Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 83

Thread: சொல்லாத காதல்!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    சொல்லாத காதல்!

    1985-87வருடங்களில் மும்பையில் இருக்கும் எங்கள் நிலையத்தின் குடியிருப்பு பகுதியான அணுசக்திநகரில் வசித்துக்கொண்டிருந்த போது என் வாழ்விலும் காதல் வந்து கண்ணாமூச்சி ஆடிவிட்டுப்போய்விட்டது. ஒத்த வயதுடைய நன்பர்களாக நாங்கள் ஒரு 12 பேர் இருந்தோம். ஆண்களும் பெண்களும் சரி விகிதமாய்.எங்களுக்கெல்லாம் லீடர் ரமணி என்ற தோழி. இந்திய கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்த லால்சந்த் ராஜ்புத்-ன் தங்கை.சரியான தைரியம் உள்ள பெண். எங்கள் குழுவிலேயே அப்பிரானியான பெண் தீபா குல்கர்னி.மராட்டியப்பெண்.அடக்கமானவள்.அதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்தது.

    நாங்கள் அனைவரும் அடிக்கடி ஏதாவது ஒரு இடத்துக்கு சுற்றுலா போவோம்.அந்த நாள் முழுவதும் ஆட்டம் பாட்டு என்று ஒரே சந்தோஷம்தான்.இந்த மாதிரியான நேரங்களில்தான் கொஞ்சம் நெருங்கினோம். நான் என்னையறியாமல் அவளை நேசிக்கத்தொடங்கியிருந்தேன். ஆனால் நட்போடு பழகிவந்ததால் என் காதலை அவளிடம் சொல்லத் தயங்கினேன். அதேசமயம் அவளும் இதெ என்னத்தில்தான் இருந்தாள் என்பது எனக்கு பின்னாளில் தெரிந்தது. எங்கள் குழுவில் ஜெஸ்பால் என்ற பஞ்சாபிப் பெண் இருந்தாள். அவளும் ஒரு மஹாராஷ்ட்ரியனை காதல் மணம் புரிந்தவள்தான். எங்கள் குழுவின் சீனியர். அவளிடம் தீபா ஒருமுறை'நான் ஒரு மதராஸியைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'என்று சொல்லியிருக்கிறாள்.இதையும் ஜெஸ்பால் என்னிடம் அன்றே சொல்லவில்லை.

    இந்த சமயத்தில் நாங்கள் லோனாவாலா என்ற இடத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது,விளையாட்டின் ஒரு பகுதியாக வட்டமாக அமர்ந்துகொண்டு நிறைய சீட்டுகள் அடங்கிய ஒரு டப்பாவை கை மாற்றி சுற்றிவரச்செய்து,இசை நிற்கும்போது யார் கையில் டப்பா இருக்கிறதோ அவர் அந்த டப்பாவில் இருக்கும் சீட்டை எடுத்து அதில் எழுதி இருப்பது போல் செய்து காண்பிக்கவேண்டும். இந்த விளையாட்டில் என் முறை வந்த போது எனக்கு கிடைத்த சீட்டில், 'இங்கிருக்கும் பெண்களில் யாராவது ஒருவரை காதலுக்கு ப்ரபோஸ் செய்யவேண்டும்' என்று இருந்தது. நான் தீபாவை தேர்ந்தெடுத்தேன்.

    மண்டியிட்டு அமர்ந்து 'என் காதலை ஏற்றுக்கொள்வாயா அன்பே' என்று சொன்னதும்,அவள் 'எங்கப்பாவை வந்து பார்' என்றாள். ஏன் என்று கேட்டதற்கு 'என்னைக் கல்யாணம் செய்து கொள்ளத்தான், கல்யாணம் செய்துகொண்டு பிறகு காதலிக்கலாம்' என்றவுடன் ஏற்பட்ட சிரிப்பிலும் கலாட்டாவிலும் அது ஒரு நகைச்சுவையாக கரைந்து விட்டது. அவள் அப்படி சொன்னாலும்,அவளிடம் என் காதலைச் சொல்ல எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை. இந்த ஜெஸ்பாலாவது அவள் சொன்னதை என்னிடம் அப்போதே சொல்லியிருந்தால் கொஞ்சம் தைரியம் வந்திருக்கும். அவளும் சொல்லவில்லை.

    இந்த நேரத்தில்தான் என் தந்தைக்கு புற்று நோய் முற்றி கோவையில் மருத்துவமனையில் இறந்துவிட்டார். அதற்காக ஊருக்குப் போயிருந்தேன்.தந்தையின் காரியங்களெல்லாம் முடிந்து திரும்ப மும்பைக்கு வர தயாராகிக்கொண்டிருந்த போது என் தாய் மாமன் தயங்கி தயங்கி சொன்னதைக் கேட்டு கொஞ்சம் திகைத்துதான் போனேன். என் தந்தையின் கடைசி விருப்பமாய் நான் அவர் மகளைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவர் சொன்னதும் வேறு ஒன்றும் சொல்லத் தோனாமல் சரியென்றேன். நல்லவேளை நம் காதலை தீபாவிடம் சொல்லி அவள் மனதிலும் ஆசைகளை வளர விடாமல் இருந்தது நல்லதாகி விட்டது என்று சமாதானப்பட்டாலும்,மனசில் ஒரு ஓரத்தில் அந்த வலி இருக்கத்தான் செய்தது.

    சாவு நிகழ்ந்த வீட்டில் ஒரு நல்ல காரியத்தை உடனே செய்தால் நல்லது என்று பெரியவர்கள் அபிப்ராயப்பட்டதால் திருமணத்தேதியும் மூன்று மாதத்திற்கு பிறகு குறித்துவிட்டார்கள். திரும்ப மும்பை வந்ததும் தோழர்களும் தோழியர்களும் துக்கத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். நாளடைவில் அந்த வேதனை குறையத் தொடங்கியதும் நன்பர்களிடம் என் திருமண செய்தியை தெரிவித்தேன். மீண்டும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆளாளுக்கு கலாய்க்கத்தொடங்கி விட்டார்கள். அந்த சமயம் தீபா வங்கித்தேர்வு எழுத போயிருந்ததால்,அடுத்த நாள் அவளிடம் மட்டும் இந்த செய்தியை சொன்னேன். அவள் உடலில் மெல்லிய அதிர்வுகளை என்னால் உணர முடிந்தது. முகம் அதிர்ச்சியை அளவோடு வெளிப்படுத்தியது. கலங்கிய கண்களில் நிறைந்து விட்ட கண்ணீரை கஷ்டப்பட்டு தேக்கி வைத்துக்கொண்டாள். அவள் குனமே அப்படித்தான்.தர்மசங்கடமாக உணர்ந்தேன்.

    அடுத்த நாள் ஜெஸ்பால் வந்து என்னை கன்னா பின்னவென்று திட்டினாள். சம்மதம் சொல்வதற்கு முன் ஒருமுறை தீபாவிடம் பேசியிருக் கூடாதா என்று. என்ன செய்வது அப்பாவின் கடைசி விருப்பத்திற்கு என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை என்றேன். போடா என்று சலித்துக்கொண்டே போய்விட்டாள்.

    திருமணம் முடிந்து மும்பையில் வரவேற்பு வைத்தபோது என் எல்லா நன்பர்களும் என்னை ஒரு வேலையும் செய்ய விடாமல் அவர்களே கலக்கிவிட்டார்கள். ஆறு பெண்களும் ஒரே மாதிரியான சேலையை வாங்கி அதை குஜராத்திய முறையில் காட்டிக்கொண்டு அரங்கத்தையே உண்டு இல்லையெனப் பண்ணிவிட்டார்கள். ஏமாற்றத்தை கொஞ்சம் கூட காட்டிக்கொள்ளாமல் தீபாவும் அடிக்கடி என் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தாள். இதையெல்லாம் என் மனைவியிடம் திருமணத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன். என்னைப்புரிந்துகொண்டு அவளும் தீபாவை தன் நல்ல தோழியாய் ஏற்றுக்கொண்டாள்.

    1993ல் அந்த வேலையை விட்டுவிட்டு வளைகுடா வந்துவிட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்பர்களைப் பார்க்க அணுசக்திநகர் போயிருந்தபோது எதேச்சையாக தீபாவை சாலையில் சந்தித்தேன். கையில் இரண்டு வயது பெண் குழந்தையுடன். குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் "ஷிவானி"
    Last edited by சிவா.ஜி; 28-07-2007 at 08:56 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சிவா..வாழ்க்கையில் காதல் கடந்து செல்லாதவர்கள் இருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஏதாவது ஒரு வினாடியாவது ஆணும் பெண்ணும் காதலை சந்தித்திருப்பார்கள். காதலில் விழுந்தவர் பலர் சொல்லி அதனை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதில் சிலர் வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள். சிலர் காதலர்களாகவே பிரிந்திருப்பார்கள்.

    நீங்களும் காதலித்திருகிறீர்கள். உங்கள் தோழியும் காதலித்திருகிறார். விளையாட்டில் அதை சொல்லியும் இருக்கிறீர்கள். ஒருவேளை உங்கள் தோழி விளையாட்டில் உண்மையை கூறி இருப்பாளோ..?

    தந்தையின் நிரந்தரம் பிரிவு, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தனயனின் உயர்வு....துனத்திலும் இன்பம் தந்தது எனக்கு. உங்கள் காதலியை தோழியாக ஏற்றுக்கொண்ட சகோதரி உயர்ந்து நிகிறார். பொருத்தமான ஜோடிதான் இருவரும்...

    பல விடயங்கள் பதிக்க நினைகிறேன். முடியவில்லை. தள்ளாட வைக்கிறது மனதிலுள்ள பல உணர்ச்சிகளின் கலவை. தட்டச்ச முடியவில்லை.


    இறுதி இரு பத்திகள்போல் முதல் பத்திகளையும் அமைத்தால் உங்கள் இப்பகிர்வுக்கு அழகான வடிவம் கிடைக்கும்.
    Last edited by அமரன்; 28-07-2007 at 08:55 AM.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி அமரன். நோட் பேடில் தட்டச்சு செய்து இங்கு பதிப்பதால் இப்படி நேர்ந்து விடுகிறது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை,மன்றத்தின் மெஸேஜ் பெட்டியும் சிறிதாக இருப்பதால் முழுவதையும் பார்க்க முடியவில்லை.
    இதே பிரச்சனைதான் என் சிறுகதைக்கும். உதவ முடியுமா அமரன்?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    நன்றி அமரன். நோட் பேடில் தட்டச்சு செய்து இங்கு பதிப்பதால் இப்படி நேர்ந்து விடுகிறது. எப்படி சரி செய்வதென்று தெரியவில்லை,மன்றத்தின் மெஸேஜ் பெட்டியும் சிறிதாக இருப்பதால் முழுவதையும் பார்க்க முடியவில்லை.
    இதே பிரச்சனைதான் என் சிறுகதைக்கும். உதவ முடியுமா அமரன்?
    தனிமடலை பாருங்கள் சிவா...

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    .குழந்தையின் பேர் என்ன என்று கேட்டதற்கு உடனே சொல்லாமல் சிறிது கழிந்து சொன்னாள் "ஷிவானி".
    சுருக்கென்று தைத்தது சிவா!
    நீங்கள் செய்தது தப்பென்று சொல்ல முடியாது, ஆனால் அதன் வலிகள் ஏராளம், ஏராளம்..................!

    உங்களுக்கும், உங்களால் நேசிக்கப் பட்டவளுக்கும்.........................!
    பென்ஸ் அண்ணா ஒரு இடத்தில் எனக்குப் பின்னூட்டம் இடுகையில் சொன்னார் ஒன்றை இழக்க ஒன்றைப் பெறவேண்டும், அது காதலிலும் விதி விலக்கல்ல என்று.................

    இங்கு நீங்கள் இழந்தது உங்கள் காதலையே..................!

    ஆனால், ஆண்டவன் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியத் தந்துள்ளான். நாங்கள் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்றல்லவா.............!

    உள்ளைதைக் கொண்டு இழந்தவற்றால் மனதைப் புடம் போட்டு வாழ்க்கையில் போராடுவதே சிறந்தது − உங்களைப் போலவே................

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அருமையான சம்பவதுக்கு அழகான பின்னூட்டம் ஓவியன்..


    நேற்று எழுதிய கவிதையின் வரிகள் இவை..ஏனோ தெரியவில்லை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் உள்ளது...

    வேரிழந்த மரதிலிருந்து
    உதிர்ந்த பூக்களுக்கு
    மடி கொடுத்த பூமிக்கு
    பூசிக்க வந்த உன்னை
    நேசிக்க முடியவில்லை....
    Last edited by அமரன்; 28-07-2007 at 08:56 AM.

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    அருமையான சம்பவதுக்கு அழகான பின்னூட்டம் ஓவியன்...
    நன்றி அமர், என் வாழ்க்கையிலும் இப்படியான சம்பவங்களுண்டு ஆனால் அதனை அலச சிவா போல எனக்குத் தைரியமில்லை.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி ஓவியன்.என்றோ என்னுள் வந்து,பின் அதை பெறமுடியாமல் போனாலும்,கிடைத்தது அதைவிடவும் சிறப்பான ஒன்று எனும்போது மனம் நிறைவாக இருக்கிறது. உள்ளத்தின் ஓசைகளை உறவுகளிடம் சொல்லும்போதும், அது செவிமடுக்கப்பட்டு, எண்ணங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்போது மனதுக்கு இதமாக இருக்கிறது. அமரனின் மற்றும் உங்களின் பின்னூட்டத்தில் அதைத்தான் உணர்ந்தேன். மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் ஓவியன்,அமரன்.

    அமரன் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றிவிட்டேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    மனதை நெகிழ வைத்த நிகழ்வு. படித்து மனம் கனத்துப்போனது. காதல் மணம் புரிந்தவன் நான் என்பதால் அதன் பிரிவு கூட எத்தனை வலி ஏற்படுத்தும் என்பது தெரியும். ஆனால், அந்த காதலையே இழந்தால்..? அதன் உணர்வை சொல்ல மனம் வரவில்லை. சில நேரங்களில் நான் மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது "நம் காதல் கைகூடாமலேயே போயிருந்தால்..?" என்ற என் கேள்விக்கு அவள் முகம் காட்டும் தோற்றமே அதன் ஆழ்ந்த சோகத்தை சொல்லிவிடும். அதன் பிறகு அப்படி பேசுவதையே விட்டுவிட்டேன்.

    பொதுவாக பெண்களின் காதல்கள் அரும்பிலேயே கிள்ளப்படுவது அவர்கள் சூழ்நிலைக்கைதிகளாக்கப்படுவதால் நடக்கும். ஆனால், இங்கே சிவா அப்படி ஆகியிருக்கிறார். சிவா உண்மையிலேயே தியாகி தான். தன் தந்தை மேல் கொண்ட பாசத்திற்காக காதலை துறக்க துணிவது எல்லோராலும் இயலும் காரியமல்ல.

    பெண்களின் பொறுமை சில நேரங்களில் வேண்டாத விளைவை கொடுத்துவிடுகிறது. சிவாவின் அனுபவத்தில் தீபாவின் பொறுமை காதலை பலி கொடுத்துவிட்டது. ஆண்கள் வெகு சீக்கிரமாக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் அப்படியல்ல. இந்த நிமிடம் வரை உங்களுடைய நினைவுகள் தீபாவிடம் இருக்கும்.

    காதல் மீதான பெண்களின் வைராக்கியம் அசாத்தியமானது. எப்பாடு பட்டாவது பிடித்தவனை காதலித்து, கைப்பிடிக்கிறார்கள். அப்படி சூழ்நிலைகளால் அது முடியாத பட்சத்தில் மற்றவனை மணந்தாலும், தன் மனம் கவர்ந்தவனை எதிர்காலத்தில் மறந்துவிடுவோமோ என்ற பயத்தினாலேயே நமக்கு பின்னும் வாழப்போகும் தன் பிள்ளைகளுக்கு காதலனின் பெயரை வைத்து காதலை நெடுநாள் வாழ வைத்துவிடுகிறார்கள்.

    மனிதர்களுக்கு தான் மரணம்... காதலுக்கு ஏது..?!
    Last edited by இதயம்; 29-07-2007 at 05:01 AM.
    அன்புடன்,
    இதயம்

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by இதயம் View Post
    மனிதர்களுக்கு தான் மரணம்... காதலுக்கு ஏது..?!
    நெகிழ்ச்சியான ஒரு பின்னூட்டம் இதயம் பாராட்டுக்கள்..........!
    காதலால் ஆசிர்வதிக்கப் பட்டமைக்குப் வாழ்த்துக்கள்!.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இதயமே..அழகு. அற்புதம்..
    Last edited by அமரன்; 28-07-2007 at 09:20 AM.

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கண்கலங்க வைத்துவிட்டீர்கள் இதயம். இந்த இதயத்தின் வேலையே இதுதானே.
    அதீதமாக சந்தோஷப்படுத்தும்,அதீதமாக சோகப்படுத்தவும் செய்யும். நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தைகள் "காதல் என்றுமே சாவதில்லை"
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •