Results 1 to 7 of 7

Thread: மறுபடியும் இறந்தேன்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0

    மறுபடியும் இறந்தேன்

    விவரம் தெரிந்த நாள்முதலாய் எனக்கு
    எதைக் கண்டாலும் பயம் ! யாரைப் பார்த்தாலும் பயம் !
    இருட்டைக் கண்டால் பயம் !
    இரவிலே தனியாகச் செல்வதற்குப் பயம் !
    பல்லியைக் கண்டால் பயம் ! பாச்சையைக் கண்டால் பயம் !
    வாசலில் குடுகுடுப்பை வந்தால் பயம் !
    போலீஸ்காரன் தெருவிலே சென்றால் பயம் !

    பள்ளிசெல்லும் வயது வந்தது ; பயமும் என்னைத் தொடர்ந்து வந்தது !
    ஆசிரியரைக் கண்டால் பயம் ! அடிப்பாரோ என்ற பயம் !
    கணக்குப் புத்தகத்தைக் கண்டாலே பயம் !
    பரீட்சை என்றாலோ பயமோ பயம் !
    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு வந்தது .
    முதன்முதலாக பயத்தால்
    செத்துப் போனேன் ஒவ்வொரு நாளும் !
    பரீட்சை முடிந்தது ; மீண்டும் பிறந்தேன் !

    காலம் உருண்டது ; கவலையும் வளர்ந்தது
    படிப்பும் முடிந்தது ; பட்டங்களும் பெற்றேன் !
    பணிக்குச் செல்ல முயற்சிகள் தொடர்ந்தன !
    நேர்காணலுக்கு அழைப்பு வந்தது !
    நேர்காணலில்
    என்ன கேட்பானோ ? ஏது கேட்பானோ ?
    கேலிசெய்து என்னைக் கேவலம் செய்வானோ ?
    என்றெல்லாம் எண்ணியே வருந்தினேன் நாளெல்லாம் !
    நேர்காணல் அன்றுதான் இரண்டாம் முறையாக
    மறுபடியும் இறந்தேன் ; ஆனாலும்
    நேர்காணல் எல்லாம் நேர்த்தியாய் முடிந்திடவே
    மறுபடியும் பிறந்தேன் ; வேலையில் சேர்ந்தேன் !

    தவமாய் தவமிருந்து பெற்ற மகளுக்குத்
    திருமணம் செய்து அழகு பார்க்க
    என்னைப் பெற்றோர் நாள் குறித்தனரே !
    திருமண நாளில்
    காளை ஒருவனுக்குக் கழுத்தை நீட்ட
    மங்கல நாணை அவனும் கட்ட
    அன்றுமுதல்
    ஜானகியாய் இருந்த நான் ஜானகிராமன் ஆனேன் .

    இராமன் என்ற பெயருக்கேற்ப
    ஒரு இல் , ஒரு சொல் ,ஒரு வில் என்றே
    இருப்பான் என்றே எண்ணியிருந்தேன் .

    தாய்வீடு சென்றேன் ; தலைப் பிரசவத்திற்கு !
    தலைப் பிரசவம் பெண்ணுக்கு மறுபிறவி என்பார் .
    பிரசவ நாளில் வலியால் துடித்தேன்!
    மறுபடி இறந்தேன் ; மீண்டும் பிறந்தேன் !
    கண்விழித்து பார்க்கையில்
    செக்கச் செவேலென்ற பெண்குழந்தை ஒன்று
    பக்கலில் இருக்கப் பரவசம் அடைந்தேன் !
    கணவன் இராமனின் திருமுகம் நோக்கிக்
    கண்கள் பனிக்க நெஞ்சம் நெகிழ்ந்தேன் !

    நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்
    குழந்தை வளர்ந்தது ; ஓராண்டு சென்றது .

    முதலாம் பிறந்தநாள் கொண்டாட எண்ணியே
    மதலையைச் சுமந்து நானும் அவரும்
    துணிமணி எடுக்கக் கடைக்குள் நுழைந்தோம்.

    அங்கே

    ஆறே வயது நிரம்பியசிறுவன்
    பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்
    " அப்பா ! " என்றே அருகில் வந்து
    கணவனின் காலைக் கட்டிக் கொள்ள

    நானும் பிள்ளையின் திருமுகம் நோக்கி

    " தம்பி ! இவருன் அப்பா அல்ல !
    தவறாய் நீயும் புரிந்து கொண்டாய் !
    தனியாய் இப்படி வருதல் தகுமோ ?

    என்றே கேட்க ; அதற்கு அவனோ

    " ஐயோ !

    இவர்தான் என்னைப் பெற்ற அப்பா !
    இராமன் என்பது இவரது பெயராம்
    ஜானகி என்பது உங்கள் பெயராம்
    அம்மா எனக்குச் சொல்லிக் கொடுத்தாள் ! "
    என்றே சொல்லி தொலைவில் நின்ற
    பெண்ணைக் காட்டி " அம்மா " என்றான் .

    அதிர்ச்சியில்

    கணவன் இராமனின் முகத்தை நோக்கக்
    கள்வன் அவனோ தரையைப் பார்க்க
    எல்லாம் புரிந்தது; எல்லாம் முடிந்தது
    ஆயிரம் இடிகள் ஒன்று சேர்ந்து
    தலையில் இறங்கிய வலியை உணர்ந்தேன்
    கண்கள் இருண்டன ; காதுகள் அடைத்தன
    நெஞ்சை மெல்ல இறுகப் பிடித்து
    மண்ணில் சாய்ந்தேன் ; மறுபடியும் இறந்தேன்
    ஆனால் மீண்டும்
    எழவே இல்லை ! எழவே இல்லை !
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    கவிதைக்குள் ஒரு கதை. பாராட்டுக்கள்

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    இதற்கு ஜானகி இறந்திருக்க தேவையில்லை.
    இருக்கும் மகளுக்காக மனம் இறுக்கி இருந்திருக்க வேண்டும்.

    ஜானகிக்காக உச்சு கொட்டலாம்.
    உதாரணி ஆக்கிக் கொண்டாட முடியாது.

    இராமன்களால்/ளுக்காக மட்டுமே ஜானகிகள் இல்லை.

    எம் ஜெகதீசனுக்கு பாராட்டுகள்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by ravisekar View Post
    இதற்கு ஜானகி இறந்திருக்க தேவையில்லை.
    இருக்கும் மகளுக்காக மனம் இறுக்கி இருந்திருக்க வேண்டும்.

    ஜானகிக்காக உச்சு கொட்டலாம்.
    உதாரணி ஆக்கிக் கொண்டாட முடியாது.

    இராமன்களால்/ளுக்காக மட்டுமே ஜானகிகள் இல்லை.

    எம் ஜெகதீசனுக்கு பாராட்டுகள்
    இங்கு ஜானகி தற்கொலை செய்து கொள்ளவில்லை ! கணவன் செய்த துரோகத்தால் ( கணவனைக் காவிய இராமனாக நினைத்தவள் ) அதிர்ச்சியடைந்து , மாரடைப்பால் உயிர் துறந்தாள் .
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    10 May 2015
    Posts
    174
    Post Thanks / Like
    iCash Credits
    9,123
    Downloads
    0
    Uploads
    0
    நானும் தற்கொலை செய்துகொண்டதாய் புரிந்துகொள்ளவில்லை ஜெகதீசன். இயற்கை மரணமே.. மாரடைப்புதான். இருப்பினும் என் கருத்து ஜானகிகளுக்கு அதுவே.

    தாயான பின்னாவது மனதில் உறுதி வேண்டும் - உயிரியல் பரிணாமத்தில் அவசியத் தேவையும் கூட.

    ஜானகிகள் எண்ணிக்கை குறையக் கடவ என்னும் ஆவலில் என் கருத்துக்கள். பிழையிருந்தால் மன்னித்தருளவும்.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    மண்ணில் வீழ்ந்தேன்
    மீண்டும் எழவே இல்லை !
    எழவே இல்லை என்பது
    நிகழ்வே இல்லை ஏமாற்று

    நிலை குத்திய கண்கள்
    நெஞ்சில் பொருந்திய கைகள்
    நெடுஞ்சான் கிடை உடல் எனில்
    நின் வாயில் வார்த்தை எப்படி ?

    செத்தவர் என்றும் செப்பியதில்லை
    செவ்விய கவிதை சொன்னதில்லை
    செத்தேன் என்றாய் நீ சாகவேயில்லை
    சானகி சரிதானே நான் சொல்வது !
    Last edited by முரளி; 16-08-2015 at 04:08 AM.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளி's Avatar
    Join Date
    12 Aug 2012
    Location
    சென்னை
    Posts
    577
    Post Thanks / Like
    iCash Credits
    63,143
    Downloads
    25
    Uploads
    0
    வேடிக்கையாக சொன்னது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
    Last edited by முரளி; 16-08-2015 at 01:51 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •