Results 1 to 6 of 6

Thread: கோடை விடுமுறையில் ஒருநாள் ...!!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0

    கோடை விடுமுறையில் ஒருநாள் ...!!

    ஊதா மை நிரப்பி
    தேர்வுத் தாள் பார்த்த
    எழுது கோலில்...
    வாழைக் கரை பிழிந்தளந்து
    நண்பனின் சட்டையில்
    நட் பெழுதி வைக்கும் நாள்
    கோடை விடுமுறையின்
    தொடக்க நாள்........

    ஊத்தப் பல்லு
    உற்சாகத் தோடு
    உண்ண மறக்கும்
    காலைப் பொழுதில்
    கோலி யடித்தும்
    பம்பரம் சுத்தியும்
    ஓடித் திரிந்தே
    நீளும் பொழுதுகள்....

    உச்சி வெயில்
    வெக்கை அறியாமல்
    தோட்டஞ் செல்ல
    துள்ளல் நடையில்
    தூரம் போவோம்
    அப்பாம்மையின் வழி தொடர்ந்தே...

    ஆங்கே!!
    நிழல் பரப்பி
    விரிந்திருக்கும்
    வேப்ப மரம்
    வெக்கை தணித்து
    வியர்வை துடைக்கும்...

    வேப்பம் பூ
    உதிர்ந்து கிடக்கும்
    மண் நிலத்தில்..
    மஞ்சள் வண்ணக்
    கனியும் கிடக்கும்..
    ஆம்! கனி கிடக்கும்..
    தாகம் தீர்க்கும்
    திகட்டாச் சுவை
    தரும் வேப்பம் பழம்
    கிடக்கும்..!!

    இன்றோ .....
    நகரத்துப் பாட்டிகள்
    எங்கழைத்துப் போவார்கள்
    தன் பேரனை
    வேப்பம் பழச்சுவை அறிய...
    கசந்து நிற்கும்
    நகர வாழ்வில்....?

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    18 Aug 2013
    Location
    Mumbai
    Posts
    318
    Post Thanks / Like
    iCash Credits
    6,108
    Downloads
    2
    Uploads
    0
    தொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.
    எவன் ஒருவன் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் - மகாத்மா காந்தி

  3. #3
    இனியவர் பண்பட்டவர் lenram80's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    நாடோடி
    Posts
    627
    Post Thanks / Like
    iCash Credits
    67,206
    Downloads
    85
    Uploads
    0
    நிழலோடு மணலோடு கருமண்ணு உடலோடு
    விளையாண்டது ஒரு காலம்!
    காலங்கள் போடுது கோலங்களே!
    உன் குத்தமா? என் குத்தமா?
    யாரை நான் குத்தம் சொல்ல? (அழகி படப் பாடல்) எனக்கு நினைவுக்கு வரவழைத்தது , பாவூர் பாண்டி - உங்களின் ஏக்கம்.

    கவலைப்படாதீர்கள். உஙளோடு அதே கவலையை நானும் பட்டுக்கொண்டிருக்கிறேன். இதில் நீங்கள் தனி ஆள் இல்லை என்பதால் கவலைப் படாதீர்கள்
    உலக விஷயங்களை ஒரே இரவில் கற்று
    "கற்றது உலகளவு, கல்லாதது எள்ளளவு"
    எனச் சொல்லவேண்டும் என்ற ஆசையுடன்,
    -லெனின்-
    என் முக நூல் பதிவுகள்

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    நன்றி நண்பரே..

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    நன்றி நண்பா..
    நினைவுகளோடு நீச்சல் போடுவது சுகம்தானே..

    Quote Originally Posted by lenram80 View Post
    நிழலோடு மணலோடு கருமண்ணு உடலோடு
    விளையாண்டது ஒரு காலம்!
    காலங்கள் போடுது கோலங்களே!
    உன் குத்தமா? என் குத்தமா?
    யாரை நான் குத்தம் சொல்ல? (அழகி படப் பாடல்) எனக்கு நினைவுக்கு வரவழைத்தது , பாவூர் பாண்டி - உங்களின் ஏக்கம்.

    கவலைப்படாதீர்கள். உஙளோடு அதே கவலையை நானும் பட்டுக்கொண்டிருக்கிறேன். இதில் நீங்கள் தனி ஆள் இல்லை என்பதால் கவலைப் படாதீர்கள்

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் பாவூர் பாண்டி's Avatar
    Join Date
    17 Sep 2010
    Location
    Chennai
    Age
    36
    Posts
    145
    Post Thanks / Like
    iCash Credits
    18,187
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by மும்பை நாதன் View Post
    தொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.
    உண்மைதான் நண்பரே..சில நாட்களுக்கு முன் ஊர் சென்று பார்த்தபோது, விளையாடும் ஒரு சிறு பிள்ளையை கூட காண முடியவில்லை, இத்தனைக்கும் இது கோடை விடுமுறை காலம் வேறு..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •