்களின் பார்வையில் கவிதை எழுதியிருக்கலாம்.)
    முரணாக எழுத விழைந்து முளைத்தது இக்கவி..!!
    கரு பழையது.. காரம் புதியதே...!!
    வித்தியாசங்கள் வித்தியாசப்படுத்தி இக்காலத்தை இயற்ற எண்ணினேன்..!!!
    பிழை எதுவும் வரியிலில்லை என்பது ஆறுதல்...!
    கவர்ந்த வரிகள் சொன்ன விதம் கவியழகைக் கூட்டியதே..!!

    நன்றிகள் ஆதவா நெடிய விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •