Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 31

Thread: ஏகன்- பட விமர்சனம்

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0

    ஏகன்- பட விமர்சனம்

    மன்ற நண்பர்கள் யாராவது படத்தைப்பார்த்து விமர்சனம் செய்யும் வரை அதிகாலை.கொம் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள விமர்சனத்தை படித்து ஆறுதலைடையவும்..

    நன்றிகள்--அதிகாலை.காம்


    ஏகன்- பட விமர்சனம்

    நடிப்பு: அஜீத், நயனதாரா, ஜெயராம், சுமன், நவ்தீப், பியா, நாசர்

    இசை: யுவன் ஷங்கர் ராஜா

    இயக்கம்: ராஜூ சுந்தரம்

    தயாரிப்பு: அய்கரன் இண்டர்நேஷனல்

    பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வந்துள்ளது அஜீத்தின் ஏகன்.

    என்னதான், இந்தப் படத்தை ஷாரூக்கின் மெய்ன் ஹூன் நா ரீமேக் இல்லை என ராஜூ சுந்தரம் சத்தியமடித்தாலும், காட்சிக்குக் காட்சி ஷாரூக்கின் படம்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், இந்தியை விட தமிழில் மிக சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார்கள் என்பதையும் சொல்லியாக வேண்டும்.

    பல படங்களில் அஜீத்தை சீரியஸாகவே பார்த்த கண்களுக்கு இதில் முற்றிலும் வித்தியாசமான, காட்சிக்குக் காட்சி வெடிச் சிரிப்பைக் கிளப்புகிற கலகல அஜீத்தைப் பார்ப்பது ரொம்பவே வித்தியாசமான அனுபவம். இடைவேளை வரை அவர் அடிக்கும் லூட்டிகள் தீபாவளிப் பட்டாசைத் தோற்கடிக்கும் அதிர் வேட்டுக்கள்.

    கதைப்படி அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு பட்டையைக் கிளப்பும் போலீஸ்.

    வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பொய் சொல்லப் போறாம் படத்தில் நடித்த பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார்.

    பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை நம்ம 'தல'யிடம் விடுகிறது. அதுவும் எப்படி, போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறு வேடத்தில் போய் பாதுகாக்க வேண்டும். கூடவே, மறைந்திருக்கும் அவரது தந்தை தேவனையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    கல்லூரியில் சேருகிறார் அஜீத்! அங்கே ஒரு கலகல பிரின்ஸிபால் (ஜெய்ராம்), அவருக்கேற்ற உதவியாளர் (சத்யன்) என காமெடிக் கூட்டணி, எக்ஸ்பிரஸ் வேகமெடுக்க இடைவேளை வந்ததே தெரியவில்லை.

    அங்கே போன பிறகுதான் தனக்கு ஒரு தம்பி (நவ்தீப்) இருப்பதையும், அவரும் அதே கல்லூரியில் படிப்பதையும் தெரிந்து கொள்கிறார் அஜீத்.

    பின்னர் எப்படி தனது அஸைன்மெண்டை வெற்றிகரமாக முடிக்கிறார் இந்த ஏகன் என்பதே மீதிக் கதை.

    அஜீத்தின் நடிப்பும், நகைச்சுவை ததும்ப அதைக் கையாண்டுள்ள விதமும் சரவெடி. குறிப்பாக நயனதாராவை முதன்முதலில் பார்க்கும் அஜீத், 'உன்னைப் பார்த்த பின்பு நான்...' என 'காதல் மன்னன்' பாடலை பாடுவது காதல் கலாட்டா.

    அஜீத்துக்கும் நயனுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருப்பது காதல் மற்றும் பாடல் காட்சிகளில் தெரிகிறது.

    சண்டைக் காட்சிகளை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

    முந்தைய படங்களில் சறுக்கிய நயன்தாராவுக்கு இந்தப் படம் ஒரு பிரேக். ஜெயராம், சத்யன் மற்றும் ஹனீபா கூட்டணிக்கு ஒரு ஜே. சுமனை இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். பியா, நவ்தீவ் ஓகே.

    யுவனின் இசையில் ஏ சாலா... அஜீத் ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை இரு மடங்காக்கும். அர்ஜூன் ஜனாவின் கேமரா அட்டகாசம்.

    படத்தில் இப்படி ஏகப்பட்ட ப்ளஸ்கள் இருந்தாலும் இயக்குநர் ராஜூ சுந்தரம் க்ளைமாக்ஸில் சறுக்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இருந்தாலும் முதல் படம் என்பதால் அந்தக் குறையை மன்னிக்கலாம்.

    ஏகன்.. மற்றபடி சரவெடி அட்டகாசம் தான்!
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டேன்.
    இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என உள்ளேன்.

    படம் மிகவும் அருமை.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டேன்.
    இன்னும் ஒரு முறை பார்க்கலாம் என உள்ளேன்.

    படம் மிகவும் அருமை.
    அய்யோ...அதற்குள் இரண்டு தடவைகளா..???

    அப்ப தல தல தீபாவளி என்று சொல்லுங்க...
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2008
    Location
    அருகில்..
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    11,912
    Downloads
    4
    Uploads
    0
    இது தட்ஸ்தமிழ் இணையத்தளத்தின் விமர்சனம். நானும் படம் பார்த்தேன். விமர்சிக்கலாம் என்று ஓடோடி வந்தேன். என்னைப் போல எத்தனை பேர் ஏமாறப் போகிறார்களோ.

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் shibly591's Avatar
    Join Date
    18 Aug 2006
    Location
    srilanka
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    25,009
    Downloads
    55
    Uploads
    0
    Quote Originally Posted by ரவுத்திரன் View Post
    இது தட்ஸ்தமிழ் இணையத்தளத்தின் விமர்சனம். நானும் படம் பார்த்தேன். விமர்சிக்கலாம் என்று ஓடோடி வந்தேன். என்னைப் போல எத்தனை பேர் ஏமாறப் போகிறார்களோ.
    இல்லை நண்பரே...

    உங்கள் சொந்த விமர்சனத்துக்குத்தான் முன்னுரிமை...படம் பார்க்கலாமா வேண்டாமா என்று குழம்புபவர்களுக்காக நான் பின்னிணைத்துள்ளேன்..

    உங்கள் சொந்த விமர்சனத்தை மன்றத்தில் பதிவிடுங்கள்..எனது இந்தத்திரியை நான் மாற்றி விடுகிறேன்

    ஏமாற்றம் என்று ஒதுங்க வேண்டாம்..

    எழுதுங்கள் நண்பரே
    வாழ்க்கை என்பதும்
    ஒரு புதுக்கவிதைதான்..
    என்ன ஒரு புதுமை..
    நம்மால் விளங்கவே முடியாத
    புதிர்க்கவிதை


    www.shiblypoems.blogspot.com

    இங்கே சொடுக்கவும்..
    http://www.tamilmantram.com/vb/showt...172#post373172

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    அதிகாலை தளம் ஒரு பாசிட்டிவான விமர்சனம் எழுதியுள்ளது. என் பார்வையில் படத்துக்கும், விமர்சனத்துக்கும் வேறுபாடுகள் உள்ளதாகப் படுகிறது.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    என்னதான் அடிச்சுச்சொன்னாலும் ஷாருகானின் படத்தின் ரீ-மேக்த்தான் இந்த ஏகன் படம்.
    ஹிந்தி தெரியாததால் பலரிற்கு தமிழில் எடுத்திருப்பது சுவாரஷ்யமா இருக்கலாம்.
    திரும்ப கொப்பி அடிக்கும்போது தமிழ் இரசிகர்களுக்கும் தலைக்கும் இயைபான சில விடயங்களை புகுத்துவதும் அகற்றுவதும் வழமைதானே. அதனை மட்டும் வத்து புதிதாக வெட்டி விழுத்தியகாக கருத முடியுமா?

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by ராஜா View Post
    அதிகாலை தளம் ஒரு பாசிட்டிவான விமர்சனம் எழுதியுள்ளது. என் பார்வையில் படத்துக்கும், விமர்சனத்துக்கும் வேறுபாடுகள் உள்ளதாகப் படுகிறது.
    ராஜா சார் உங்கள் பார்வையிலும் ஒரு விமர்சனம் தாருங்களேன். வேறுபட்டக் கோணங்களையும் பார்க்க முடியுமே...?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    Quote Originally Posted by shibly591 View Post
    அய்யோ...அதற்குள் இரண்டு தடவைகளா..???

    அப்ப தல தல தீபாவளி என்று சொல்லுங்க...
    அது அப்படித்தான்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    இது அப்பட்டமான ஹிந்தி ரீமேக் என எனக்கு தோன்றுகிறது.
    ஹிந்தி படத்திற்கு ஏற்கனவே நான் மன்றத்தில் விமர்சனம் எழுதியுள்ளேன்...
    அஜித் வரிசையாக ஷாருக் படங்களை ரீமேக் பண்ண விரும்புகிறார் . முதலில் டான் - பில்லா. இப்போ மே ஹு நா - ஏகன்..
    அடுத்து .. ஓம் சாந்தி ஓம் என்று நினைக்கிறேன்..
    தமிழில் என்ன பேர் வைப்பாங்க...?

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    அஜீத்தின் அடுத்த படம் "சூராங்கனி".
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    சுவிஸ்ஸில் இப்படம் திரையிடப்படவில்லையென செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையில் ஈழத் தமிழர் விடையத்தில் அஜித் என்னதான் சொன்னார்...!!?
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •