Results 1 to 12 of 12

Thread: இவளே என் மனைவி!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2

    இவளே என் மனைவி!!!

    எதிர்வீட்டில் புதுக்குடித்தனம்
    என் மனம் புதிதாக துடித்தது
    கல்லுரியில் படிக்கும் பெண் இருக்குமா!!!

    பார்த்தேன் வழிமேல் விழி வைத்து
    யாரோ வருகிறார்கள் வெளியில்
    எட்டிப்பார்த்தேன்
    வீட்டுத் தலைவர்!!!

    மறுபடி யாரோ வருகிறார்கள் வெளியில்
    எட்டிப்பார்த்தேன்
    வீட்டுக் கடைக்குட்டி சிறுவன்!!!

    மறுபடி யாரோ வருகிறார்கள் வெளியில்
    எட்டிப்பார்த்தேன்
    வீட்டு இல்லத்தரசி!!!

    மறுபடி யாரோ வருகிறார்கள் வெளியில்
    எட்டிப்பார்த்தேன்
    வயதான பாட்டி!!!

    வெறுத்துப் போனேன்
    இந்த வீட்டில்
    பைங்கிளியே கிடையாதே
    தவிப்புடன் நான்!!!

    மறுபடி யாரோ வருகிறார்கள் வெளியில்
    எட்டிப்பார்த்தேன்
    அழகான பெண்
    அப்சரஸ் மாதிரி
    அசந்துவிட்டேன் பார்த்ததும்!!!

    என் தோளில் கை
    திரும்பினேன்
    என் தாய்!!!

    எதிர்த்தவீட்டுற்கு
    புதிதாக குடித்தனம்
    வந்திருக்கிறார்கள்!!!

    பாவம் இந்த இளம் வயதிலேயே
    விதவையாகிவிட்டாள்
    கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்
    என்றார் என் தாய்!!!

    மறுபடியும்
    அந்தப் பெண்ணை நோக்கினேன்
    இவளே என் மனைவி
    அப்பொழுதே முடிவெடுத்தேன்!!!
    Last edited by aren; 25-09-2007 at 03:20 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அழகான பூவனத்தின்
    அனைத்து பூக்களுமே
    வாழப் பிறந்தனவே...!

    பூசைக்கு போனபூ
    புனிதமானது என்பதை
    அறிந்தவர்கள் சிலரே...!

    பவித்தரமான காதலால்
    கவிதையை சிங்காரித்த

    அண்ணாவுக்கு பாராட்டுகள்..!
    Last edited by அமரன்; 25-09-2007 at 03:26 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    வீரப் பேச்சில் விளைந்திடாது
    விதவைக்கு மறுவாழ்வு
    வீரச்செயலில் நிகழ்ந்திடும்
    அந்த நல்வாழ்வு

    வாழ்த்துக்கள் அண்ணா..
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    அழகான பூவனத்தின்
    அனைத்து பூக்களுமே
    வாழப் பிறந்தனவே...!

    பூசைக்கு போனபூ
    புனிதமானது என்பதை
    அறிந்தவர்கள் சிலரே...!

    பவித்தரமான காதலால்
    கவிதையை சிங்காரித்த

    அண்ணாவுக்கு பாராட்டுகள்..!
    நன்றி அமரன். விதவை மறுமணம் நிச்சயம் புனிதமானது அதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by இனியவள் View Post
    வீரப் பேச்சில் விளைந்திடாது
    விதவைக்கு மறுவாழ்வு
    வீரச்செயலில் நிகழ்ந்திடும்
    அந்த நல்வாழ்வு

    வாழ்த்துக்கள் அண்ணா..
    நன்றி இனியவள்.

    அவன்தான் முடிவெடுத்துவிட்டானே
    இவளே என் மனைவியென்று!!!

    அவனுடைய மனதில்
    அவள் அன்றே மனைவியானாள்!!!

    என் கண்களில்
    அவன் தான் மனிதன்!!!

    நன்றி வணக்கம்
    ஆரென்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நன்றாக இருந்தது ஆரெனாரே... கவிதையின் வரிகளில் முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    நன்றாக இருந்தது ஆரெனாரே... கவிதையின் வரிகளில் முன்னேற்றம் தெரிகிறது. வாழ்த்துக்கள்!
    நன்றி ஷீ. எல்லாம் உங்களைப் போன்ற மன்ற நண்பர்கள் சொல்லிக்கொடுத்ததன் பயன் தான் என்று நினைக்கிறேன்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    விதவைக்கு மறுமணம் கொடுக்கும் எண்ணம் கொண்ட கவிதை அருமை அண்ணா... வாழ்த்துக்கள்.. தொடருங்கள் உங்கள் படைப்பை..
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    நன்றி சூரியன்.

    எனக்கு கவிதை எழுதத்தெரியாது. ஏதோ என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன். அவ்வளவே.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    விதவை
    ஆகவேண்டும் மறுமணம்
    அதற்கு வேண்டும் நல்மனம்
    உங்கள் கவிதையில் நல்வனம்.

    வாழ்த்துக்கள் ஆரென் அவர்களே வாழ்த்துக்கள்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    மொழி படத்திலே ஒரு வசனம் வரும் "டேய் நான் ஒண்ணும் வாழ்க்கை கொடுக்கணும்னு நினைக்கலையடா, நான் அவளோட என் வாழ்க்கையை ஷேர் பண்ணிக்கணும்னு நினைக்கிறேனடா" என்று...

    இவ்வாறான சந்தர்பங்களிலே வாழ்க்கை கொடுக்கிறம் என்ற எண்ணமே ஏற்படக் கூடாது, எப்படி ஏற்பட்டால் அந்த வாழ்க்கையில் எப்போவது ஒரு நாள் புயல் வீசக் கூடும். நான் ஏன் இதனைக் கூறுகிறேன் என்றால் உங்கள் கவிதையில் அம்மா அந்தப் பெண் விதவை என்றபின் முடிவெடுத்ததாகக் கூறியிருந்தீர்கள். முன்னமே அப்படி முடிவெடுத்து தாய் அப்படிக் கூறியும் அவளைத் தான் மணமுடிப்பேன் என்று வந்திருந்தால் எனக்கு இன்னமும் பிடித்திருக்கும்.

    ஆரென் அண்ணா வித்தியாசமான கவிக் கருக்கள் உங்களிடம் சிக்குகின்றன வாழ்த்துக்கள்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    நல்ல சமூக சிந்தை உள்ள கவி. எனக்கும் மொழி படத்தில் பிரகாஷ் ராஜ் சொன்ன வசனம் நியாபகம் வந்தது.
    வாழ்க்கை கொடுப்பதாய் நினைக்காமல் தமது வாழ்க்கை அவரோடு ஷேர் பண்ணி வாழப்போவதாக நினைக்கும் நினைவே அற்புதமானது. எதிர்காலத்தில் புயல்கள் வராமல் தடுக்கும் சிந்தையே அது.

    வாழ்த்துகள் அரென் அண்ணா. நிறைய வித்தியாசமான கவிதைகளால் மன்றத்தில் அசத்திவருகிறீர்கள்.. பாராட்டுக்கள்.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •