Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: விடியல் தேடி...!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    Lightbulb விடியல் தேடி...!!



    அதிகாலை பனியில்
    இருள் தலைதுவட்டி
    இமை திறக்காமல்
    காத்திருந்தது.!!


    மெல்ல கண் மலர்கிறேன்.!
    முகத்தோடு புன்னகை
    ஒட்டும் ரோஜாவனத்துக்கு
    தண்ணீர் ஊற்றுகிறேன்..!!


    வாசலின் முகம் கழுவி
    தென்னங்கீற்றால் தலைவாரி
    பச்சை வண்ணமிட்டு
    வெண் பொட்டிடுகிறேன்..!!

    புள்ளிகள் தானே
    கோடிட்டு கோலமாகின்றன
    கற்பனை முகடில்!!


    எண்ணத் திரையை
    மண் தரையில்
    பிரதி பதிக்கிறேன்..!!


    புரிந்து போடப்படும்
    இக்கோலமும் பல
    ராஜகுமாரர்களுக்கு
    புரியா கடவுளின் கோலம்
    போலவே இன்னமும்..!!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    எண்ணத் திரையை
    மண் தரையில்
    பிரதி பதிக்கிறேன்..!!
    கலைவது மாக்கோல இயல்பு.
    கலையாதது அடக்கோலம்.
    இரண்டையும் புரிய
    அவகாசம் அவசியம்.(?)!!!
    இன்னும் பழுது பார்க்கலாமோ
    கவிதையை.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by அமரன் View Post
    கலைவது மாக்கோல இயல்பு.
    கலையாதது அடக்கோலம்.

    மாக்கோலம் யாமறிவோம்..!
    அதென்னங்க
    அடக்கோலம்?? புரியலையே..!!
    அகக்கோலமா??
    இன்னும் பழுது பார்க்கலாமோ
    கவிதையை.
    பாருங்கள் சொல்லுங்கள்..!!

    நன்றிகள் அமரன் ஜீ..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    வாழ்த்துக்கள் பூ..!!

    சிக்கல் கோலங்கள் போடுவதில் நீங்கள் சிறந்தவர் என்று உங்கள் கவிதையிலேயே தெரிகிறது. அதனால்தான் எனக்கு கவிதையின் கரு இன்னும் சிக்கவே மறுக்கிறது..!!

    புள்ளி வச்சி கோலம் போடவும் புரியாத கவிதை எழுதவும் தனித்திறமை வேணும். நமக்கு அது ரெண்டுமே கிடையாது. அதனால் உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தொடருங்கள்..!!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஹூம்.. ஹூம்.. சுகந்தப்ரீதன்.. இதானே வேணாங்கறது..!!
    பாராட்டற மாதிரி பாராட்டிட்டு... கடைசில அழகா கவுத்துட்டு போயிட்டயில.... இரு இரு..... அப்புறமா கவனிச்சிக்கிறேன்..!!


    யாராச்சும் வந்து கரக்டா அர்த்தம் சொல்லுங்கப்பா.. எனக்கே மறந்துட்டது என்ன சொல்ல வந்தேன்னு..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    இனியவர் பண்பட்டவர் poornima's Avatar
    Join Date
    13 Mar 2008
    Posts
    808
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    3
    Uploads
    0
    மாக்கோலத்தை விட மனக்கோலம் பிரமாதம்...
    வரைந்த வர்ணங்களை விட வார்த்தை ஜாலங்களில் தெரிகிறது அழகியல்
    பாராட்டுக்கள்

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by சுகந்தப்ரீதன் View Post
    வாழ்த்துக்கள் பூ..!!

    சிக்கல் கோலங்கள் போடுவதில் நீங்கள் சிறந்தவர் என்று உங்கள் கவிதையிலேயே தெரிகிறது. அதனால்தான் எனக்கு கவிதையின் கரு இன்னும் சிக்கவே மறுக்கிறது..!!
    புரிந்து போடப்படும்
    இக்கோலமும் பல
    ராஜகுமாரர்களுக்கு
    புரியா கடவுளின் கோலம்
    போலவே இன்னமும்..!!


    ராஜ குமாரர்னு சொல்லிக்க முயற்சி பண்ணுறீங்களோ!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by poornima View Post
    மாக்கோலத்தை விட மனக்கோலம் பிரமாதம்...
    வரைந்த வர்ணங்களை விட வார்த்தை ஜாலங்களில் தெரிகிறது அழகியல்
    பாராட்டுக்கள்
    ஆஹா புதுவரவு..!! வாங்க சகோதரி..!!
    வாங்க பூர்ணிமா...! மன்ற குடும்பத்தில் இணைந்து இன்னும் தமிழமுது சுவைக்க தாருங்கள்..!!

    உங்களின் விமர்சனப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.

    Quote Originally Posted by கண்மணி View Post
    ராஜ குமாரர்னு சொல்லிக்க முயற்சி பண்ணுறீங்களோ!
    சரியா சொன்னீங்க கண்மணி அக்கா..!!
    இப்படி சொல்லி பந்தா காட்டலாம்னு நினைக்கிறாரு சுபி..!!
    விட மாட்டேனே..!!

    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    Quote Originally Posted by கண்மணி View Post
    ராஜ குமாரர்னு சொல்லிக்க முயற்சி பண்ணுறீங்களோ!
    அம்மணி கண்மணி ஏன் ஏன் ஏனம்மணி இப்படியெல்லாம்...?!

    நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் நாங்க எல்லாம் ராஜ்ஜியமில்லாத ராஜகுமாரனுங்கதான்..

    சரியா சொன்னீங்க கண்மணி அக்கா..!!
    இப்படி சொல்லி பந்தா காட்டலாம்னு நினைக்கிறாரு சுபி..!!
    விட மாட்டேனே..!!

    ஹி..ஹி.. யாரு யாருக்கு அக்கா...??!

    பூவு அப்புறமா கவனிக்கறன்னு சொல்லிட்டு அக்கா(?) வந்ததும் உடனே கூட்டணி போட்டு தலையில குட்டுறீயே நியாயமா இது..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    சம்பிரதாயமா பார்க்கப் போனா மதியத்திற்குள்(ஏறு வெய்யிலில்) பெண் பார்க்கணும் னு பெரியவங்க சொல்வாங்க.. இதுவும் ஒரு காரணமா இருக்கலாம் பூ!

    பெண்ணின் சுறுசுறுப்பு, மலர்ச்சி, மனவமைவு எல்லாம் காலையில் அவள் போடும் மாக்கோலத்தில் விரித்து வைக்கப் பட்டு விடுகிறது,,

    சொஜ்ஜி பஜ்ஜி கைப்பற்ற படையெடுத்து வரும் பல ராஜகுமாரர்கள் ஒரு நொடியேனும் அந்தக் கோலத்தைக் காண்பதில்லை.

    இந்தக் காலத்தில எந்தப் பொண்ணு கோலம் போடுகிறாள் என்று ஒரு அசட்டை வேறு..

    மயில் கோலம் போடும் மயில் அன்பு மழைக்காய் காத்திருக்கிறாள்..

    பூக்கோலம் போடும் பூ மகிழ்ச்சியாய் பூத்திருக்கிறாள்

    நெளிகோலம் போடும் மங்கை, புதிராய் இருக்கிறாள்..!!

    ராசகுமாரர்களே! உங்கள் குதிரைகளை சற்று தள்ளி நிறுத்தி விட்டு கோலங்களை சற்று கவனியுங்கள்..

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    ஓராயிரம் அர்த்தம் சொல்லும்
    ஒவ்வொரு கோலமும்..!!!

    கோட்டுக்கோலம் வரைமுறைகள்
    பகருமென்றால்..
    நெளிக் கோலம்.. புதிர்களை
    புனையும்..!!
    பூக்கோலம்.. புத்துணர்வு
    பிறப்பிக்கும்..!!
    வண்ணக்கோலம்.. எண்ணங்களை
    பிரதிபலிக்கும்..!!

    இப்படி ஆயிரம் வகை கோலமிட்டாலும்...
    பச்சரிசிப் பொடி கொண்டு..
    வெண் புள்ளிகள் நட்டு..
    எறும்புக்கு உணவூட்டும்
    கோலம்.. மறக்கலாமோ நாம்??!!


    ---------------------------
    என் கவியின் கருவை பிடிச்சிட்டீங்க கண்மணி அக்கா..

    ஆனாலும்.. இத்தனை நேரம் யாருமே கண்டுபிடிக்கலையேன்னு ஒரு வேதனை இருந்தது..!!

    பாராட்டுகள் கண்மணி அக்கா.

    இனியாவது குதிரையின்
    வரும் ராஜகுமாரர்கள்
    கொஞ்சம்..
    கோலத்தில் அந்த
    கோதையையும் காணட்டும்..!!

    அழகிய கோலமிடும்
    நங்கை நல்லாள்..-அவன்
    வாழ்க்கை அழகாக்கும்
    மங்கை மாண்பாள்..!!

    புரிந்தால்
    இளவரசிகள்
    கிட்டுவது நிச்சயம்..!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    எல்லாம் சகவாச தோஷ பரிகாரம் செய்தா சரியாயிடும்.

    உங்க அண்ணாவோட சேர்ந்து நீங்களும் மறைபொருள் வைக்க ஆரம்பிச்சிட்டீங்க.. பாவம் மாப்பிள்ளைகள்..!!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •