Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: எனக்கென்று ஒரு மனம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0

    எனக்கென்று ஒரு மனம்

    அன்பார்ந்த மன்றத்து சொந்தங்களுக்கு வணக்கம்...!!!
    இந்தக் கதை என் சிந்தனைக்கும் என் எழுத்துக்கும் பிறந்த முதல் குழந்தை..
    இந்தக்குழந்தையை சீராட்டி பாராட்டி குறைகள் இருந்தால் குட்டி என் சிந்தையை ஊக்குவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    எனக்கென்று ஒரு மனம்

    என் பெயர் ஜூலி. எனக்கு வயது இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிறது.
    என் பக்கத்து வீட்டு அக்கா பெயர் கேத்ரீனா. நானும் கேத்ரீனாவும் நல்ல தோழிகள். அவள் U.K.G படிக்கிறாள். பள்ளி முடிந்ததும் என்னுடன் விளையாட வருவாள். ஆனால் அந்த தோழமையே என் மனதில் பல வேண்டாத ஏக்கங்களையும் கேள்விகளையும் உண்டு பண்ணியது. அந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.

    என்னடா இது ! மூன்று வயதுகூட முடியாதவளா இப்படி எல்லாம் சிந்திப்பாள்? என்று நீங்கள் சிந்திக்கக் கூடாது. என் அனுபமே இப்படி என்னை சிந்திக்க வைத்தது.

    அவளுக்கு மட்டும் அன்பு காட்ட அவள் வீட்டில் போட்டி போட்டனர். ஆனால் எனக்கு? கேத்ரீனா நல்ல சிகப்பு நிறம். புசு புசு கன்னங்கள். சின்ன அழகான உதடுகள். கோழி முட்டை கண்கள். அதை உருட்டி உருட்டி உதடுகள் குவித்து பேசும் அழகு உள்ளதே...! அதைப்பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றும். ஆனால் நான் நல்ல கருப்பு. சின்ன முட்டைக்கண்கள். அதனால் தான் யாருக்கும் என்னை பிடிக்கவில்லையோ?

    அவள் அம்மா அவளுக்கு குளிக்க தினமும் போராடுவாள். குளிக்க மாட்டேன் என அழுது அடம் பிடிப்பாள். சாப்பாடு பிசைந்து ஊட்டும்போதும், தூங்க வைக்கும்போதும் மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்வாள். அப்போதும் அவள் அம்மா செல்லம் கொஞ்சுவாள்.
    இதை எல்லாம் பார்க்கும் பொது எனக்கு ஏக்கமாக இருக்கும். என் வீட்டு அம்மா வேண்டா வெறுப்பாக வாரம் ஒரு முறை மட்டும் குளிக்க வைப்பாள்.
    வெறும் சோற்றை பாலுடன் கலந்து பிசைந்து தட்டில் கொட்டி விட்டு போவாள். அவ்வளவு தான்.
    என்னால் கையில் எப்படி எடுத்து சாப்பிட முடியும்? கீழே சிந்தினால் சின்ன குச்சியால் அடிப்பார்கள்.
    வலி உயிரே போகும் தெரியுமா? என்னால் வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாது என்ற தைரியத்தினால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்களா?.

    அவளுக்குத்தான் எத்தனை பொம்மைகள். எனக்கு ஒன்றுகூட இல்லை தெரியுமா?
    கேத்ரீனாவை அவளின் அம்மா தன் மடியில் படுக்க வைத்து தாலாட்டு பாடியபடி தட்டிக் கொடுப்பாள். அவளும் அப்படியே சுகமாக உறங்குவாள். ஆனால் நானோ வீட்டின் மூலையில், எனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் பாவமாய்.??..
    சத்தமாக அழ வேண்டும் என தோன்றும். ஆனால் சத்தம் போட்டால், அனைவரும் "சனியனே ஏன் சத்தம் போட்டு தூக்கத்தைக் கெடுக்கிறாய்?" என திட்டுவார்கள். அதற்கு பயந்துகொண்டு அமைதியாய் இருப்பேன்.

    என்னை விட வயதில் மூத்த கேத்ரீனவுக்கு கிடைத்த அன்பும் பாசமும் ஆசையான முத்தங்களும் ஏன் எனக்கு கிடைக்கவில்லை?

    ஒருவேளை நானும் என் அம்மாவுடன் இருந்திருந்தால் எனக்கும் இதெல்லாம் கிடைத்திருக்குமோ? அவளாவது வாயை திறந்து கேட்க முடியும். ஆனால் நான் அவளைப்போல் கேட்க முடியாதே...

    என் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். என் கதையைக் கேட்டால் உங்களுக்கே என்மீது பரிதாபம் பிறக்கவில்லையா?
    நான் இந்த உலகில் நாயாகப் பிறந்தது என் தவறா?
    நீங்களே சொல்லுங்கள்.....??!!!
    Last edited by samuthraselvam; 16-02-2009 at 07:22 AM.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ஜூலி இது மட்டும் மனுசங்களுக்குத் தெரிஞ்சது உன்னோட நிலைமை இன்னும் மோசமாகிப் போகும்..

    பொதுவாவே ஏழை வீட்டிலிருக்கிற எல்லாக் குழந்தைகளுக்கும் வரூகிற ஏக்கம்தான் இது...

    அது நாயாப் பொறந்தா மட்டுமில்லை...

    உனக்கு சோறுபோடவாவது வீட்டு அம்மா இருக்காங்க. பல மனுஷக் குழந்தைகள் பிச்சையெடுத்து பல பெரியவங்களைக் காப்பாத்திகிட்டு இருக்காங்க தெரியுமா.. ஆறு மாசக் குழ்ந்தைங்க வேகாத வெய்யிலில் அழுக்கு பால்புட்டியோட பலரோட பரிதாபத்தைச் சந்திச்சி சம்பாதிக்கறாங்க தெரியுமா?

    அம்மா கொடுக்கிற பால்சோறும், ஓரமா தூங்க ஒரு நிழலும் இல்லாத அந்தக் குழந்தையா நம்மளைப் படைக்கிலியேன்னு நாம் நம்ம மனசைத் தேத்திக்கணும்..

    குழந்தைங்க விளையாட முடியாம போறதை விட மிகப் பெரிய சோகம் ஒண்ணுமே இல்லை..

    கூட விளையாட கேத்ரீனாவைக் கொடுத்த ஆண்டவனுக்கு நாம நன்றி சொல்ல வேண்டாமோ?

    நமக்கு அலங்காரமான பொம்மைகள் கூட வேணாம் ஜூலி... ஒரு சின்ன குச்சி, ஒரு சின்ன உருண்டையான யாருக்கும் தேவையில்லாம போயிட்ட பந்து.. இப்படி இருக்கறதை வச்சு மகிழ்ச்சியா வாழ நம்மால முடியும். மத்தவங்களுக்கு இந்த சந்தோஷ ரகசியம் தெரியாது..

    அம்மா முத்தம் தராட்டி என்ன? அவங்களுக்கு ஆயிரம் கவலை. அவ சாப்பாடு தர வரும்பொழுது நாம அவங்க காலுக்கு முத்தம் கொடுத்து வாலால டாட்டா காட்டி அவங்களைச் சந்தோசப்படுத்துவோம். .

    இல்லாததை நினைச்சு அழவேண்டாம். இருக்கறதை வச்சு சந்தோஷப் படுவோம். அம்மா சந்தோஷமா இருந்தாங்கன்னா இன்னும் நிறைய சம்பாதிப்பாங்க... அவங்க சந்தோஷம் அதிகமான நமக்கு பொம்மைகள் கிடைக்குதோ இல்லையோ பாசம் இன்னும் நிறையக் கிடைக்கும்..

    அம்மா வர்ராப்பல இருக்கு. வா வாசப்பக்கம் போயி வாலாட்டி வரவேற்போம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஏக்கம் கலந்த பதிவு. அதற்கு பதி்ல் என்ற போர்வையில் பரிகாரம் இரண்டும் அழகாக உள்ளது... மனிதருக்கும் இவ்வாறான ஏக்கங்கள் உள்ளனவே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    வாழ்த்துக்கள் பாசமலரே
    முதலில் உன்னுடைய முதல் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பலரை கதாசிரியராக மாற்றிய பெருமை நம் மன்றத்திற்கு உண்டு, உன்னையும் நம் மன்ற மக்கள் அப்படி மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சரி கதையை பற்றி வருவோம்.

    முதலில் கதையின் கருவுக்கு ஒரு சபாஷ், அதை வித்தியாசமாக சொல்லி இருக்கிறாய் அதற்கு ஒரு சபாஷ். கதையில் இரண்டு இடத்திற்கும் பொருந்தும் வார்த்தை பிரியோகம் நல்லா இருக்கிறது, குட்டி கதைகள் வகேரா வை சேர்ந்தது இந்த கதை என்று நினைக்கிறேன், நாய்களும் இப்படி நினைக்க கூடும் என்று இந்த கதையை படித்தவுடன் தான் சிந்தித்தேன். ஆசை, பாசம், காதல், கோபம் போன்ற உணர்வுகள் அனைத்து உயிரணங்களுக்கும் சொந்தம் என்று சொல்லும் அருமையான கதை, வித்தியாசமான கதையும் கூட,

    நல்ல கருக்களை தேர்ந்து எடுத்து, அதை வித்தியாசமாக சொல்லி வாசகர்கள் மனதில் பதியவைத்து விட்டால் போதும், நீ சிறந்த கதையாசிரியர் ஆகி விடலாம். ஆனால் ஒரே பிரச்சனை ஒவ்வொரு முறையும் நீ கதையை எழுதும் பொழுதும் இதை நினைத்துக் கொண்டு எழுத வேண்டும், ஒரு கதையுடன் நிறுத்திவிடக்கூடாது.

    முதல் முயற்சியில் வெற்றி அடைந்ததுக்கு வாழ்த்துக்கள்.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    முதலில் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள். பதில் கதை மூலம் தாமரை அண்ணாவும் கதை கட்டமைப்பை தக்சும் அலசி உங்களுக்க்கு புத்தூக்கம் அளித்து விட்டார்கள். இன்னும் எழுதிட வாழ்த்துகள் லீலுமா.

  6. #6
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    தங்களின் முதல் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்ல வந்த கதைக்கருவை அழகாக சுருக்கமாக கொடுத்து உள்ளீர்கள் நெகிழ வைத்த கதை பாராட்டுக்கள்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    கதைக்கு நா(ய்)யகியாய் வந்த ஜூலிக்கு பதில் கொடுத்து அதன் ஏக்கங்களைப் போக்கிய தாமரை அண்ணாவுக்கு நன்றி...!

    அன்புரசிகருக்கும் என் நன்றிகள்...

    தம் அண்ணா...! தலைப்பு இப்போது சரிதானே? நன்றி அண்ணா.. இது போன்ற ஊக்கமான வார்த்தைகள் தான் மனிதனை உயர்த்தவும் உயிர்ப்பிக்கவும் உதவும்.

    அமரன் அவர்களுக்கும் அருண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி....!!
    வாழ்த்துக்களே மனிதனை வானம் வரை உயர்த்தும்......
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    என் மனங்கவர்ந்த கதை.....
    வாழ்த்துக்கள் தங்கள் முதல் படைப்பிற்கு...
    இத்தகைய படைப்புக்களுக்கென்று ஒரு வரவேற்பு எப்போதுமே... வாசகர்கள் மத்தியில் உண்டு.
    வாசகர்கள் மனதில் ஒன்றை நினைக்கச் செய்து விட்டு முடிக்கும் போது பொருந்துகின்ற இன்னொன்றாக முடிப்பது.
    ஒரு கதையைச் சொல்லி அதன் ஊடே இன்னொரு கதையையும் உணரவைப்பது..
    மனிதக் குட்டியானாலும் நாயின் குட்டியானாலும் ... உயிர்கள் அனைத்தும் ஏங்குவது அன்பிற்காகத்தான்.
    எப்போதுமே இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை தான். கேத்ரீனா சொல்லக் கூடும் அவள் தனியாக வளர்கிறாள். அவளைச் சுயமாகச் செல்ல விடுகிறார்கள். ஆனால் என்னை அதீத அன்பு காட்டிச் சிறையாக்கியுள்ளார்கள் என்று.
    நிற்க....
    நாய்களுக்கெல்லாம் பள்ளி ஆரம்பித்து விட்டார்களா? எப்போது யுகேஜி படிக்க ஆரம்பித்தது?
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by செல்வா View Post
    நாய்களுக்கெல்லாம் பள்ளி ஆரம்பித்து விட்டார்களா? எப்போது யுகேஜி படிக்க ஆரம்பித்தது?
    உலகமே ஒரு பள்ளிதானே செல்வா.

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    பாராட்டுக்களுக்கு நன்றி செல்வம்..

    Quote Originally Posted by செல்வா View Post
    என் மனங்கவர்ந்த கதை.....
    வாழ்த்துக்கள் தங்கள் முதல் படைப்பிற்கு...
    இத்தகைய படைப்புக்களுக்கென்று ஒரு வரவேற்பு எப்போதுமே... வாசகர்கள் மத்தியில் உண்டு.
    வாசகர்கள் மனதில் ஒன்றை நினைக்கச் செய்து விட்டு முடிக்கும் போது பொருந்துகின்ற இன்னொன்றாக முடிப்பது.
    ஒரு கதையைச் சொல்லி அதன் ஊடே இன்னொரு கதையையும் உணரவைப்பது..
    மனிதக் குட்டியானாலும் நாயின் குட்டியானாலும் ... உயிர்கள் அனைத்தும் ஏங்குவது அன்பிற்காகத்தான்.
    எப்போதுமே இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை தான். கேத்ரீனா சொல்லக் கூடும் அவள் தனியாக வளர்கிறாள். அவளைச் சுயமாகச் செல்ல விடுகிறார்கள். ஆனால் என்னை அதீத அன்பு காட்டிச் சிறையாக்கியுள்ளார்கள் என்று.
    நிற்க....
    நாய்களுக்கெல்லாம் பள்ளி ஆரம்பித்து விட்டார்களா? எப்போது யுகேஜி படிக்க ஆரம்பித்தது?
    கேத்ரீனா மனித குட்டி தான். ஜூலி உடன் விளையாட வரும் சின்னப் பெண். குழந்தைகளுக்கு நாய் என்றாலே மிகவும் பிடிக்கும் இல்லையா? (ஒரு சிலருக்கு மட்டும் அவை அலர்ஜி & பயம்!!)
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    கேத்ரீனா மனித குட்டி தான். ஜூலி உடன் விளையாட வரும் சின்னப் பெண். குழந்தைகளுக்கு நாய் என்றாலே மிகவும் பிடிக்கும் இல்லையா? (ஒரு சிலருக்கு மட்டும் அவை அலர்ஜி & பயம்!!)
    ஓ... எனது புரிதலில் தான் தவறு.
    இது புரிந்தபின் இன்னும் படைப்பின் மீதும் படைப்பாளியின் மீதும் மரியாதை அதிகரிக்கிறது.
    மீண்டும் வாழ்த்துக்கள்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனி பாணி உண்டு. அது அவர்கள் எழுத எழுத தானே உருவாகும்.. எந்த பாணியும் உயர்வு தாழ்வு இல்லை, பொதுவா நம்மிடம் நேரடியா பேசற மாதிரியான பாணி ஒற்றைக் கதாபாத்திர கதைகள் இருக்கும். பூமகளின் அச்ச(சு)கப் பிழை (பண்பட்டவர் பகுதிகளில் இருக்கு) இதே மாதிரியான கதை. தங்கை வேண்டி விரும்பிக் கேட்டதால அந்தப் பாணியைப் பற்றிய சில டிப்ஸ்களை அங்க குடுத்திருப்பேன்,

    இங்க சிம்பிளா சொல்லணும்னா நல்ல நடை இருக்கு.. தெளிவான நீரோட்டம் போல வரிசையா புலம்பல்கள்..

    ஒரு கதைக்கு முக்கியமான இரண்டு விஷயம் கரு, இரண்டாவது பிரசண்டேஷன். எப்படி நாம் கதையை வடிவமைக்கிறோம் என்பது,

    ஒரு சின்னக் குழந்தையின் ஏக்கம் தொனிக்கும் விதத்தில் கதையைக் கொண்டு போனது நல்லது. எனக்கு முதல்ல நாய் தெரியலை ஏன்னா இரண்டரை வருஷத்தில நாய் பெரிசாகி இல்லாத ரவுசெல்லாம் பண்ண ஆரம்பிச்சிடும் . (Adolescence for most domestic dogs is around 12 to 15 months, beyond which they are for the most part more adult than puppy.)

    இதை தயவு செய்து படிக்காதீங்க..

    http://en.wikipedia.org/wiki/Dog#Reproduction

    இரண்டாவது விஷயம், யாருமே கவனிக்க மாட்டாங்க. இதுக்கு தாமரை மார்க் விளக்கெண்ணெய் கண்ணில விட்டுகிட்டு பார்த்தாதான் தெரியும்.

    என் பெயர் ஜூலி. எனக்கு வயது இரண்டு வருடமும் இரண்டு மாதங்களும் ஆகிறது. என் பக்கத்து வீட்டு அக்கா பெயர் கேத்ரீனா. நானும் கேத்ரீனாவும் நல்ல தோழிகள். அவள் U.K.G படிக்கிறாள். பள்ளி முடிந்ததும் என்னுடன் விளையாட வருவாள். ஆனால் அந்த தோழமையே என் மனதில் பல வேண்டாத ஏக்கங்களையும் கேள்விகளையும் உண்டு பண்ணியது. அந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் கூற வேண்டும்.


    இப்படி ஆரம்பிச்சிட்டு

    அவளாவது வாயை திறந்து கேட்க முடியும். ஆனால் நான் அவளைப்போல் கேட்க முடியாதே...

    இப்படிக் கேட்கிறப்ப, சின்ன புன்முறுவல் தோணுது..

    இருந்தாலும் கதையின் வசனக் கோர்வையில் மனசைக் கட்டிப் போடற மாயை இருக்கு,


    அப்பா எனக்கு பொம்மை வாங்கித்தாங்கப்பா என்ற குட்டிப் பெண்ணின் ஏக்கப் புலம்பலை சரியா படம் பிடிச்சு இருக்கீங்க.

    வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய எழுதுங்க,
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •