Results 1 to 10 of 10

Thread: நட்சத்திர கிரிக்கெட்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27

    நட்சத்திர கிரிக்கெட்

    (என்னோட சின்ன முயற்சி...)

    டி ராஜேந்தர், சிவகுமார், கமல், அஜீத், தனுஷ், சிம்பு, விஜயகுமார், பாரதிராஜா எல்லோரும் ஒரு டீம். இந்த டீம் கேப்டன் நமது மார்க் ("மார்கண்டேயன்" சிவகுமார்)

    பிரபு, குண்டு கல்யாணம், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், விக்ரம், கவுண்டமணி, செந்தில் வேற டீம். அணித்தலைவர்... வேற யாரு நம்ம கேப்டன் தான்.

    முதல் அம்பயர் மு ரா, இரண்டாம் அம்பயர் ரா ரா, மூன்றாம் அம்பயர் சூ ரா.


    ரா ரா, இது தான் சமயம், மு ராவை எப்படியாவது கவுக்க நினைத்து தனது உள்மனதில் திட்டங்கள் வகுக்க தொடங்குகிறார்..

    மேட்ச் ஆரம்பிச்சாச்சு...

    வேகபந்து வீச்சாளர் சிவகுமார் பந்து வீச, சத்யராஜ் அதை விளாசுகிறார்... பந்து மேலே போக...

    டி ராஜேந்தர் பௌண்டர்யில் பந்தை கேட்ச் பிடிக்க முன்வர,.. ஓஒஓஒஓஒ.... பந்து கீழே விழுந்து, பௌண்டரியை தொட்டுவிடுகிறது...

    சிவகுமார் ஆவேசமாய் என்னய்யா நல்ல கேட்ச விட்டுட்டியே...
    டி ஆர் : ஸாரி சார், என் முடி என் கண்ணா மறைச்சிரிச்சு அது தான்.


    பிரபு பேட்ஸ்மன் , குண்டு கல்யாணம் ரன்ன்ர்.

    சிவகுமார் பந்து வீச ஓடி வருகிறார்... அனால் ஸ்டாம்ப் அவர் கண்ணுக்கே தெரியலை.

    நேரே ரா ராவிடம் சென்று "சார்! பிரபுவோட கால் ஸ்டம்ப முழுசா மறைக்குதுன்னு கம்ப்ளைன்ட் பண்ண, ரா ரா செய்வதறியாது திகைத்து நிற்கிறார்..

    அடுத்து குண்டு கல்யாணம் முறை.

    தனுஷின் பந்தை அவர் விளாசுகிறார்.

    பந்து பாரதிராஜா பக்கமாய் வரவே, இந்த முறை கேட்ச் உறுதி என்று எண்ணி சிவகுமார் குரல் கொடுக்கிறார்.

    அனால் பாரதிராஜாவோ, பந்த பிடிக்க கை கூப்பாமல், என் இனிய தமிழ்மக்களே பாணியில் கை கூப்புகிறார்... இது கண்டு நமது மார்க் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.



    அடுத்த பவுலர் சிம்பு.. குத்து ஸ்டைலேல கையையும் விரலையும் ஆடிகிட்டே இருக்கவே...
    விரல் சுண்டு விரல் ஆஹா...விரல் சுண்டு விரல் என்று பாட்டு வேற பாடி கொண்டு இருக்கிறார்...
    தனுஷ்: "இவன் தொல்ல தாங்கலப்பா... டேய்.. பந்த சொழட்டுடான்னா வெரல சொழட்டுற.."

    செந்தில் கவுண்டமணி அடுத்த பேட்ஸ்மென்:

    கௌண்டர் பந்தை அடிக்கவே, செந்தில் அண்ணே நீங்க அவுட்டுண்ணே, நான் பாத்தேன் ...

    கௌண்டர் கோபமாக.. "போடா பேரிக்கா மண்டையா... இவன எல்லாம் யாருப்பா டீம்ல சேத்தது..."


    இடைவேளை...

    விக்ரம் பௌலிங்.
    கமல் ஒபேனிங் பேட்ஸ்மன்

    கமல் எடுத்த எடுப்பிலேயே டக் அவுட் ஆகி விட, சிவகுமார், என்ன கமல் இப்படி பண்ணிட்டியே என ஆதங்கப்படுகிறார்

    கமல்: என்ன நல்லா படம் எடுன்னு சொன்னா வெளிநாட்டு படங்கள அப்படியே காப்பி அடிச்சு எடுத்திருப்பேன். ஆனா ரன் எடுன்னு சொல்லிட்டாங்க, அது என்னால சொந்தமா செய்ய முடியல அது தான் என்று வசூல் ராஜா ஸ்டைலில் சென்டியாய் சொடுக்குபோட்டு சொல்லிவிட்டு பெவிலியானை நோக்கி போகிறார்....


    சிவகுமார் பேட்டிங்:

    பவுலர் சத்யராஜ் ஒரு கூக்லி சுழற்ற, சிவகுமார் padல் பந்து பட்டுவிடுகிறது.

    விஜயகாந்த், "யோவ் மு ரா, அவுட்டு குடுய்யா, இல்ல இந்த நரசிம்மா நகத்துல கரண்ட் வெச்சு கொன்னுருவேன்னு.." கண்ணா சிவப்பாக்கி மெரட்ட..

    சிவகுமார் ஏக்கமாய் மு ராவை பார்க்க, மு ரா, ராராவை பார்க்கிறார்.

    இது கேட்ட ரா ராவுக்கு பயத்துல பேதியாகி விடவே, இது கண்டிப்பாக இது அவுட்டு தான் என்கிறார்.

    ஏக்கத்தோடு நிற்கும் சிவகுமாரை பார்த்த மு ரா, சூ ராவின் முடிவுக்காக காத்திருக்கிறார்,

    இதனிடையில், சிவகுமார், மு ராவின் அருகில் வந்து...
    "நான் சொல்றத நம்புங்கய்யா.... அய்யா... பந்து உண்மையிலேயே ஸ்டம்புல படலையா ஆனா padல் தான்யா பட்டுது"

    "நான் சொல்லுறத நம்புங்கய்யா.." என்று தனது வழக்கமான உருகல் பாணியில் கெஞ்ச...

    மு ரா ஆடு திருடுன கள்ளன போல முழித்தவாறே நின்றார்.


    மு ரா இப்படி செய்வதறியாது திருவிழாவில் காணாமல் போன பையன் போல நிற்பது கண்டு, நமது சூ ரா, சிவகுமார் அவுட்டு ஆகிவிட்டார் என்று கன்போம் பண்ணவே,

    கனத்த நெஞ்சத்தோடு பவிலியன் நோக்கி செல்கிறார் நமது மார்க்.

    அடுத்த பேட்ஸ்மன், பாரதிராஜா தனது காமெராவை தோளுள தூக்கிக்கொண்டே வருகிறார். கிரீசில் வந்து இரு கரம் கூப்பி தனது "என் இனிய தமிழ் மக்களே"வை, தொடங்குகிறார்...

    யோவ் ரன்ன எடுயான்னா படம் புடிக்குற.. கதறுகிறார் விஜயகுமார்

    தனது டீமின் பரிதாபமான நிலையையும், மோசமான பேட்டிங்கையும் கண்டு ஒரே நம்பிக்கை நமது அஜித் தான் என்று வாழ்த்தி
    அனுப்புகிறார்

    கூரை ஏறி கோழி புடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம் ... என்று விக்ரம் சிரிக்கவே ...

    அஜித்: கவலை படாதீங்க, பேட் இருக்கும், பேட் இருக்கும், அம்பயர் இருப்பாரு என்று மார் தட்டி கொண்டு கிரீசை நோக்கி செல்கிறார்...

    "அது எல்லாம் இருக்கும் நீ இருப்பியான்னு பாருடா.. " சத்யராஜ் பவுலிங்கோடு ஒரு நக்கல் விட..

    ஆனா அங்க எல்லாம் இருந்தது, ஸ்டம்புல பைலஸ் இல்ல, அது அஜித் கீழ விழுந்து கிடந்தது. பந்து கீபர் கையில்.

    அஜீத் அவுட்!!

    அட அஜித்தும் டக் அவுட்டு ஆகி விட்டார்.

    சிவகுமார் சினம் கொண்டு.. "என்னப்பா நீயும் இப்படி பொசுக்குன்னு அவுட்டாகிட்டியே...இதுக்கு எம் புள்ள சூர்யாவை மேட்ச்ல சேத்திருக்கலாம்."

    அஜீத்: சார் இதுல என் தப்பு எதுவும் இல்லை.. காரோட்ட சொன்னா ஓட்டுவேன்.. பைக் ஓட்ட சொன்னா ஓட்டுவேன், நீங்க பந்த அடிசுகிட்டு ஓடுன்னு சொன்னீங்க.. அது நமக்கு சரிவரல சார்... அதான்" என்று தனது கூலான பாணியில் சொல்லிவிட்டு நகருகிறார்

    அடுத்த பேட்ஸ்மன் சிம்பு..

    பன்ச் டைலாகில் பட்டை கிளப்ப பேசிவிட்டு க்ரீசை நோக்கி வருகிறார்.

    பன்ச் பேசினவனை பஞ்சாக்கிவிட்டு பவிலியானுக்கு துரத்திவிட்ட மகிழ்ச்சியில் கேப்டன் அணியினர் கொக்கரிக்கின்றனர்.

    மேட்ச் முடிந்தது...

    சோழ நாட்டை இழந்த மன்னன் போல சிவகுமார் கேவிககேவி அழ, கூடவே...அணியினரும் குலுங்கி குலுங்கி அழுகின்றனர்.
    Last edited by sarcharan; 31-03-2011 at 08:04 AM.

  2. #2
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    இந்த 'ரா' கூட்டத்தோட கொசுகடிய தங்க முடியலடா சாமி..
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  3. #3
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    சாரா, நீங்களே சுயமா சிந்திச்சிங்களா?

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by முரளிராஜா View Post
    சாரா, நீங்களே சுயமா சிந்திச்சிங்களா?
    ஆமாங்க. உண்மையிலேயேதான். ஆபிசுல இத படிச்சு நானே சிரிச்சுகிட்டு இருக்கேன்.
    Last edited by sarcharan; 17-03-2011 at 05:54 AM.

  5. #5
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    சாரா, இன்னும் பல முயற்சி செய்யுங்கள் அது உங்கள் திறமையை வளர்க்கும்.
    பாராட்டுக்கள்.
    நம்ம ராரா வை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும் அவன் கதையை முன்கூட்டியே தயார் செய்துகொள்வதில்லை. ஆனால் நோட்பேடில் வேகமாக தட்டச்சு செய்ய ஆரம்பித்துவிடுவான். அவ்வளவுதான் கதையோ, நக்கலோ ரெடி

    (அலுவலகத்தில் இதுதான் வேலையா)

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நன்றி மு ரா இன்னிக்கு வேலை பளு குறைச்சல்.. அதுதான். என்னவோ தெரியல கூகிள் தமிழ் தட்டச்சு வேலை செய்யவில்லை.
    Last edited by sarcharan; 17-03-2011 at 04:57 AM.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் முரளிராஜா's Avatar
    Join Date
    30 Nov 2010
    Location
    மயிலாடுதுறை
    Posts
    800
    Post Thanks / Like
    iCash Credits
    9,381
    Downloads
    3
    Uploads
    0
    [QUOTE=sarcharan;518128]nandri மு ரா innikku velai palu kurachchal.. adhu dhan. ennavo theriyala கூகுல் தமிழ் தட்டச்சு velai seiya villai...[/QUOTE
    இந்த மென்பொருளை பதிவிறக்கி அதை கணினியில் நிறுவி
    கீபோர்ட் செட்டிங் போய் போனிடிக் என மாற்றி கொள்ளுங்கள் உங்களுக்கு
    தமிழ் தட்டச்சு மிகவும் எளிதாக இருக்கும்

    இங்கே சொடுக்கவும்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர் ராஜாராம்'s Avatar
    Join Date
    27 Jan 2011
    Location
    மயிலாடுதுறை
    Posts
    366
    Post Thanks / Like
    iCash Credits
    9,115
    Downloads
    0
    Uploads
    0
    அருமையான முயற்சி சாரா.
    கற்பனை வசனங்கள் நன்றாக உள்ளன.அவ்வளோதான்....இப்படியே முயற்சிசெய்து படைப்புக்களை ஆரம்பிங்க..எழுத்து பக்குவம் தானாகவே வந்துவிடும்.
    உண்மையிலே நன்றாக உள்ளது.
    வாழ்த்துக்கள்
    ரயில்லு நின்னா காட்பாடி...
    உயிரு நின்னா டெட்பாடி...


    :மன்றம்வருதல் பெரிதன்று வந்தப்பின் மன்றமக்களை
    மொக்கை போட்டுக் கொல்வதே பெரிது....
    "

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    அங்கங்கே சிரிக்க வைத்தது பதிவு... கமல் காப்பியாசத்தை இடையில் சொருகி ஸ்கோர் செஞ்சிட்டீங்க.... நல்ல முயற்சி, தொடரட்டும். வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •