Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 75

Thread: குருவி திரை விமர்சனம்

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர் sns's Avatar
    Join Date
    25 Apr 2007
    Location
    Dubai
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    26
    Uploads
    0

    குருவி திரை விமர்சனம்

    வெற்றிவேல் கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய். படத்தின் பெயர்க் காரணம் வேண்டுமா (!?), அவரை எல்லோரும் அன்பாக 'குருவி' என்றே அழைக்கிறார்கள். இவரது பொழுதுபோக்கு கார் ரேஸில் கலந்து கொண்டு கார்களை ஓட்டுவது.

    விஜய் தந்தையாக மணிவண்ணன். வழக்கம் போல் பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    விஜய் நண்பராக வரும் விவேக் சிரிக்கவும்... சமூக பிரச்சனைகள் குறித்து சிந்திக்கவும் வைக்கிறார். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குருவி போல் பறந்து கொண்டு ஜாலியாக இருக்கும் விஜய் வாழ்க்கையில், வீட்டு உரிமையாளர் ரூபத்தில் புதிய பிரச்சனை ஏற்படுகிறது.

    விஜய் குடும்பத்தினர் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் அவர்களை காலி செய்யச் சொல்கிறார் உரிமையாளர். தன் அப்பா ஏன் வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்பதை குருவி, துருவிப் பார்க்கும்போது, கோச்சா என்ற பிரபல ரவுடியின் அண்டர்கிரவுண்ட் வேலைகளைப் பற்றி அறிய நேரிடுகிறது.

    கோச்சா கதாபாத்திரத்தில் சுமனும், அவருடைய கூட்டாளியான கொண்டரெட்டி பாத்திரத்தில் ஆசிஷ் வித்யார்த்தியும் நடித்துள்ளனர்.

    மலேசியாவில் உள்ள கோச்சாவை ஒழிக்க, இந்தியாவில் இருந்து வெற்றிவேல், ஓப்ஸ் (விவேக்) இருவரும் மலேசியாவிற்கு பறக்கின்றனர்.

    கோச்சாவைப் பற்றி தகவல் சேகரிக்க முயலும் வெற்றிவேல், ஒரு கட்டத்தில் சிங்கத்தின் குகைக்கு உள்ளேயே செல்ல முடிவு செய்கிறார். அதன்படி கோச்சாவின் வீட்டில் நுழைகிறார்.

    கோச்சாவின் தங்கையாக த்ரிஷா. பணக்கார ரவுடிக் குடும்பத்தில் பிறந்த பெண்ணான தேவி கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷா இப்படத்திலும் தனது முத்திரையை (கவர்ச்சி... காதல்... நடிப்பு) பதித்துள்ளார்.

    கோச்சா குடும்பத்தினர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள தேவி மறுக்கிறார். இதையடுத்து வழக்கம் போல் விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் காதல் வளர்கிறது (தமிழ் சினிமா கதையை வேறு எப்படியும் நகர்த்த முடியாது போல...)

    புத்தாண்டு நெருங்குகிறது... உலகமே புத்தாண்டைக் கொண்டாட கோலகலமாக தயாராகிறது. ஆனால் விஜய்... கோச்சாவை போலீசிடம் வசமாக சிக்க வைக்க ஏதாவது ஒரு முக்கிய ஆதாரம் சிக்காதா எனக் தேடுகிறார்.

    புத்தாண்டுக்கு முன்பாகவே கிடைக்கிறது அந்த முக்கிய ஆதாரம். புத்தாண்டு தினத்தன்று வெற்றிவேல், தேவி, ஓப்ஸ் மூவரும் மலேசியாவில் இருந்து புறப்படுகின்றனர்.

    விஜய் கையில் சிக்கியது என்ன ஆதாரம்... கோச்சா, கொண்டரெட்டி கும்பல் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டப்பட்டதா... விஜய் வென்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை. இடையிடையே குருவி - தேவி டூயட் பாடல்களும் செருகப்பட்டுள்ளன.

    ஏற்கனவே விஜய்-தரணி-வித்யாசாகர் கூட்டணியில் உருவான `கில்லி' சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றதைப் போலவே குருவியிலும் மூவர் முத்திரை தெரிகிறது. அந்த வகையில் இந்தப் படத்திலும் கதம்பமான விஷயங்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் தரணி.

    விஜய் கையில் சிக்கிய ஆதாரத்தை கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக கொண்டு சென்று கதையை முடித்திருப்பதில் இயக்குனர் தரணி மீண்டும் 'கில்லி'யடித்திருக்கிறார் என்றே கூறலாம்.

    காதல்... சென்டிமென்ட்... காமெடி... ஆக்*ஷன்... டான்ஸ்... பஞ்ச் டயலாக் என அத்தனை பாடத்திலும், பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்துள்ளார் விஜய். வித்யாசாகர் இசையில் பாடல்கள் இனிக்கிறது. மொழ. மொழன்னு... பாடல் தனித்துத் தெரிகிறது.

    கோபிநாத்தின் கேமரா படத்தின் வேகத்திற்கு உறுதுணையாக நிற்கிறது. த்ரில், சஸ்பென்ஸ், ஆக்*ஷன் காட்சிகளில் இயக்குனர் மனதில் நினைத்ததை கேமரா கண்களால் பதிவு செய்திருக்கிறார்.

    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால்... 'கில்லி' படத்தை அதைவிட சிறப்பாக எடுக்க முடியுமா என்று கேட்டால்... முடியும்... 'குருவி'யை பாருங்கள் என தைரியமாக சொல்லலாம்.


    நன்றி viparam.com

    இன்னும் குருவி திரைப்படம் பார்க்க முடியவில்லை,ஆனால் குரு திரைப்படம் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்தால் அனைவரும் ரொம்ப மோசம் என்றுதான் சொல்கின்றார்கள்.
    நான் தேடியதில் குருவி பற்றி கொஞ்சம் நல்லபடியாக சொல்லப்பட்ட இந்த விமர்சனத்தை தந்து நம் மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை எதிர்பர்கின்றேன்.
    இளைய தளபதியின் ரசிகர்களே வாருங்கள் .......

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    தரணி இப்படி ஒரு மொக்கப் படம் தருவார் னு எதிர்ப்பார்க்கலை..

    மொதல் நாள் மொதல் ஷோ போன..

    வெளில அடிக்கிற வெயில விடக் கொடுமையா படமிருக்க..

    ஞாபகம் வந்தது வைரமுத்துவின் வரிகள்..

    நம்மூர் ஜனங்கள்
    மற்ற எவைக்கும் விட
    சினிமா டிக்கட்டுக்காக
    செலவளித்த வியர்வை அதிகம்..

    நம்மூர் ஜனங்கள்
    வெளிச்சத்தில் வாழ்க்கையை
    தொலைத்துவிட்டு
    சினிமாவின் செயற்கை இருட்டில்
    தேடிக்கொண்டிருக்கிறார்கள்..

    இந்த வரிகளுடன் நானும் ஒரு சில வரிகள் சேர்த்தேன்..

    நம்மூர் ஜனனங்கள்
    வேறெங்கும் விட
    இது போன்ற
    படங்களைப் பார்த்து
    பணம் தொலைத்துதான் அதிகம்..
    Last edited by ஆதி; 06-05-2008 at 09:41 AM.
    அன்புடன் ஆதி



  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
    Join Date
    24 Jan 2008
    Location
    சிங்கப்பூர்
    Posts
    5,009
    Post Thanks / Like
    iCash Credits
    34,753
    Downloads
    25
    Uploads
    3
    நான் இன்னும் படம் பார்க்கல..
    இந்த விமர்சனம் அருமை..
    நல்ல விரிவான விமர்சனம்..
    படம் பார்க்க போகலாமா என்று மக்கள் சொல்லட்டும்..
    இப்ப நான் வருகிறேன்..
    என்றும் அன்புடன்
    அச்சலா

    ..................................................................................
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    ..................................................................................

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    விஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......

    எனக்கு சுண்டெலி முகம் திரிஷாவை பிடிக்கதுலே!!!

    ஆனாலும் மற்ற திறைமயான கூட்டணி சேர்ந்து உருவாக்கிய படமென்பதால்.... பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது....

    லண்டனில் திறையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறதாம்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  5. #5
    புதியவர் பண்பட்டவர் sns's Avatar
    Join Date
    25 Apr 2007
    Location
    Dubai
    Posts
    35
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    26
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    விஜய்யின் ரசிகையான நான் திரிஷா கதாநாயகி என்றதுமே படம் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்......

    எனக்கு சுண்டெலி முகம் திரிஷாவை பிடிக்கதுலே!!!

    என்ன அக்கா இப்படி சொல்லிபுட்டிங்க நம்ம அணுவும் திரிஷா அவதாரில் தான் இருக்காரு , எவ்வளவு அழாக இருக்காங்க

  6. #6
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    யார் இந்த விமர்சனம் எழுதினாங்கன்னு தெரியலியே..
    கில்லியிலும் சரி... தூள்லேயும் சரி.. கதாநாயகிக்கென்று ஒரு அடையாளம் இருக்கும்.. தனித்துவம் இருக்கும்.. இதுலேயும் இருக்கு. திரிஷாவ.. லூசாவும் அசடாவும் காட்டறதுல. படத்துக்கு கொஞ்சம் கூட ஒட்டல..

    படம் முழுக்க இரைச்சல்.. படம் முடிஞ்சு வெளியே வந்து கொஞ்ச நேரத்துக்கு கொய்ங்னு ஒரே சத்தம். வித்யாசாகர் வீணடிக்கப்பட்டிருக்கார். உப்பு சப்பில்லாத கதை, பலமில்லாத திரைக்கதை, ஆங்காங்கே வெட்டிட்டாங்களோன்னு நினைக்கக்கூடிய எடிட்டிங்..ஆந்திரா வாசனை தூக்குது. சரமாறியா சுட்டாலும் ஒரு புல்லட் கூட இளைய தளபதி உடம்புல படாதது ஆச்சர்யம்..!

    நல்ல விஷயம்... நடனத்தில் அநியாயத்துக்கும் விஜய் மெனக்கெட்டிருக்கார். சில மூவ்மெண்ட்ஸ் பார்க்க ஈஸியா இருக்கும். ஆனால் முட்டி பேந்துடும். அத்தகைய ஸ்டெப்களை மிக சுலபமாக செய்திருக்கிறார். இருக்கறதிலேயே எனக்கு கொஞ்சம் பிடித்தமான...
    "தனனே தந்தானானே.. தந்தானே... யூ..நோ.." பாடலுக்கு அரைகுறை உடையுடன் திரிஷா ஆடுவது சகிக்கல. சற்று நல்லா எடுத்திருக்கலாம்.

    ஆக மொத்தம்.. நிறைய இரைச்சலுடன் கூடிய அதிக பட்ஜெட் பேரரசு படம் பார்த்த எபக்ட்.. ஒரு முறை பார்க்கலாம்.. வேற வேலையே இல்லீன்னா..

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    http://www.tamilmantram.com/vb/showp...0&postcount=24

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!!!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தங்கவேல்'s Avatar
    Join Date
    15 Jun 2006
    Location
    கோயமுத்தூர்
    Posts
    1,500
    Post Thanks / Like
    iCash Credits
    19,344
    Downloads
    114
    Uploads
    0
    அப்போ பிளாப்பா ??? அடக் கொடுமையே....
    :- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

    => எனது பிளாக் - வாழ்க்கையினூடே

    http://thangavelmanickadevar.blogspot.com/

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    எஸ்.என்.எஸ்...!!

    நம் மன்றத்தின் திரைப்பட விமர்சனங்கள் வித்தியாசமானவை,
    அவை, மற்றைய தளங்களிலிருந்து வேறுபட்டவை என்ற பெருமை கூட எனக்குண்டு...

    அத்தகைய விமர்சனங்கள் வரும் பகுதியில் உங்களது சொந்த விமர்சனத்தைத் தந்திருந்தால், உங்களுக்கும் மன்றத்துக்கும் சிறப்பாக இருந்திருக்குமே....

    தொடரும் காலங்களில் சொந்த விமர்சனங்களை மட்டும் தருவீர்களென்ற எதிர்பார்பில்.......

    ஓவியன்
    .

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    எங்க 'தல'க்கு இப்ப தான் பில்லா முதல் நேரம் ஒர்க்கவுட் ஆகியிருக்கு... 'தல' ரசிகர்களே ஓடியாங்கோ....!!
    ஆனா பாருங்க.. இளைய தளபதிக்கு நேரமே சரியில்லை...!!

    அழகிய தமிழ் மகனும்.... போச்சு.. குருவியும் பறந்தே போயிடும் போல இருக்கே...!!!
    அழகிய தமிழ் மகனில் அழ வைத்தவர்.. இப்போ சினிமா தியேட்டர் சீட்டை விட்டு பறக்க வைப்பார் போல இருக்கே??!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    எங்க 'தல'க்கு இப்ப தான் பில்லா முதல் நேரம் ஒர்க்கவுட் ஆகியிருக்கு... 'தல' ரசிகர்களே ஓடியாங்கோ....!!
    ஆனா பாருங்க.. இளைய தளபதிக்கு நேரமே சரியில்லை...!!

    அழகிய தமிழ் மகனும்.... போச்சு.. குருவியும் பறந்தே போயிடும் போல இருக்கே...!!!
    அழகிய தமிழ் மகனில் அழ வைத்தவர்.. இப்போ சினிமா தியேட்டர் சீட்டை விட்டு பறக்க வைப்பார் போல இருக்கே??!!
    இதெல்லாம் நடக்காத விசயம்,
    எங்க தளபதி கில்லிகிட்ட உங்க தலயின் தல சும்மா பந்தாடப்படும்....

    உங்க தல கூடதான் சும்மா பறந்து பறந்து பரதமாடினார் என்னா ஆச்சு ஊஊ......... கடைசியில் ஊனமாதான் ஆனார்

    அழகிய தமிழ் மகன் எங்க விஜய், பெங்காளி நாட்டு தலை அல்ல க்கூம்.

    விஜய்யின் ஆஸ்த்தான ''i love you da chellam' ரசிகை
    - ஓவிசெல்லம்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    கில்லி கொடுத்த தரணியா குருவியை தந்தது என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இப்படி ஒரு விமர்சனமா?

    பரவயில்லை விஜய் ரசிகர்கள் இதை பார்த்தாவது மகிழட்டும்...

Page 1 of 7 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •